(Reading time: 16 - 31 minutes)

"மா ஆமா.. உடனே சித்தப்பாக்கிட்ட போய் பேசு... நான் ஃபோனை வைக்கிறேன்... பை.."

"பை" ஃபோனை கட் பண்ணிட்டு தன் தோழிகளிடம் வந்தாள் யுக்தா, அவள் ஃபோன் பேசிட்டு வருவதற்குள் கலையிடம் ரீல் சுத்திக் கொண்டிருந்தார்கள் கீதுவும் பானுவும்,

"யுக்தா... கவி உன்னோட பாய் ஃபிரண்டாமே...??? உங்க ரெண்டுப்பேருக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆகப் போகுதாம்..??? இவங்க ரெண்டுப்பேரும் சொல்றது உண்மையா...???"

தோழிகளை முறைத்தாள் யுக்தா, "கலை அப்படியெல்லாம் ஒன்னுமில்லை... கவி என்னோட சிஸ்டர்.. அவ முழு பேரு சங்கவி"

"சிஸ்டரா... உன்னோட பேரண்ட்ஸ்க்கு நீ ஒரு பொண்ணு தானே..??"

"கலை, சங்கவி அவளோட கஸின் சிஸ்டர்.. அவளோட பெரியப்பா பொண்ணு.. "

"அவ என்னோட சிஸ்டர்.. நான் அப்படித்தான் சொல்வேன்.. சரி நான் உடனே வீட்டுக்குப் போகனும்.. எனக்கு முக்கியமான வொர்க் இருக்கு.. பை.. நான் வரேன்.."

சொல்லிவிட்டு சென்ற யுக்தாவையே பார்த்து கொண்டிருந்தார்கள் தோழிகள், இவர்களெல்லாம் ஆர்கிடெக்சர் படிக்கும் மாணவிகள், கலாசார மாற்றம் என்ற சீர்கேட்டில் புதைந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் நியூயார்க்கில் வசிக்கும் இந்த யுக்தா இவர்களுக்கு புதிராகவே தெரிந்தாள்.

யுக்தா அப்படித்தான்... 12வருடங்களுக்கு முன் அவள் நியூயார்க் வந்த போது அவள் எப்படி இருந்தாளோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறாள், ஏனோ இந்த கலாச்சாரம் அவளுக்கு பிடிக்கவில்லை, இங்கு இருப்பவர்களோடு அவள் அளவாக தான் பழகுகிறாள், தமிழ்நாட்டில் இருந்து வந்து படிக்கும் இவர்களோடு மட்டும் தான் இவள் நட்பு பாராட்டுவாள்,

யுக்தாவின் உயிர் தோழி, அன்பு சகோதரி எல்லாமே சங்கவி தான், சங்கவியும் சாவித்திரியும் இவள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், 12 வருடங்களாக சங்கவியை பிரிந்திருந்தாலும் அவள் மீது உள்ள அன்பு ... குறைந்ததில்லை,

தமிழ்நாட்டையும் அந்த கலாச்சாரத்தையும் நேசிக்கும் யுக்தா... தன் சகோதரி மேல் அன்பு வைத்திருக்கும் யுக்தா, நடக்க போகும் அந்த சம்பவத்தையோ, அந்த சூழ்நிலைக்கு அவள் தள்ளப்பட போவதையோ, அதனால் தன் சகோதரியின் கோபத்திற்கு ஆளாகப் போவதையோ, அவள் அறிவாளா என்ன..???

You might also like - Vasantha bairavi... A neat family story...

சென்னை..

அதே நேரம் யுக்தாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த சங்கவி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்த  சாவித்திரியிடம் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

"அம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... நான் சம்யுகிட்ட பேசிட்டேன்.. அவ இந்தியாக்கு வரேன்னு சொல்லிட்டாம்மா.. இந்த கல்யாணத்துக்கு மூனு பேரும் வருவாங்க..."

"கவி உங்க அத்தையே இன்னும் இந்த கல்யாணத்தைப் பத்தி உன்னோட சித்தப்பா, சித்திக்கிட்ட சொன்னாளானு தெரியல... அதுக்குள்ள நீ சொல்லிட்டியா...??"

"அதில்லமா ... சித்தப்பா சம்யுகிட்ட சொல்லாம அவர் மட்டும் கல்யாணத்துக்கு வந்துட்டார்னா... அதான் நானே சொல்லிட்டேன்... இப்போ சித்தப்பாவே கல்யாணத்துக்கு வர யோசிச்சாக்கூட சம்யு அவர கூட்டிட்டு வந்துடுவா இல்ல... அதான் நானே ஃபர்ஸ்ட் அவக்கிட்ட சொல்லிட்டேன்"

"உன்னோட சித்தப்பா அப்படியெல்லாம் பண்ண மாட்டாருடா... சரி அவங்க எப்ப வருவாங்கனு இருக்கு... அவங்கள நேர்ல பார்த்து எத்தனை வருஷமாச்சு... அவங்க எப்ப வராங்கனு தெரிஞ்சதும் அவங்களுக்கு பிடிச்ச பலகாரமெல்லாம்  செய்யணும்.."

"ஆமாம்மா சம்யுக்கு பிடிச்ச அதிரசம் செய்ங்க.."

"ம்ம்..."

சங்கவி கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படித்து விட்டு, காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி சென்னையி உள்ள கம்பெனியில் ட்ரைனிங் சென்று கொண்டிருக்கிறாள், அவள் யுக்தாவைப் போல பார்த்தவுடனே ஆளை கவரும் அழகு இல்லை, மாநிறமும் சாதாரண அழகும் தான் அவளுக்கு,

யுக்தாவைப் போல சங்கவியும் தன் சகோதரி மீது அதிக அன்பு வைத்திருப்பவள், யுக்தா தான் அவளுக்கு நெருங்கிய தோழி, அவள் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் நால்வர் தான், அதில் அவள் அம்மா,அப்பாவிற்கு பிறகு அடுத்து இருப்பது யுக்தா தான்.

இந்த அன்புத் தோழியின் வரவுக்காக காத்திருக்கும் சங்கவிக்கு, அவளுடன் பேசாமல் இருக்கப் போகும் நாட்களும் வரும் என்று தெரியுமா என்ன..??

நியூயார்க்...

டைனிங் டேபிளிள் மாதவனுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தாள் சுஜாதா,

"சுஜா... யுக்தா எங்க இன்னும் வரல.."

"அவளோட ஃபிரண்ட்ஸ் ட்ரீட் கொடுக்கறாங்கனு போனா... வந்துடுவா.."

"ஓ... சரி வரட்டும்... சுஜா ஆஃபிஸ்ல இருந்து வரும்போது லஷ்மி எனக்கு ஃபோன் பண்ணா"

"உங்க தங்கச்சியா...??? என்னவாம்..???"

"தர்ஷினிக்கு கல்யாணம் முடிவாயிருக்காம்.. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணமாம்... இன்விடேஷன் அனுப்பியிருக்காளாம்... நான் வீட்ல இருக்கேன்னு நினைத்து ஃபோன் பண்ணாளாம்...இப்பத்தான் வந்துகிட்டு இருக்கேன்னு சொன்னதும்... அண்ணிக்கிட்ட சொன்னதா சொல்லிடுங்க... நான் அப்புறம் பேசறேன்னு சொல்ல சொன்னா...."

"என்னங்க.. தர்ஷினி யுக்தாவை விட ரெண்டு வயசு சின்னவ இல்ல... அதுக்குள்ள கல்யாணமா...???"

"படிச்சிட்டு இருக்கும்போதே லஷ்மி மாமியார் வீட்டு சைட்ல இருந்து ஒரு நல்ல வரனா வந்திருக்கு.... தர்ஷினி ஃபைனல் இயர் முடிச்சதும் கல்யாணம் முடிவுப் பண்ணிட்டாங்க.. பையன் சிங்கப்பூர்ல வொர்க் பண்ரானாம்.. லீவ்ல வந்திருக்கறதால ரெண்டு வாரத்தில கல்யாணத்தை வச்சுகிட்டாங்க..."

"ஓ... " அவள் சொன்ன 'ஓ' ஏதோ யோசனையோடு சொன்னது போல இருந்தது மாதவனுக்கு,

"என்ன சுஜா.. ஏதோ யோசனையா இருக்க...??"

"என்னங்க தர்ஷினிக்கு கல்யாணம்னு சொன்னதும் தான் எனக்கே தோனுது... நம்ம பொண்ணுங்களுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு... ரெண்டுப்பேரும் படிப்பை முடிச்சிட்டாங்க... நம்ம வேலைக்குப் போய்ட்டு இருக்கறதால அதப்பத்தி யோசிக்கல... ஆனா அக்கா நாம இப்படி கண்டுக்காம இருக்கோம்னு தப்பா நினைக்க மாட்டாங்களா...???

"சே சே.. அண்ணி அப்படி நினைக்க மாட்டாங்க... ஆனா லஷ்மி, தர்ஷினி கல்யாணத்தை பத்தி சொன்னதும்... எனக்கும் இதே தான் தோனுச்சு... அதுமட்டுமில்லாம.. லஷ்மி வேற இதப்பத்தி பேசனா.."

"என்னங்க.."

"அவ பையன் தேவாவுக்கு நம்ம யுக்தாவை பொண்ணு கேக்கறா... இந்த கல்யாணத்துக்கு வரப்போ எல்லாரும் பேசி முடிவெடுத்தா... அப்புறம் யுக்தா,தேவா கல்யாணத்தை மெதுவா  நடத்தலாம்னு சொல்றா... யுக்தா சென்னையில வந்து இருந்தாலும் பரவாயில்ல.. இல்ல தேவாவுக்கு இங்க ஏதாவது வேலை ஏற்பாடு பண்ணி நம்மக் கூட வச்சிக்கிட்டாலும் பரவாயில்லனு சொல்றா..."

"நீங்க என்ன சொன்னீங்க.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.