(Reading time: 29 - 58 minutes)

ங்கே சிபி பைக்கை ஸ்டார்ட் செய்து தயாராக இருக்க... வேகமாக ஏறிக் கொண்டவள்  ஆற்றுப் பக்கம் வண்டியை செலுத்த சொன்னாள்.

“அக்கா.. கொஞ்சம் பயமா இருக்கு!”, என்று புதிதாக வண்டி ஓட்ட திணறியவனிடம்...

“அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை அஞ்சுவின் உடைமையடா...”,

“அப்படிப்பட்ட அஞ்சனாவின் தம்பி பயப்படலாமா! அக்கா இ..ரு..க்..கே..ன்...ல”, என்று தம்பியை ஊக்குவித்த அஞ்சனா....

ஆற்றங்கரையை நெருங்கும் பொழுது தான் பவதாரிணியின் கூற்றின் உண்மை உணர்ந்தாள்.

ஆற்றங்கரையை ஒட்டி ஓங்கி உயர்ந்து வளர்ந்த ஆலமரம் இருக்கும்....  எப்பொழுதும் அதன் விழுதை பற்றி ஊஞ்சலாடிய படி ஆற்றில் டைவ் அடித்து குளிப்பது தான் அவள் வழக்கம்...

இன்றோ அந்த ஆலமரம் பாதி தான் தெரிந்தது... மற்றவை எல்லாம் நீர் சூழ... சாய்ந்து கொண்டிருந்த அந்த மரமே.. ஆற்றின் ஆக்ரோஷத்தை காட்ட...

அதை நெருங்க அஞ்சிய அஞ்சனா,

“கொஞ்சம் பயமா இருக்கு!”, என்று சொல்வது இவள் முறையாயிற்று...

You might also like - Malargal nanainthana paniyale... A family oriented romantic story...

ஆனால், சிபியோ...

“அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை அஞ்சு தம்பியின் உடைமையடா”, என்று அவனுள் இருந்த இள ரத்தம் பயத்தை ஒதுக்கி விட்டு ஆற்றை நோக்கி நடக்க...

சிறு எட்டுக்கள் வைத்து அவனைத் தொடர்ந்த அஞ்சனாவிற்கு...

பவதாரிணியின் முகம் மனதில் வந்து போயிற்று...

“இல்லை வேண்டாம்! போயிடலாம்”, என்று சொல்லி சிபியின் கையைப் பற்றி பின்னே இழுக்க...

அவனோ, “அங்க பாரேன்...“, என்று பதற்றத்தோடு கை நீட்டிக் காட்ட...அவன் சென்ற திசையில் இவள் பார்வை சென்றது...

ஆற்று வெள்ளத்தில் ஒரு குழந்தை சிக்கியிருந்தது... அந்த குழந்தை தவிப்பதை கண்ட பின்...  அவள் கால்கள் நிற்கவில்லை.. ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தவளை...

“க்கா.. இரு... நானும் வர்றேன்”,  அழைத்துக் கொண்டே சிபியும் அவள் பின்னே ஓட...

அதை கேட்டவளது மூளை ஆற்றின் வேகத்தை பார்த்து எச்சரிக்கை மணி அடிக்க....

“நீ வரக் கூடாது! அஞ்சனா மேல சத்தியம்!”, என்று சொல்லி முடிக்கும் பொழுது ஆற்றிற்குள் பாய்ந்திருந்தாள்....

ம்பரமாக சுழன்று தனது மைத்துனி சங்கரியுடன்  சேர்ந்து காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த பவதாரிணியின் அலைபேசி சிணுங்க, அழைப்பை எடுத்தார். அழைத்தது அவர் அக்கா விஜய தாரிணி.

“பவா, நாங்க வந்துகிட்டு இருக்கோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்போம்.. அப்பாகிட்ட சொல்லிடு”, என்று தகவல் சொன்னார். அவர் வசிப்பது மதுரையில். அவருக்கு இரண்டு மகன்கள் கேசவ், ராகவ். இருவரும் மருத்துவர்கள். மூத்தவன்  கேசவ்விற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இரண்டாமவன் ராகவ் கண் மருத்துவத்துக்கான மேல் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

மதுரையின் முக்கிய பகுதியில் பல தரப்பட்ட வசதிகள் கொண்ட மருத்துவமனை தவிர இரண்டு கல்லூரிகளையும் நிர்வாகித்து  வருகிறார் விஜயதாரிணியின் கணவர் டாக்டர் மகேந்திரன்.

அக்கா வருவதை அறிவித்தார் பவதாரிணி தன் தந்தையிடம். அதைக் கேட்டதும் சொக்கரின் முகத்தில் பூரிப்பு!

ஒவ்வொரு தீபாவளிக்கும் மூத்த மகளும், மருமகனும் அங்கு வந்து விடுவார்கள். சொக்கருக்கு மகேந்திரன் ஒரு பலம்! மாமனார் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர் அவர்.

சொக்கர் - தங்கம் தம்பதிகளுக்கு பிறந்தது இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள்... சற்று பெரிய குடும்பம் தான்..

விஜய தாரிணிக்கு அடுத்து பிறந்தவர் கிரிதரன். அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடவென்று சில காலம் சென்றவர், அங்கேயே  குடி பெயர்ந்து  விட்டார். கிரிதரன் - வாசுகி தம்பதியருக்கு  பிறந்தவன் தான் ஹர்ஷவர்தன்.

சொக்கரின் இன்னொரு மகன் சிவகிரி தந்தையுடன் சேர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் பரந்து கிடக்கும் அவர்களின் ஏலக்காய், மிளகு மற்றும் டீ எஸ்டேட்களையும், அதை சார்ந்த தொழில்களையும் நிர்வாகித்து வருகின்றனர். இதை தவிர்த்து இரண்டு கிரானைட் குவாரிகளும் இவர்களுக்கு உள்ளது.

சிவகிரி - சங்கரி தம்பதிகளுக்கு ஆதித்யா, பாலாஜி என்று இரு மகன்கள்.

சங்கரியின் அண்ணன்  துரை, பவதாரிணியை மிகவும் விரும்பி கைபிடித்தவர்.  சில ஆண்டுகளுக்கு முன் தான் கொடிய நோய் தாக்கி தவறினார்.

என்றுமே சங்கரிக்கும், பவதாரிணிக்கும் கருத்து வேறுபாடு வந்ததில்லை. தன் அண்ணன் இறந்த பிறகு பவதாரிணி மீது கூடுதல் பரிவு தான் சங்கரிக்கு வந்தது!

அஞ்சனா, தன் மாமன் மகன்கள் - ஆதி, ஹர்ஷ், பாலாஜி, அண்ணன்கள் கேசவ், ராகவ் மற்றும் தம்பி சிபி... இப்படி ஆண் பிள்ளைகளோடு தான் வளர்ந்தாள்.

அவளுடன் நெருங்கி பழகும் வட்டம் என்றால் இவர்கள் மட்டும் தான்...

ஆண்களில் கெட்டவர்கள் உள்ளனர் என்பதை செய்தியில் மட்டுமே பார்த்திருக்கிறாள்! அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் ‘எக்போஸர்’ அவளுக்கு இல்லை..

பள்ளி படிப்பு தாத்தா நடத்திய கான்வென்ட்டில்.. அதிலும் அவளுக்கு நண்பன் மற்றும் காவலனாக இருந்தது அவள் வயது ஒத்த பாலாஜி. கல்லூரி படிப்பு மதுரையில் தன் பெரியப்பாவின் எஞ்சினியரிங் கல்லூரியில். அதிலும் பாலாஜியே இவனுக்கு கேடயமாக இருப்பான்.

அவள் மதுரையில் படித்ததெல்லாம் கண் துடைப்பு போல தான்...  இஷ்டம் இருந்தால் கல்லூரி செல்வாள்.. யாரிடமும்  சட்டென்று பழகி விடும் குணம் அவளது என்றாலும்... பாலாஜி கூடவே இருந்ததாலோ என்னவோ... வேறு நட்புக்கள் நெருக்கமாக அமையவில்லை அவளுக்கு!...

அது மட்டுமில்லை.. இவள் நிறுவனரின் நெருங்கிய உறவு என இயல்பாக யாரும் பழகவில்லை. ஒன்று ஓவராக ஜால்ரா அடிப்பவர்களாக இருப்பர்.. இல்லை அதிக ஒதுக்கம் காட்டுவார்கள்..

அஞ்சனாவிற்கு அவர்களை எல்லாம் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாது.. ஆனால், பாலாஜிக்கு தெரியும்!

“நீ என்ன சொன்னாலும் செய்ய மாட்டேன்டா... அப்படி தான் பேசுவேன்! அவங்க நல்லவங்க தான்!”,

என்று வாய் வாதாமிட்டு கடைசியில் அவன் சொல்வதை அச்சு பிசகாமல் செய்வாள்.

வெள்ளிக்கிழமை முதல் கிளாஸ் ஹவரிற்கு மட்டும் அட்டென்ஸ் போட்டு விட்டு  பவதாரிணியை பார்க்க ஓடி வந்து விடுவாள்...

இப்படியே நான்கு வருடத்தை ஓட்டி படிப்பையும் முடித்து விட்டாள்...

தன் தந்தையிடம் பவதாரிணி பேசிக் கொண்டிருந்த பொழுது ஆதித்யன் வந்தான்.

“என்னடா! புது மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு இன்னும் கிளம்பாம இருக்க!”

என்று கேட்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.