(Reading time: 29 - 58 minutes)

ம்ம்.. என்னை அனுப்பிட்டு நீங்க மட்டும் ஜாலியா இருப்பீங்களா.. எனக்கு போகவே பிடிக்கலை.. எங்க மாமியார் ஷை டைப்.. மாமனார் ஓவரா பேசுவார்.. காதை மட்டும் ஓபன் பண்ணி வைச்சிட்டு கையை கட்டிட்டு டி.வி.யை முறைச்சு கிட்டு இருக்கணும்..”, என்று அலுத்துக் கொள்ள..

“சுவாதி இன்னும் ரூம்லே தான் இருக்குது போல..”, என்று சொக்கர் சொல்ல..

ஆதி, “எப்படி கரக்டா சொல்றீங்க தாத்தா?”

“தைரியமா மாமனார் வீட்டை குறை சொல்றியே! அதை வச்சு தான்!”, என்று பல்பு கொடுக்க..

சிரித்தவன், “அவளுக்கே புரியுது தாத்தா! இன் ஃபாகட் அவளுக்கும்  கும்பல்ல இருக்க தான் பிடிச்சிருக்கு! அவங்க பேரண்ட்ஸ் வருத்த படகூடாதுன்னு மதிய விருந்துக்கு மட்டும் போயிட்டு வரலாம்ன்னு பார்த்தோம்”

“பார்த்துப்பா.. தலை தீபாவளி! அவங்க வீட்டில் எதுவும் கோவிச்சுக்காம!”, என்றார் பவதாரிணி.

“அதல்லாம் நினைக்க மாட்டாங்க அத்தை... ஸ்வாதியே ஹேண்டில் பண்றேன்னு சொல்லியிருக்கா!”

You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story 

“அத்தே... அத்தே..  அத்தே...”என்று அழைத்துக் கொண்டே பாலாஜி வர...

“என்னடா ஏலம் விட்ட படி வர்ற”, கேட்டது பவதாரிணி.

“அந்த ஒட்டடை குச்சி எங்கே!”, என்றான் கோபத்துடன்.

“கதவோரமா இருக்கும் பாரு!”, என்று சொக்கர் இடை புக...

“நக்கலு.....!!!”, என்று தாத்தாவை முறைத்தான். அவர் இளவட்டங்களுக்கு இணையாக இறங்கி பேசுபவர். அஞ்சனாவை அழைக்கிறான் என்று தெரிந்தும் அவனை உசுப்பேற்ற..

மேலும் சினந்தவன்,

“அத்த! என்னோட பைக்கை காணோம்! உங்க பையனை கூட்டிக்கிட்டு அந்த ஒட்டடை குச்சி எங்கயோ ஊர் சுத்த போயிருக்கா! அவ மட்டும் என்கிட்ட சிக்கட்டும்!”, என்று குற்று பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தான் பாலாஜி.

“டேய்.. அவ எங்கயும் போகலை... இங்க தான் அவ ரூம்ல தான் ஏதோ பாத்..”, என்று சொல்லும் பொழுதே திகைத்த படி சுவர் கடிகாரத்தை பார்க்க... மணி  எட்டரையை தாண்டி இருந்தது!

என்ன தான் வசதியான குடும்பம், என்றாலும் பாரம்பரியமான குடும்பம் அவர்களது. சமையல் வீட்டு பெண்களின் பொறுப்பு. நல்ல நாள் என்பதால் காலை உணவிற்கே பெரிய பட்டியல்...  சமையல் வேலைக்களுக்கு நடுவே அஞ்சனாவை மறந்தே போயிருந்தார் அவர்...

குளித்ததும் சுடச் சுட டீ கேட்டு எப்படியும் அவரிடம் தான் ஓடி வருவாள்...

‘இந்த பொண்ணு இன்னும் கீழ இறங்கி வரவே இல்லையே’, அவர் நெஞ்சம் பதைபதைக்க... அவர் யோசனையோடு மாடியை பார்த்த படி நிற்க..

பாலாஜி,

“ம்ம்.. மாடியில் அவ ரூம்மில் இருப்பான்னு நீங்க நினைச்சிட்டு இருங்க... அவ உங்க தலையில் மிளகாய் அறைச்சிட்டு பின் பக்கமா ஓடி போயிருப்பா..”

என்று சொன்னதும், பவதாரிணிக்கு கோபம் வந்தது.

“ரிலாக்ஸ் பண்ண போறேன்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு தான் போனா...”, என்றார் உறுதியுடன்.

“ஸ்ஸ்..ப்ப்பா.. அம்மா சென்டிமென்ட் தாங்க முடியலையே! வாங்க உங்க பொண்ணு லட்சணத்தை ப்ரூவ் பண்றேன்”, என்று

அவரை அழைத்துக் கொண்டு அவள் அறைக் கதவைத் தட்ட... திறக்கப்படவில்லை... பல முறை தட்டி பார்த்து தோற்க...

பவதாரிணியோ, “தலையை காய வைக்க மொட்டை மாடிக்கு போயிருப்பாளாயிருக்கும்!”, என்றார் இன்னும் நம்பிக்கை தளராமல்...

“ம்ம்... அவளை வீட்டுக்குள்ள தேடக் கூடாது... வீட்டுக்கு வெளியே தான் தேடணும்!”, என்றான் அவளை நன்கு அறிந்து வைத்தவன் சொல்ல... பவதாரிணி பயந்தார்.

“கதவை உள்ளுக்குள்ள பூட்டியிருக்கே! எங்கயும் போயிருக்க மாட்டா!” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிய படி   கடைசி முறையாக கதவை தட்டினார்...

இப்பொழுது கதவு சிறிதாக திறக்கப்பட.. துண்டை சுற்றிக் கொண்ட அஞ்சனாவின் தலை மட்டும் வெளியே தெரிய...

அதைக் கண்டதும் பாலாஜி,

“இவ்வளோ நேரம் திறக்காம என்னடி பண்ற?”, ஆத்திரத்துடன் கேட்டான் பாலாஜி.

சில நொடிகளுக்கு முன், பால்கனி வழியாக அறைக்குள் வந்தவளுக்கு  கதவு தட்டபடும் ஓசையைக் கேட்டதும் “திக் திக்..”

ஈர உடையை மாற்ற நேரமில்லாமல்... கையில் கிடைத்த துண்டை தலையில் சுற்றிக் கொண்டு சமாளிக்கலாம் என்று வந்தவளுக்கு... சிடு சிடுத்த படி நின்ற பாலாஜியைக் கண்டதும் ரணகளத்திலும் ஒரு குதூகலம்.

“என்ன பண்றேனா ??... ஹார்லி டேவிசன் பைக் ஓட்டுறேன்... .”, என்று இடக்காக சொல்லி விட்டு பவதாரணியிடம் திரும்பி...

“என்ன பாவா... ட்ரெஸ் கூட மாத்த விடாம இந்த தடி மாடை விட்டு கதவை உடைக்க பார்க்கிறீங்க...”, என்று அலுத்துக் கொள்ள...

அவரோ,

“இவ்வளோ நேரமா குளிச்ச?”, நம்ப முடியாமல் கேட்க...

“குளிச்ச மாதிரியா தெரியுது... நல்லா ஆடி களைச்ச மாதிரி தெரியுது! அஞ்சு நஞ்சு!”, என்று கடுப்பில் திட்டினான் பாலாஜி.

அவனை முறைத்து விட்டு, பவதாரிணியிடம் திரும்பியவள்,

“ஆமா... நஞ்சு... அந்த நஞ்சை முறிக்க தான் டிடாக்ஸ் பாத் எடுத்தேன் பாவா... லாவ்ண்டர் எசென்ஸ்ஸூம், எப்சம் சால்ட்டும்  போட்டு ரொம்ப நேரம் தண்ணிலே இருந்தா உடம்பில் உள்ள டாக்ஸின் எல்லாம் வாஸ் அவுட் ஆகிடுமாம்..”

“ப்ச்.... பாத் எடுத்து டயர்ட்டா இருக்கிறவகிட்ட இப்படி விசாரணை கைதியாட்டம் கேள்வியா கேட்கிறீங்க... நா வரலுது... ஐ நீட் டீ ரைட் நொவ்”, என்று சிணுங்கிக் கொண்டே கோரிக்கை வைக்க....

பவதாரிணி,

“என்ன பாத்தோ.... இவ்வளோ நேரம் தண்ணிக்குள்ள கிடந்தா சீக்கு தான் வரும்... தலையை நல்லா தோட்டு. சூடா டீ போட்டு எடுத்து வர்றேன்..”, வேகமாக அவள் கேட்டதை செய்ய கிளம்பியவரிடம், உடையை மாற்றி விட்டு தானே வருவதாக சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றதும் பாலாஜியிடம் திரும்பி,

“என்ன? பைக்கை தேட ஆரம்பிச்சிட்ட போல...!”, என்று நக்கலாக கேட்க...

சினந்த பாலாஜி,

“ராட்சசி!”, அவள் தலையில் நங்கென்று கொட்டு வைக்க போக... அதற்குள் தலையை உள்ளிழுத்து அவள் வேகமாக கதவை மூட... தன் கையை கதவு நச்சு விடுமோ என்று வேக வேகமாக கையை பின்னிழுத்தவன்...

“வெளியே வா.. உனக்கு இருக்கு!”, என்று கதவை ஓங்கி மிதிக்க...

“போடா டுபுக்கு!”, பதிலுக்கு உள்ளிருந்து அஞ்சனாவின் குரல் வந்தது..

‘சே.... பைக்கை  வைஃப் மாதிரி பார்த்து பார்த்து வச்சிருந்தேனே! என்ன செய்து வைச்சிருக்களோ இந்த பிசாசு!”,  என்று மனதிற்குள் சொன்ன படியே தேட சென்றான்.

வீட்டின் போர்டிகோவில் நிறுத்த பட்டிருந்தது அவன் பைக். சற்று முன் தேடும்  பொழுது அது அங்கு இல்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.