(Reading time: 12 - 23 minutes)

02. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 2

சில பல மாதங்களுக்கு முன்பு...

அன்று ‘எத்தினிக் டே’, என்று ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையிலும் வர வேண்டும் என்று சொல்லபட்டிருக்க... முன் அனுபவம் இன்றி வேட்டியை கட்டிய ஆர்யமன் பல முறை சோதித்து பார்த்துக் கொண்டிருக்க..

 “டேய்.. எல்லாம் நல்லா தான் இருக்கு!  கிளம்பு கிளம்பு”, அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் அவன் உயிர் நண்பன் வாசு.

Puthir podum nenjam

துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வாசுவின் குவாட்டர்ஸ்ஸில் தான் ஆர்யமன் தங்கியிருந்தான்.

“உனக்கு தானே அவசரம்! எனக்கென்ன?”, மிக நிதானமாக சொல்லிக் கொண்டே.. வேட்டியை கட்டி முடித்த திருப்தியில்... கையை வேட்டியில் இருந்து எடுத்தவன்.. சாவகாசமாக கண்ணாடி முன் சென்று,

தன் சிகையை வாரி விட்டு... சீப்பால் தனது அடர்ந்த மீசைக்கு   மெல்ல ஒத்தடம் கொடுத்து கொண்டிருக்க... பொறுமை இழந்த  வாசு கடுப்புடன்..

“என் நிலைமை புரியாம மீசைக்கு சிக்கெடுத்துகிட்டு இருக்க...”,

என்று கொதிக்க... சீப்பை வைத்து விட்டு வாசுவின் அருகில் சென்ற ஆர்யமன்,

“கூல் மச்சி! உனக்கு இல்லைன்னு பொறாமை படக் கூடாது”,

என்று மீசை, தாடி என்று எதுவும் இல்லாமல் க்ளீன் ஃசேவ் செய்யப்பட்டிருந்த வாசுவின் தாடையைத் தடவ... சிலிர்த்தெழுந்த வாசு நெஞ்சை நிமிர்த்தி,

“டேய்.. சும்மா சொறிஞ்சி விட்டு எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை தட்டி எழுப்பிடாதே!”,

என்று எச்சரிப்பது போல கர்ஜிக்க...

“அது வாசு ஐ. பி. எஸ் ங்கிற மிருகம் தானே!”, என்று கிண்டலாக ஆர்யமன் கேட்க...

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

ஐ. பி. எஸ். ஆகும் வரை மீசையை வைக்க மாட்டேன் என்று தான் எடுத்துக் கொண்ட சபதம் வாசுவிற்கு நினைவுக்கு வந்தது. நேற்று தான் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் அவன் தோல்வி உறுதியாகி இருக்க... அந்த சோகத்திலே ஷேவ் செய்ய சென்றவன்.... மறந்து போய் பாதி மீசையை வழித்து விட... வேறு வழியின்றி முழு மீசையையும் எடுத்து விட்டு வெளியே வந்தால்.. அங்கே ஆர்யமன்...

“மச்சி! தோத்துட்டன்னு மீசையே எடுத்துட்ட.. ஐ. பி. எஸ். ஆகணும்னு அவ்வளோ வெறியா?”, என்று வேறு கேட்டு வைக்க...

‘இல்லைன்னு சொன்னாலும் விடமாட்டான்.. ஆமான்னு சொன்னாலும் விடமாட்டான்! நமக்கு மீசை முளைக்கிற வரைக்கும் அப்படியே நடிச்சிடுவோம்’, என்று தன் தற்காலிக சபதத்தை நினைவு கூர்ந்தவாறு...

கண்களில் அனல் வீச,

“ஹூம்... நானும் ஆவேன்டா ஐ. பி. எஸ்.”, என்று நிமிர்த்திய நெஞ்சைத் தட்டி வாசு சொல்ல...

வாய்க்குள் சிரித்த படி...

‘ஆஹா.. சே... ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா ராஜசேகர் படத்துக்கு டைட்டில்லா போட்டு இருப்பாரே! ரிசல்ட் ஊத்திகிட்டாலும் இவன் போடுற பில்டப்பிற்கு அளவே இல்லை’, மனதுக்குள் நினைத்தாலும்...

வாசு சொல்வதை கருத்தாய் கேட்பது போல முகத்தை சீரியஸாக வைத்து கொண்டான் ஆர்யமன். வாசுவோ  தன் ஆவேச பேச்சைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்...

“வாசு ஐ. பி. எஸ்... ன்னு பட்டி தொட்டி எல்லாம் எதிரொலிக்கிறப்போ... இதோ இன்னைக்கு இருக்கிற இந்த திமிர் பிடிச்ச எஸ். பி.யையே  தொடை நடுங்க வைச்சு இந்த உலகத்தையே அண்ணாந்து பார்க்க வைப்பேன்டா ”

“அது நடக்கிற வரைக்கும்... வாசு மைனஸ் மஸ்கட் தான்!”

என்று பேச்சை முடிக்க... கொஞ்சம் டெசிபல் அதிகமானாலும், நண்பன் என்பதால் பொறுமையுடன் கேட்ட ஆர்யமன் அவன் கடைசியாக சொன்னது புரியாமல்,

“மஸ்கட்டா??”, என்று  விழிக்க..

“மீசையை இங்கிலீஷ்ல சொன்னேன்டா”, என்று வாசு விளக்க.. சிரித்தவன்,

“அது மஸ்டச்...”, என்று திருத்தினான்.

வாசு அதற்கு,

“டச் கட் ஆகிடுச்சு... அது ஒன்னும் இல்லை மச்சி... இங்கிலீஷ் பொதுவா ஃபாஸ்ட்டா பேசிறப்போ இந்த கசட தபறல கொஞ்சம் டங்க்கு ரோல் ஆகுது”, என்று சமாளித்த பொழுது வாசுவின் போனில்...

“ஹூ லெட் தி டாக் அவுட்.. ஹூ லெட் தி டாக் அவுட்”, என்று இசைத்துக் கொண்டே அழைப்பு வர..

வாசு போட்டு வைத்திருந்த ரிங் டோனை வைத்தே அது யார் என்று கண்டுபிடித்த ஆர்யமன்,

“டேய்.. உங்க எஸ். பி. வைஃப் டா”, என்று சொல்லிக் கொண்டே  மேஜையிலிருந்த வாசுவின் போனை கையில் எடுக்க...

அதே  சமயம், அவர்கள் வீட்டின் முன் கார் வந்த நிற்பதும்... ஹார்ன் அடிக்கும் சத்தமும் கேட்க...

“அச்சச்சோ... அந்தம்மா வந்துட்டேன்னு  மிஸ்டு கால் கொடுக்கிறாங்க. சட்டுன்னு காலை கட் பண்ணு... இந்த ரிங் டோன் மட்டும் காதுல விழுந்தது அவங்க ஹஸ்பென்ட்டு மீ சஸ்பென்ட்டு”, என்று பதட்டத்துடன் சொல்ல...

ஆர்யமனோ சிறிதும் அலட்டாமல், 

“ஹஸ்பென்ட்டு மீ சஸ்பென்ட்டு...”

“உன் இங்கிலீஷ்ல கிராமர் இல்லாட்டினாலும் கவிதை இருக்கு மச்சி”, என்று நண்பனின் கவிதையை சிலாகித்து சொல்லி முடித்து விட்டு மெல்ல அழைப்பை துண்டிக்க போக... அதுவே நின்று போனது.

“ஏன் மச்சி நீ சொன்ன மாதிரி நடந்திருக்குமோ.. கேட்டா செம ஷாக்கா இருக்கும்ல”, என்று அவன் போனை உருட்டிக் கொண்டே கேட்க... வாசுவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போனதும்...

வாசுவை நோக்கி நிமிர நினைக்கும் பொழுதே.....  வாசலில் நிழலாடிய உருவத்தை நோக்கி நிமிர்ந்தவனுக்கு திக்கென்று இருந்தது... வாசலில் நின்றது அந்த திமிர் பிடிச்ச எஸ். பி. யின் மனைவி தான்.

உடனே, “ஹலோ மேம்”, என்று சமாளிப்பாக புன்னகை வரவழைக்க...

அவரோ அவனைப் பார்த்து தலையசைத்து விட்டு, வாசுவின் பக்கம் பார்வையை திருப்ப....  அதே சமயம் ஆர்யமனும் நண்பனின் மீது பார்வையை பதித்தான். கால்கள் நடுநடுங்க... திரு திருவென முழித்த படி நின்ற கொண்டிருந்தான் அவன்.

“என்ன அக்கியுஸ்ட் மாதிரி இந்த முழி முழிக்கிறீங்க”, என்று அந்த பெண்மணி அதட்டலாக வாசுவிடம்  கேட்ட படி வீட்டிற்குள் நுழைய...

“இ... இ...இல்லை மேடம்.. அந்த ரிங் டோன்”, என்று வாசு திணறலோடு ஆரம்பிக்க..

‘அவங்களே அதை கவனிக்காதது போல தெரியுது... இதுல இவனே பயத்தில் வலிய போய் ஏதாவது உளறி விடுவான் போல’, என்று எண்ணிய ஆர்யமன் அவர்கள் பேச்சில் இடைபுகுந்த  ஆர்யமன்,

“அப்புறம் உங்க பையன் சையன்ஸ் ப்ராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்ண சார் சொன்னாங்க”, என்று அடுத்த பேச்சிற்கு தாவினான்.

சற்றே குளிர்ந்தார் அவர். “ஆமாம்பா... போன வருஷம் போல.. இப்பவும் கொஞ்சம் உதவி செய்தா நல்லாயிருக்கும்”,

அந்த பதிலில்  ஒரு  மரியாதை ஒட்டியிருந்தது. பொதுவாக அவர் அடாவடியானவர் தான். தன் கணவன் பதவியால் கிடைக்கும் அதிகாரத்தை சர்வ சாதாரணமாக உபயோகிப்பவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.