(Reading time: 13 - 26 minutes)

ல்ல...

சரி. நான் பார்த்துக்குறேன்!

கையில் இருந்த தட்டுடன் வந்தவள் அங்கே இருந்த காட்சியில் அவள் கண்ணிலும் கண்ணீர். தாயின் மடி மீது தலை வைத்து படுத்திருந்தான் பிரபு. அவன் விரலுக்கு சொடுக்கு எடுத்தபடி அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஹலோ!! போதும் போதும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டது. நீ முதல்ல எழுந்திரு சிவா.. இந்தா இதை சாப்பிடு! 

போடி நான் இப்படி தான் படுப்பேன் உனக்கென்ன??

எனக்கென்ன??! ஒன்னுமேயில்லையே! இந்த காட்சியை அப்படியே படம் எடுத்து அண்ணிக்கு அனுப்பிடுவேன். ஏற்கனவே உன் மேல கொலைவேறியில இருக்காங்க! அப்புறம் சக்தி... காளி அவதாரமா ஆகிட போறாங்க!

மாலதியின் மடியில் இருந்து எழ போனவனை தடுத்து திரும்பவும் படுக்க வைத்தார். 

கீதாவை பார்த்து..'என்னடீ பண்ணுவா உங்க அண்ணி?? இப்படி என் பிள்ளை வரும் போது அவனை தாங்கிபிடிச்சு ஆதரவாய் இருக்க முடியல... காசு தான் பெருசுனு அங்கே போய் உட்கார்ந்திருக்கு அந்த பொண்ணு. கோவப்படுவாளாமே!! வர சொல்லுடீ அவளை.. எப்படி கோவப்படுறானு நானும் பார்க்கறேன்!!!'

அம்மா!!! சும்மா அண்ணீயை குத்தம் சொல்லதே! உன் பையனை முதல்ல ஒழுங்கா இருக்க சொல்லு!

என் பிரபுவுக்கு என்ன? அவன் ஒழுங்கா தான் இருக்கறான்! உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணாம அவளுக்காக பேசற??

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

அவங்க பக்க நியாத்தை கேட்டா நீங்களும் குழலீக்கு தான் சப்போர்ட் செய்வீங்க!

அதுவரை பொறுமையாய் இவர்கள் உரையாடலை கேட்டவாரு அமர்ந்திருந்தான் பிரபு. கீதாவின் இந்த பதிலில் சற்று திடுக்கிட்டு தான் போனான்.

முழிக்கறதை பாருங்க! அண்ணா நீ செய்த வேலைக்கு நானா இருந்தா உன்னை தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பேன்! அவங்களா இருக்கறதுனால அமைதியா இருக்காங்க!

நான் என்னடீ செய்தேன்???

நீ என்ன செய்யல?? அம்மா முன்னாடி சொல்ல வேண்டாமேனு பார்க்கறேன்!

ஏண்டீ அவன் வந்ததும் ஏன் இப்படி படுத்தற? இவனே இப்படினா... மாப்பிள்ளையை என்ன படுத்துவ?

அது அவர் பிரச்சனை... நீங்க ஏன் கவலை படறீங்க?

ஆமா நீங்க ஏன் அத்தை கவலை படறீங்க? கீது அப்படி எல்லாம் படுத்தமாட்டா! நீங்க எப்படி இருக்கீங்க சிவா?' என்றவாறு உள்ளே நுழைந்தான் ராஜ்.

மாப்பிள வந்துட்டார்...என்றவாறு தாயின் மடியை விட்டு எழுந்தான் பிரபு. வாங்க ராஜ்! நான் நல்லா இருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க?'

நானா? என்னை பார்த்தாவே தெரியுமே மச்சான்! நல்லா இருக்கேன்! நீங்க எதுக்கு இப்படி அவசரமா எழுந்துக்கறீங்க? படுத்துக்கோங்க!

இல்ல... பரவாயில்லை... உட்காருங்க ராஜ்!

சிரித்தவாறு இருவரும் அமர மாலதி மத்திய உணவை தயார் செய்ய உள்ளே விரைந்தார் கீதாவுடன்!

அம்மாவிற்கு உதவ சென்ற கீதா மறைவிலிருந்து தன் அண்ணனை கைபேசியில் படம் எடுத்துக்கொண்டாள்.

என்ன கீதா செய்யற? எதுக்கு போட்டோ எடுக்கற?

அண்ணிக்கு அனுப்ப போறேன்!

வேண்டாம்... குழலீக்கு அனுப்பாதே!

ஏன் மா? அனுப்பினா என்ன? நானும் அப்போ இருந்து பார்க்கிறேன் நீங்க அவளுக்கு எதிரா தான் பேசறீங்க! கிருஷ்ணாவையும் அந்த ஆசிரமத்திலேயே விட்டுடீங்க... என்னமா ஆச்சு உங்களுக்கு?? நீங்களும் ஒரு சாதரண மாமியாருனு காட்டப்போறீங்களா?

சாதரண மாமியாருனா கேட்டுட்ட? ச்ச்ச... நீ எப்படி வேணும்னா நினைச்சிக்கோ எனக்கு கவலையில்லை.... ஆனா எந்த காரணம் கொண்டும் இந்த போட்டோ குழலீ கைக்கு கிடைக்ககூடாது' என்று திரும்பி வேலையை தொடர.. அந்த நேரம் பார்த்து வரவேற்பறையில் இருந்த அவரது கைபேசி அலரியது.

சங்க தமிழ் போல் தனித்தவள் சக்தி...

தமிழின் சுவைபோல் இனிப்பவள் சக்தி...

குங்குமம் தருபவள் குலமகள் சக்தி!!!

மங்களம் தருவாள் மதுரைக்கு அரசி...

கடிகாரத்தை பார்த்தவர் உடனே சென்று அழைப்பை எடுத்தார் மாலதி. சொல்லுடா குழலீ! இன்னுமா தூங்கல நீ? - என்றார்.

அழைப்பு வரும்போதே பிரபுவின் கண்கள் அந்த கைபேசியின் மீது தான் இருந்தது. இப்போது கேட்கவே வேண்டாம்... முழுவதுமாக திரும்பி தாயை பார்த்து அமர்ந்தான்.

இல்ல அத்தை! இனிமேதான் தூங்கனும்... தூக்கம் வரல... அதனால படம் பார்த்துகிட்டு இருக்கோம்..

என்னமா குரலே ஒரு மாதிரியா இருக்கு?? மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம இரு!

....

என்ன பூங்குழலீ? நான் சொன்னது கேட்டுச்சா இல்லையா?

அத்தை... உங்களுக்கு மனசு கஷ்டமாவே இல்லையா?

எதுக்கு கஷ்டமா இருக்கனும்?

அவர்ர்ர்... உங்க பையன் எங்க இருக்காருனே தெரியல... எப்போவாது ஒரு முறைதான் உங்களுக்கு கால் செய்யறார்.... எங்க??? எப்படி??? எதுவுமே தெரியல... அதுவும்... இது எல்லாதுக்கும் காரணம் நான்தான்... அப்படி இருக்கும் போது என்கிட்ட இவ்வளவு அன்பா பேசறீங்க!!! எனக்கு தான் மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு... நான் எதுக்குமே இவ்வளவு பீஃல் பண்ணதில்ல அத்தை....தாயையும் மகனையும் பிரிக்கறது எவ்வளவு பாவம்... அதுவும் உங்க செல்ல மகனை... சாரி அத்தை! தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க...உங்க மனசு கஷ்டப்பட்டா நான் நல்லாவே இருக்க முடியாது அத்தை!!

உன் மனசு எனக்காக கவலைப்படுதா??? இல்ல... உன் மனசுல இருக்கவனுக்காக கவலைப்படுதா? 

அத்தை!!!

என்கிட்டவாது ரெண்டு முறை பேசினான்... உன்கிட்ட அவன் பேசி என்ன ரெண்டு மாசம் இருக்குமா???

ஆமாம் அத்த...

கொஞ்சம் கூட பொறுப்பேயில்லமா இந்த பையனுக்கு... நீ என்னமா பண்ண முடியும்??? என் மேல் தான் தப்பு!

அத்தை!! ப்ளீஸ்!

உன் மேல எனக்கு என்னமா வருத்தம்?? எங்க வீட்டு பொண்ணுமா நீ... என் பையனுக்கு துணையா அவனுக்கு விட்டுக்கொடுத்து உன் விருப்பதையே மறந்து வாழற... நம்ம குடும்ப வாரிசை கொடுக்கபோறவ நீ... உன்னைப்போய்.. என்னடா..... உன் புருசனை பத்தி கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காத... பேசாம படுத்துத்தூங்கு!

'அத்தை.... அவர் எதா..வது கால் செஞ்சாரா...எனக்கு ரொம்பவே பயமா இருக்கு...' குரல் சற்றே உடைந்திருந்தது.

டேய் குழலீ!!! குழலீமா.. ... குழலீ... அழக்கூடாது....

....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.