(Reading time: 7 - 14 minutes)

றைக்குள் பாட்டி வரும் சத்தம் கேட்கவும் சட்டென புகைப்படத்தை பேக்கில் வைத்து கொண்டாள் ..

"விஷ்வா "

"பாட்டிம்மா "

"மறுபடியும் எப்போம்மா வருவ ?"

" சீக்கிரமாவே வரேன் பாட்டிம்மா ..வந்து உங்களையும் என்னோடு கூட்டிட்டு போவேன் "

".."

"என்ன பாட்டிம்மா அமைதியாகிட்டிங்க ? எனக்காக வர மாட்டிங்களா ? "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

" காலம் ஒத்துழைச்சால் கண்டிப்பா வரேன் .. "..பாட்டியின் அருகில் சென்று அவரின் விழியோடு விழி கலந்து பேசினாள்  விஷ்வா ..

"அந்த காலமே நம்மகையில் தானே பாட்டிம்மா இருக்கு ?ம்ம்ம் ? " என்றவள் தன் கையில் இருந்த கடிகாரத்தை அவர்கையில் கட்டி அழகு பார்த்தாள் ..

"இந்த வாட்ச் உங்ககிட்டயே  இருக்கட்டும் பாட்டிம்மா ..இது எனக்கு ரொம்ப பிடிச்ச வாட்ச் .. உங்களுக்காக இல்லன்னாலும் இதை பார்க்கறதுக்காக ஆவது கண்டிப்பா வருவேன் "என்று அவள் குறும்பாய் கண் சிமிட்டிட

" வாலு .. "என்று அவள் தலையில் தட்டி நெற்றியில் முத்தமிட்டார் பாட்டி ..

இந்த பயணம் அவளுக்கு மறுஜென்மம் ..கடந்த காலங்களை எல்லாம் பாட்டியின் காலடியில் புதைத்து விட்டு புதிய இலக்குடன் பயணத்தை ஆரம்பித்தாள் விஷ்வானிகா ..

"சோ நீ ஏர்போர்ட் வரல ..அப்படி தானே ?" கோபமாய் போனில் கேட்டான் கெளதம் ..

"ஷ்ஷ்ஷ்ஷ் டேய் ஏன்டா கத்துற ?பேசாம போனை வெச்சுட்டு வானத்தை பார்த்து பேசு எனக்கு கேக்கும் "- சதீரஞ்சினி ..

"இந்த பழைய ஜோக்கெல்லாம் நான் அழகிய தமிழ் மகன் படத்துலேயே பார்த்துட்டேன் "

"ஹ்ம்ம் ... கொஞ்சம் வேலை இருக்கு கெளதம் "

" ஹேய்  ஏன்டீ என்னை பாடாய் படுத்துற நீ ? உன் மூஞ்சிய பார்க்கனும்னு ஆசையா வரேன் , நீ இப்படி பண்ணுறியே "

".."

" சரி நீ வரலன்னா ஓகே ..நானும் வரல போ " என்று அவன் கூறவும் அலறினாள் ரஞ்சினி ..

"டேய் குரங்கே , தயவு செஞ்சு வந்து தொலை ... நீ ஒருத்தன் இல்லாமல் எனக்கு எவ்வளோ டென்ஷன் தெரியுமா ..ஏன்டா உன்னை அனுப்பி வெச்சோம்னு இருக்கு ..நீ வந்ததுக்கு அப்பறம் தான் நான் நிம்மதியா தூங்கனும் .. இப்போ என்ன  ஏர்போர்ட் வரணும் .. அவ்வளவு தானே ? வரேன் "

" செல்லம் மச்சி நீ ... என் டார்லு ..உன்னை நேருல பார்த்து கொஞ்சுறேன் .. இப்போ ப்ளைட் கு டைம் ஆச்சு செல்லம் ..பை " என்று துள்ளலாய் கெளதம் போனை வைக்க ,அதே உற்சாகம் அவளையும் தோற்றி கொண்டது .. மூன்று மாதங்களுக்கு பிறகு தன்னை பார்க்க வரும்  அவனை வரவேற்கும் சந்தோஷத்தின் நேற்றில்  இருந்தே சரியாய் உறங்கவில்லை அவள் .. இருப்பினும் அவனை சீண்டி பார்க்க எண்ணித்தான் அப்படி பேசினாள் .. அதே நேரம்  தன் தந்தையிடம் பேசி கொண்டிருந்தான் கெளதம் ..

" உடம்ப பார்த்துகோங்க டேட் "

" நான் பார்த்துக்குறேன் ..நீ என்னடா அப்பாவை பிரியறோம்ன்னு கவலையே இல்லாம சிரிச்சிட்டு இருக்க ?"

" போங்கப்பா நானே எப்போடா இந்த குரங்கை பார்ப்போம்னு வைட் பண்ணி இப்போதான் சந்தோஷமா இருக்கேன் "

"அடபாவி "

"ஆமாப்பா ,  இருக்கும்போது அவளே என்னை தேடி வந்து கவனிச்சுப்பா .. தினமும் ஒரு தடவையாச்சும் அவளை பார்த்துடுவேன் .. இங்க அப்படி இல்லையே "

"ஹ்ம்ம்ம்ம் ..இந்த ஸ்கைப் ஐமோ எல்லாம் எதுக்கு இருக்கு கெளதம்,...அதுல பேசவேண்டியது தானே ?"

" அட போங்கப்பா ..என்னத்தான் அப்படி பேசினாலும் நேரில் பார்க்குற  மாதிரி ஆகுமா ?அவளை டென்ஷன் படுத்தி , அப்பறம் சமாதனபடுத்தி ..அது ஒரு கிக்கு "என்றான்..

" விஷ்வா மேல உனக்கு இவ்வளவு லவ்ன்னு நான் எதிர்பார்க்கல கெளதம் " என்றார் அவனின் தந்தை .. ஒரு நொடியும், தாமதிக்காமல்

"அப்பா நான் ரஞ்சு பத்தி பேசுறேன் " என்றான் .. அதை சொன்னதும் தான் தனது மனதில் ரஞ்சனிக்கும் விஷ்வாவிற்கும் அவன்  கொண்டுள்ள வேறுபாடு அவனுக்கே புரிந்தது ...

" அப்பா "

" சும்மா கெளதம் .. உன்ன டெஸ்ட்  பண்ணத்தான் அப்படி கேட்டேன் .. நீ அந்த பொண்ணை  மறந்துட்டல ? அது போதும் " என்று மகனை அணைத்து  கொண்டார் தந்தை .. அவன் முகத்தில் தெரிந்த குழப்பம் அவருக்கு மகிழ்ச்சியை தந்தது..

"ஓகே , நம்ம புள்ள கூடிய சீக்கிரம் குட் நியுஸ் சொல்லிடுவான் "என்று தனக்குள்ளேயே சொன்னார் .. கெளதமோ முதல்முறையாய் தனக்கு ரஞ்சினியின் மேல் உள்ள உணர்வுகளை ஆராய தொடங்கினான் .. அவனின் புது பயணம் இனிதாய்  தொடங்கியது !

ஹாய்  ப்ரண்ட்ஸ் .. ரொம்ப நாளாய் மூங்கிலை உறங்க வெச்சுட்டேன் ..அதுக்கு பெரிய சாரி .. " தமிழுக்கு புகழ் என்று பேர் " கதைக்கு அடுத்த அப்டேட் எழுதும்போது தான் இந்த ஐடியா தோணிச்சு .. ஒரு நீளமான அப்டேட் கொடுக்கணும்னு அதிக டைம் எடுக்குறது விட ,கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி அப்டேட் கொடுக்கலாம்னு நினைக்கிறேன் .. ஆக , இனிமேல் நல்ல "மூங்கில் குழலானதே " கதைக்கும் சீக்கிரமாய் அப்டேட்ஸ் வரும் :) பை பை

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.