(Reading time: 29 - 58 minutes)

ஞ்சனாவோ,

“ஹா.. ஹா... கண்டுபிடிக்கலையா... என்னப்பா நான் வேலை பார்க்க போற டீம்ல ஒரு புத்திசாலி கூட இல்லையா? “, என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு உதட்டை பிதுக்கியவள்..

“சரி... கடைசி எழுத்து னா.. முதல்ல வர்ற நம்பரையாவது கண்டுபிடிங்க.. “,

என்று சொல்ல...

எட்டனா இருந்தா எட்டூரும் என் பாட்டு பாடும்

என்று டெஸ்கில் தாளமிட்டு ஒருவன் கிண்டலாக பாட ஆரம்பிக்க.....

பத்தனா இருந்தா பத்தூரும் என் பாட்டை கேட்கும்

என்று அதை மற்றவர்கள் தொடர...

‘அடப்பாவிங்களா.. கேப் கிடைச்சா நம்மளையே ஓட்டுறாங்களே!! கேப் விடாம கவர் பண்ணு’, தனக்குள் சொல்லிக் கொண்டே,

“அவ்ளோ எல்லாம் போக வேண்டாம்...எட்டு என்றதுக்குள்ளவே வந்துடும்!”, என்று இடை வெட்டியவள்....

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

“உங்களுக்கு புத்திசாலித்தனம் பத்தாது... சோ லெட்ஸ்  கவுன்ட் டவுன்... எட்டு... ஏழு.. ஆறு... ஐ..”, என்று நிறுத்திக் கொள்ள...

“ஐந்துனாவா????”, என்று அவர்கள் குழம்ப..

“ஐந்து இல்லை.. அஞ்சு.... “, என்று குழுவிலிருந்த ஒரு பெண் வேகமாக சொல்ல...

“அஞ்சனா!!!”, என்று கோரஸாக பதில் வர..

“ஓ... ஏஏஏ!!!!!!”, என்று உற்சாகத்துடன் கட்டை விரலை உயர்த்தி காட்டி ஆர்ப்பரித்தாள் அந்த அஞ்சனா...

‘ஹப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டா! இதுக்கு மேல விடக் கூடாது. கண்ட்ரோல்லை நாம கையில் எடுக்கணும்’, என்று வேகமாக பேச ஆரம்பித்தான்...

“அஞ்சனா கசின் ஆஃ.ப்”, என்று ஆரம்பிக்க  திகைத்தாள் அஞ்சனா...

‘அடப்பாவி ஹர்ஷ்சின் கசின்னு இவனுக்கு எப்படி தெரியும்? முதல்ல இவன் வாயை அடைக்கணும்’, என்று,

யாரும் அறியாவண்ணம்... நைசாக தன் பாயின்டட் ஹீல்ஸ்ஸால்... அவன் காலை இடித்து விட்டு ’சொல்லாதே’ என்று சிக்னல் அனுப்ப..

அவள் சொல்ல வந்தது புரிந்த சமயம்  ஹர்ஷவர்தனின் உறவு என்று சொல்ல ஏன் விரும்பவில்லை என்ற கேள்வியும் எழுந்தது...

இவனின் இந்த ஆராய்ச்சிக்கு பங்கம் வந்தது போல...

தரையை தழுவிக் கொண்டிருந்த அவன் வேட்டி மீது அவள் பாயின்டட் ஹீல்ஸ் தரையிறங்க.. திகலடைந்தான் ஆர்யமன்...

நல்ல வேளை அசம்பாவிதம் எதுவும் நிகழ்வதற்குள் அவளே காலை நகற்றி விட இப்பொழுது தான் அவனுக்கு உயிர் வந்தது!

அதற்குள், “என்னது  கசினா? உங்க கசினா”, என்று அந்த குழுவில் இருந்த ஒருவன் ஆர்யமனிடம் கேள்வி எழுப்ப...

“கசின் இல்லை காசின்னு சொல்ல வந்தார். ஐ அம் அஞ்சனா காசிராஜ்”, என்று அஞ்சனா அவனை முந்திக் கொண்டு சொல்ல...

வேட்டி சேஃப்டியானதில் நிம்மதியடைந்து நிமிர்ந்த ஆர்யமன்,

“அதாவது கா. அஞ்சனா! சேர்த்து படிச்சிடாதீங்க.. அப்புறம் பயந்துடுவீங்க”, என்று வேண்டுமென்றே எடுத்து கொடுப்பது போல சொன்னான் - தன்னை இனிசியல் வைத்த எமன் சொன்ன பாதிப்பின் விளைவு!

“காஞ்சனா”, என்று அனைவர் வாயும் அதை சொல்லிப் பார்க்க.. அங்கே ஒரே  ஆரவாரம்.

“ஆமாம்.. நான் தான் காஞ்சனா முனி!”, என்று அவர்களை மிரட்டுவது போல பாவனை செய்து டீம் மக்களுடன் தன்னை இணைத்து கொள்ள..

“அப்போ இவங்க டீம் நேம் காஞ்சனா”, என்று ஒருவன் சொல்ல.. அதை அத்தனை பேரும் ஆமோதிக்க....

“டீம் நேம்ன்னா?”, என்று முழித்தவளிடம் ஆர்யமன் விளக்கினான்...

“டீம்க்குள்ள நாங்க வைக்கிற பெட் நேம்...அர்விந்த்க்கு அருவா... ஆனந்திக்கு நந்தி.. இன்னும் பெரிய லிஸ்ட்டே இருக்கு... ”, என்று சொல்ல... அவன் பேச்சில் இடை வெட்டிய அஞ்சனா,

“அப்போ அந்த ஆர்யமனுக்கு.. எமன் தானே? அந்த  எமனை எனக்கு காட்டுங்க முதல்ல! நான் பார்க்கணும்!”, என்று அவனிடமே கேட்டு விட..

அத்தனை பேருக்கும் ஒரே சிரிப்பு.. ஆர்யமன் உட்பட...

“தல பேரை கொலை பண்றீயேம்மா”, என்று ஒருவன் அழாத குறையாக கேட்டு விட்டு ஆர்யமனை பரிதாபமாகப் பார்க்க...

“தலயா?...”, என்றவளின் ரெஸ்ட் எடுத்த மூளை இப்பொழுது தான் கொட்டாவி விட்டு படி விழித்தது.

‘எமன் பக்கத்தில் தான் நிற்கிறேனா.. அந்த ஹர்ஷ் குதிரை  சொன்ன எமன் இவன் தானா.. சோ  நம்மளை பத்தியும் குதிரை  சொல்லியிருப்பான்!  A = B  ன்னா... B = A. தானே... டிவிகல்ட் ஈகுவேஷன்! அறிவாளி அஞ்சுடி நீ!’,

என்ற படி ஆர்யமனை நோக்கி நிமிர்ந்தவள்.. சமாளிக்கும் விதமாக....

“இவர் தலயா??? வேட்டி கட்டினவங்க எல்லாம் வீரம் பட ஹீரோவாக முடியுமா? ”, என்று கேட்க..

“அதானே.. எமன் ஹீரோவான  டிராஜிக் படமாகிடுமே!”, என்று சொல்லி சிரித்தான் ஆர்யமன்..

அஞ்சனாவிடம் ஹர்ஷ்  “நீ ஆர்யமனை மட்டும் பார்த்திடு போதும்!”, என்று சொன்னதாலோ... என்னவோ... ஹர்ஷின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்ற எண்ணம் அவளையும் அறியாமலே அவளிடம் உருவாகி இருந்தது.

அவன் மீது உரிமை எடுத்தவளாய்... 

“ப்ச்.. இங்க பாருங்க எமன்! எமன் கெட்ட வைப்ரேஷன்.. வாழறதுக்கு தானே இங்க இருக்கிறோம்”,

“உங்க பேர்ல உள்ள மன்னை தூக்கி போட்டு ஆர்யான்னு மாத்துறீங்க! ரைட் நொவ்!”, விரலை ஆட்டி விழிகளை உருட்டி மிரட்டினாள் அஞ்சனா.

முதல் சந்திப்பின் நினைவுக்குள் மூழ்கி மெல்ல மெல்ல தன்னிலைக்கு வந்து கொண்டிருந்தான் ஆர்யமன்...

அன்று அவள் அப்படி சொன்ன பொழுது.... அந்த பெயரை தனக்கு சூட்டிய சிவநேசன் மீதிருந்த பாசம் கண்ணை மறைக்க.. அவள் பேச்சு அதிகபிரசங்கித்தனமாக தோன்றி...

நமக்குன்னு ஒரு அடையாளத்தை கொடுக்கிறவங்க நாம சாகணும்னா நினைப்பாங்க?

நெகடிவ் வைப்ரேஷன்னோ... பாசிட் வைப்ரேஷனோ.. இட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்! ஜஸ்ட் ஷட் அப்”

அத்தனை பேர் முன்னிலையிலும் முகம் இறுக கடிந்துரைத்த பொழுது அவள் கண்களில் ஒரு வலி தோன்றியது...

ஆனால், அடுத்த நிமிஷமே...

“ஷட் அப்ன்னு சொல்றது ஆர்யா பிஸ்னஸ்ன்னா ஷட் அப்பே ஆகாம இருக்கிறது  தான் அஞ்சனா பிஸ்னஸ்!”,

என்று தோளை குலுக்கி வெகு இயல்பாக அவனை எதிர்கொண்டாள்..

அவள் கண்கள் சொன்ன வலி அன்று அவனால் அலட்சிய படுத்த பட்டாலும்... இப்பொழுது அதன் நினைவே அவன் மனதை சங்கடபடுத்த,

பெருமூச்சொன்றை திரட்டி “ஊ ஃப்” பென்று வெளியிடும் சமயம் சரியாக லிஃப்டின் கதவு திறக்கபட.... அவன் கண்கள் அனிச்சையாக  லிஃப்ட்டின் திரையில் படிய அது ஐந்து என்று காட்டிக் கொண்டிருந்தது ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.