(Reading time: 16 - 31 minutes)

03. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

சில்சி ப்ரண்ட்ஸ்க்கு புத்தாண்டு வாழ்த்துகளோடு இந்த எபிசோடை ஆரம்பிக்கலாம்

ரண்டு மாதங்களுக்கு முன்...

நியூயார்க்..  

ஒரு காஃபி ஷாப்பில் தோழிகளின் அரட்டை அரங்கேறி கொண்டிருந்தது.

Kadalai unarnthathu unnidame

"ஏன் கீது ஸ்டடீஸ் முடிஞ்சாச்சு... இனி என்ன பண்ணப் போற....??"

"கலை இது என்ன கேள்வி..??? இந்தியா போனா அவங்க அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாரு... போனதும் டும் டும் தான்..."

"கலை எங்கப்பா தான் எனக்கு மாப்பிள்ளை பார்ப்பாரு... ஆனா இவ ரெடியா மாப்பிள்ளை பார்த்து வச்சுட்டா... இந்தியா போன உடனே ஃபர்ஸ்ட் இவளுக்கு தான் மேரேஜ்... இவ என்னை சொல்றா..."

"ஏ கீது... கதிர் உன்னை விட்டுட்டு என்னை புரபோஸ் பண்ணதுல உனக்கு பொறாமை..."

"ஆமா அவன் பெரிய அழகன்... அவன் புரபோஸ் பண்ணலனு எனக்கு பொறாமை.. போடி... அவனுக்கு நீ கிடைச்சதே பெரிய விஷயம்.."

"கீது என் ஆளப்பத்தி எதுவும் பேசாத... அப்புறம் எனக்கு கெட்டக் கோபம் வரும்"

"நீ மட்டும் என்னை கிண்டல் பண்ணலாமா பானு"

யுக்தா இருவரின் சண்டையை பார்த்து கொண்டிருந்தாள்.

"யுக்தா இவங்க ரெண்டுப்பேரையும் நீ எப்படி சமாளிக்கிற..?? எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க..??

"கலை ட்ரீட்னு சொன்னதும் ஓடி வந்துட்டல்ல.. இவங்க அடிக்கடி போடும் சண்டையையும் பார்த்து எஞ்சாய் பண்ணு.."

"ஓ இவங்க அப்படிதானா...?? எனக்கு தெரியாதே... சரி யுக்தா நீ சொல்லு... இதுக்கப்புறம் நீ என்னப் பண்ணப் போற...???

"யுக்தாக்கிட்ட போய் இந்த கேள்வியை கேட்டப் பாரு.."

You might also like - Barath and Rathi... A free English romantic series

"ஏன் யுக்தாவுக்கு என்ன கீது... அப்பா அம்மா ரெண்டுப்பேருக்கும் இங்கயே வேலை.. 12 வருஷமா இங்கயே செட்டில் ஆகிட்டாங்க... இங்க இருக்க எந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிலயும் அவளுக்கு வேலை கிடைச்சிடும் அப்புறம் என்ன..?? என்ன யுக்தா நான் சொல்றது சரிதானே..??

யுக்தா சிரித்துக் கொண்டாள், "எனக்கு இங்க இருக்க ஆசையில்லை கலை..எனக்கு இந்தியாக்கு போகனும்... சென்னையில தான் நான் இருக்கப் போறேன்... சென்னைக்கு போனப்பிறகு தான் என்னப் பண்ண போறேன்னு யோசிக்கனும்..."

"என்ன யுக்தா.. பேரண்ட்ஸ் இங்க இருக்காங்க... நீ சென்னைக்கு ஏன் போகப் போற...???"

"ஏன் சென்னையிலும் எனக்கு முக்கியமானவங்க இருக்காங்க கலை..."

அப்பா, அம்மாவை விட முக்கியமா..!!??

அப்பா, அம்மா போலவே சென்னையில இருக்கவங்களும் முக்கியம்.. நான் சென்னைக்கு தான் போகப்போறேன்"

"கலை நீ இத்தனை நாள் யுக்தாவை நோட் பண்ணதுல தெரியலயா...? ஆளை கவரும் அழகு இருந்தாலும்...கிளாமரா ட்ரஸ் பண்ண மாட்டா..  சல்வார், ஸேரி, ஃபுல்லா கவர் ஆகற ஃஸ்கர்ட் அண்ட் டாப் இதெல்லாம் தான் போடுவா... தமிழ்நாடு சமையல் கத்துக்க குக்கிங் கிளாஸ் வேற போறா...அப்பவே எனக்கு தோனுச்சு யுக்தா இப்படியெல்லாம் யோசிப்பான்னு.."

"பானு இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்வாங்க... அது போல இந்தியால இருக்க நாமெல்லாம் இங்கயே செட்டில் ஆகலாமானு யோசிக்கறோம்... இங்க இருக்க யுக்தா இந்தியாக்கு போகனும்னு ஆசைப்படறா... ஆச்சர்யம் தான்..!!"

"ஏ நிறுத்துங்க... நிறுத்துங்க... இந்த பழமொழியெல்லாம் எனக்கு செட் ஆகாது... நான் ஒன்னும் இங்க பொறக்கல... நான் தமிழ்நாடுல பொறந்து வளர்ந்தவ... அங்கயே இருக்கனும்னு ஆசைப்படறுதுல என்ன தப்பு... என்னோட பேரண்ட்ஸும் இங்கயே நிரந்தரமா இருக்கப் போறதில்லையே... வயசானதுக்கு அப்புறம் தமிழ்நாட்டுக்கு தானே வரப்போறாங்க..." 

"எனக்கு என்னமோ ஒரு டவுட்... நீ இந்தியாக்கு போகனும்னு நினைக்கறதுக்கு காரணம் அங்க உன்னை கட்டிக்கப் போற முறை பையன் இருக்கான் தானே..??"

"அப்படியும் இருக்கலாம்.." யுக்தா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது அலை பேசி அவளை அழைத்தது, அந்த பேசியின் திரையோ கவி காலிங் என்று காட்டியது.. அதைப் பார்த்த பானுவும் கீதுவும் ஃபோன் வந்தாச்சா... இனி யுக்தா வர 1மணி நேரமாகும்... "என்று கிண்டல் செய்தனர், இவர்களுடன் எப்போதாவது பழகும் கலைக்கு இது தெரியாததால்....

"யுக்தா யாரது கவி..??" என்று கேட்டதற்கு யுக்தா "நான் சொன்ன முக்கியமானவங்க லிஸ்ட்ல முதல் ஆளு" என்று கூறி விட்டு சற்று தள்ளி சென்று அட்டண்ட் செய்தாள், பக்கத்துல இருந்தா இவங்க டிஸ்டர்ப் பண்ணுவாங்களே.. 

"ஹாய் கவி... என்ன தூங்கி எழுந்ததும் எனக்கு ஃபோன் பண்ணியிருக்க..."

"ஒரு முக்கியமான விஷயம் சம்யு... நைட்டே சொல்லனும்னு இருந்த.. பட் முடியாம போச்சு... அதான் எழுந்ததும் ஃபோன் பண்ணியாச்சு"

"அப்படி என்ன முக்கியமான விஷயம் கவி"

"நம்ம தர்ஷினிக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடிச்சு... இன்னும் 2 வீக்ஸ்ல மேரேஜ்"

"ஏ கவி இதெல்லாம் ஓவர்... நம்மல விட சின்னப் பொண்ணு அவ... அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகுது... நம்ம மேரேஜ் பத்தி அப்பா, அம்மா யோசிக்க மாட்டேங்கிறாங்க...???"

"சம்யு இதென்ன பக்கத்து இலைக்கு பாயசம் கேக்கற... உனக்கு மேரேஜ் பண்ணிக்கனும்னா... சித்தப்பா, சித்திக்கிட்ட நானே சொல்றேன்.. என்னை ஏன்  இதுல கோர்த்து விட்ற.."

"ஹா ஹா ஹா.. அதெப்படி முடியும்... நீ எனக்கு அக்கா இல்லையா... ஃபர்ஸ்ட் உனக்கு தான் மேரேஜ் நடக்கனும்...அப்புறம் தான் எனக்கு.. "

ஆமாம் என்ன அக்கா... உன்னோட மூனு மாசம் தானே நான் பெரியவ... என்னமோ மூனு வருஷம் பெரியவ மாதிரி சொல்ற... ரெண்டுபேர்ல யாருக்கு வேணா ஃபர்ஸ்ட் மேரேஜ் நடக்கலாம்.... எனக்கு என்னமோ உனக்கு தான் ஃபர்ஸ்ட் மேரேஜ் ஆகும்னு தோனுது..."

"அப்படியும் நடக்கலாம்... சரி சாவிம்மா எப்படி இருக்காங்க..??"

"அம்மா ரொம்ப நல்லா இருக்காங்க... சரி நான் ஃபோன் பண்ண மேட்டர விட்டுட்டேன் பார... தர்ஷினி மேரேஜ்க்கு சித்தப்பா, சித்தி வருவாங்க... நீயும் கூட வருவல்ல.."

"கவி நானே அப்பாக்கிட்ட சொல்லி இந்தியாக்கு வரனும்னு இருக்கேன்... இப்ப ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு... உடனே அப்பாக்கிட்ட சொல்லி இந்தியா வரோம்... ஒகே.."

"சம்யு.. என்னத்தான் நம்ம ஸ்கைப்லயும், ஃபோன்லயும் பேசிக்கிட்டாலும்... உன்ன நேர்ல பார்த்து எவ்வளவு வருஷமாச்சு... உன்ன எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா...???"

"நான் மட்டும் என்ன... உன்னையும் சாவிம்மாவையும் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா..?? கவி பிரிவு வந்தா தான் அன்பு அதிகரிக்கும்னு சொல்லி நம்ம பொறுமையை ரொம்ப சோதிக்கறாங்க... ஆனா இப்போ நாம வளர்ந்தாச்சு... இனி என்னப் பிரச்சினை... சரி.. சரி.. ஃபோனை வை அப்பாக்கிட்ட போய் விஷயத்த சொல்லி இந்தியா கிளம்பனும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.