(Reading time: 12 - 24 minutes)

கோக்! கேட்க மறந்துட்டேன்... உங்களை பிக் அப் பண்ண வந்தப்போ... உங்க ஃப்ரண்ட் வேற பேர்ல கூப்பிட்டாங்களே”, என்று இடைபுகுந்து பேச்சை மாற்றினான் காரை ஓட்டியவன் - அவள் கவனத்தை தன் வசம் ஈர்ப்பதற்கு...

அவளும் அது போலவே ஆர்யமனிடமிருந்து பார்வையை அகற்ற....

‘ஏன்...ய்யா... ஒரு வார்த்தை பேச விட மாட்டீங்களே! கல்யாணம் ஆனப் பிறகும்  கடலை வறுக்குறீங்களே...உங்க வைஃப்கிட்ட எவனாவது வத்தி வைக்காமலா போவான்’,

என்று ஆர்யமன் தனக்குள் புகைந்து கொண்டிருந்தான்.. எதிர்காலம் அவனை எட்ட நின்று சிரிப்பதை அறியாமல்..

கோகிலா, “ஓ...அதுவா... சர்டிபிகேட்ல தான் கோகிலா.. வீட்டில பபிதான்னு கூப்பிடுவாங்க... ”,

என்று மற்றவனிடம் சொல்வது ஆர்யமனின் காதில் விழுந்ததோ என்னவோ... அதற்குள் அவன் அலைபேசி சிணுங்க... அழைத்தது ஹர்ஷவர்தன் என்று அறிந்ததும்... சட்டென்று அழைப்பை துண்டித்தான் ஆர்யமன்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

 

ர்ஷவர்தன் - அமெரிக்கா வாழ் இந்தியன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேக்ஸ்சாஃப்ட்டிடம் தன் நிறுவனத்தை விற்று... பதிலுக்கு சொற்ப பங்குகளை வாங்கி  கொண்டவன், இன்று அதன் பிரதான பங்குதாரராகி விட்டான். சென்ற வாரம் தான் அதன் உரிமையாளர் வைத்திருந்த  முப்பது சதவிகித பங்குகள் இவன் கைக்கு மாறி இருந்தது.

எடுத்த எடுப்பில் தன் அழைப்பு துண்டிக்கப்பட்டதில் சற்றே ஏமாற்றமடைந்தான்  ஹர்ஷவர்தன். காரணம் இல்லாமல் இருக்காது என்று தோன்றினாலும் அவன் இருக்கும் பதற்றத்தில் மறுபடியும் அழைக்க நினைக்க, 

“5m”, ஐந்து நிமிடத்தில் அழைப்பதாக இரண்டு எழுத்தில் ஜெட் வேகத்தில் வந்து சேர்ந்த தகவலைக் கண்டதும், அவன் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தான்.

தான் சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆர்யமன் ஹர்ஷவர்தனை அழைக்க... இருவரும் பரஸ்பர நலன் விசாரிப்புகள் மாற்றி கொண்ட பொழுதே... அவனிடமிருந்த பதற்றத்தை உணர்ந்தான் ஆர்யமன்.

“ஸாரி ஹர்ஷ்! ஆபிஸ் ஆளுங்க பக்கத்தில் இருந்தாங்க. உங்க கூட பேசுறது தெரிஞ்சா ஏதாவது ரூமர் பரவும். அதான் கால் கட் செய்தேன்“, என்று தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டு அவனே,

“நீங்க டென்ஷனா இருக்கீங்கன்னு தெரியது! என்ன விஷயம்?”, சட்டென்று விஷயத்திற்கு வர..

ஹர்ஷவர்தன்,

“எஸ் ஆர்யமன்! என்னோட கசின் இன்னைக்கு வர்றான்னு சொன்னேன்ல. “, என்று ஆரம்பிக்க..

சட்டென்று இதற்கு முன்பே அவன் சொன்னதை நினைவில் நிறுத்திய ஆர்யமன்,

“லெவன் ஓ க்ளாக் அவங்க இன்ட்ரோ மீட்டிங் வித் டீம்! காலேண்டர்ல மார்க் பண்ணிட்டேன் ஹர்ஷ்”

ஹர்ஷ், “அவளுக்கு ஒருவேளை டீம் பிடிக்கலைன்னா...”, என்று இழுத்தவன்.. தன்னை தானே சமாதான படுத்தி கொள்பவன் போல,

“உங்க டீம் செட் அப் பிடிக்காம இருக்காது.... பட், உங்க டீம்மே பிடிக்கலைன்னு சொன்னா.. ஓல்ட் ஸ்கூல் ஸ்டைல்ல  இருக்கிற மத்த டீம் எதுவுமே பிடிக்காது. ஓ... காட்... நெர்வஸ்ஸா இருக்கு! ”

‘இதுக்கு எதுக்கு நெர்வஸ் ஆக இருக்கிறான்...’, என்று தனக்குள் குழம்பிய ஆர்யமன் எதுவும் கேட்கவில்லை. அவனாக சொல்லட்டும் என்று அமைதி காக்க... ஹர்ஷவர்தன் தொடர்ந்தான்.

“எனக்கு பிடிச்ச மாதிரி வேலை வாங்கி கொடு... இல்லை என்னை கல்யாணம் பண்ணக்கோன்னு ஆப்ஷன் வைச்சிருக்காளே என் கசின்!”, என்றான் வருத்தம் தொனிக்க..

அதைக் கேட்ட ஆர்யமனுக்கு சிரிப்பு வந்தது...

ஏதோ ஒரு  பிரேசில் பெண்ணை டேட் செய்வதாக ஹர்ஷ் பேச்சுவாக்கில் சொன்னது நியாபகம் வர.. ஆனாலும், ஃபேஸ்புக்ல சிங்கிள்ன்னு தானே வச்சிருக்கான் என்பதும் நினைவுக்கு வர...

‘அமெரிக்காவில் வளர்ந்திருக்கிறான். அத்தை பொண்ணை கல்யாணம் செய்ய ஃபோர்ஸ் பண்ணா ஒத்துக்குவானா? என்ன?‘, என்று கூட தோன்றியது. ஆனால் ஹர்ஷவர்தன் அவன் எண்ணத்திற்கு  மாறாக சொன்னான்.

“அவ கேட்டு  நோ சொல்லி பழக்கமே இல்லை...  ஷி இஸ் வெரி க்லோஸ் டு மை ஹார்ட்..  தெரியாத இடத்தில் வேலைக்கு அனுப்புறதுக்கு அத்தைக்கும் இஷ்டம் இல்லை..“, என்று சொல்ல.

‘பக்கா பிஸ்னஸ்மேன்... இப்படியா சென்டிமென்டல் ஃபூல்லா இருப்பான்!’

‘அத்தை மகள் ரத்தினத்திடம் இல்லை என்று சொல்ல கூட தயங்குவார்களா? இப்படி வளர்த்தா அந்த பொண்ணு எவ்வளோ கோழையா இருப்பா?’ என்று  எடை போட துவங்கிய மனதை அடக்கினான்.

‘ஹர்ஷ்ஷோட பெர்ஷனல் விஷயங்களை அவனே சொன்னாலும் எட்ட நின்னு தான் கேட்கணும். அவனோட ரிலேஷன்ஷிப் பிஸ்னஸ் தாண்டி இருக்க கூடாது’, தனக்குள்ளே கட்டுபாடு விதித்த ஆர்யமன்

“டோன்ட் ஒர்ரி ஹர்ஷ்! கண்டிப்பா அவங்க என் டீம்ல இருப்பாங்க!”,

என்றான் உறுதியான குரலில்... அவன் குரலில் இருந்த உறுதி ஹர்ஷவர்தனுக்கு நிம்மதியை தந்தது.

ஹர்ஷுடன் பேசி முடித்த பின் தன் அலுவலகப் பணிகளில் மூழ்கினான்.

மணி பதினொன்றை நெருங்கி விட...

அலுவலக கீழ்த்தளத்தில் இருந்த கான்ஃபர்ன்ஸ் ரூம்மில் மீட்டிங்கை முடித்து விட்டு,

‘அடுத்து ஹர்ஷின் அத்தை மகள் ரத்தினத்தோட மீட்டிங்....’

என்று நினைவு கூர்ந்த படியே அகல எட்டுக்களில் லிஃப்ட்டின் அருகே வருவதற்குள்  அது மூட ஆரம்பித்தது...

தன் வேகத்தை கூட்டி மூடிக் கொண்டிருந்த லிப்ட்டின் கதவை நோக்கி கரத்தை நீட்டி தடுக்க நினைக்கும் முன்னே... லிப்டிற்குள் இருந்து நீண்டது அந்த ஹீல்ஸ் கால்...

அவள் கட்டை விரலை விட அதற்கு அடுத்த விரல் நீளமாக இருப்பது தான் அவன் கண்ணில் பட...

பெண்களை பற்றி வாஸ்து சாஸ்திரம் சொல்லும் நண்பன் வாசுவின் கருத்து நினைவிற்கு வந்தது..

“பொண்ணு பார்க்க போகிறப்போ முகத்தை பார்க்கிறோமோ இல்லையோடா பாதத்தை பார்க்கணும்...  வாஸ்து படி... கட்டை விரலுக்கு அடுத்த விரல் நீளமா இருந்தா புருஷனுக்கு அடங்காத பொண்ணா இருக்குமாம்..”,

என்று அவன் சொன்னது போலவே ஒரு ஸ்பெசிமென் கண்ணில் பட...

‘வாசு சொன்னது உண்மையா இருக்குமோ!’ , என்று யோசித்தவன்...

‘சை. நமக்காக லிப்ட்டை ஹோல்ட் பண்ணியிருக்கும் நல்ல பொண்ணு.. தேங்க்ஸ் சொல்லணும்!‘, என்று எண்ணிக் கொண்டே

அவளை நோக்கி நிமிர..  

போனும் கையுமாக லிப்ட்டிற்குள் நின்றிருந்தவளோ நீட்டிய தன் காலை பின்னுக்கு இழுத்த படி... அந்த நிறுவனத்தையே ஆட்சி செய்யும் தினுசில் அவனை உள்ளே வருமாறு அதிகாரமாய் ஒற்றை விரலசைவில் சைகை செய்ய...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.