(Reading time: 16 - 31 minutes)

ந்த வீட்டின் தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது, வேலையை பாதியிலே விட்டு விட்டு வந்து அதை எடுத்தாள் வளர்மதி,

"ஹலோ.."

"ஹலோ மதி... நான் சுஜாதா பேசறேன்.."

"ஹே... சுஜா, எப்படி இருக்க... கொஞ்ச நாளா.... ஃபோன் பேசறதே இல்ல..??"

"சாரி.. மதி, நிறைய வொர்க் டென்ஷன்... அதான் ஃபோன் பண்ண முடியல... சரி நீ எப்படி இருக்க...??? செந்தில் அண்ணா எப்படி இருக்காரு...?? பசங்க எப்படி இருக்காங்க...??"

"சுஜா... நாங்க நல்லா இருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க.."

"நல்லா இருக்கோம் மதி... நாங்க இந்தியா வரப் போறோம்.."

"ஹே... என்ன இப்படி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்குற... என்னால இத நம்பவே முடியல..."

"நிஜம் தான் மதி... என்னோட நாத்தனார் பொண்ணுக்கு  கல்யாணம்... அதான் இந்தியாக்கு வரோம்..."

You might also like - Unnal magudam soodinen... A romantic story...

"ஓ.. அப்படியா.. சென்னைல தான் கல்யாணமா...???"

"இல்ல மதி... மதுரையில கல்யாணம்... நாங்க 2 மாசம் இந்தியாவுல இருக்கப் போறோம்... கல்யாண சமயத்துல தான் மதுரைக்கு... மத்த நாள் எல்லாம் சென்னையில தான்..."

"ரொம்ப சந்தோஷம் சுஜா... நீங்க எங்க வீட்ல தானே தங்கப் போறீங்க..."

"இல்ல மதி.. இப்போ சென்னை வீட்ல தான் சாவி அக்காவும் சங்கவியும் இருக்காங்க... அதனால நாங்க அங்கத் தான் இருப்போம்..."

"ஆமா சுஜா... நீ ஏற்கனவே சொல்லியிருக்கல்ல.. நான் தான் மறந்துட்டேன்..."

"மதி நான் ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் ஃபோன் செஞ்சேன்... என் நாத்தனார் பையன் தேவாவுக்கு யுக்தாவை கேக்கறாங்க... ஆனா உனக்கு தான் தெரியுமே... எனக்கு யுக்தாவை பிருத்விக்கு கொடுக்கத் தான் ஆசை.."

இதுவரை உற்சாகமாக பேசிய வளர்மதிக்கு இப்போது உற்சாகம் குறைந்தது.

"என்ன மதி அமைதியா இருக்க..."

"ஒன்னுமில்ல சுஜா... நீ சொல்லு.."

"மதி .. தேவாவுக்கு யுக்தாவை கொடுக்கறத பத்தி சென்னைக்கு வந்து பேசிக்கலாம்னு அவர் சொல்லிட்டாரு.. நானும் பிருத்வி விஷயமா.. அப்பவே அவர்கிட்ட பேசலாம்னு பார்க்கிறேன்,

நீயும் அண்ணாவும் கூட அவர்கிட்ட இதப்பத்தி பேசி நல்ல முடிவா எடுக்கனும் மதி... என்ன சொல்ற.."

"சுஜா... நீங்க முதல்ல இந்தியா வாங்க அப்புறம் எல்லாம் பேசிக்கலாம்.."

"சரி மதி... நாங்க கிளம்பும் பொது ஃபோன் பண்றோம்... இப்ப ஃபோனை வச்சிடுறேன்.."

"ம்..." சுஜாதா ஃபோனை வைத்து விட்டாள், சில வருடங்களாக பேசாமல் இருந்த விஷயத்தை இப்போது சுஜாதா பேசியதில் மதிக்கு கலக்கமாக இருந்தது.

சுஜாதா வந்தாள் இவள் என்ன பதில் கூறுவது என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.

வளர்மதியின் கலக்கத்திற்கான காரணத்தை அப்போதே சுஜாதாவிடம் கூறியிருந்தால் ஒரு வேளை திருமணம் நடக்காமல் இருந்திருக்குமோ...???

ஆனால் விதிப்படி பிருத்வி யுக்தாவின் திருமணம் நடைபெற்று தான் ஆகவேண்டும், ஒரு வேளை அந்த காரணத்தை சொல்லியிருந்தால் இப்படி ஒரு திருமணம் நடக்க தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வாவது வளர்மதிக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.