" ஹும்கும் .. இவ்வளவு தானா "
" என்ன தீபு இப்படி சொல்லிட்ட?"
" நீ சரியான டியூப் லைட் நந்து .. ஸ்கூல் படிக்கும்போதுதான் மந்தம்னு நினைச்சேன் ஆனா , கல்யாணம் ஆகியும் அப்படியே தான் இருக்க .. இதெல்லாம் பழைய நியுஸ் .. உன் வாய் இப்போ 10 இன்ச்சு பெருசா திறக்குற அளவுக்கு நான் ஒரு நியுஸ் சொல்லட்டுமா ? " என்றவன் , விஷ்வா தனக்கு அனுப்பிய பரிசை பற்றியும் கூறினான் ..
நிஜமாகவே வாயை பிளந்து தான் நின்றாள் அவள் .. அதை ஓரளவு அனுமானித்து இருந்தான் அவளின் நண்பன் .. " ஹும்கும் , அந்த பாதாளத்தை கொஞ்சம் மூடு ..இங்க வரைக்கும் ப்ளாஷ் அடிக்கிது " என்றான் குறும்பாய் ..
" நம்ம வினியா தீபு உனக்கு கிபிட் அனுப்பினா ?"
" ஆமா ஆமா .. எல்லாம் சாம்பவி பாட்டியும் ட்ரீட்மண்ட் .. நம்ம வீட்டு பெரியவங்க அவளை கொஞ்சம் முன்னாடியே அவளை ஊட்டிக்கு அனுப்பி இருந்தா , இந்நேரம் பல பிரச்சனைகள் சரி ஆகி இருக்கும் .. ஆனா எப்போ நீ இந்த வீட்டு மருமகளாய் வந்தியோ , அதோடு அவங்களும் உன்ன மாதிரி லேட் பிக் அப் ஆகிட்டாங்க " என்றான் சகிதீபன் ..
" ஹும்கும் .. என்ன சொன்னாலும் ,என்னை வாரி கிட்டே இருக்கனுமா உனக்கு ? உனக்கொரு விஷயம் சொல்லவா ? உங்கண்ணா இப்போதான் நம்ம வழிக்கு வரார்ன்னு நினைக்கிறேன் "
" எத வெச்சு சொல்லுற ?"
" நான் அவரை விட்டு விலகி போறேன்னு சொல்லிட்டேன் .. அதுல இருந்து அவர் கண்ணுல எப்பவும் ஒரு பயம் பரிதவிப்பு இருக்கு "
" அதெல்லாம் இருக்கட்டும் , அவன் வாயை திறந்து ஏதாச்சும் உண்மையை சொன்னானா உன்கிட்ட ?"
" இல்லையே ஆனா கண்ணாலேயே ஐ லவ் யூன்னு சொல்றார் "
" ஹும்கும் ..மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும ?"
" டேய் " என்று மிரட்டும் தொனியில் ஆரம்பித்தவள் பட்டென சிரித்தாள் .. " உன் மொக்கைய கேட்டு ரொம்ப நாளாகுது தீபு .. சீக்கிரம் வந்து சேரு " என்று கோரிக்கை விடுத்தாள் ..
" எனக்கும் தான் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டல் ஆகணும்னு ஆசையா இருக்கு ..எவ்வளவு நாளுதான் , ஓடாத உங்க படத்துக்கு ப்ளேக்ல டிக்கெட் விப்பேன் நானு ? கவலையே படாத , மூனே மாசத்துல வந்திடுறேன் " என்று குறும்புடன் வாக்குறுதி கொடுத்தான் சகிதீபன் .. இன்னும் சில நிமிடங்கள் அவனுடன் உரையாடிவிட்டு அவள் அறைக்கு வந்த நேரம் நன்றாய் உறங்கி கொண்டிருந்தான் அபிநந்தன் .. முகத்தில் எப்போதும் இருக்கும் , இறுக்கம் மறைந்து குழந்தையாய் அவன் உறங்குவதை விழிகளால் பருகியபடி , அவளும் கண் அயர்ந்தாள்.
" குட் மோர்னிங் மேம் "
" குட் மோர்னிங் "
" குட் மோர்னிங் மேம் "
" வெரி குட் மோர்னிங் "
காலையிலேயே உற்சாகமாய் ஆபிசில் தன்னை வரவேற்றவர்களுக்கு புன்னகையுடன் பதில் கூறி தலை அசைத்துவிட்டு தனது அறைக்குள் பிரவேசித்தாள் சதீரஞ்சனி .. நேற்றைய நாள் எவ்வளவு கடுமையானதாக இருந்திருந்தாலும் , மறுநாள் காலை என்பது அவளுக்கு எப்போதுமே வரம்தான் .. யாரையும் காலையிலேயே கடிந்து பேச விரும்ப மாட்டாள் அவள் .. உற்சாகமான நாளின் தொடக்கமே அழகான காலைதான் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று .. அந்த சுழர்நாற்காலியில் அமர்ந்து ஒருமுறை சுற்றியவளின் கண்கள் கௌதமின் அறை மீது படிந்தது .. அவளுக்கு அப்படியே நேரெதிர் அவன் .. வேலை என்று வந்துவிட்டால் காலை மாலை என்ற பேதமில்லை அவனுக்கு .. அதுவும் கோபம் அவன் கூடவே பிறந்த உடன்பிறப்பு .. விஷ்வானிகாவின் விஷயத்தில் மட்டும்தான் அவன் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் அதிக பொறுமையுடன் இருந்தான் .. அதுவும் கடந்த வாரம் அவள் பேசிய பேச்சில் பறந்தே விட்டிருந்தது ..
அவன் நெருப்பு என்றால் ரஞ்சனி நீராய் இருந்தாள் .. அவனுடைய கோபத்தை புரிந்து கொள்ளவும் சரி படுத்தவும் அவளால் தான் முடியும் .. அவன் மட்டும் அங்கு இருந்திருந்தால் , இந்நேரம் அந்த கண்ணாடி தடுப்பையும் மீறி அவனது கோபக்குரல் அவளின் அறையை அடைந்திருக்கும் .. இருவருக்கும் ஒரே அறையை அவன் தயார் செய்தபோதே " தெய்வமே , நீ கத்துற கத்துக்கு நான் செவிடாய் மாறிடுவேன் ..அதனால் எனக்கு பக்கத்துக்கு ரூமை கொடுத்திரு " என்று கேட்டு வாங்கி கொண்டிருந்தாள் அந்த அறையை ..
அதற்கு பின்னால் இருந்த காரணங்கள் பல .. ஒன்று வியாபார நுணுக்கம் ! கெளதம், சதீரஞ்சனி இருவரின் அணுமுறையும் எப்போதும் எதிரெதிராய் தான் இருக்கும் .. இது ஒருவகையில் அவர்களுக்கு இலாபம் தான் .. கௌதமின் கோபத்திற்கு கட்டுபடாதவர்கள் , ரஞ்சினியின் சமாதான பேச்சில் இலகிவிடுவர் ..அதே போல ரஞ்சினியிடம் போக்கு காட்டுபவர்கள் கௌதமிடம் தப்பிக்க முடியாது .. இந்த வழக்கம் அங்கு பணிபுரியும் அனைவரையுமே நன்முறையில் பாதித்தது .. உண்மையில் அவன் இல்லாமல் அவளுக்கு தன்னில் பாதியை இழந்தது போலத்தான் இருந்தது ..