(Reading time: 16 - 31 minutes)

" வீட்டுல கடைக்குட்டியா இருக்குறவங்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு  என் பாசமலர்களே .. நான் எடுத்து சொல்லுறேன் கைகட்டி வாய் பொத்தி கேளுங்க .. முதல் பொறுப்பு , நாம சொல்றது ரைட்டாவே இருந்தாலும் வயசுல பெரியவங்க பேசும்போது குறுக்க பேச கூடாது ..எப்படியும் நம்ம பேச்சு  முக்கியமான நேரங்களில எடுபடாது , ஒரு கடலைமிட்டாய் வாங்குறதுக்கு எங்க ஒபினியன் கேப்பிங்க , ஆனா கடன் வாங்கும்போது , வாங்கலாமான்னு கேட்க மாட்டிங்க ..ஏன்னா நாங்க கடைக்குட்டி ..அந்த மாதிரி நேரத்துல ஒதுக்கப்பட்ட பீல் வந்தாலும் அதை வெளில காட்டிக்க கூடாது ..

அடுத்த விஷயம் கோபம் .. எங்களுக்கு தலைக்கு மேல கோபம் வந்தாலும் , மூக்குக்கு மேல கோபம் வந்தாலும் அதை பொசுக்குனு காட்ட முடியாது .. பிதாமகன் லைலா மாதிரி " லூசாப்பா நீ " ன்னு கேட்டா , அடுத்த வேளைக்கு சாப்பாடு கிடைக்காது .. சோ, சூடு சொரணை ரோஷம் இது எல்லாத்தையும் மறைச்சு வெச்சுக்கணும் ..

அடுத்தது தமிழ் ல மட்டுமில்ல ..எல்லா மொழிலயும் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு ! எவ்வளவு தப்பு நீங்க பண்ணாலும் வயசுல சின்னவுங்கன்னு  ஒரே காரணத்துக்காக நாங்கதான் இறங்கி வரணும் ..மன்னிப்பு கேக்கணும் ..

இந்த மாதிரி ஒரு பெரிய ரூல்ஸ் புக் ஏ  இருக்கு ..அதுல ஒரு ரூல் தான் , கலகலப்பு .. வீட்டுல என்ன கலவரம் நடந்தாலும் , சின்னவங்க எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்கணும் .. முடிஞ்சா அளவு இஉர்க்குர சூழ்நிலையை இலகுவாக்க பாக்கணும் .. அன்னைக்கு நான் பண்ணதும் அதேதான் .. நம்ம மூணு பேருக்குமே என்ன குடும்ப பகை எதுவும் தெரியாது .. ஆனா பல வருஷமா வீட்டு பக்கமே வராதவங்க வந்து இருக்காங்க .. என்னதான் இருந்தாலும் அவங்க பாவம்ல ? வந்த இடத்தில் எல்லாரும் முகத்தை தூக்கி வெச்சுகிட்டு இருந்தால் , ஏன்தான் இங்க வந்தோம்னு  இருக்குமே ! அதுனாலத்தான் பேசினேன் .. வாயடைத்து போய்  அமர்ந்திருந்தனர் மற்ற இருவரும் .. அதே நேரம் தங்கையின் தெளிவை எண்ணி பெருமை படாமல் இருக்க முடியவில்லை .. நெகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீராம் இரு தங்கைகளையும் தோளில்  சாய்த்து கொண்டு நிம்மதியாய் பெருமூச்சு விட்டான் .. அவள் பேசிய அனைத்தையும் தூரத்தில் இருந்து கேட்டு கொண்டிருந்த அப்பத்தாவோ மர்மமாய் சிரித்து கொண்டார் .. அவர் சிரிப்பிற்கு பின்னால் வில்லங்கம் இருக்குமோ ?

மத்தப்படி நான் எப்பவும் ஜாலியா இருக்குற ஆளுதானே ! இதுல காதல் எங்க வந்திச்சு ? இது பாருங்க உடன் பிறப்புகளே, பார்க்க கம்பீரமாய் இருந்தால் மனசுக்குள்ள ஒரு கிளர்ச்சி வந்தால் , அது காதல் இல்ல ஜஸ்ட் கவர்ச்சி .. அவ்வளவுதான் .. காதல் ஒரு புரிதல் .. அது எனக்கு வரல .. சோ என்னை தூரத்துல இருந்து ஸ்கேன் பண்ணி பார்குற கவலைய விட்டுட்டு வேலையா பாருங்க போங்க " என்றாள் ..

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.