(Reading time: 13 - 26 minutes)

21. என் உயிர்சக்தி! - நீலா 

ஹாய் பிரண்ட்ஸ்! தாமதமாக எப்பிசோட் கொடுக்கறத்துக்கும்.. எப்பி ஸ்கிப் செய்ததுக்கும் என்னை மன்னிக்கவும்! உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி! உங்க கமெண்ட்ஸுக்கு ரிப்ளைகூட செய்ய முடியலை... சாரி மக்களே! கொஞ்சம் பர்சனல் இஷ்ஷுஸ்... அப்புறம் மழை.. வெள்ளம்.. நொமாடிக் லைவ் எல்லாம் முடிஞ்சி இப்போ தான் கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கேன்... இனி உங்க கருத்து பதிவுக்கேல்லாம் கண்டிப்பா பதில் கொடுக்கறேன்! அதுவரைக்கும் என்னை பொறுத்து கொள்வதற்கு... மிக்க நன்றி என் சில்சீ நண்பர்களே!'

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் நியாபகம்

சின்ன பூக்கள் பார்க்கயில் தேகம் பார்த்த நியாபகம்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை நியாபகம்

En Uyirsakthi

மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட நியாபகம்...

….

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை கண்ணே....

நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே...

முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்..

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...

கண்ணீர் வழியுதடி கண்ணே!!

தொலைக்காட்சியில் வந்த பாடலை சத்தமாக வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் கீதா. ஏழு மாத கருவை சுமந்தபடி தன் பிறந்தவீட்டு வரவேற்பறையில் அமர்ந்துக்கொண்டு சுவாரஸ்யமாக தொலைக்காட்சியை துழாவினாள்.

வரிசையாக காதல் கீதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. கீதாவுக்கு ராஜ்குமாரை அப்போதே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதுவும் இந்த பாடல் இருவருக்குமே பிடித்த ஒரு பாடல். 

எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் கீத்ஸ்!

இப்படி அவன் சொன்ன போது அவனை முறைத்தது நினைவு வந்தது. அதை தொடர்ந்து வந்த உறையாடலும் உறவாடலும்! 

You might also like - Unnal magudam soodinen... A romantic story...

ன் கீது இதுக்கு முறைக்குற இப்போ??

...

நான் என்ன சொல்லிட்டேன்? இந்த பாட்டு பிடிக்கும்னு சொன்னது குத்தமா??

யாரது காதல் ரோஜா???

இடுப்பில் கைவைத்து அவள் கேள்வி கேட்ட போது சிரித்துவிட்டான் ராஜ்குமார்.

எதுக்குடா இப்போ சிரிக்கற??

அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். அதற்கு அவளிடம் சரமாரியாக அடிகளை வாங்கிக்கொண்டான்.

அடித்த அவள் கைகளை சிறைப்பிடித்து வளைத்து பிடித்து கண்ணோடு கண் பார்த்து 'பொறாமையா??' என்றான். 

யாரு அவ??' திமிரியபடி கேட்டாள். 

பிடிக்கனும்னா அதுக்கு பின்னால் ஏதாவது ரோஜா இருக்கனுமா என்ன??' என்றான் நெற்றிமுட்டி விட்டு.

பாடல் வரிகளை கேளூ கீது! காதல் தோல்வியை பற்றிய பாட்டு அல்ல இது தலைவன் தலைவியை விட்டு பிரிந்து வாழ்ற துயரத்தை பற்றின கவிதை... அதை பாடலா மாத்திருக்காங்க டா!

அப்போ நிஜமாவே யாரும் இல்லையா??

என் காதல் ரோஜா தான் இப்போ என் கைக்குள்ளவே இருக்குதே!!  - ராஜ்குமார். 

அய்யே போதுமே டாக்டர் சார்! 

ஏன் உனக்கு இந்த பாட்டு பிடிக்காதா?? நம்ம ரெண்டு பேர் டேஸ்டும் விருப்பு வெறுப்புகளும் ஒரே மாதிரி இருக்கறதால இந்த பாட்டும் பிடிக்கும்னு நினைச்சுட்டேன். 

அவன் நெஞ்சில் முகம் புதைத்து 'எனக்கு இந்த பாட்டும் அந்த அரவிந்த் சுவாமியையும் ரொம்பவும் பிடிக்கும்!' என்றாள்.

அப்போ நானு??' என்று குழைந்தான் ராஜ்

அவள் அணைப்பு இன்னும் இறுகி அவனுள் புதைந்தேவிட்டாள். அந்த நாள் நினைவு வர முகம் சிவக்க நிமிர்ந்தவள் அப்படியே ஒரு நொடி உறைந்தும் விட்டாள் கீதா!

அவசரமாய் ரிமோட்டை தேடி எடுத்தவாறே 'அம்மா!!! அம்மா!!' என்று அலரினாள்.

மாலதி வெளியே வரவும் கீதா தொலைக்காட்சியை அணைக்கவும் சரியாக இருந்தது.

கீதா அமர்ந்திருந்த சோப்பாவின் எதிர் சோப்பாவில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் பிரபு!

டேய் பிரபு!!! எப்போ டா வந்தே??? எப்படிடா இருக்க???- மாலதி

பாட்டு சத்தம் குறைந்தவுடன் அவனும் தன் மோன நிலையில் இருந்து வெளியில் வந்து தாயையும் தங்கையையும் பார்த்து புன்னகைத்தவாறே ரிமோட்டை எடுத்து பாடலை மீண்டும் உயிர்பித்தான். 

சிவாண்ணா??!!- ஆச்சர்யமாய் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் கீதா. 

பாடலும் முடியும் தருவாயில் இருந்தது. ப்ச்ச் என்ன கீதா..நல்ல பாட்டோட வரவேற்கறனு பார்த்தா.. பாரு பாட்டு முடிஞ்சி போச்சு!

டேய் இது உனக்கே நியாயமா இருக்கா டா??' என்று தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தார் மாலதி.

டேய் சிவா.. உனக்கு தான் இந்த லவ் சாங்க் எல்லாம் பிடிக்காதே! அதுவும் இந்த மாதிரி சோக கீதமேல்லாம் கேட்டாலே ஓடுவ! இப்போ என்ன தலைகீழ்?

சிறு புன்னகை அவனிடத்தில்!

என்னடா பதிலை காணோம்?

மீண்டும் புன்னகை கொஞ்சம் பெரிய அளவில்!!!

அம்மா! அண்ணாவுக்கு ஏதோ ஆயிட்டு! இத்தனை மாசம் ஊர் சுத்தனதுல மண்டையில இருக்கற நட்டு கழண்டிடுச்சா?

பாடல் வரிகளை கேளூ கீதா! இது லவ் சாங்க்! சோக கீதமா ஏன் பார்க்கற? காதல் தோல்வியை பற்றிய பாட்டு அல்ல இது தலைவன் தலைவியை விட்டு பிரிந்து அவ நினைவாவே வாழற போது அவளை நினைச்சு பாடற பாட்டு இது! வைரமுத்து சார் என்னமா எழுதிருக்கார்னு பார்! அகனானூறு பாடல்கள்ல  தலைவன் தலைவியை விட்டு பிரிந்து வாழும் போது அவங்களை ஏதோ நோய் தாக்குமாமே.... அது என்ன நோய்...??? ஆஆனங்... பசலை நோய்.. அதோட ரிசல்டண்ட் சாங்க் தான் இது!

மயக்கம் ஒன்றுதான் வரவில்லை கீதாவிற்கு! "காதல்...தலைவன்.. தலைவி...பிரிவு... துயர்... பசலை நோய்... வைரமுத்து... கவிதை..." இதையேல்லாம் எப்போ இருந்து ரசிக்க ஆரம்பிச்சான்??

அண்ணா... ஆர் யூ ஆல்ரைட்??? இதேல்லாம் எப்போ இருந்து ரசிக்க ஆரம்பிச்ச?' அவன் தோற்றம் ஏதோ உணர்த்த தாயை பார்த்தாள் கீதா!

நலிந்த தோற்றமும் தாடியும் 'கற்றது தமிழ்' ஜீவாவை போல் இருந்தான் பிரபு. அதை பார்த்த மாலதிக்கோ கண்ணீர் தானாய் வந்துக்கொண்டிருந்தது.

அதை பார்த்திருந்த கீதா இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி எழுந்து சமையலறைக்கு சென்றாள்.

மத்திய உணவு தயார் செய்து கொண்டிருந்ததை பாத்தியிலேயே விட்டுவிட்டு விரைந்தருந்தார் மாலதி. சாதத்திற்காக குக்கரை வைத்துவிட்டு அடுப்பில் பாதி கொதித்திருந்த குழம்பை கொதிவிட்டு இறக்கி வைத்துவிட்டு தன் அண்ணனிற்கு குடிப்பதற்கு தேநீரையும் சாப்பிட பலகாரத்தையும் எடுத்துக்கொண்டு செல்ல அதற்குள் ராஜ்குமார் அவளை கைபேசியில் அழைத்தான்.

கீத்ஸ் டார்லிங்!! என்ன செய்யற?? என் பொண்ணு என்ன சொல்றா?? சமத்தா ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?? - ராஜ்

ராஜ் நீங்க முடிஞ்சா இப்போவே கிளம்பி வீட்டுக்கு வர முடியுமா???

என்ன மா?? என்ன ஆச்சு?? அதான் லஞ்சுக்கு வரேனே?? என்னடா உடம்பு சரியில்லையா??

அண்ணா வந்துட்டான்!

சரிடா இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்பேன். மாமாவுக்கு சொல்லிட்டீங்களா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.