(Reading time: 11 - 21 minutes)

மூங்கில் குழலானதே – 09 - புவனேஸ்வரி

பிரிவு .. ! கண்ணீர் , துயரம் , விரக்தி இவை அனைத்தையும் வாரி வழங்கிடும் வல்லமை கொண்டது பிரிவு மட்டும்தான் .. பிரிவு என்றாலே பாரதியின் வரிகளை நினைவு கூர்கிறேன் ..

" மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ "

Moongil kuzhalanathe

பிரிவை நரகம் என்கிறான் பாரதி .. ! நரகத்தில் என்னென்ன தண்டனைகள் உண்டு என்று பெரும்பாலும் படித்திருப்போம் ! எரித்தீயில் துடிப்பது , குருதிக்கடலில் மிதப்பது , உணவின்றி தவிப்பது இப்படி பல .. ஆக, பிரிவின் துயரில் இப்பவன் நரகத்தில் வாழ்வதற்கு சமமாய் இருக்கிறான் என்றே கருத்தப்படுகிறது ..

ஆனால் , இந்த பிரிவிற்கு இன்னொரு முகம் இருப்பதை நாம் உணர்ந்தது உண்டா ? அருகில் இருக்கும்வரை அலட்சியமாய் கூட இருந்திருப்போம் .. அப்படி அலட்சியத்தில் அசரும் நம்மை சுத்தியால் அடித்து தெளியவைப்பது பிரிவுதானே ?

 பிரிவில்தான் ஒருவரின் அருகாமையை தேடுகிறோம் .. !

பிரிவில்தான் ஒருவரின் அன்பினை புரிந்துகொள்கிறோம் ..!

பிரிவில்தான் ஒருவர் நமக்காக நிரப்பிய வெற்றிடங்களை கண்டுகொள்கிறோம் !

பிரிவில்தான் ஒருவரின் கோபத்தினில் உள்ள நியாயத்தை உணர்கிறோம் ..!

அருகில் இருக்கும்போது கூட அடக்கடி நினைத்திருக்க மாட்டோம் .. ஆனால் , பிரிவென்று வந்துவிட்டால் உறக்கத்தில் கூட உற்றவரை நினைத்திருப்போம் .. அந்த வகையில் பிரிவும் நல்லது தானே ? சிந்திக்கிறேன் சகிதீபன் .. !

உதடுகளால்

உரைக்காமல் போனாலும்

உன்னதமான அன்பு

உணர்ந்துவிட்டேன் இன்று

உடன் வருவேன் விரைவில்

உன்

உடன்பிறந்தவள்

- விஷ்வானிகா ..

You might also like - Puthir podum nenjam... A romantic story...

விஷ்வாவின் கையெழுத்து இடப்பட்டு இருந்த இடத்தை வருடினான் அபிநந்தன் .. " என் தங்கை " மனதிற்குள் அவனுக்குள் சிலிர்ப்பு .. வீட்டில் முதல் மகனாய் பிறந்த அபிநந்தனை, தொடர்ந்து சகியும் விஷ்வாவும் பிறந்த பின்னே , அவன் தனது கூட்டுக்குள் அடங்கி போனது என்னவோ உண்மைத்தான் .. ஆனால் , அவனுக்கு தனது சகோதரர்கள் மீது எந்த வித வன்மமும் இல்லை .. அவர்கள் மீது கொண்டுள்ள அன்பினை வெளிக்காட்டி கொள்ளா விடினும் , மனதினுள் அவர்களை சீராட்டி கொண்டு தான் இருந்தான் அபி .. விஷ்வானிகா இப்படி கலை இழந்து சோகமாய் இருந்த நாட்களில் எல்லாம் , தனக்குள்ளேயே மருகி கொண்டான் அவன் ..

" எந்த முகத்தை காட்டி அவளிடம் பேசுவேன் ? எதைச்சொல்லி அவளை தேற்றுவேன் ? " இப்படி அடக்கடி கேள்வி கேட்கும் மனதிற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிடுவான் அவன் .. ஏதேதோ சிந்தனைகள் அணிவகுக்க , அதை கலைத்தது தாத்தாவின் குரல் ..

" என்ன அபி , எப்போ வந்த ?" அருண் தாத்தாவின் அருகில் நந்திதாவும் நடந்து வர அவளை பார்வையால் வருடிக்கொண்டான் அபிநந்தன் ..

" இப்போதான் தாத்தா " என்று புன்னகைத்தான் அவன் ..

" அடடே, உனக்கு இப்படி ஸ்மைல் பண்ண கூட தெரியுமா ? பரவாயில்லையே "

" என்னத்தான் இருந்தாலும் நான் உங்க பேரன் ஆச்சே " என்றான் அவன் ..

" எம்மாடி நந்து , வெளில மழை ஏதும் வருதான்னு பார்த்துக்கம்மா .. என் பேரன் இன்னைக்கு அசர வைக்கிறான் "

" ஹா ஹா "

" ஆமா டா , கையில என்ன பூ " ..இவ்வளவு நேரம் தாத்தாவும் பேரனும் பேசிக்கொண்டு இருக்க , நந்திதாவின் விழிகள் என்னவோ அந்த ரோஜாப்பூக்களின் மீதுதான் இருந்தது .. அதுவும் அபிநந்தன் அந்த பூக்களை நெஞ்சோடு அணைத்து கொண்டு நின்ற கோலம் அவளுக்குள் எதையோ அனலாய் தகிக்க வைத்தது .. " யாரு தந்த பூன்னு இவன் இப்படி பத்திரப்படுத்தி வைச்சு இருக்கான் ?" .. அவளின் பார்வையில் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் " இன்னைக்கு உன்னை எப்படி ரூமுக்கு வர வைக்கிறேன் பார்" என்று கூறிக் கொண்டான் மனதினுள் .. இதை அறியாமல் தாத்தா கேட்ட கேள்விக்கு அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக செவிகளை தீட்டி வைத்தாள் நந்திதா ..

" இதுவா தாத்தா , எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவங்க கொடுத்த பூ இது " என்றான் அந்த பூக்களை இறுக பற்றி கொண்டு ..

" அப்படி யாருடா வேண்டியவங்க ?"

" எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க தாத்தா .. அவங்களுடைய அன்பை இந்த பூ மூலமா கொடுத்து இருக்காங்க "

" அப்படியா , காட்டு பார்ப்போம் " என்றப்படி தாத்தா முன்னேறவும் , சட்டென பின்வாங்கினான் அபி ..

"நோ நோ தாத்தா .. திஸ் இஸ் பெர்சனல் .. நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் போங்க " என்றவன் யாருக்கும் என்ற வார்த்தையில் மட்டும் கூடுதல் அழுத்தம் கொடுத்தான் .. அவனை பார்த்து திமிராய் முறைத்தபடி ஹாலில் அமர்ந்து கொண்டாள் நந்திதா ..

" என்னதான் மனசுல நினைச்சிட்டு இருக்கான் இவன் ? யாருக்கும் உரிமை இல்லையா ? எனக்கு கூடவா உரிமை இல்லை ? அதை எப்படி அவன் சொல்லலாம் .. கவனிச்சுக்குறேன் ... முதலில் பூ கொடுத்த அந்த பூகம்பம் யாருன்னு தெரிஞ்சுக்கணும் " என்று எண்ணியவள் விருட்டென எழுந்து அவர்களது அறைக்குள் சென்றாள் .. அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே , அபிநந்தன் துள்ளி குதித்தான் .. அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் , கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு அந்த பூங்கொத்தை மார்போடு அணைத்து கண் மூடி இருந்தான் ..

ந்திதாவின் கொலுசின் ஒலி காதில் கேட்டாலும் அவன் கண் திறக்காமல் இருக்கவும் , அவளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது .. அருகில் இருந்த தலையணையை அவன் மீது வீசினாள் ... " ஹே " என்று அதிர்ச்சியாய் கண்விழித்தான் அபி ..

" ஓ .. உங்க மேல பட்டுருச்சா ? சாரி " என்றாள் நந்திதா ..

" தெரிஞ்சுதானே வீசின ?"

" இல்லையே "

" பொய் சொல்லாத "

" உங்க மேல நான் எதுக்கு வீச போறேன் ? என்னுடைய கம்மலை காணோம் .. எங்க வெச்சேன்னு தேடும்போது உங்க மேல பட்டுருக்கும் " என்றவலிம் பார்வை இப்போதும் பூங்கொத்து மேலேதான் இருந்தது .. " இப்பவும் அதை விடாமல் பிடிச்சிட்டு இருக்கான் பாரேன் " என்று முனுமுனுத்தாள் ..

" உன்கிட்ட தான் நிறைய கம்மல் இருக்கே ..அப்பறம் ஏன் சிரமபட்டு தேடுற ? அதுவும் நீ நேத்து அம்மா ரூமில் தானே தூங்கின ? ஒருவேளை அங்குதான் இருக்கும் போல .. இங்க நீ எவ்வளவு நேரம் நின்னாலும் , நீ பார்க்கனும்னு நினைக்கிறது உன் கண்ணில் படாது ... " என்று கண்சிமிட்டினான் அபிநந்தன் .. அவ்வளவுதான் ! அவளுக்குள் ரோஷம் கரை புரண்டது ..

" பெரிய இவன் .. இவனுக்காகத்தான் நாம வந்தோம் பார்.. ச்ச " என்று மனதிற்குள் கோபித்து கொண்டு , வெடுக்கென அறையை விட்டு சென்றாள் நந்திதா .. ஆனால் , அந்த பூங்கொத்தை தந்தது யார் என்ற கேள்வி மட்டும் இன்னமும் மனதிற்குள் ஓடிகொண்டே இருந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.