(Reading time: 10 - 20 minutes)

ண்களில் துளிர்த்த நீருடன் நின்றிருந்தவளின் அருகே சென்றவன், அவள் விழிகளைப் பார்த்தபோது,

“இந்த பாசமும், இந்த விழியும், என் சொந்தமாகவில்லை… எனினும் அதில் நீர் பார்க்க நேர்ந்ததே… கடவுளே…. ஏன்…” என்ற தவிப்புடன் அவளிடம் பேச முயன்றான் அவன்…

அவன் பேச வாயெடுக்கும் முன்னரே, அவள் ஏன்?.... என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள்…

“இல்ல… அது….” என அவன் சொல்லுமுன்னர், அவர்கள் நான்கு கண்களும் சந்தித்துக்கொள்ள,

அதற்குமேல் அங்கு விளக்கவோ, பேசவோ, கேட்கவோ, சொல்லவோ, எதுவும் தேவைப்படவில்லை அவர்களுக்கு…

நான்கு கண்களிலும் ஒரே ஒரு காட்சி தான்… அது அவர்களின் விழிகளின் தவிப்பு மட்டுமே… அவரவர் வாழ்வில் சங்கடங்கள் வந்த போது கலங்காத கண்கள், நேசித்த உயிரின் வாழ்வே சிக்கலாக இருப்பதைக் கண்டு கலங்க, அது நீருடன் தவிக்கும் காட்சி தென்பட்டது அவர்களுக்கு…

அவர்கள் ஒருவரை ஒருவர் இருக்கும் இடம் மறந்து கண்ணில் நீருடன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த பொழுது,

“ஓஹோ… இவ தானா அது… இதுதான் அடிக்கடி இந்த இடத்துக்கு நீ வரக்காரணமா?...” என்ற குரல் கேட்க

You might also like - Oru kootu kiligal... A family drama...

இருவரும் அதிர்ந்து சுதாரித்த பொழுது அங்கு கன்யா நின்று கொண்டிருந்தாள்…

“என்ன அசிஸ்டெண்ட் இப்படி பார்க்குற?... நான் எப்படி இங்க வந்தேன்னா?... அது உன் நிம்மதியைக் கெடுக்கணும்னு நான் இந்தியா வந்து சென்னையில உன் வீட்டுல தங்கினா நீ எங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டே இருந்த… அதான் நீ எங்க போறீயோ அங்கே எல்லாம் உன்னை ஃபாலோ பண்ணினேன்… ஃபைனலி… நீ மாட்டிக்கிட்ட அதும் இங்க இவ கூட….” என்றவள் ருணதியை துளைத்துப்பார்க்க

அவளுக்கு முன் வந்து அவளை மறைத்தாற்போல் நின்றான் மகத்….

“ஓ… என் பார்வை கூட அவ மேல படக்கூடாதா?... அப்படியா?... நீதான் அவ பாதுகாவலா?...” என அவள் அவனிடம் நக்கலாக கேட்க…

“உள்ளே போ….” என்ற பாவனையில் அவன் ருணதியிடம் கண்களை காட்ட, அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்…

“போ….” என்றபடி அவன் மீண்டும் பார்வையிலும் செய்கையிலும் அழுத்தம் கொடுக்க,

அவள் “சரி…” என்றபடி புரிந்துகொண்டு விரைந்து உள்ளே சென்றாள்…

“ஓ… அவ இப்போ போயிட்டான்னா? என்னால அவளைப் பார்க்க முடியாதா?... இல்ல அவளை எதும் செய்யத்தான் முடியாதா?...” என அவள் சொல்லி முடித்த கணமே,

“உன் வேலை எல்லாம் எங்கிட்டயும் உன்னைப் பெத்தவர்கிட்டயும் காட்டுறதோட நிறுத்திக்கோ… அதை விட்டுட்டு தேவை இல்லாம எதாவது செய்ய நினைச்சேன்னு வை… அப்புறம் நீ என்னை வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்…”

“இதோடா… என்ன மிரட்டுறீயா?...”

“இல்ல… அந்த அளவுக்கு என்னை ஆளாக்கிடாதன்னு தான் சொல்லுறேன்…”

“ஐ… ஸீ…. அவளுக்கு ஒரு குழந்தை இருக்குன்னு கேள்விப்பட்டேன்… அவ மேலயா நீ ஆசைப்படுற?... அதுசரி உன் ஸ்டேட்டஸ்-க்கு உனக்கு இப்படி எல்லாம் தோணாம இருந்தா தான் ஆச்சரியம்… யாரு பார்த்தா அவளும் உன்னை மாதிரியே ஊர் பேர் தெரியாத அநாதையோ என்னவோ?...”

அவள் அவ்வாறு சொன்னதும், “ஏய்…..” என்று உறுமினான் மகத்..

அவன் உறுமலில் ஒரு விநாடி திடுக்கிட்டு தான் போனாள் அவள்…

“இதுக்கு மேல ஒரு வார்த்தை அவங்களைப் பத்தி பேசின உனக்கு மரியாதை அவ்வளவுதான் சொல்லிட்டேன்… ஸ்டேட்டஸா அதெல்லாம் உனக்கு இருக்கா?... சீ… கண்ணாடியில போய் உன் முகத்தைப் பாரு… உனக்கே தெரியும் உன் ஸ்டேட்டஸ்… நீ அடுத்தவங்க ஸ்டேட்டஸ பத்தி பேசுறீயா?... அந்த பொண்ணை பத்தி தப்பா எதாவது பேசினேன்னு வை, நீ பேசுறதுக்கு உனக்கு குரல் இருக்காது…” என சொல்லிவிட்டு நகரப்போனவன்,

“இனி என் வழியில வர்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சிக்கோ… உன் அகம்பாவத்தையும், திமிரையும் வேற யார் கிட்டயாவது போய் காட்டு… எங்கிட்ட காட்டணும்னு நினைச்ச…” என விரல் நீட்டி சொல்லிவிட்டு வேகமாக அகன்றான் அவன்…

அவன் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே அவள் செவிகளில் ரீங்காரமிட, அப்படியே பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள் கன்யா…

சட்டென்று நினைவு வர, அவன் சென்று கொண்டிருந்த திசையைப் பார்த்தவள், அவன் பின்னாடியே வேகமாக சென்று மூச்சிரைக்க அவன் வழியை மறித்தாள்…

உனக்கு கோபம் வரும்னு இத்தனை வருஷத்துல நான் இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்…

நாட்பேட்… ஹ்ம்ம்… என்னையே ஒருநிமிடம் பயப்பட வைச்சிட்டியே… சபாஷ்… அசிஸ்டெண்ட்… சபாஷ்…

உன்னை அவ்வளவு கேவலப்படுத்தியிருக்கேன்… அப்போ எல்லாம் நீ கோபம் அப்படிங்கிற வார்த்தை கூட உனக்கு தெரியாத மாதிரி நடந்துகிட்ட…

பட்… இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்குற அவ மேல உனக்கு இவ்வளவு அக்கறைன்னா, கண்டிப்பா அவளுக்கும், உனக்கும் எதுவோ இருக்கு போலயே…

ஹ்ம்ம்,… இனி அவ…

என சொல்லி முடிப்பதற்குள்

“அந்த பொண்ணை பத்தி நீ யோசிச்சா கூட பாதிப்பு உனக்குத்தான்…” என்றான் அவன் சட்டென்று…

“ஓஹோ… அதையும் பார்த்துடலாம்… தினமும் இங்க தான வேலைக்கு வர்றா… வர்ற வழியில….”

“என்னை மீறி அவ நிழல கூட உன்னால நெருங்க முடியாது… அப்படி நீ நெருங்க நினைச்ச அப்ப உனக்கு தெரியும் இந்த மகத்தோட இன்னொரு முகம்….”

“சவாலா?... எங்கிட்டயேவா?...”

“நீ எப்படி வேணாலும் எடுத்துக்கோ… உன்னால அவளை நெருங்க முடியாது… நெருங்க நினைக்க கூட முடியாது… அது உன்னால இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் நடக்காது….” என்றான் அவன் தீர்மானமாய்…

“ஓ… இந்த நம்பிக்கையை நான் தகர்த்து காட்டுறேன்… அவளை நான் நெருங்குவேன்… உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தமோ அது எனக்கு தேவையே இல்லை… பட் உன்னை சேர்ந்தவங்க யாரும் நிம்மதியா இருக்க முடியாது… இருக்கவும் விடமாட்டேன் நான்… அவ இனி என்ன அவஸ்தை படப்போறான்னு பாரு…”

“அவஸ்தை கண்டிப்பா நேரும்… அவளுக்கு இல்லை… உனக்கு… நீ அவளை எதும் செய்யமுடியாம திணறி நிப்ப… அத நான் பார்ப்பேன்…”

“பார்க்கலாம் அதையும்…”

“பாரு…” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் புயலென சென்றான்…

அவளிடமிருந்து விலகி ருணதியைத் தேடிச் சென்றவன், அவள் அங்கு ஜன்னல் கம்பிகளில் முகத்தினை புதைத்து இருப்பதை பார்த்து

இந்த ஓவியத்தை நான் கலைக்கவும் விட மாட்டேன்… கலையவும் விடமாட்டேன்…

என்னவள்… நான் நேசித்தவள்… என்னால் இவளுக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது…

அதற்கு நான் ஒருபொழுதும் சம்மதிக்கமாட்டேன்…

அந்த ராட்சஸியிடமிருந்து இவளை காப்பது இனி என் பொறுப்பு…

இவள் வாழ்வின் பிரச்சினைகளை முடிந்த வரை சீக்கிரம் சரி செய்ய வேண்டும்… இவள் முகத்தில் புன்னகையை நான் காண வேண்டும்…

என அவன் எண்ணிக்கொண்டிருந்த போது, அவள் திரும்பி அவனைப் பார்க்க,

“அவ சொன்னதெல்லாம் காதுல வாங்க வேண்டாம்… அவளுக்கு நாக்கால எல்லாரையும் கொத்ததான் தெரியுமே தவிர, யாரையும் நல்ல விதமா பேசி பழக்கமே இல்லை…”

“நீங்க எப்படி இருக்கீங்க?...” என அவள் கேட்க

அவன் புரியாமல் விழித்தான்…

“நீங்க சந்தோஷமா இருக்குறீங்கன்னு நினைச்சேன்… இல்லன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சிகிட்டேன் காவேரி அம்மா உங்ககிட்ட பேசினதை வச்சி… அது போதாதுன்னு நேரிலேயும் இன்னைக்கு பார்த்துட்டேன் உங்க திருமண வாழ்வை…” என்றவள் அவன் பேசாது அமைதியாய் இருக்கவும்,

“ஏன் ?....” என்றாள் வாய்விட்டு…

“விதி….” என்றான் அவனும்… புன்னகைத்தபடியே…

அவனின் புன்னகை கண்டவளுக்கு அவனை இதே புன்னகையோடு பல வருடங்கள் முன்பு கண்ட நிகழ்வு கண் முன் வந்தாடியது…

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.