(Reading time: 12 - 24 minutes)

ன்றி சொல்ல திறந்த வாயை மூடிக் கொண்டு லிப்ட்டிற்குள் புகுந்தான் அவன்...

பெண் என்றால் வாயை பிளக்கும் ரகம் அவன் இல்லை தான்... அதற்காக  “அபச்சாரம்! அபச்சாரம்!” என்று கண்ணை மூடிக் கொள்ளும் பழமும் இல்லையே அவன்! 

பொதுவாக அவளை பார்த்து வைத்தான்... பேரழகி தான்!

கவனத்தை அலைபேசியில் வைத்தாலும்.. கரு கரு விழிகளால் துறுதுறுப்போடு அவனது பார்வை சந்தித்தவள்....

“எந்த ஃப்ளோர்?”, அமைதியாக நின்றவனை நோக்கி, சற்றே குரலை உயர்த்தி அதட்டல் போல கேட்க...  இதற்கு எல்லாம் அசந்து விடுவானா?

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

அவளுக்கு பதில் அளிக்காமல், ஒரு பார்வை பார்த்து விட்டு, தானே முன் சென்று ஐந்தாவது தள பட்டனை அழுத்தினான்...

தன்னை அசட்டை செய்கிறான் என்று புரிந்தது அவளுக்கு...

‘நான் யார்ன்னு தெரிஞ்சா... அப்புறம் நீ போடுற குல்லாவை பார்க்கத்தானே போறேன்!’, உள்ளுக்குள் கருவிய படி அவனை முறைத்து விட்டு அலைபேசியில் தன் கவனத்தை திருப்பினாள்....

அவள் முறைப்பது இவன் பார்வையில் விழாமல் இல்லை...

அவள் நடக்கும் விதத்தை பார்க்கையில் பெரிய மனிதர்களை போல நடந்து கொள்ள முயற்சி செய்யும் குழந்தை போல தோன்றியது அவனுக்கு!

அவளோ போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

“இப்போ தான் ஹச். ஆரை பார்த்தேன். இன்னும் எத்தனை பேரை பார்க்கணும்? அதெல்லாம் முடியாது”, என்று சொல்ல.... இல்லை சிணுங்க...

மறு முனையில் என்ன கேட்டாளோ....

“என்னது ஆர்...யமனா???!!!!           

“எமனுக்கு இனிஷியல் வைச்சது போல இருக்கு! எனக்கு பேரே பிடிக்கலை! என்னால எல்லாம் அந்த ஆளை பார்க்க முடியாது... ரிஜெக்டட்”, என்று அவள் சொல்லும் பொழுதே ஐந்தாவது தளத்தை அடைந்த லிப்ட்டின் கதவு திறக்க ஆரம்பிக்க.

“ஒரு நிமிஷம் இரு....”, என்றவள்,

போனின் மறுமுனையில் இருந்தவனை காத்திருப்பில் போட்டு விட்டு அருகில் நின்றவன் பக்கம் திரும்ப..

அவனோ இவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவன் ஏன் இன்னும் போகாம நம்மளை முறைக்கிறான்?’, என்று யோசித்தவள் பின்,

‘ஹும்கும் இப்போ நமக்கு அதுவா முக்கியம்?’, என்று தனக்குள் எண்ணிக் கொண்டே அவனை நோக்கி,

“காஃபடேரியாக்கு சிக்ஸ்த் ஃப்ளோர் தானே?”, என்று  கேட்க... அதற்குள் திறந்திருந்த லிப்டின் கதவு மூடப் போக... வேகமாக சென்று அதை மறித்து நின்ற படி அவளைப் பார்த்து,

“காஃபடேரியா தானே? வாங்க காட்டுறேன்! அப்படியே போனை வைச்சிடுங்க. இங்க சிக்னல் சரியா கிடைக்காது!”, என்று சொல்ல...

“ஓகே!”, கண்களையும் தலையையும் பெரிதாக  உருட்டி தலையசைத்தவள் அவன் சொன்ன படியே எதிர்முனையில் இருந்தவனிடம் விடை பெற்று ஆர்யமனின் பின்னால் சென்றான்.

அவன் அழைத்து சென்றதோ விஸ்தாரமான அலுவலக அறை! அங்கு ‘தீப்பெட்டி போன்ற க்யூபிக்கள்’ அல்லாமல்.. கான்பிரன்ஸ் மேஜை போல  அந்த அறையின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நீண்டிருந்த டெஸ்கில் கணினியை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..

இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை பார்க்க வைக்கும் மற்ற ஐ.டி. கம்பெனிகள் போல அல்லாமல், வேலையோடே பேச்சு அரட்டை என்று லைவ்லியாக இருந்த அந்த அறை அவளுக்கு பிடித்திருந்தாலும்...

அவளின் தற்போதைய நோக்கம் அது அல்லவே?

அந்த அறையில் எந்த மூளையிலாவது ஒரு டீக்கடை இருக்குமா என்று இவள் கண்களை சுழல விட...

“Google Inc போல ஓபன் ஆபிஸ் லே அவுட்.. நம்ம ப்ராஜெக்ட்க்கு மட்டும்“, என்று அந்த அலுவலக அமைப்பை பெருமையாக விவரிக்க...

“இது தான் கேஃபடேரியாவா?”, என்று கோபத்துடன் அவனிடம் திரும்பினாள் அவள்...

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.