(Reading time: 29 - 58 minutes)

04. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 4

வள் கேள்வியை சட்டை செய்யாது இவன் தனது அலைபேசியை எடுத்து அதன் திரையை மடமடவென்று விரலால் இயக்க...

பொறுமை இழந்தவளாய்....

அவன் முகத்தருகே சென்றவள்... சைகையில் அதே கேள்வியைக் கேட்க...

Puthir podum nenjam

‘அடிப்பாவி! ஸ்பீக்கர் அவுட்டுன்னு நினைச்சுட்டியா... உன் ஜாதகமே கையில் இருக்குதே! உன் வீக் பாயின்ட்டும் ஸ்ட்ராங் பாயின்ட்டும் என்னன்னு பார்த்துட்டேனே!.. ’, என்று எண்ணிக் கொண்டவன்...

“இது கிட்டத்தட்ட கஃபே தான்! உங்களுக்கு இப்போ டீ வேணும் அதானே!”, என்று கேட்க...

‘அதெப்படி இவனுக்கு தெரியும்?’ என்று அவள் யோசிக்க...

அவனோ...

“டீக்கு எண் ஒன்றை அழுத்துங்க... உங்க கோபத்தை ஆத்தும் டீயை ஆத்தி கொண்டு வந்து கொடுப்பாங்க.”, என்று தன் அலைபேசியை அவளிடம் நீட்ட...

அதை  கையில் வாங்கி பார்த்தவள்...

“காஃபடேரியாக்கு கூட app வைச்சு இருக்கீங்களா? போண்டா, வடை எல்லாம் கூட ஆர்டர் பண்ண....?”, என்று கிண்டலாக ஆரம்பித்து நிறுத்திக் கொண்டவள்... ஏதோ கண்டுபிடித்து விட்டவள் போல பெரிதாக புருவத்தை உயர்த்தி....

“ஓ...  இப்ப புரியுது நீங்க ஏன் ஓபன் ஆபிஸ் செட் அப் வைச்சிருக்கீங்கன்னு! இந்த நீள டெஸ்க்கிலே இருக்கிற கம்யூட்டர்ஸ்ஸ லேசா தள்ளி வைச்சுட்டு.... வரிசையா இலையை போட்டு விருந்தே வைக்கலாம்ன்னு தானே!”,

என்று தீவிரமாக முகத்தை வைத்து கேட்க...

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

‘ஒரு பேச்சுக்கு கஃபேன்னு சொன்னா இந்த ஆபிஸ்சையே ரெஸ்டாரண்ட் ஆக்கிடுவா போல... இங்க இருக்கிற பெரிய தலைங்ககிட்ட சண்டை போடாத குறையா என் ப்ராஜெக்ட்க்கு ஓபன் ஆபிஸ் செட் அப்பை கொண்டு வந்தா, பந்தி போட்டு சாப்பிட ப்ளான் பண்றியேம்மா!!!!’

தனக்குள் நொந்து கொண்டவனாய்.... அவளிடமிருந்து அலைபேசியை தன் வசம் வாங்கிக் கொண்டு,

“ம்ம்... செம ஐடியா! ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கெர்பெர்க் இவங்களை எல்லாம் மிஞ்சிட்டீங்க“,  என்று நொந்து வெந்து போனவானாக புலம்ப... அதை பாராட்டாக  நினைத்து சிலாகித்தவள்..

“ரியலி????!!!!”,

“உண்மையிலே அவங்களை எல்லாம் மிஞ்சுற மாதிரி ஒரு பெரிய டெக்னாலஜி கம்பெனியை ஆரம்பிக்கிறது தான் என் வாழ்க்கையின் லட்சியம்! ”,

வாசுவின் சூளுரையிலே ஓய்ந்து போனவனுக்கு பந்தி விரிக்க யோசனை சொல்பவளின் லட்சியத்தை கேட்டதும் நெஞ்சு வலியே வருவது போலிருந்தது...  இதற்கு மேலும் இவள் பேச்சை கேட்க தெம்பில்லாதவன்,

“அந்த லட்சியம் அப்படியே பூட்டி பத்திரமா வச்சுக்கோங்க. இப்போ நம்ம டீம்க்கு ஒரு ஹலோ சொல்லிடலாமா ........”, என்று அவளது பெயரையும் சேர்த்து உரைத்த படி முன்னே நடக்க...

“என் பேரை சொல்றான்... அப்போ என்னை தெரியுமா இவனுக்கு?”, அவள் ஒரு நொடி திகைத்து...

‘மூளை ரஸ்ட் ஆனாலும் பரவாயில்லை ரெஸ்ட்லே வை’

என்ற தாரக மந்திரத்தை ஒரு முறை சொல்லி விட்டு தன் மூளையை  லாக்கரில் வைக்க...

அதற்குள் அறையின் மத்தியில் சென்ற ஆர்யமன்  உரத்த குரலில்,

“ஹோலோ டீம்”, என்று அழைக்க... அனைவர் கவனமும் இவன் புறம் திரும்பியது.

“நம்ம டீம்ல  புதுசா ஒருத்தவங்க ஜாயின் பண்றாங்க.. நம்ம குழு வழக்கப்படி அவங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க விரும்புகிறேன்”, என்று சொல்லி விட்டு  அவளை நோக்கி திரும்பி அருகே வரமாறு கண்ணசைக்க...

எண்பத்தைந்து பேர் கொண்ட அவனது ப்ராஜெக்ட் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓவென்ற கோஷமிட்ட படி...

கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலைக்கு வருபவர்கள்..  இப்படி திடுதிப்பென்ற பெரிய கூட்டத்தின் ஆரவாரத்திற்கு முன் ஒருவித அச்சமும், கூச்சமும் கலந்து இருக்கும் அனைவரும் எதிர்பார்த்திருக்க...

அவளோ புது இடம், சூழல் என்று எந்த தயக்கமும் காட்டாது கால் முளைத்த மின்னலாய் ஆர்யமன் அருகில் வந்து நின்று....

“Hello oh-oh-oh.....

I just came to say Hello oh-oh-oh”, என்று புகழ் பெற்ற ஆங்கிலப் பாடலின் இரு வரிகளைப் பாட...

“வாவ்”, என்று டெஸ்க்கை தட்டி ஆரவாரித்த அந்த டீம்மில் இருந்தவர்கள்...  அவளை அந்த பாட்டை முழுவதுமாக  பாட சொல்லி கேட்க.... 

‘நேர விரயம்’, என்று திகைத்த ஆர்யமன் அதை தடுக்க நினைக்கும் முன்னே அவள் பாட ஆரம்பித்தாள்..

I could stick around and get along with you Hello

It doesn't really mean that I'm into you Hello

You're alright but I'm here darling to enjoy the party

Don't get too excited 'cus that's all you get from me Hey

கண்டிப்பாக அவள் குரல் ‘எனர்ஜி டானிக்’! அந்த அறையையே சார்ஜ் ஏற்றி விட்டுருந்தது அவள் பாட்டு!

வெளியே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்க... மந்தமான கால நிலையை அவள் உற்சாகம் ததும்பும் குரல் மாற்றியது... ஆர்யமனுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்தது தான்.

‘இங்க என்ன  பார்ட்டியா நடக்குது’, என்று ஏற்றுக் கொள்ள மறுத்தான்..

அவளின் குரலை கேட்க ஒரு நாள் ஏங்கி தவிக்க போவது தெரியுமா அவனுக்கு??

பாடிக் கொண்டிருந்தவள் பாடலை முடிக்கும் பொழுது,

Yeah I think you're cute but really you should know

I just came to say hello Hello Hello Hello

என்று ஆர்யமனை பார்த்து கண்களை சிமிட்டிய படி பாடி முடிக்க...

அவள் பாட்டை கேட்டு ஆர்பரித்த குழுவினர்.... ஒன்ஸ் மோர் என்று கேட்க ஆரம்பிக்க...

ஆர்யமன், அந்த டீம்மை நிர்வாகிப்பவனாய் தொண்டையை செருமிய படி..

“ஈவினிங் எத்தினிக் டே பார்ட்டில பாட சொல்லலாம்.. இப்போ அவங்க இன்ரோ டைம்!”, என்று பொதுவாக சொல்லி விட்டு அவளைப் பார்க்க..

அவன் பார்வையில் இருந்த கட்டளையை புரிந்து கொண்டவளாக, குழுவினரை பார்த்து,

“தேங்கஸ் ஃபார் தி சீர்ஸ்.. ஐ ஆம்.... “, என்று ஆரம்பித்து நிறுத்திக் கொண்டவள்...

கண்களில் குறும்புடன்...

“எங்க என் பேரை நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்!”, என்று சொல்லி விட்டு... வேகமாக  ஆர்யமனிடம்...

‘ஸ்ஸ்ஸ்!!!!’ என்று விரலை வாயில் வைத்து சைகையாக காட்டி விட்டு, அவர்களை நோக்கி...

“என் பேர்ல  ஒரு நம்பரும் எழுத்தும் இருக்கும்... ”, என்று குறிப்பு கொடுக்க...

ஆளாளுக்கு ஒன்றைச் சொல்ல... நேரம் விரயமாவதை கண்ட ஆர்யமன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.