(Reading time: 29 - 58 minutes)

ப்ப தான் வந்து நிறுத்தி இருக்காங்க... ‘,

விலை உயர்ந்த பைக். முழுக்க முழுக்க சேறும், சகதியுமாக இருக்க...

அவன் மனது பொறுக்கவில்லை... சிபியை தேடினான். அவன் கண்ணில் அகப்படவில்லை...

சமையலறையில் அஞ்சனாவின் சத்தம் கேட்டது. சமையலறை மேடையில் அமர்ந்த படி

“நிறம்... சுவை.. திடம்.. எதுவுமே தேவை இல்லை.. என் மண்ணில் விளைந்த இந்த ஏலக்காய் மணம் ஒன்று போதும்.. சுமார் டீயும் சூப்பர் டீயாகி விடும்!”,

கையில் இருந்த டீயின் வாசனையை கண் மூடி நுகர்ந்த படி விளம்பர பாணியில் சொல்லி விட்டு... அதை ருசிக்க குனிந்தவளின் தலையில்..

இடி போல வந்திறங்கியது பாலாஜியின் அடி...

அந்த வேகத்தில் அவள் மூக்கே டீக்குள் டிப்பாகி...

அவள் கையில் இருந்த டீ கோப்பை தளும்பி பாதி டீ கீழே கொட்டியிருக்க.... மீதியிருந்த டீயை அவன் அடித்த வேகத்திலே அவன் மீது ஊற்றினாள்...

You might also like - Enna thavam seithu vitten... A family drama

சூடாக சட்டையில் இறங்கிய டீ அவன் கொதிப்பை அதிகப் படுத்த... சுற்றும் முற்றும் பார்த்தவன் கண்ணில் முட்டை பாக்ஸ் பட.. அதை எடுத்து அவள் மேல் வீசப் போக...

“டேய்.. வீடெல்லாம் நாறடிச்சிடாதே!”,

சுதாரித்த சங்கரி வேகமாக இடை புகுந்து  தடுத்தார் மகனை..

அவனோ, “விடுங்கம்மா...... என்னை... என் பைக்கை நாசம் பண்ணி வைச்சிருக்கா.. அவளை சும்மா விட மாட்டேன்!”, வீறு கொண்டு வந்தான் பாலாஜி.

வேகமாக பவதாரிணி பின்னே ஓடிப் போய் ஒளிந்து கொண்ட அஞ்சனா சங்கரியைப் பார்த்து...

“நீங்களே பார்க்கிறீங்கள்ள அத்தை! நான் வீட்டுக்குள்ளே  தானே இருக்கேன் ... எப்படி அத்தை  பைக்கை எடுக்க முடியும்... என்னை அடிக்கிறது சாக்கு சொல்றான் அத்தை! நம்பாதீங்க அத்தை”,

ஆயிரம் அத்தை போட்டாள்.. தன் பொய்யை ‘மெயின்டெயின்’ செய்ய... அது வேலை பார்த்தது... அவர் மகனிடம்...

“அவ மேல கையை ஓங்கின...”

“அப்பாவை கூப்பிடுவேன்”,

போலீஸ்சை கூப்பிடுவேன் பாணியில் அவர்  மிரட்ட...

வேறு வழியின்றி...

“பல நாள் திருடி ஒரு நாள் அகப்படுவாள்”, என்று அவளை பார்த்து கருவிக் கொண்டே அந்த இடத்தை விட்டு கிளம்ப யத்தனிக்கும் வேளையில் அவர்கள் வீட்டு வேலைக்காரி பொன்னி வந்தாள் அஞ்சனாவை அழைத்த படி...

“குட்டியம்மா அய்யா உங்களை கூட்டி வரச் சொன்னங்க..“,  அவசரமாக அழைக்க...

அஞ்சனா வாயை மூடிக் கொண்டு அமைதியாக சென்றிருக்கலாம்... சும்மா இருக்காமல்,

“என்ன அவசரம் பொன்னியக்கா!  டீ குடிச்சிட்டு வர்றேன்னு மாமாட்ட சொல்லுங்களேன்....”, என்றாள் சாவகாசமாக...

“இல்லை குட்டியம்மா! ஆத்து வெள்ளத்தில் ஏதோ குழந்தையை நீங்க தான் காப்பாத்தி கொடுத்தீங்க.. உங்களை பார்த்தே ஆகணும்னு அந்த பிள்ளையை பெத்தவங்க ஒத்தை கால்ல நிக்கிறாங்க. அதான் அய்யா கையோட கூட்டி வர சொன்னாங்க.”,

என்ற விவரத்தை சொல்லி விட்டு,

“என்னால நம்பவே முடியலை குட்டியம்மா! ஒரே வெள்ள காடா கிடக்கு... இந்த நேரத்திலா ஆத்துக்கு போனீங்க?”, அஞ்சனா மீதிருந்த அக்கறை கூடுதலாகவே கேட்டு வைக்க...

பொன்னி நடந்ததை போட்டு உடைக்க... திகைத்த அஞ்சனாவின் பார்வை அனிச்சையாய்  பவதாரிணியைத் தழுவியது...

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.