(Reading time: 7 - 14 minutes)

மூங்கில் குழலானதே – 11 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

யணம்..! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றி அமையாதது பயணம் ..ஒரு வகையில் வாழ்க்கையே பயணம் தானே ? ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வது தான் பயணமெனில்  , நாம் அனைவரும் எந்நேரமும் பயணத்தில் தான் இருக்கிறோம் ..

 இங்கு இடம் என்று குறிக்கபடுவது  நாடோ கிராமமோ வீடோ அல்ல !! "இலக்கு " .. ஏதோ  ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து அதை அடைவதற்காக அனுதினமும் நாம் எடுக்கும் முயற்சிதானே பயணம் ? இரு கால்கள் இல்லாதவன் கூட இடையூரில்லாமல் போகும் பயணம் தான் வாழ்க்கை ..

இந்த பயணத்திற்கு செலவு தான் நமது முயற்சி .. வரவு ?அனுபவம் ! வாழ்கையே பயணம் தான் என்ற பட்சத்தில் நாம் சந்திக்கும் அனைவருமே நிரந்தரமானவர்கள் இல்லை என்று தானே அர்த்தம் ? அவரவர் இலக்கை நோக்கி இருவர்  பயணிக்கும்போது ஒரே இடத்தில் அவர்கள் சங்கமித்து ஒன்றாய் பயணிக்க இயலுமா ? சிந்திக்கிறேன் சகிதீபன் ..

ந்த சிகப்பு நிற புடவை தான்யாவின்  பொன்னுடலுக்கு பொருத்தமாய் இருந்தது .. கூந்தலை அழகாய் விரித்திருந்தாள் .. பார்பதற்கே திகட்டாத அழகாய் இருந்தவளை சலனமே இல்லாமல் பார்த்தான் சகிதீபன் .. நிலவில் தெரியும் களங்கம் போல் அவளின் அழகுக்கு தடையாய்  இருந்த ஒரே விஷயம் அவளின் கண்ணீர் ..இதுவரை அவள் எதற்கும் பெரிதாய் கலங்கி அவன் பார்த்ததே இல்லை ..ஆனால் முதல் முறையாய் கண்ணீர் விடுகிறாள் ..அதுவும் அவனை பிரிய போகிறோம் என்ற வேதனையில் ..

" ஹேய் மைதாமாவு .."

".."

" ஏன்டீ என் மானத்தை வாங்குற ? எல்லாரும் என்னைய நம்பியார் ரேஞ்சுக்கு பார்த்துட்டு போறாங்க ..அவ்ளோ வொர்த்து  பீசு இல்லம்மா நானு .."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

" ப்ச்சச்ச் போடா "

" இப்போ எதுக்கு சலிச்சுக்குற ?காலேஜ் தானே முடிஞ்சது ?அதுக்காக நம்ம ப்ரண்ட்ஷிப் முடிஞ்சதாய்  அர்த்தமா ? சப்பாத்தி சாப்பிடனும்ன்னு தோணும்போது நான் டெல்லி வரேன் ..இட்லி சாம்பார் ஞாபகம் வரும்போது நீ   சென்னை வந்துடு "

"த்தூ .. உன் சாப்பாட்டு  புத்தி உன்னை விட்டு போகுமா ?"

" ஹா ஹா .. அது எப்படி டீ ? எந்த மூட்ல இருந்தாலும் என்னை சூப்பரா திட்டுற?"

" சகி நான் கொலைவெறியில் இருக்கேன் "

" வாவ் நம்ம சியான் விக்ரம் சொன்னது சரிதான் " என்று புத்தி போட்டான் சகி ..

"நீ இப்படி புரியாமல் பேசுறதா இருந்தால் ,நான் இப்போவே கெளம்புறேன் " என்று முகத்தை திருப்பி கொண்டாள்  தான்யா ..

"அட லூசு ..நீ உசுரே போகுதே சாங் பார்க்கலையா ? அது சியான் சொல்லுவாரு , கோபம் வந்ததும் அழுகை நின்னுடுச்சேன்னு ..அந்த மாதிரி நீ என் மேல கோபமானதும் அழுகை நின்னுருச்சு "

அவனை அடிப்பதா அல்லது கொல்வதா  ? என்பதுபோல முறைத்தாள் தான்யா ..

"சரியான பிசாசு டா நீ ..என் கண்ணுலேயே படாதே மேன் ,.,ஓடி போ "

" ஹா ஹா .. இது இது ..இது தான் என் மைதாமாவு " என்றவாறு அவள் தோளில் கை போட்டான் சகி ..

"பார்த்து போ , புள்ள குட்டிய ஒழுங்கா ஸ்கூலுக்கு அனுப்பு .. இந்தியா சாப்பாட்டை பார்த்ததும் பரக்காவெட்டி மாதிரி எல்லாத்தையும் தின்னு குண்டு பூசணி ஆகிடாதே .. அப்பறம் என்னால உனக்கு மாப்பிளை பார்க்க முடியாதும்மா .."

" நீ ஏன் எனக்கு மாப்பிள்ளை பார்க்கணும்..அதான் நீயே இருக்கியே "

"ஹும்கும் நீ இன்னும் இந்த சவாலை விடலையா ? இதுக்காகவே என் கனவு கன்னியை தீவிரமாய் தேடுறேன் டீ "

"எப்படியோ யாரின் விதி யாரோட கைலன்னு பார்க்கத்தானே போறோம் .."

" ஓஹோ ,அப்போ இந்த பயணத்துக்கு நீ ரெடியா ?"என்று சகிதீபன் உற்சாகமாய் கேட்க

"ரெடி "என்று அவன் நெற்றியில் முட்டினாள் தான்யா .. சில நொடிகள் மௌனமாய் ஆசுவாச பெருமூச்சு விட்டவள் , கண்ணீர்  மறந்த கன்னங்களை தொட்டு பார்த்துவிட்டு சகியை கட்டி கொண்டாள் ..

"ஐ எம் சோ லக்கி சகி ... நீ எப்பவும் சந்தோஷமாய் இருக்கணும்டா " என்று அவனை விடுவித்தாள் ..அவன் அணைப்பிலும் ஒரு கண்ணியம் இருந்ததை அவளால் உணர முடிந்தது .எப்படிபட்ட நண்பன் இவன் ? ஆராயத் தொடங்கினால் நேரம் போவது கூட தெரியாது .. மனதில் இன்பம் மட்டுமே குடியிருக்க ,அதை இதழிலும் பிரதிபலிக்கும்படி சிரித்தாள்... இன்னும் சில நிமிடங்கள் இருவரும் உரையாடிவிட்டு   அவரவின் பாதையை நோக்கி புறப்பட்டனர் ..

கடைசியாய் ஒருமுறை அந்த படத்தை பார்த்தாள் விஷ்வானிகா ..தான் செய்வது சரிதானா ? பாட்டிக்கே தெரியாமல் இதை கொண்டு போவது பெரும் தவறுதான் .. ஆனால் கேட்டால் கிடைக்காது அல்லவா ?

இந்த மூன்று மாதங்களில் பாட்டியுடன் நன்றாய் ஒட்டிகொண்டாள்  அவள் .. அவள் மன மாற்றத்திற்கும் குணமாற்றத்திற்கும் காரணம் சாம்பவி பாட்டித்தான் .. அவருக்கு அவள் செலுத்தும் நன்றி கடனாய்  இது அமையும் என்று அவளுக்குள் நம்பிக்கை பிறந்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.