(Reading time: 10 - 20 minutes)

வாவ்! வண்டர்ஃபுல்! - டீனா

அங்கே விழுந்தவத நானு! அப்படி ஒரு பேச்சுத்திறமை தெரியுமா? பேச்சுபோட்டி வேற பட்... டிராமால டயலாக் டெலிவரி வாஸ் அமேசினங்! அனுவும் அவருக்கு சளைத்தவ கிடையாது!!! ஆனா நான் இதுல பொருந்தாத மாதிரி தான் இருந்தேன்! 

பாமா ருக்மணியில யாருக்கு கண்ணன் மீது அன்பு அதிகம்னு ஒரு போட்டி.. கண்ணன் அவன் விளையாட்டின் வழியே அவர்களுக்கு உண்மையை உணர்த்துவதும் தான் நாடகத்தின் கருத்து! அவன் என்னை வேண்டுமென்று சீண்ட வெறுப்பு வளர்ந்துக்கொண்டே தான் போனது!

இப்படி தான் ஒவ்வொரு நாளும் டீஸிங் ஒவ்வொரு விதமா நடக்கும். ஆனா அந்த நாடகத்துக்கு அப்புறம் அனு மட்டும் இல்லாம என்னையும் அவன்கூட ஜோடி சேர்த்து பேச ஆரம்பிச்சாங்க!!

அவனுக்கு அது சுத்தமா பிடிக்கல..'யாரோட வேணாலும் என்னை சேர்த்து கலாய்ங்க... பட் அவ வேண்டாம்... என் எதிரிக்குகூட இப்படி ஒரு ஆளு இருக்க கூடாதுனு நினைக்கறவன் நான். என்னை போய் அவக்கூட.. ச்சச' னு என் எதிர்லேயே சொன்னான்.

அவனுக்கு என்ன தான் பிரச்சனையாம்?? - யாழினி.

எனக்கு அப்போ பல் கொஞ்சம் எடுப்பா இருக்கும் யாழ்.

You might also like - Ithanai naalai engirunthai... A family oriented romantic story...

 

அதனால??

அதனால தான் அவன் அப்படி பிஹேவ் செய்றானு நினைச்சேன். பட்... இப்போ வரைக்குமே அதே ஏளனப் பார்வை தான்!

என்ன டீ சொல்லற??

அவனுக்கு நிஜமாவே என்னை பிடிக்கல டீ!

நீ புரிஞ்சிக்காம பேசற குழல்! - டீனா

இல்லை! புரிஞ்சு தான் பேசறேன்! எனக்கு அவனை பிடிக்கறதால அவனுக்கும் பிடிக்கனும்னு அவசியம் இல்லையே!

...

இப்படியே பிரச்சனையாகவே போய்கிட்டுறதுல... அடுத்த டிவிஸ்ட் அவன் டேன்த்ல டிஸ்ட்ரக்ட் ஃபர்ஸ்ட்! நான் படிப்பில் அவன் அளவுக்கு இல்லாம கொஞ்சம் சுமார் தான். படிப்பு ஏறாத மரமண்டைனே முடிவு செய்துட்டான்!

....

அதற்கு ஏற்றார் போல நேக்ஸ்ட் இயர் டேன்த்ல நான் சுமார் மார்க் தான். அவன் க்ளாஸ் மேட் கூட கம்பேர் செய்தால் பரவாயில்லை... பட் என்னை போய் எப்படி கம்பேர் செய்யலாம்??

குழல்...

நான் பிளஸ் ஒன் படிக்கும் போது தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாளையொட்டி நாடகப் போட்டி ஒன்று தஞ்சையில நடந்துச்சு. அதற்கு எங்க பள்ளி குழுமத்தின் சார்பாக ஒரு நாடகம்னு முடிவு செய்தாங்க. என்னை குந்தவை நாச்சியார் பாத்திரத்துக்கும் பிரபுவை வந்தியத்தேவன் பாத்திரத்துக்கும் தேர்வு செய்தாங்க!

வாவ்!!!

பிளஸ் டூ வில் இருந்ததால் அவனுக்கு ஸ்பேஷல் பர்மிஷன்.. மாலை ஐந்திலிருந்து ஏழு வரை பிராக்டிஸ்! வந்தியத்தேவன் குந்தவை காதலையும் திருமணத்தையும் எப்படி ராஜராஜன் கைக்கூட வைக்கிறார் என்பது தான் கதை! தினமும் ஈவ்னிங் பிராக்டிஸ்ல நானும் இருக்கனும். நல்லா தயாராகிட்டு தஞ்சை போய் சேர்ந்தோம். அங்கே ரிஹர்சல்ல அவன் வேணுமுன்னே என் கையை பிடிச்சிட்டான். பை ஸ்கிரிப்ட் இந்த சீன் இருந்தது. பட் அப்புறம் பிள்ளைங்க மனசுல தவறான எண்ணத்தை விதைக்காதீங்கனு எங்க பிரின்சிபல் அந்த சீன்ஐ நீக்கிட்டாங்க. நாடகத்தின் பகுதியா தான் அவன் கையை பிடிச்சது... பட் எனக்கு வந்த கோபத்துல அவனை அறஞ்சிட்டேன்!

அடிச்சிட்டியா??

ஆமாம்! பேசிக் மேனர்ஸ் கூட இல்ல அவனுக்கு!

ஏய் அது டிராமா டீ! அதுக்குகூடவா இப்படி ரியாக்ட் செய்வ?

தெரியல டீ இப்போ வரைக்கும் நான் ஏன் அப்படி ரியாக்ட் செய்தேனு இதுவரைக்கும் தெரியல... இப்போ தொட்டு பேசறது ஒரு பெரிய விஷயமா படல.. ஆனா அப்போ ஏன் அப்படி பிஹெவ் செய்தேனு புரியவேயில்ல... ஆனா அப்படி பப்ளிக்ல அடிச்சதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். பிரபு அதுக்கு ரியாக்ட் செய்தது இன்னும் மோசம்.

"சீ... நீயேல்லாம் ஒரு ஆளு... உன் கையை பிடிச்சு.. நான் உன்னை என்ன செய்திட போறேனு இப்படி ரியாக்ட் செய்த? அப்படி ஒரு எண்ணம் சத்தியமா உன்னை பார்த்தா இந்த ஜென்மத்துல வராது... இவ்வளவு பொண்ணுங்க பிரேண்ட்ஸா இருக்காங்க... இதுவரைக்கும் யார்கிட்டயாவது தவறா நடந்திருக்கேனானு கேட்டுபாரு! என்னை போய்...ச்சச.. தயவுசெய்து என் கண் முன்னாடி வந்துராத.. உன்னை பார்க்கவே பிடிக்கல இந்த பிறவி முழுதுக்கும்!' - பிரபு

அப்புறம்?? - யாழினி

தப்பு செய்தது அவன்! அவனுக்கே இவ்வளவு இருக்கும் போது.. நான் ஏன் அவங்கிட்ட பேசபோறேன்! அவனை பிடிக்கும் தான்... பட்...மனசு...காதல்...இதையேல்லாம் தாண்டி தன்மானம்னு ஒன்னு இருக்குல!

ஈகோ பாக்கறியா குழல்? அதுவும் உன் அவன்கிட்டவா? - டீனா

தெரியல டீனா! என் மனசு கேட்க மாட்டுதுதான்... ஆனா அவரு முன்னாடி நடந்துகிட்டது நான் அனுபவிச்சிருக்கேன் டீனா...நான் என்ன செய்தேனு இன்னைவரை இவ்வளவு  அளப்பற செய்யறானு எனக்கு புரியவேயில்ல?! யோசிச்சு யோசிச்சு மண்டை காய்ந்து போனது தானே எனக்கு மிச்சம். வாழ்க்கையே கேள்விக்குறியா மாறிட்டது போல இருக்கு டீனா! ஐ ம் ஹைலி டிப்ரஸ்டு!

முன்னம் அவன் எப்படி வேணாலும் நடந்திருக்கலாம் குழல். ஆனா இப்போ உன்னை விருப்பத்தோட தான் பிரபு கல்யாணம் செய்திருக்கார் குழல். நீ தான் அவரை புரிஞ்சிக் மாட்டேன் நிக்கற! கண்ணை மூடிக்கிட்டு நின்னா சுத்தி இருக்கறது மொத்தமும் இருட்டா தான் தெரியும்! கண்ணை திறந்து உன் முன்னே இருகிற உண்மையை பாரு! உன் காதல் உண்மைனா உன் ஈகோவையும் தன்மானதையும் தூக்கி போட்டுட்டூ பிரபுவோட காதலை புரிஞ்சிக்கோ! அப்படியில்லைனா அவர் வாழ்க்கை அவருக்குனு விட்டுக்கொடுத்து அவரைவிட்டு அவர் வாழ்க்கையைவிட்டு விலகி வந்துடு! வேற கல்யாணம் செய்துகிட்டு அவர் நிம்மதியா வாழட்டும்! நீ குறுக்கே நிற்காதே! - யாழனி

யாழ்!!!! - என்று பதறிவிட்டாள் குழலி. என்கிட்ட சொன்னதையேல்லாம் பிரபுகிட்ட சொல்ல வேண்டியதுதானே!

பதறுவதால எதுவும் நடக்க போவதுயில்லை குழல்! நாலு விதமாகவும் நல்லா யோசிச்சு முடிவுசெய்!!! வா டீனா போகலாம் - என்று டீனாவையும் இழுத்துக்கொண்டு வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேறினாள் யாழினி.

கையை விடுடி யாழ்... ஏன் அவகிட்ட இப்படி பேசின? நான் கேட்கறேன்ல பதில் சொல்லு!

ஒரு நிமிஷம் டீனா!' என்று தனது கைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

என்ன? நான் அனுப்பின மெசெஜ் வந்துச்சா??? 

.....

சூப்பர்! அப்போ நம்ம மாஸ்டர் பிளானை செயல் படுத்திட வேண்டியதுதான்! நான் சொன்னது ஏதாவது ஒன்னு நடந்தேயாகனும்! அவங்க மட்டும் நிம்மதியாயிருக்க நான் விட்டுவிடுவேனா?

......

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!!!!' என்றாள் யாழினி. குரலில் ஏளனமா???? வன்மமா??? அவள் மனதிற்கு மட்டுமே வெளிச்சம்!!!

தொடரும்...

Episode # 19

Episode # 21

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.