(Reading time: 7 - 14 minutes)

14. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

வாயை மூடிக் கொண்டான் சிவகுமார்.. தன் மனைவியை பார்க்க,  'இனி நான் பார்த்துக் கொள்கிறேன்'  என் கண்களால் அவனுக்கு அபயம் அளித்த ரஞ்சனி,

"இதுக்கு மேலே நாங்க என்ன பேசினாலும் வீண் பொல்லாப்பா தான் போகும்.. ஏதோ எங்களுக்கு அவ மேலே பொறாமை மாதிரி தான் தோணும்..  ஏம்ப்பா உங்களுக்கு கொஞ்சம் பூர்வீக நிலம் இருக்குன்னு சொல்லுவேளே, அதை வித்து எல்லாருக்கும் பங்கு பிரிச்சி கொடுத்துட்டு, மீதியை மஹதி கல்யாணத்துக்கு வைச்சுக்கலாமே..  இல்லைன்னா..  என்று இழுத்தவள், கல்யாணியை பார்க்க,

"அதுக்கு தான் அன்னிக்கே இந்த அம்மா கிட்ட தலைப்பாடா ஐந்து வருஷம் முன்னாலே அடிச்சிண்டேன்..  பாட்டி , தாத்தா காலத்துக்கு அப்புறம், மயிலாடுதுறை கிட்ட இருந்த அந்த பூர்விக  வீடு, நிலம் எல்லாத்தையும் விற்று விடுன்னு..  யார் கேட்டா.. என்னவோ, என்னிக்கோ ஓடிப் போன அவ அண்ணன் வருவான்னு இருக்கா..  அவனோட சம்மதம் இல்லாத ஒன்னும் பண்ண கூடாதாம்.. முதல்ல அவரே இருக்காறோ என்னமோ?..அதான் கோர்டே சொல்லறதே, ஒருத்தர் ரொம்ப வருஷம் காணாமல் போனா, அதுக்கேத்தா மாதிரி என்ன செய்யலாம் என்று ரூல்ஸ் இருக்குன்னு..  அதுல வரை குத்தகை பணம் எதையும் எடுக்காமா, அப்படியே சேர்த்து வைச்சிருக்கா.. அதை வித்தா தலா இப்ப இருக்கிற விலைவாசியில, ஒரு பத்து லட்சமாவது கிடைக்கும்"  என கல்யாணி எடுத்து கொடுக்க,

vasantha bairavi

கண்களாலேயே 'சபாஷ்' என்றாள்  ரஞ்சனி.. எது எப்படியோ, உள்ளுக்குள் ஒருத்தருக்கொருத்தர் பொறாமையில் புழுங்கிக் கொண்டாலும், பண விஷயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து விடுவர்.

சாரதா, "என்னடி கல்யாணி இப்படி பேசறே?"  என பதற,

"என்ன சொல்லறே கல்யாணி, இப்படி பேசாதே .. உங்கம்மா பாவம் .. எனக்கு கொஞ்சம் கூட உன்னோட நடவடிக்கை பிடிக்கவில்லை.. இப்படி பேசரதுன்னா இனிமே உன்னை நான் இங்கே கூப்பிட்டுண்டு வரவே யோசிக்கனும்..  வா, முதல்ல ஊருக்கு கிளம்பலாம்"  என கல்யாணியை கார்த்திக் கண்டிக்க,

"கார்த்திக் .. நீங்க கொஞ்சம் சும்மா இருங்கோ, நீங்க குழந்தைகளை அழைச்சிண்டு வெளியில கொஞ்சம் நேரம் உலாத்திட்டு வாங்கோ.. இது எங்காத்து விவகாரம்."  என தன் கணவனை அடக்கி விட்டு,

"அப்பா,  பேச்சுன்னு வந்தாச்சு.. இன்னிக்கு பேசி தீர்த்துடலாம்.. எங்களுக்கும் உரிமை இருக்கே..  ஒன்னு, அம்மா நிலத்தை விற்கட்டும்.. இல்லைன்னா உங்க பூர்வீக சொத்தை விற்க பாருங்கோ.. ஆனா அதை வித்தாலும், ஒரு பத்து லட்சம் கூட தேறாது.. எல்லாருக்கும், பங்கு போட்டாலும், தலா இரண்டு லட்சம் கூட வராது.. அது எந்த மூலைக்கு".. 

"அப்பா , பேசாமல்,  இந்த வீட்டை பில்டிங் ப்ரமோட்டர்ஸ்கிட்ட ஏன் விற்க  கூடாது??.. உங்களுக்கும், ஒரு பிளாட் கட்டி கொடுப்பான், கையிலேயும் ஒரு கோடி வரை கிடைக்கலாம்.. நம்ம வீடு நல்ல ப்ரைம் ஏரியாவுல இருக்கு.. இதை இப்ப வித்தா கூட, நான் நீன்னு போட்டி போட்டு வாங்க தயாரா இருக்கா... உங்களுக்கும் பணக் கஷ்டம் தீரும்.. மஹதிக்கு ஜாம்ஜாம்ன்னு கல்யாணம் பண்ணலாம்.. எங்களுக்கும் நாங்க கேட்ட பணம் கிடைக்கும்..  என்னப்பா எப்படி என் ஐடியா" என கல்யாணி சொல்ல,

"சுப்பர் டி,, எப்படி யோசிக்கறே??"..  ரஞ்சனி கல்யாணியை பாராட்டி,  "இதுக்குன்னு தனியா ரூம் எடுத்து யோசிப்பியோ" நக்கலடித்தாள் ரஞ்சனி.

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

"என்னடி கொழுப்பா?.. ஏன் இதுல உனக்கும் தானே ஆதாயம்.. நீ மனசுல நினைப்பே, நான் அதை வெளியே சொல்லிட்டேன்.. அவ்வளவு தான் வித்யாசம்"

கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் ரஞ்சனி.

அது வரை பொறுமையாய் இருந்த மஹதி  கோபமாக, "யாரும் பணத்துக்காக கஷ்டப் பட வேண்டாம்.. அப்படி ஒன்னும் வீட்டை வித்து கல்யாணம் பண்ணிகனும்னு நான் அலையலை..  ஏங்கா, உங்களுக்கு எப்படி மனசு வரது, இந்த மாதிரி பார்த்து பார்த்து கஷடப்பட்டு கட்டின வீட்டை வித்துடுங்கோ என்று அப்பாகிட்ட சொல்ல?..  என,

அந்த சமயத்தில் தயங்கியபடி பைரவியும், அஜய்யும் உள்ளே நுழைந்தனர்.

ள்ளே நுழைந்த பைரவியையும், அஜய்யையும் கண்டு அனைவரும் பேச்சை நிறுத்த, முதலில் சுதாரித்த சாரதா, "வாம்மா பைரவி, வா அஜய்" என வரவேற்க,

'இப்ப யார் இவர்கள் இங்கே வரவில்லை என்று அழுதார்களாம்' என மூத்த சகோதரிகள் நினைத்தனர்.

பைரவி தான் முதலில் பேச்சை துவக்கினாள்..

"சாரி மாமி.. நீங்கள் ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டு இருக்கேள் போல.. நாங்க வேணா அப்புறம் வரவா?"  என திரும்பயத்தணிக்க,

அவள் கையை பிடித்து தடுத்தாள் மஹதி.. "அதெல்லாம் பெரிசா ஒன்னும் இல்லை பைரவி.. டாக்டர் குடும்பத்தவருக்கு என்னை பிடிச்சிடுத்து..ஆனால்?.. என்று இழுத்தாள்.

"ஓ.. தட்ஸ் கிரேட் யா.. வாழ்த்துக்கள்"  என பைரவி மஹதியை சேர்த்தணைத்துக் கொள்ள,

அஜய்யோ, "ஹாய் மஹதி .. எனக்கு பர்ஸ்டே தெரியும்.. யாராய் இருந்தாலும் உன்னை பிடிக்கும்.. கண்ணுயிருக்கறவன் எவனும் உன்னை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டான்.. எனிவே என் பாராட்டுக்க்ள்" என்று சிரித்தபடி மஹதியின் கைகளை பற்றி குலுக்க,

"தாங்க்ஸ் அஜய்.. தாங்கஸ்ப்பா பைரவி"  என்று அவர்களின் வாழ்த்துக்களை இயல்பாக ஏற்றுக் கொண்டாள் மஹதி.

"அது சரி, மஹதி,  அது என்ன ஏதோ ஆனால்ன்னு இழுத்தே.. சாரி.. நாங்க உள்ளே நுழையும் போது ஏதோ பண பிரச்சனை என்று காதில் விழுந்தது.. அதானா.. ஒரு வேளை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப எதிர்பார்க்கராங்களோ?  .. சொல்லுப்பா, எங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுகிறோம்",  என்றாள் பைரவி.

"இல்லை பைரவி.. இந்த கல்யாணமே வேண்டாம்ன்னு நான் சொல்லறேன்.. அவங்க வீட்டில எக்கசக்கமாக டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. இப்பவே இப்படின்னா.. அதுவும் இல்லாத இப்ப இருக்கற வீட்டு நிலைமையில, அப்படியாவது அவங்க கேட்ட சீர் செய்து அவரை கல்யாணம் செய்துக்கனுமா என்ன??.. அதான் அப்பாகிட்ட சொல்லிண்டு இருந்தேன்".

"ஏண்டி மஹி.. கண்டவங்க கிட்டயெல்லாம், நம்ம குடும்ப விஷயத்தை சொல்லாட்டி தான் என்ன?.. நீ சொன்னா மாத்திரம் உடனே இவா என்ன தூக்கி கொடுக்க போறாளா என்ன?"  கிண்டலாக ரஞ்சனி சொல்ல,

"அதானே.. இவா யாரு நம்ம குடும்ப விஷயத்திலேயெல்லாம் தலையிடறா??.. எதுக்கு இவா கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்.. எதோ கொஞ்சம் நாள் குடுத்தனம் இருக்கா.. அத்தோட நிறுத்திக்கனும்"  என்று கல்யாணி அடுத்த சண்டைக்கு வழி காட்ட,

சாரதா, " ரஞ்சீ, கல்பூ போதும் இரண்டு பேரும் பேச்சை நிறுத்துங்கோ..  உங்க பசங்களுக்கு ராத்திரிக்கு டிபனோ, சாப்பாட்டுக்கோ வழியை பாருங்கோ"  என்றவர்,  "பைரவி, அஜய்,  அவா பேச்சை தப்பாக எடுத்துக்காதீங்கோ.. வாங்கோ நீங்களும் சாப்பிடல்லாம்"  என அழைக்க,

"மாமி, அதெல்லாம் வேண்டாம்.. நாங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலை.. நாங்க வேறு குடும்பமா எங்களை நினைக்கலை.. உங்காத்து மனுஷா மாதிரிதான் நாங்க நினைக்கிறோம்.. நான் உங்க பொண்ணு மாதிரி மாமி.. நீங்க யாரும் தப்பா நினைக்கலைன்னா நாங்க வேணா பணம் கொடுத்து மஹதி கல்யாணத்துக்கு உதவலாமா?"  என பைரவி கேட்க,

"அதானே பார்த்தேன்.. பூனைக்குட்டி வெளியில வந்துடுச்சா.. முதல்ல உங்க பொண்ணுன்னு சொல்லிக்க வேண்டியது.. பணம் கொடுத்து உதவற மாதிரி பில்டட் பண்ணுவது, அப்புறம், என்ன பிளான்.. சொத்துல பங்கு கேட்கலாம்ன்னா.. இல்லை வேற எதாவதா.. இப்படி முன்னே பின்னே தெரியாதவளை குடுத்தனம் வைச்சா இப்படித்தான்"  ஒரு மாதிரி குரலில் ரஞ்சனி இழுக்க,

கல்யாணியோ, "அது சரி நான் தெரியாமத்தான் கேட்கிறேன்.. நீங்க யாரு எங்க வீட்டுக் குடும்ப விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கறது.. காலையில் இருந்து பார்க்கறேன்.. சமையல்கட்டு வரை வந்தாச்சு.. என்ன விஷயம்?.. இதோ பாருங்கோ, எதோ குடுத்தனம் இருந்தோமா, வாடகையை குடுத்தோமா, பாட்டு கிளாஸ் முடிச்சோம்மான்னு இருக்கனும்.. நீங்க அமெரிக்காவில இருப்பவங்க.. உங்களுக்கு அவா கல்சர்ல அடுத்தவா வீட்டு விவகாரத்துல தலையிட மாட்டாளே, தெரியாதோ??"

ராமமூர்த்தி, "போதும், நீங்க இரண்டு பேரும் முதல்ல வாயை மூடிண்டு உள்ளே போங்கோ.. தேவையில்லாமல் அவா மனசை புண்படுத்தி பேசாதீங்கோ" என்று கர்ஜித்தவர், "அஜய், பைரவி, நீங்க தப்பா எடுத்துகாதீங்கப்பா.. இவ ரெண்டு பேரும் எதையாவது இப்படித்தான் உளருவா?.. சாரதா, அவாளுக்கு எதாவது சாப்பிட குடும்மா.. மஹதி பைரவியை அழைச்சிண்டு போப்பா"  என கூறினார்.

"மாமா, மாமி.. நானும் அஜய்யும் வெளியே போறோம்.. அஜய் பிரண்ட் ஒருத்தர் இங்க இந்தியாவில பிசினஸ் பண்ணிண்டு இருக்கிறார்.. அவரை மீட் பண்ண போறோம்.. டின்னர் அவர் வீட்டிலதான்.. அக்காக்கள் என்ன நினைச்சிண்டாலும், நாங்க இரண்டு பேருமே உங்களுக்கு எல்லாவிதத்திலும், அது பணமா இருந்தாலும், சரி வேறு வகையின்னாலும் சரி, உதவ காத்திண்டு இருக்கோம்..  சரி, வசந்த், மஹதி நாங்க வரோம்.. நாளைக்கு பேசலாம்"  என்றபடி பதவிசாக விடை பெற்றவர்களை, மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அந்த தம்பதிகளால். "

தொடரும்

Episode 13

Episode 15

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.