" சரி குட்டிமா " என்று போனை வைத்தான் .. குட்டிமா என்று அவன் அழைத்ததை கேட்டு நந்திதாவுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது ... முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது ... " பாவி மனுஷா .. இத்தனை நாளில் , கனவுல கூட என்னை இப்படி கூப்பிட்டு இருப்பாரா ? அந்த ரோஜாப்பூகாரியை முதலில் சொல்லணும் .. இன்னைக்கு அவ யாருன்னு கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் " என்று மனதிற்குள் சூளுரைத்தவள் அவன் அருகிலேயே படுத்து கொண்டாள் ..
" என்ன நந்திதா ? அம்மா ரூம் ல தூங்கலையா ?"
" ..."
" உன்னதான் கேக்குறேன் "
" இதானே என் ரூம் ? நான் இங்க தூங்குறதுல உங்களுக்கு சிரமம் இருக்க ?"
You might also like - Krishna Saki... A family oriented romantic story...
" ச்ச ..ச்ச .. "
" அப்போ தூங்குங்க " என்றாள் ..
" ம்ம்ம் ஓகே ..எது எப்படியோ இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குவேன் " என்றவன் அலமாரியை திறந்து அந்த பூங்கொத்தை எடுத்தான் ..எத்தனை தவிர்த்தாலும் நந்திதாவின் பார்வை அந்த பூவின் மீதே இருந்தது .. அபிநந்தனோ , புன்னகையுடன் அந்த பூவை இறுக அணைத்து கொண்டு கண் மூடினான் ...
" தூங்கு ராஜா ... தூங்கு .... அந்த திருட்டு பூனை யாருன்னு இன்னைக்கு கண்டு பிடிக்கிறேன் " என்று சிலிர்த்து கொண்டு சவாலாய் மனதிற்குள் கூறினாள் அவள் ..
நிமிடங்கள் மணி நேரமாய் கரைய , அபி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கும்வரை அமைதியாய் கண்கள் மூடி படுத்திருந்தாள் நந்திதா .. அவனது சீரான மூச்சு காற்று அவளுக்கு கொஞ்சம் தைரியம் அளிக்க மெல்ல திரும்பி படுத்தாள் நந்திதா ..
அபியின் கைகள் இரண்டும் பூங்கொத்தை இறுக பற்றி இருக்க , அதில் இருந்த வாழ்த்து அட்டை அவளை வரவேற்றது .. விழிகள் மின்ன அவன் அருகில் நகரும் நேரம் அவனிடம் லேசாய் அசைவு தெரிய விழிகளை இறுக மூடிக்கொண்டு " முருகா காப்பாத்து " என்றாள் நந்திதா ..
" அட போமா , நான் என் வள்ளியை கொஞ்சும்போது டிஸ்டர்ப் பண்ணுறதே உன்னுடைய வேலையா போச்சே " என்று முருகர் சலித்து கொள்ள , "இது வேலைக்கு ஆகாது " என்று முணுமுணுத்தபடி கட்டிலில் இருந்து இறங்கி அபிநந்தனின் பக்கம் நெருங்கினாள் நந்திதா ...
நிலவொளி அவன் முகத்தை வருடிட , மிருதுவான புன்னகையில் குழந்தையை போலத்தான் இருந்தான் அபிநந்தன் ..
" நந்து கண்ட்ரோல் கண்ட்ரோல் " என்று தன்னைத்தானே திட்டி கொண்டு அவன் அருகில் குனிந்தாள் நந்திதா .. அந்த வாழ்த்து அட்டையை திறக்க அவள் கை நீட்ட, நீட்டிய கரத்தை வேகமாய் இழுத்து அவளை தன் மார்பில் சாய்த்து தன்னோடு இறுக்கி கொண்டான் அபிநந்தன் ..
" ஹே " என்று அவள் ஏதோ சொல்வதற்குள் அவன் இதழ்கள் அவள் இதழோடு பேச்சு வார்த்தை நடத்த தொடங்கின .. எப்போ பார்த்தாலும் சண்டை போடும் ஜோடி இப்போதான் காதல் பேச போறாங்க .. சோ நாம அடுத்த எபிசொட் ல அவங்களை சந்திப்போம் .
குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்
{kunena_discuss:883}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.