(Reading time: 10 - 20 minutes)

20. என் உயிர்சக்தி! - நீலா 

புதிய சூழல் புதிய மனிதர்கள்!

புதிய நண்பர்களை எதிர்ப்பார்த்து அந்த பள்ளிக்குள் நுழைந்தாள் குழலீ!

ஒல்லிக்குச்சியாய் ஷாலினி பாப் கட்டுடன் துறுதுறு விழிகளுடன் வாசுவின் கொள்ளுபாட்டியிடம் ஆசி பெற்று பள்ளிக்குள் நுழைந்தவளை பிரேயரில் டீஃபால்டர்ஸ் கீயூவில் நிறுத்தப்பட்டாள் குழலீ!

En Uyirsakthi

காரண கர்த்தா அசிஸ்டண்ட் பீப்புள் லீடரான பிரபு ஆர் கே... காரணம் பின்னலிடாமல் வந்தது!!!

“டேய்... பாப் தலைமுடியில் எப்படிடா பின்னல் போடமுடியும்???” ஆரம்பமே அதிரடியாய்!!!

சூப்பர் போ! அப்போ ஆரம்பிச்ச டிராக் தானா இது?' - டீனா

நான் தான் சொன்னேனே பிரபுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும்னு! நீ தான் கேட்க மாட்டீங்கற! அந்த ஸ்கூல் லைஃப்ஐ என்ஜாய் செய்திருப்பியே? - யாழினி

ஹாங்காங்...எனக்கு அந்த ஸ்கூலை அப்போலிருந்தே அந்த நொடியில இருந்தே பிடிக்காத போயிடுத்து.

ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்தேன். வடசென்னையில நான் படிச்சது ஒரு பெண்கள் பள்ளி... என் பெரியம்மாக்கள் முதல் அவங்க பொண்ணுங்க வரைக்கும் எல்லாரும் படிச்சது அப்படித்தான். அண்ணன்கள் படிச்சது ஆண்கள் பள்ளியில் தான்.

அந்த பிரண்ட்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு அங்கே தனியா வரத்துக்கே எனக்கு பிடிக்கல! எப்பவுமே முதல் நாள் ஸ்கூலுக்கு வரவங்களுக்கு கலர் டிரஸ் பர்மிட்டட். ஆனா என் அப்பாவுக்கு எல்லாத்திலேயும் கரேக்ட்டா இருக்கனும்...அதனால யுனிஃபார்ம்!

போன அன்னைக்கு முதல் நாளே இப்படினா இனி ப்ளஸ் டூ முடியும் வரை எப்படி ஓட்டனு பயங்கர ஸ்டிர்ஸ்.

You might also like - Barath and Rathi... A free English romantic series

 

என் பழைய ஸ்கூலில் கூட குடுமி ஆர் பின்னல் வித் ரிப்பன் கம்பல்சரி...ஆனா அப்போ எனக்கு இருந்த முடிக்கு பேண்ட் கூட நிக்காது! இதுல எங்க இருந்து பின்னல் போட? பழைய பள்ளியில என்னை எதுவுமே கேட்க மாட்டாங்க... ஏன்னா ஹேச் எம்.. அசிஸ்டன்ட் ஹேச் எம் எல்லாருக்குமே நான் செல்லம்!

பிரேய்ரில் நிக்க வெச்சது மட்டுமில்லாம பின்னல் வேற போட சொல்லிட்டான் இந்த பி கே!

ஹி...ஹிஹிஹி...' யாழினி தான் சிரித்தாள்.

ஹேய் சிரிக்காதடீ! - குழல்

ஏன்டீ இப்படி சிரிக்கற??? - டீனா

எதப்பத்தி நினச்சு இப்படி சிரிக்கறனு தெரியுது... எனக்கு இப்போவரைக்குமே சரியா பின்னல் போட வராது... அப்போ என்ன செய்தேனு தானே சிரிக்கற... புரியுது!

பின்னல் போட தெரியாதுனு நான் சொல்ல... அவன் அதற்கு சிரிச்சுவைக்க எனக்கு அழுகைதான் வந்துச்சு.. நான் அழ ஆரம்பிக்க.. வாசு தான் வந்து என்னை காப்பாத்தினான். அவனுக்கு நான் என்னைக்குமே 'பூ' தான். அவனும் அப்படியே கூப்பிட்டு பழக்கமாயிட்டான். அங்கேயும் வந்து அப்படியே கூப்பிட்டு வைக்க என் பாடுதான் இன்னை வரைக்கும் திண்டாட்டமா இருக்கு!

அன்னிலிருந்து தான் என்னை 'பூ' நு இந்த கிறுக்கன் கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.

என்னது கிறுக்கனா??? நீ நடத்துடீ தங்கம்!!!

என்னை பேசவிடறீங்களா?? இல்லை நான் என் வேலையை பார்க்கவா???

சரி தாயே உன் லவ் ஸ்டோரியை சொல்லு!!! பதிலுக்கு இரண்டு அடியை வாங்கினாள் யாழினி.

தினமும் இதே கதை தொடர ஒரு நாள் இந்த விஷயம் ப்ரின்சிப்பல் வரை போய் என் அப்பா வந்து.... இருவருக்குமே வார்நிங்க் கொடுத்து.... ஒன்னுமேயில்லாத விஷயத்தில் இவ்வளவு சீன் கிரியேட் செய்து பெரிசாக்கினது நான்னில்லை... பிரபுதான்! 

என் அப்பாவுக்கு என்னை அந்த ஹேர் கட் ல பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனா இவன் தொடர்ந்து செய்த அலம்பலினால் தான் ஹேர் கட்டுக்கு தடை... அப்புறம் இவ்வளவு நீள தலைமுடி!

………

'அந்த பையன் பிரச்சனை செய்ய வழி இருந்தா தானே செய்ய முடியும்... அதுவேயில்லைனா?? இனி அந்த பையன் பிரச்சனை செய்ய மாட்டான்... நீயும் அடக்கமா வாய் பேசாத இரு!!!! அவன்கிட்ட வம்புக்கு போகாதே!!' இதுதான் எங்கப்பா சொன்னது. ஆனா இப்போ வாழ்க்கைக்கும் அவன்கிட்ட மாட்டியிருக்கேனே!!!

அப்போ உன் கூந்தலின் ரகசியம் உன் காதல் கணவன் தான்னு சொல்லு!' - டீனா.

மண்ணாங்கட்டி! காதலும் இல்ல எந்த கத்திரிக்காயும் இல்ல!

நம்பிட்டோம்...நம்பிட்டோம்... நீ மேல சொல்லு! - இருவரும் கோரஸாக

கர்ள்ஸ் ஸ்கூலில் படிச்சதால பாய்ஸ் கூட பேசி பழக அவ்வளவா வாய்ப்பேயில்லை. வாசுவும் அர்ஜுனும் தான் என் வயசுல இருந்த பசங்க. அவங்களும் வரம்புமீறி எதுவும் பேசினதுகூடயில்ல. மற்றபடி எனக்கு தெரிந்ததேல்லாம் என் பெரியம்மா பெரியப்பா பசங்களும் என் தம்பி அருளும் தான். எல்லோருமே என்னை தாங்குவார்களே தவிர டீஸ் செய்தது கிடையாது.

ஆனா அங்க ஸ்கூல்ல எல்லாமே தலைகீழ் தான். பசங்க பொண்ணுங்களை ரொம்பவும் சாதாரணமா கிண்டல் செய்வாங்க... ஆள் சேட் செய்து கலாய்ப்பாங்க... நிக் நேம்ஸ்... எல்லாவற்றுக்கும் ஹைலைட்டா பொண்ணுங்களும் பசங்களுக்கு சரி சமம்மா காலாட்டா செய்வாங்க!

நான் இப்போ அவங்களை விமர்சனம் எதுவும் செய்யலை.. பட்... அவங்க நடக்கற முறை எல்லாமே தவறா தான் தெரிஞ்சுது....எல்லாமே புதுசா இருந்தது. ஏத்துக்கவும் முடியலை.. அதனால நானும் ஒதுங்கியிருந்தேன்... ஒதுக்கியும் வைக்கப்பட்டேன். பட் பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரைனு எந்தப்போட்டி வந்தாலும் முதல் ஆளாய் நிப்பேன்.

அப்படிதான் நான் சேர்ந்த வருஷம் நடந்த பேச்சுப்போட்டியில பிரபுவுக்கும் எனக்கும் நெக் டு நெக்... அவனுக்கு முதல் பரிசு... எனக்கு இரண்டாவது பரிசு! அவனை எரிச்சல் படுத்தியது... அவனை கலாய்க்க சேட் செய்யப்பட்ட அனுவுக்கு மூன்றாவது பரிசு... எப்போதுமே பிரிக்க முடியாத இவர்கள் ஜோடியின் வெற்றியை நான் உடைத்துவிட்டேன்னு!

அது மட்டுமில்லாம பள்ளியில எல்லோரும் ஒரு ஸ்போர்டும் ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியும் கம்பல்சரியா தெரிஞ்சுக்கனும்! அப்படிதான் அடுத்த க்ளாஷ்!

இன்ட்ரஸ்டிங்! - டீனாவும் யாழினியும்

அவன் ஏற்கனவே வயலின் கத்துக்கிட்டிருந்தான். நானும் பழைய ஸ்கூல்ல வாய்ப்பாட்டு படிச்சதனால அதையே இங்க வந்தும் கண்டின்யூ செய்தேன். இரண்டு க்ளாஸும் ஒன்னா தான் நடக்கும். வயிலின் மாஸ்டரும் பாட்டு மிஸ்ஸும் அண்ணன் தங்கை... அதனால எப்பவுமே கம்பைண்டு க்ளாஸ்தான். ஒவ்வொரு க்ளாஸும் போராட்டம் தான்.

சோ பாட தெரிந்தவர்களுக்கு வயலின் நோட்ஸ் படிக்க பிடிக்க தெரியும். அதே போல தான் வயலினும்! இதில் எந்த மாஸ்டர் வரலைனாலும் அடுத்தவங்க டேக்ஓவர் செய்திருவாங்க!!! அப்படித்தான் வயலின் மேல ஈர்ப்பு வந்து நான் கிட்டார் கற்றுகிட்டத்தும்!! பட் பிரபுவுக்கும் கிட்டார் தெரியும்னு எனக்கு இப்போ தான் தெரியும்!

நெக்ஸ்ட் ஹைலைட் அந்த வருட ஏனுவல் டே! சினிமாவும் சினிமாத்தனமும் இல்லாத ஏனுவல்  டே! அந்த வருட நாடகத்துக்கு பெயர் கொடுத்துட்டேன். ஆனா இன்னைவரைக்கும் ஏண்டா பெயர் கொடுத்தோம்னு வருத்தப்படறேன்.

அப்படி என்னதாண்டீ ஆச்சு? - டீனா

அவன் என்னை பார்த்தாலே ஏதாவது சீண்டுவானு எல்லோருக்குமே தெரியும்...இருந்தும்...

இருந்தும்??? - யாழினி

இருந்தும் பிரபுவை கண்ணனாகவும், அவனனோட ஆள் அனுவை சத்யபாமாவாகவும் என்னை ருக்மணியாகவும் கேரக்டரைஸ் செய்துட்டாங்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.