(Reading time: 10 - 20 minutes)

10. கிருஷ்ண சகி - மீரா ராம்

மாஸ்டர் பிளான் யோசிச்சிட்டியா?...”

“இல்லடா தருண்… யோசிச்சிட்டே இருக்கேன்…” என்றான் ஜிதேந்தர்…

“டேய்… நீ யோசிச்சிட்டே இருந்தா வேலைக்கே ஆகாது… சீக்கிரம் ஒரு முடிவு எடுடா… அதுதான் நல்லது…” - தருண்

krishna saki

“சரிடா… சப்பையா எதாவது பண்ணினா எதுவும் வொர்கவுட் ஆகாதுடா… அதான் ரொம்ப யோசிக்கிறேன்…” - ஜித்

“நீ சொல்லுறதும் சரிதாண்டா… பெரிசா பண்ணினா தான் இனி எல்லாமே சரியாகும்…” - தருண்

“அதுக்காகத்தான் மச்சான் நானும் ரொம்ப யோசிக்கிறேன்… எடுக்கப்போற முடிவு கண்டிப்பா ருணதியை அசைக்கவே விடக்கூடாதுடா… அதுமட்டும் தான் இப்போ என் எண்ணம் எல்லாம்…” – ஜித்

“ஹ்ம்ம்…. ஜித்… யோசிடா… நானும் யோசிக்கிறேன்… கண்டிப்பா நல்ல ஐடியா கிடைக்கும்…” – தருண்

“சரிடா…. தருண்…” என்று அவனிடம் போனில் பேசிவிட்டு வைத்த ஜிதேந்தரின் மனதில் பல எண்ணங்கள்…

ருணதியைப் பற்றி காவேரி சொன்னதிலிருந்து மனம் ஒருநிலைப் படாமல் தவித்தான் மகத்…

அவளுக்கு இருக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியுமா என்னால்?...

எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை விட வேறு என்ன நிம்மதியும் சந்தோஷமும் என் வாழ்வில் இருக்கக்கூடும்???

அதற்கு நான் இங்கே இருந்தால் எதுவும் நடக்காதே…

என சிந்தித்தவன், திருச்சிக்கு விரைந்தான் நதிகாவுடன்…

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

நதிகா எதற்கு என கேட்ட சதாசிவம் தாத்தாவிடம், “இங்கே அவளை அதும் குருமூர்த்தி சார் மகள் இருக்கும் இடத்தில் விட்டுவிட்டு செல்ல எனக்கு மனமில்லை தாத்தா… அதான்….” என்றான் மகத்…

“அப்போ பாட்டிகிட்ட விட்டுட்டு போயிட்டுவாயேன்பா…”

“இல்ல தாத்தா…. மதர்-ம் நதிகாவை பார்க்கணும்னு சொல்லுறாங்க… நான் அவளை கூட்டிட்டு போயிட்டு வரேன்… உடனே வந்துடுவேன் தாத்தா… இரண்டு மூணு நாளில்…”

“சரிப்பா… பார்த்து போயிட்டுவா… உனக்கும் அங்க போனா கொஞ்சம் மனசுக்கும் லேசா இருக்கும்…” என்றார் அவர், அவன் அங்கு எதற்கு போகிறான் என்று தெரியாமல்….

“என்னப்பா… சீக்கிரம் வந்துட்ட…” – காவேரி

“இல்ல மதர்… நதிகா உங்களைப் பார்க்கணும்னு சொன்னா… அதான்…”

“அப்படியாப்பா… ரொம்ப சந்தோஷம்…” என அவனிடம் சொன்னவர் நதிகாவிடம், “நதிக்குட்டி பாட்டியை மிஸ் பண்ணியா?...” என்று கேட்க,

அவள், “ஆமா பாட்டி… ரொம்ப மிஸ் பண்ணினேன்….” என்றாள்…

“சரி வா… நாம விளையாடலாமா?...” என்று அவர் கேட்க

“ஒகே… பாட்டி…” என்றவள், நினைவு வந்தவளாக,

“பாட்டி… உங்களுக்கு ஒன்னு தெரியுமா?...” எனக் கேட்டாள்..

“அதென்ன ஒன்னு நதிக்குட்டி….” என அங்கு வந்தாள் பவித்ரா…

“ஐ… அத்தை… வா வா… உன்னைத்தான் தேடிட்டிருந்தேன்…” என்றவள்,

காவேரி மற்றும் பவித்ராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு,

“எனக்கு அம்மா இருக்காங்க….” என்று குதித்தாள்…

“என்னது?...” என இருவரும் ஆச்சரியமாய் பார்க்க

அவள், “ஆமா பாட்டி… என் அம்மாவை நான் பார்த்தேனே… என் அம்மா அழகா இருந்தாங்க பாட்டி... எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கு….” என சொல்லியதும்,

பவித்ராவும், காவேரியும், மகத் முகத்தினையேப் பார்க்க,

“பாட்டி நான் பேசுறேன்… நீங்க ஏன் துருவ்-அ பார்க்குறீங்க…”

“ஒன்னுமில்லை நதிக்குட்டி சும்மாதான்… ஆமா உன் அம்மா பேரு என்ன?...” – பவித்ரா

“அதுவா அத்தை… என் அம்மா பேரு விசித்திர கன்யா…. நல்லா இருக்குல்ல…”

“ஆமாடா… ரொம்ப நல்லா இருக்கு….” என்றாள் பவித்ரா விரக்தி புன்னகையுடன்…

“ஐ உனக்கும் பிடிச்சிருக்கா… ஜாலி… ஜாலி…” என கைத்தட்டி சிரித்தாள் நதிகா…

காவேரியின் மௌனத்தினை புரிந்தவளாய், “நதிகா வா நாம விளையாட போகலாம்…” என பவித்ரா அவளை அழைக்க

“அப்போ பாட்டி…” என இழுத்த நதிகாவிடம், “அவங்க அப்புறமா வருவாங்கடா… வா நாம இப்போ போகலாம்…” என சொல்லி அவளை அழைத்துச் சென்றாள் பவித்ரா…

“எதுக்கு ராஜா இப்படி செஞ்ச?...”

“என் பொண்ணுக்கு நல்லதை தான் மதர் நான் செஞ்சிருக்கேன்…”

“இது நல்லதுன்னு எனக்கு தோணலை…”

“எனக்கு இதுதான் சரின்னு தோணுது மதர்… இதை நான் முன்னாடியே செஞ்சிருக்கணும்… தப்பு பண்ணிட்டேன்…”

“இப்பவும் தப்பு தான் ராஜா செஞ்சிருக்க…”

“இல்ல மதர்… நான்….”

“இல்ல ராஜா… நீ என்ன விளக்கம் குடுத்தாலும், எனக்கு இது சரின்னு படலை… பிடிக்கவும் இல்லை…”

“நதிகாவுக்கு அம்மா வேணுமே மதர்…”

“அதுக்கு அந்த அடங்காபிடாரியை நீ அவளுக்கு அம்மான்னு சொல்லுவியா?...”

“மதர்….”

“மதர் தான்ப்பா… அந்த எண்ணம் உனக்கு இருந்திருந்தா நீ இப்படி செஞ்சிருக்கமாட்ட…”

“மதர் நான் நதிகாவோட எதிர்காலத்தை மனசுல வச்சித்தான் முடிவெடுத்தேன்….”

“இப்படி ஒரு முடிவு நீ எடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா நதிகா கிட்ட அவ அம்மா செத்து போயிருக்கான்னு சொல்லியே வளர்த்திருப்பேன்…” என அவர் சொல்லிவிடவும்,

“மதர்…” என ஆடிப்போனான் மகத்…

“என்னை மன்னிச்சிடு ராஜா… அந்த ராட்சஸி என் பேத்திக்கு அம்மான்னு மத்தவங்க சொல்லி நான் கேட்குறதை விட, அவ செத்துப்போயிட்டான்னு மத்தவங்க சொல்லி கேட்டா நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன்…” என அவர் கொஞ்சமும் கலங்காமல் சொல்ல

“மதர்… நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா?..”

“இந்த ஒரு வார்த்தை மட்டும் சொன்னேனேன்னு சந்தோஷப்படு ராஜா…”

“எதுக்கு மதர் உங்களுக்கு இவ்வளவு கோபம்?...”

“அவளால யார்தான் நிம்மதியா இருந்தா?... அவளைப் பெத்தவர் நிம்மதியா இருந்தாரா?.. இருக்க விட்டாளா இந்த பாவி?... இல்ல உன்னை அவ வாழ்க்கையில இழுத்து விட்டிருக்காங்களே, உன்னையாவது நிம்மதியா இருக்க விட்டிருக்காளா அவ?... அவளால யாருமே நிம்மதியா இல்லையே… இப்போ என் பேத்திக்கும் நிம்மதி கிடைக்கக்கூடாதுன்னு நீ முடிவு பண்ணிட்டியா ராஜா?...”

“இல்ல மதர்… நான் என்ன சொல்லுறேன்னா….”

“நீ எதும் சொல்ல வேண்டாம்… எனக்கு மனசு சரி இல்லை ராஜா… நான் அப்புறம் உங்கிட்ட பேசுறேன்…” என்றவர் விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டார்…

அவன் சென்றதும் அந்த அறையை விட்டு வெளியே வந்தவன், அங்கே செடியின் பின்னே சிலையென அசையாது நின்ற ருணதியைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து போனான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.