(Reading time: 29 - 58 minutes)

புகுந்து வீட்டிற்கு சென்று விடுவாளே என்று மற்ற தாய்க்கு இருக்கும் கவலைகள் பவதாரிணிக்கு இல்லை... ஆனால், நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டுமே என்ற பதைப்பு மனதில் இருந்தது...

வீட்டோட மாப்பிள்ளை என்பது கௌரவ குறைச்சலாக நினைக்கும் சமூகம் தான் இது! அவர்களுக்கு சமமான அந்தஸ்த்தில்  வரும் வரன்கள் இதற்கு ஒத்து கொள்ளவார்களா?

அப்படி இருந்தும் ஓரிரு வரன்கள் வரத் தான் செய்தது. ஆனால், அஞ்சனாவிற்கு பிடிக்கணுமே... யாரையுமே பிடிக்கவில்லை என்று விட்டாள் அவள்!

‘இந்த பெண் வேற காதல் கல்யாணத்தை பற்றி தெரிந்து கொள்வதிலே ஆர்வமாக இருக்கிறாளே!’, என்ற கலக்கம் அவருக்கு இருந்தது.

‘நான் என்ன ஆதி மாதிரி திருட்டுத்தனமா லவ் பண்ணட்டு....  கல்யாணம் பண்ணவா  பெர்மிஷன் கேட்கிறேன்! லவ் பண்றதுக்கு தானே பெர்மிஷன் கேட்கிறேன்?’, என்று வாதாடும் பெண், பிறந்த நாள் பரிசாக அதை தான் கேட்க போகிறாள் என்று பயந்தார் பவதாரிணி.

அவள் கேட்டு அந்த வீட்டில் மறுப்பு இல்லை... ஓரளவுக்கு கண்டிப்பு காட்டுவது பவதாரிணி மட்டுமே! அதுவும் அவள் வருந்தி அடம்பிடித்து கேட்டால் இவருமே அதை செய்து விடுவார்.

‘கடவுளே! என் பொண்ணுக்கு  எந்த குறையும் இல்லாம நல்லா வாழணும்!’, மானசீகமாக வேண்டிக் கொண்டே,

தன்னை அண்டி தூங்கிக் கொண்டிருப்பவளின் தூக்கம் கலையாது மெல்ல தன்னை பிரித்தெடுத்த பவதாரிணியை...

You might also like - Oru kootu kiligal... A family drama...

திடுமென வந்த அலார சத்தம் கலங்கடித்தது... அவள் முழித்து விடக் கூடாது என்று வேகமாக அவள் அலைபேசி அலாரத்தை அணைத்து விட்டு.. எழுந்து கொள்ள...

“பாவா...”, சிணுங்கலோடு  அஞ்சனாவின் கை அவரைப் பற்றியது..

“உன் பொண்ணு எந்த குறையும் இல்லாம நல்லா வாழ வேண்டாமா? பர்த் டே விஷ் பண்ணிட்டு போ.. பாவா”, என்று கண்களை மூடிக் கொண்டே குழைந்த குரலில் அவள் கேட்க...

சிரித்த பவதாரிணி, வாஞ்சையுடன் அவள் தலையை கோதிய படி வாழ்த்தைச் சொல்ல,

விருட்டென்று எழுந்து அமர்ந்த அஞ்சனா...

“தேங்க்யூ என் செல்ல பாவா.. “, அவர் கன்னத்தைக் கில்லி முத்தமிட்டு விட்டு... அடுத்த நொடியே ஜங்கென்று படுக்கையிலிருந்து தரையில் குதித்து நிற்பதை கண்டதும் திகைத்த பவதாரிணி,

“ராத்திரியிலே பர்த் டே கொண்டாடிட்டு  லேட்டா தானே படுத்த.. தூங்கு! கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பி விடுறேன்”, என்று கொஞ்சம் கண்டிப்பும் நிறைய பரிவு கலந்து சொல்ல..

“ம்ம்... தீபாவளி அதுவுமா காலங்காத்தால ஆத்துல தலை முழுகாம இருப்பாளா இந்த அஞ்சனா? அலாரம் வச்சதே அதுக்கு தானே!”, என்று சொல்லிக் கொண்டே கொண்டே களைந்து கிடந்த தன் ஒரு அடி கூந்தலை அள்ளி முடிய....

பவதாரிணியோ..

“ஒரே நச நசன்னு மழை பெய்துகிட்டு இருக்கு. இந்த நேரம் ஆத்துக்கு போறேன்னு சொல்றே! ஒன்னும் வேண்டாம்! வீட்டிலே குளி”, என்று மறுக்க...

அவளோ கண்டிப்பாக போய் தான் தீருவேன் என்று அடம்பிடிக்க...

“சொன்னா கேளு அஞ்சு! ஆத்துல வெள்ளம் போகுது.. நம்ம கருப்பன் வீட்டு ஆட்டுக்குட்டியை  ஆத்துல அடிச்சிட்டு போயிடுச்சு சொல்லி கவலை பட்டான்..”, என்ற படி அவள் தாடையைப் பற்றிய பவதாரிணி,

“இதை கேட்ட பிறகும் உன்னை அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியுமா கண்ணு?”, என்று கெஞ்சலாக கேட்க...

அதற்கு மேலும் மல்லுக்கட்ட விரும்பவில்லை அஞ்சனா...

“ஓகே! பாவா நிம்மதிக்கு நான் கேரண்டி! ரெஃப்ரஷ் ஆகிட்டு வந்துடறேன். எண்ணெய் மட்டும் வைச்சு விடுங்க”, என்றவள் சொன்னது போலவே செய்து விட்டு அவரிடம் வர....

அவளுக்கு எண்ணெய் தேய்த்து விட்டவர்,

“நம்ம ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுக்குக்கோ...”, என்றார் அவளின் ஆசைக்கு மாற்று யோசனை கண்டுபிடித்தவர் போல..

“க்ளோரின் தண்ணியும் ஆத்து தண்ணியும் ஒன்னாகாது பாவா! விடுங்க நான் பாத்ரூம்லே குளிக்கிறேன்!”, என்று அவரை அங்கிருந்து அனுப்பி விட்டு..

வேகமாக பக்கத்து அறைக்கு சென்றாள். அங்கே உறங்கிக் கொண்டிருந்த தன் தம்பி சிபி சக்கரவர்த்தியை எழுப்பினாள்...

சிபி பதினொன்றாவது படிக்கும் பள்ளி மாணவன்.

நல்ல தூக்கத்தில் இருந்தவனை  இவள் எழுப்ப....

கண்களை கசக்கிக் கொண்டே,

“என்ன....”, என்று எரிச்சலோடு அவன் முனங்க..

“நல்லா கண்ணை தொறந்து பாரு”, என்று அஞ்சனா அழுத்தமாக சொல்ல...

கண்களை திறந்தவன் முன், “ஹார்லி டேவிஷன்” என்று எழுதப்பட்ட  சாவி கொத்து பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.....

“ஆஆஆ....”, என்று வாயைப் பிளந்தவன்...

“க்கா.. இது கனவா.. இல்லை இது நனவா?”, இன்னும் திறந்த வாயை மூடாமல் இருக்க.. அவன் தாடை தட்டி... திறந்த குகையை மூடியவள்...

“சுவத்துல முட்டி பார்த்து கண்டுபிடி!”, என்றாள் கிண்டலாக.

அவன் தூக்கம் முழுவதுமாக களைந்து... உற்சாகமாக எழுந்தமர்ந்துவன்... யோசனையாய்,

“அக்கா... பாஜி அத்தான் பைக் சாவி தானே! எப்படி உன் கையில்?”

என்று கேட்டதும்,

“ப்ச்... இப்போ அதுவா முக்கியம்?” என்று அலுத்து கொண்டவளாய்... 

“எனக்கு இந்த பைக்கை ஓட்ட ட்ரைவர் தேவை! நீ வர்றியா இல்லையா?”, என்று விரலை ஆட்டி அவள் கேட்க..

“டிரைவர் ஜாப் டபுள் ஓகே!”, கொண்டாட்டமாக தலையாட்டியவன்.. பின்,

“ஆனா, தாத்தா காலேஜ் போன பிறகு தான் பைக் எடுக்கணும்னு சொல்லியிருக்காரே”,

என்று வருத்தத்துடன் சொல்ல... அலட்சிய புன்னகை வீசிய அஞ்சனா,

“அவருக்கு தெரிஞ்சா தானே!”, என்று சொல்லி கண்ணடிக்க...

“சூப்ப்ப்ரர்ர்ர்ர் க்கா.... “ ஹய் ஃபை கொடுத்துக் கொண்டனர் இருவரும்..

“சரி இப்போ... பாவா என்னை தேடுறதுக்கு முன்னாடி நம்ம மிஷன் ஆத்துக்குளியலை முடிக்கிறோம்”, என்றவள்.. ஒரு பேப்பரையும்.. ஸ்கெட்சையும் எடுத்து அருகிலிருந்த மேஜையில் கட கடவென்று வரைந்து திட்டத்தை விளக்கினாள்.

“இது நம்ம பங்களா.. இது பேக் சைட். என் ரூம் பால்கனி வழியா.... பைப்பை பிடிச்சு இறங்கிடுவேன். நீ என்ன பண்றன்னா...”, என்று விவரிக்க...

அக்காவை வியப்புடன் பார்த்தவன்,

“சான்ஸ்சே இல்லைக்கா.. ஸ்கெட்ச் போட்டு ப்ளான் பண்ற!”, என்று பாராட்ட...

“சப்வே சர்ஃபர்ஸ்.. கேண்டி கிரஸ்.. மேரியோ கார்ட்.. இப்படி காலங்காலமா  கேம் விளையாண்டு ஷார்ப்பான மூளைடா இது... இதெல்லாம் நமக்கு  ஜூஜூபி”, என்று பெருமை பீற்றிக் கொண்டவள்...

பின் துரிதமாக தன் திட்டத்தை செயல்படுத்தினாள்.

பவதாரிணிக்கு சந்தேகம் வரக் கூடாது என்று அவரிடம்,

“பாவா நான் ஜக்குசில அப்படியே ரிலாக்ஸ் பண்ணிட்டு தான் வருவேன்... யாரும் கதவை தட்டி டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கிறது உங்க பொறுப்பு..”,

என்று சொல்லி விட்டு தன் அறைக் கதவை உள்ளுக்குள் பூட்டி விட்டு, பால்கனி வழியாக இறங்கி... பின் பக்க காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து ரோட்டிற்கு வர...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.