(Reading time: 15 - 29 minutes)

தென்ன இவள் இப்படி கேட்கிறாள்… வரும் வழியில் தானே துருவை அவன் அப்பாவுடன் பார்க்கில் பார்த்தாள்… பின் ஏன் இப்படி கேட்கிறாள்…” என்ற சிந்தனையுடன் அமைதியாய் இருந்தான் அவன்..

“கேட்குறேன்ல சொல்லு…” என ருணதி அழுத்தம் கொடுக்க,

“அது வந்து…” என இழுத்தவர்,

“ஏண்டி ஆமா என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட?..” என எதிர்கேள்வி கேட்க

“நான் தான் உன்னை முதலில் கேட்டேன்… சோ நீதான் சொல்லணும்… சொல்லு…” என அவளும் விடாப்பிடியாய் நிற்க,

“பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு தான் துருவை தூக்கிட்டுப்போயிருக்கா… விளையாட்டு காட்டுறதுக்கு…” என்றார் ஒருவழியாய் இழுத்து இழுத்து…

அவர் பதிலைக் கேட்டு மகத்திற்கு என்ன இது.. இவர் ஏன் இப்படி சொல்கிறார்.. என்ன நடக்கிறது இங்கே… என்ற எண்ணம் தோன்ற, அதற்கு மேல் அங்கு இருப்பது முறையாகாதோ என நினைத்தவன்,

“சரி.. பாட்டி… நேரமாச்சு… நான் கிளம்புறேன்…” என சொல்ல,

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

“அட என்ன தம்பி… வந்ததும் கிளம்புறேன்னு சொல்லுறீங்க… இருங்க… கொஞ்ச நேரம்… அன்னைக்குத்தான் அப்படியே வந்த வழியே போயீட்டீங்க… இன்னைக்கும் அப்படியே கிளம்புறதா?... முடியவே முடியாது…” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது,

“பாட்டி பாட்டி…” என்ற குரல் கேட்க, மூவரும் திரும்பி பார்த்தபோது அங்கே ஒரு குட்டிப்பெண் நின்றிருந்தாள்…

“என்ன பாப்பா… சொல்லு…” என ருணதி அவளிடம் கேட்க

“இல்ல ஆன்ட்டி… துருவ் கூட விளையாட தான் வந்தேன்… அவன் எங்க?...” என அவள் கேட்க

“அவன் தூங்குறான்மா… அவன் எழுந்ததும் கூட்டிட்டு வரேன்… சரியா?..” என ருணதி சொல்ல

“சரி ஆன்ட்டி…” என்றபடி அந்த குட்டிப்பெண்ணும் சென்றபின்,

ருணதியின் பார்வை கோகிலவாணியை துளைத்து எடுக்க,

அவரோ கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்…

“இப்ப சொல்லு… துருவ் எங்க?...” என அவள் இலகுவாய் மீண்டும் கேட்க,

“அது… வந்து…” என அவர் இழுத்த வேளையில்

“சரி ருணதி… நான் கிளம்புறேன்…” என்று எழுந்த மகத்தினை கையமர்த்தி தடுத்தவள்,

“சொல்லு கோகி… உன்னைத்தான் கேட்குறேன்… சொல்லு…” என்றாள் கடமையே கண்ணாய்…

“எதுக்குடி இப்படி குதிக்குற?.. மாப்பிள்ளை கூடத்தான் இருக்குறான்…” என்றார் அவரும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு…

“யாரைக் கேட்டு அவர்கூட என் பையனை அனுப்பின?...” என்றாள் அவளும் கோபமாய்…

“யாரடி கேட்கணும்?...”

“என்னை கேட்கணும்… நீ என்னை கேட்டிருக்கணும்…” என்றாள் அவளும் அழுத்தமாய்…

“எதுக்குடி உன்னை கேட்கணும்… அவர் அவனைப் பெத்த தகப்பன்… அவர்கிட்ட பிள்ளையை அனுப்புறதுக்கு நான் யாரைக் கேட்கணும்?... இல்ல அவர் தான் யாரை கேட்கணும்?...”

“நீ தெளிவாதான இருக்குற?... உனக்கும் உன் புத்திக்கும் எட்டவே எட்டாதா அவர் அப்பா பேசின பேச்சு…”

“என்னடி பேச்சு… பொல்லாத பேச்சு… கோபத்துல பேசினதுக்கெல்லாம் கண், காது, மூக்கு வச்சு பார்த்தா எந்த உறவும் நீடிக்காது…” என அவர் பட்டென்று சொல்லிவிட,

“என்ன சொன்ன?.. கோபத்துல பேசினதா அந்த வார்த்தை எல்லாம்…?... மனசுல தப்பான எண்ணம் இல்லாம கண்டிப்பா அப்படி ஒரு வார்த்தை வரவே செய்யாது… அதை பேசின உன் சம்பந்தி நல்லவர்… பார்த்துட்டு பேசாம இருந்த உன் மாப்பிள்ளை நல்லவர்… நான்… நான்… உனக்கு கெட்டவளா?... இல்ல தெரியாமத்தான் கேட்குறேன்… உன் மாப்பிள்ளைக்கு அறிவில்ல… நான் அத்தனை தடவை சொல்லியிருக்கேன் தான… உங்க அப்பா சம்மதத்தோட இங்க வந்து உங்க பையனை கூட்டிட்டு போங்கன்னு… படிச்சவர் தான அவர்… சுயபுத்தி இருக்குதான?... அப்புறம் ஏன் திருப்பி திருப்பி வந்து துருவனை அவர் பார்க்குறார் இப்படி திருட்டுத்தனமா?... பெத்த தகப்பன் தான அவர்…. அந்த எண்ணம் இருந்தா இருக்குற பிரச்சினையை சரி பண்ணலாமே.. அதை விட்டுட்டு இப்படி கேவலமா நடந்துக்குறாரே… அவரைப் போய் கேளு உங்க அப்பா பேசின பேச்சை என்ன செய்யுறதுன்னு… அதை விட்டுட்டு இங்க வந்து உன் அருமை மாப்பிள்ளைக்கும், உன் உலக மகா சம்மந்திக்கும் சப்போர்ட்டா பேசின நடக்குறதே வேற… சொல்லிட்டேன்…” என ருத்ரதாண்டவமாடினாள் ருணதி…

“விட்டுக்கொடுத்துப் போறதால நீ கெட்டுப்போயிடமாட்டடீ…” என்றார் அவரும் ஆதங்கத்துடன்…

“நான் விட்டே கொடுக்கலையா?...” என அவளும் அவரைப் பார்த்து கேட்க அவருக்கு பேச வார்த்தைகளே இல்லாது போனது…

“துருவன் அவர் பையன் தான்… அந்த உரிமையை அவர் முதலில் அவர் அவரோட தகப்பனுக்கு புரியவைக்கட்டும்… அப்புறம் வந்து அவர் பையனை தூக்கி கொஞ்சட்டும்… நான் தடுக்கலை… ஆனா அதுக்கு முன்னாடி இப்படி திருட்டுத்தனம் வேண்டாம்னு தான் நான் சொல்லுறேன்… அது ஏன் உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டிக்குது பாட்டி… என்ன சொல்லி உன்ன மாத்தன்னு எனக்கும் தெரியலை… ஏன் தான் நீயும் என் மனசை காயப்படுத்துறீயோ எனக்குத் தெரியலை…” என்றாள் அவளும் கலங்கியபடி…

அவள் கலங்கவும், அதுவரை அமைதியாக இருந்தவன்,

“ருணதி… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர்செல்ஃப்…” என அவன் ஆறுதலாய் கூற,

அவள் அவனை திரும்பி பார்த்துவிட்டு என்ன சொல்ல என்று அமைதியாக இருந்தாள்…

டுத்து என்ன பேச என அனைவரும் அமைதியாய் இருக்க, அந்நேரம்

“பாட்டி… பாட்டி… நான் வந்துட்டேன்…” என குட்டி துருவ் குரல் கேட்க, கோகிலவாணி வாசலுக்கு விரைந்தார்…

அவனைத்தூக்கி கொண்டவர், ஜிதேந்தரை வீட்டிற்குள் அழைக்க, அவன் முதலில் மறுத்தான்… பின் சரி என்று ஒப்புக்கொண்டான்…

உள்ளே வந்த ஜிதேந்தர், ருணதியைப் பார்த்ததும், “சாரி…” என்றுரைக்க, அவள் ஏறெடுத்தும் அவனைப் பார்க்கவில்லை…

ஜிதேந்தரின் பார்வை மகத்தின் மீது நிலைக்க, கோகிலவாணி அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மகத்தினை…

“ஹலோ…” என பரஸ்பரம் இருவரும் விசாரித்துக்கொள்ள, சிறிது நேரம் கழித்து, ஜிதேந்தர் நான் வரேன் பாட்டி, என்றபடி சென்றுவிட்டான்…

மகத்தின் அருகே வந்த துருவ், “ஹாய் அங்கிள், நதிகா எப்படி இருக்குறா?...” எனக் கேட்க

அவன் உயரத்திற்கு முட்டி போட்ட மகத், “நல்லா இருக்குறா குட்டி துருவ்… இங்க வந்திருக்குறா… உன்னைக்கூட பார்க்கணும்னு சொன்னா…”

“ஓ… அப்படியா… நதிகா வந்திருக்காளா?... பார்க்கணும்னு சொன்னாளா?...”

“ஆமா துருவ்… நீ நாளைக்கு அம்மாவோட வர்றீயா நதிகாவைப் பார்க்க?...”

“கண்டிப்பா அங்கிள்… அம்மா கூட்டிட்டு வந்தாங்கன்னா கண்டிப்பா வருவேன்..” என அவன் சொல்ல

“ஆமா துருவ்… அதென்ன அம்மா கூட்டிட்டு வந்தா???...”

“அது அம்மா வேண்டாம்னு சொன்னா நான் வரமாட்டேன்…”

“ஓ… ஐ ஸீ… உன் அம்மா வேண்டாம்னு சொல்லமாட்டாங்க துருவ் கண்ணா…”

“அப்ப ஓகே… அங்கிள்…” என்றான் குட்டி துருவனும்…

“நீங்க பேசிட்டிருங்க… நான் துருவ்க்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன்…” என்றபடி துருவனைத் தூக்கிக்கொண்டு தனதறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டாள் ருணதி…

ழகான பையன்… நல்லா பேசுறான்… அம்மாவ புரிஞ்சிகிட்டு… இல்ல பாட்டி…” என மகத் சொல்ல,

“உண்மைதான் தம்பி…” என்றவர் அழ ஆரம்பிக்க,

மகத் அவரை சமாதானம் செய்தான்…

“இப்படிதான் தம்பி ஜிதேந்தர் வந்தா கூட இவ முகம் திருப்பிக்கிட்டு போயிடுறா?.. இவளை எப்படி நான் அவரோட சேர்த்து வைக்க…” என அவர் அழ,

“பாட்டி… முதலில் அழாதீங்க… முதலில் உங்க சம்மந்தி கிட்ட பேசுங்க… அப்புறம் ஜிதேந்தர் கிட்ட பேசலாம்…”

“சம்மந்தி என்ன தம்பி பெரிய சம்மந்தி… என் பொண்ணு வீடு தான் அது… ஜிதேந்தர் வேற யாருமில்லை என் பேரன் தான்…” என அவர் சொல்ல

அவன் அதிர்ச்சியுடன் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானான்…

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.