(Reading time: 16 - 31 minutes)

மூங்கில் குழலானதே – 10 - புவனேஸ்வரி

மைதி... மனிதனின் ஆழ் மனதின் தேடல் அது.. சிலருக்கு அமைதி என்பது மௌனம் எனில் சிலருக்கு அமைதி என்பது வார்த்தை... வார்த்தையில் அமைதி எப்படி கிட்டும்?

நாம் எதிர்பார்க்கும் பதிலோ எண்ணமோ வாய்விட்டு உரைக்கப்படும்போது மனமதில் அமைதி நிலவுகிறது.. துன்பத்தில் இன்பம் போல, அஹிம்சையில் யுத்தம் போல, வார்த்தையில் அமைதி என எதிரெதிர் துருவங்களுக்குள் இணைப்பு இருக்கத்தான் செய்கிறது... இதுவே இயற்கை அல்லவா? எனில் இயற்கை நமக்கு சொல்ல வரும் பாடம் என்ன? எதிரெதிர் எண்ணங்களுக்குள் இருக்கும் பிணைப்பு உன்னதமானது என்பதா? சிந்திக்கிறேன் சகிதீபன்.. 

மிக அருகில் அபிநந்தனின் முகம்.. கண்களில் மையலும் குறும்பும் போட்டியிட சற்று முன் விடுவித்த அவளின் இதழை மீண்டும் சிறைப்பிடிக்க முன்னேறினான் அவன்.. அந்த மிகச் சில நொடிகளில் அவளுக்குள் ஆயிர எண்ணவோட்டங்கள்..தன்னை ஏற்று கொண்டு விட்டானா அபி ? அவன் விழிகளில் தெரிவது காதலா? என்றவள் யோசிக்கும் போதே ““அவர்”” குரல் கேட்டது.. “ அவன் உன் மீது காட்டுவது வெறும் கருணையாய் இருந்தால்?”... அவள் உடல் ஒரு முறை நடுங்கியது... அதை உணர்ந்த அபிநந்தன்,

Moongil kuzhalanathe

" என்னம்மா " என்றான் அவன் கனிவாய் , அவளது தலை கோதி ... 

" உண்மைதானா ? இவன் கண்களில் தெரிவது நேசம்தானா ? அவன் வாழ்வில் எனக்கென்ற இடத்தை தந்தே விட்டானா ? அல்லது வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டானா  ? தந்தை ஆக போகிறோம் என்ற உவகையில் மனம் மாறி விட்டானோ ? அல்லது என் மீது பரிதாபமா ? நான் என்ன அன்பினை யாசகமாய் பெறுகிறேனா ? இதுதான் எனது நிலையா ? " அவன் மீது பதிந்த விழிகள் அப்படியே நிலைத்திருக்க , அவள் மனமோ தன்னிலையை எண்ணி போராடியது ..

" காத்திரு நந்திதா .. அன்பும் விவசாயம் தான் .. அவன் மனம் வறண்ட நிலமாய் இருக்கிறது .. அதை வலி கொடுத்து உழுது , அன்பினை நீராய் பாய்ச்சு பிறகுதான் நேசத்தை நட வேண்டும் .. இப்போது முளைத்திருப்பது வெறும் முட்செடியாய்  கூட இருக்கும் .. பொறுத்திரு " அவள்  மனம் ஒரு முடிவுக்கு வந்திட , சற்றுமுன் அவன் தொடுதலில் கிளர்ந்த உணர்வுகளை கட்டுபாட்டுக்குள்  கொண்டு வந்து சட்டென எழுந்து கொண்டாள் .. அபிநந்தனின் அணைப்பில் நசுங்கி நழுவி தரையில் கிடந்தது அந்த பூங்கொத்து .. அதை சட்டென எடுத்து பெயரை கவனித்தாள் .. 

" உன் உடன் பிறந்தவள் - விஷ்வானிகா " .. தன்னையும் மறந்து புன்னகைத்து பெருமூச்சு விட்டாள்  நந்திதா .. ஒரு புறம் , தன்னவனுக்கு பூங்கொத்து கொடுத்தவள் வேறொருத்தி இல்லை என்ற மகிழ்ச்சி .. இன்னொரு புறம் விஷ்வானிகாவின்  பரிசு அல்லவா இது ? சாம்பவி பாட்டியின் மூலமாய் அவளுக்குள் மாற்றங்கள் நிகழும் என்பதில்  அறிகுறி தானே இது ? உடனே இதை சகிதீபனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு .. கணவனை பார்த்து பொய்யாய் முறைத்துவிட்டு , அங்கிருந்து அகன்றாள்  அவள் .. 

" என்ன ஆச்சு இவளுக்கு ? நினைச்சா கொஞ்சுறா  , இல்லன்னா மிஞ்சுறா  " என்று வாய்விட்டே அவன் குறைபட்டு கொள்ள  " அதை நீ சொல்லுறியா அபிநந்தா ? " என்று கேலியாய் கேள்வி எழுப்பியது அவனின் மனசாட்சி .. யாருக்கும் அடிபணியாமல் கெத்தாய்  இருக்க தெரிந்த அவனுக்கு தனது சொந்த மனசாட்சியிடம்  மிடுக்காய் இருந்திட முடியவில்லை ..  விஷ்வா தந்த பூங்கொத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு , " எல்லாமே சரியாகிவிடும் " என்ற நம்பிக்கையுடன் விழி மூடினான் அபிநந்தன் ... நித்திரா தேவியில் சில நேர கண்ணாமூச்சிக்கு பின் அவனை வந்தடைந்தாள் ..

" ஹே தீப்ஸ் " என்று உற்சாகமாய் அதே நேரம் ரசிய குரலில் போனில் மைத்துனனிடம் , இல்லை  இல்லை தன் நண்பனிடம் பேச ஆரம்பித்தாள்  நந்திதா ..

" ஹே நந்து , என்ன இந்த நேரத்துல ? அதுவும் வாய்ஸ்ல சுருதி ஜாஸ்தியா இருக்கே " என்றான் சகிதீபன் ..

" ம்ம்ம் எல்லாம் நல்ல விஷயம் தான் ..  "

" என்ன உன் புருஷன் வீட்டை விட்டு ஓடி போயிட்டானா ?"

" அடேய் , அவர் உனக்கு அண்ணா மறந்திடாதே " .. வழக்கம் போல ரோஷமாய் அண்ணனுக்காக பரிந்து பேசுபவளின் பேச்சில் சிலிர்த்து கொண்டான் .. அதை கேட்பதற்காகவே அபியை திட்டினான் அவன் ..

" அய்யே , அவன் உன்னை கண்டுக்காமல் இருக்கும்போதே தலைமேல தூக்கி வெச்சு ஆடுறியே .. இதுவே இன்னும் கொஞ்சம் நல்லா பார்த்துக்க ஆரம்பிச்சா , எங்களை எல்லாம் மறந்துடுவ போல "

" கம் ஆன் சகி , நீ அவரை திட்டுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல .. புருஷன் பொண்டாட்டின்னா சண்டைகள் வர்றதும் மறுபடி சமாதானம் ஆகுறதும் சகஜம் தான் .. இதெல்லாம் உனக்கு இப்போ புரியாது .. உனக்குன்னு ஒருத்தி வருவா .,.. அப்போ நீயே தெரிஞ்சுப்ப " என்று வியாக்கியம் பேச " அந்த ஒருத்தி " என்றதுமே மைத்ரேயியின் முகம் அவனுள் வந்து போனது ..

" ஹெலோ .. லைன்ல இருக்கியா டா "

" யா யா .. சரி சொல்லு ..என்ன விஷயம் " என்றவனின் குரல் தானாகவே கனிந்திருந்தது தனது கனவு கன்னியின் ஞாபகத்தில் ! .. அவனின் மாற்றத்தை உணராமல் விஷ்வானிகாவை பற்றி பேசினாள்  நந்திதா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.