(Reading time: 16 - 31 minutes)

"ல்லார்க்கிட்டயும் கலந்து பேசி கல்யாணத்துக்கு வரும்போது சொல்றேன்னு சொன்னேன்...நீ என்ன நினைக்கிற சுஜா..."

"என்னங்க... தேவாவுக்கு யுக்தாவை  விட.. கவி  தாங்க ஏத்தவளா இருப்பா... ரெண்டுப்பேரும் அங்கயே இருக்காங்க...ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரியும்... ஆனா யுக்தாவுக்கும் தேவாவுக்கும் அவ்வளவு பழக்கமில்லையே...

அதுமட்டுமில்ல... அங்க இப்போ அக்காக்கும் கவிக்கும் உதவியா இருக்கறது... தேவா தானே..அவனே கவியை கட்டிக்கிட்டா நல்லா இருக்குமில்ல... அவளும் அவனுக்கு மாமா பொண்ணு தானே..."

"நீ சொல்றதும் சரிதான்... ஆனா லஷ்மிக்கிட்ட எப்படி இதை சொல்றது.."

"ஏங்க.. ஏன் சொல்லக் கூடாது... கவியும் நம்ம பொண்ணு தான்... யுக்தா கல்யாணத்தை நாம எப்படி செய்வோமோ... அப்படித்தானே கவிக்கு செய்யப்போறோம்..."

"சொல்லலாம் தான்... ஆனா உனக்கு தான் லஷ்மிய பத்தி தெரியுமில்ல... சரி ஒன்னு செய்வோம்...

"........."

"இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா நம்ம போகனும்... யுக்தாவும் இந்தியாக்கு எப்ப போகப்போறோம்னு கேட்டுக்கிட்டு இருக்கா... ரெண்டு மாசம் லீவ் எடுத்து இந்தியா போவோம்...கல்யாணம் முடிஞ்சதும்.. அண்ணிக்கிட்ட...கவி, யுக்தாக்கிட்ட... அப்புறம் தேவாக்கிட்ட கலந்து பேசி லஷ்மிக்கு முடிவ சொல்லுவோம்...என்ன..???"

"அதுவந்துங்க..."

"அப்பா" என்று யுக்தா கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தாள், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சுஜாதாவிடம் கண்களால் ஜாடைக் காட்டினார் மாதவன், அதற்குள் அருகில் வந்த யுக்தா,

"அப்பா...நான் சந்தோஷமா இருக்கேன்...

ஏன்னு சொல்லுங்க பார்க்கலாம்..."

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

"அப்படி என்ன சந்தோஷம் யுக்தா.." - சுஜாதா

"அம்மா.. நாம இந்தியாக்கு போகப்போறோம்.."

"அட.. எனக்கே உங்க அத்தை இப்பத்தான் ஃபோன் பண்ணி சொன்னா.. அதுக்குள்ள உனக்கு எப்படி தெரிஞ்சிது.. "

"என்னங்க.. அது கூட தெரியலயா..?? எல்லாம் நம்ம கவிதான் சொல்லியிருப்பா..."

"ஓ..ஓ... அதுக்குள்ள கவி மூலமா நியூஸ் வந்தாச்சா...???"

"அப்பா... நாம இந்தியா போறோம் தானே"

"பார்த்தியா சுஜா... இப்பதான் வந்து இந்தியா போகப் போறோம்னு சொன்னா... இப்ப போறோமானு கேக்கறா... பேசாம போகாம விட்டுடலாமா...???"

"அப்பா..ஆ..ஆ" கொஞ்சலாக சினுங்கினாள்.

"யுக்தா.. நாங்க ரெண்டுப்பேரும் ரெண்டுமாசம் லீவ் எடுக்கப் போறோம்... அப்பா நம்ம மூனுபேரும் இந்தியா போகலாம்னு சொல்லிட்டாரு..."

"அப்பா... அம்மா சொல்றது உண்மையா...???"

"ஆமாம் டா... இன்னும் ஒரு வாரத்துல நம்ம கிளம்ப ஏற்பாடு செய்றேன்....

"தேங்ஸ்ப்பா... நான் உடனே கவிக்கிட்ட இந்த விஷயத்தை சொல்றேன்..."

சுஜா நான் லீவ் விஷயமா எம்.டி யை பார்த்துட்டு வரேன்.."

"என்னங்க இந்த நைட்ல போனுமா..??? காலையில போலாமே...??"

"இப்போ அவர் ஃப்ரீயா இருப்பாரு அதான்... நீ நாளைக்கு ஆஃபிஸ் போகும் போது லீவ் சொல்லிடு.."

"சரிங்க.."

 மாதவன் வெளியிலும், யுக்தா அவள் அறைக்குள்ளும் சென்ற பின் சுஜாதா தொலைபேசியை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்தாள்.

சென்னை...

தன் தங்கையின் திருமணத்தை முன்னிட்டு இன்றே ஊருக்கு செல்வதால் அலுவலகத்தில் உள்ள வேலைகளை முடிக்க அவசர அவசரமாக அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருந்தான் தேவா என்கிற தேவசேனன்.

சுந்தரம், லஷ்மி தம்பதியருக்கு மகனாக பிறந்து தன் தாத்தாவின் பெயரை தனது பெயராக கொண்ட தேவா, மதுரையில் எம்.பி.ஏ முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

27 வயது இளைஞனான தேவா ஆறடி உயரமும், கொஞ்சம் கருமையான தேகமும் கொண்டவன்.

பரப்பரப்பாக கிளம்பி கொண்டிருந்தவனை இடையூறு செய்வது போல் சங்கே முழங்கு என்ற பாடலுடன் அவனது அலைபேசி அழைத்தது, அது யாருடைய அழைப்பு என்று தெரிந்ததால் ஒரு புன்முறுவலோடு அந்த அழைப்பை ஏற்றான்.

"ஹலோ சங்கு... என்ன காலையிலேயே ஃபோன் பண்ற.."

"தேவா.. ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் ஃபோன் பண்ணேன்... என்னன்னு சொல்லு பார்க்கலாம்...???"

"என்ன விஷயம்னு தெரியல... ஆனா நீ சந்தோஷமா இருக்கேன்னு தெரியுது சங்கு.."

"எப்படி..??"

"அதுவா... நான் உன்னை சங்குன்னு சொன்னதுக்கு... நீ கோபப்படலயே.."

"ஓ..ஓ... சரி நான் ஏன் சந்தோஷமா இருக்கேன்னா... இன்னும் 1 வீக்ல தர்ஷினி மேரேஜ்க்கு சம்யுவும் வரா..."

"ஹே... இது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம் தான்.. இனி சங்கவிய பார்க்கவே முடியாது... சிஸ்டர்ஸ் ரெண்டுபேரும் பிஸியா இருப்பீங்க... என்னல்லாம் உனக்கு ஞாபகமே இருக்காது..."

"போதும் தேவா.. இதையே திருப்பி நான் உனக்கும் சொல்லலாம் ..  சம்யு வரப்போறா... இனி தேவாக்கு ஒரே ட்ரீம்ஸ் தான்..."

"போதும் போதும் ஓட்டனது.. இத சொல்லத் தான் ஃபோன் பண்ணியா...???"

"ஆமாம் தேவா... அவங்கள ரிசீவ் பண்ண.. நீயும் ஏர்போர்ட்க்கு வருவல்ல..."

"இல்ல சங்கு... நான் இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன்"

"கல்யாணத்துக்கு 4 டேஸ் முன்னாடி போனா போதாதா தேவா...???"

"ஹே... உனக்கே தெரியாதா... அப்பாக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல.. நான் தானே போய் கல்யாண வேலையெல்லாம் பார்க்கனும்..."

"ஓ... சரி தேவா... பத்திரமா ஊருக்கு போய்ட்டு வா... போனதும் எனக்கு ஃபோன் பண்ணு... பை..."

"பை... சங்கு.."

அவன் ஃபோனை வைத்து விட்டான் .. இருந்தும் அவனோடு இவள் பேசிக் கொண்டிருந்தாள்,

"கட்டிக்கப் போறவ வரப் போறா... இருந்தும் ஊருக்கு போற... அவக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு உனக்கு தோனலயா...?? தேவா, மக்கா இருக்கியே... இருந்தாலும் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்குதே.. ஏன்...???

காதலுக்கு கண் இல்லைனு சொல்வாங்க... மூளை கூடவா இருக்காது..."

இந்த தேவா தான் அவளுக்கு பிடித்த அந்த நான்காவது நபர், அவள் மனதை கவர்ந்தவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.