(Reading time: 15 - 29 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 24 - புவனேஸ்வரி கலைச்செல்வி

வ்வளவு பெரிய அலுவலக அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு முறை பார்வையிட்டு கொண்டான் சைதன்யன்.. அவனது நேர்மைக்கும் திறமைக்கும்  கிடைத்த அங்கீகாரம் தான், இந்த போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தில் தானும் ஒரு முக்கிய அதிகாரியாய் பணிக்கபட்டு இருந்தது… இன்று இந்த திட்டத்தில்  தனது பங்கையும், தான் திரட்டிய தகவல்களையும் அவன் பகிர்ந்து கொள்வதற்காக தான் அனைவரும் வந்திருந்தனர்..அவர்களில் ஒருவனாய் அமர்ந்திருந்த அந்த புதியவனை பார்த்தான் சைதன்யன்..அவன் வேறுயாருமல்ல … நம்ம ஹரி தான் …சைதன்யன் தன்னை பார்ப்பதை உணர்ந்த  ஹரி, தன்னையும் மீறி பெரு விரலை உயர்த்தி காட்டி “ஆல் தி பெஸ்ட்”  என்று உதட்டசைத்து  சொன்னான்..

“யாரு இவன்னு,பார்த்தா , இவன் நமக்கே ஆல்தி  பெஸ்ட் சொல்றானே”  என்று  நினைத்து கொண்ட சைதன்யனின்  இதழ்களிலும் புன்னகை லேசாய் விரிந்தது.. சந்தோஷிற்கு தெரியும் வண்ணம் லேசாய் ஆமோதிப்பவன் போல தலை அசைத்துவிட்டு தனது பேச்சை தொடங்கினான்..

அவன் உரையின் கரு இதுதான் !

Enna thavam seithu vitten

போதைப்பொருள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் குறிப்பிட்ட அளவில் நமது அன்றாட பயன்பாட்டில் இருக்கிறது.. என்றாலும் கூட, சட்ட விரோதமாய் இதனது உபயோகிப்பும் விற்பனையும் அதிகமாகி கொண்டேவருகிறது,..சரியான நேரத்தில் இதற்கொரு முற்றுபுள்ளி வைக்காவிடில், போதைப்பொருளின் உபயோகமும் மதுவிற்பனை போலவே நமது கண்முன்னே உயிர்க்கொல்லியாய் திகழும்.. தனது ரகசிய நண்பர்களின் மூலம் போதைப்பொருள்  விற்பனையில் சம்பந்தப்பட்டவர்களின் பட்டியலை காட்டினான் மேலும் இதற்காய் தான் வகுத்துள்ள திட்டத்தையும் எடுத்துரைத்தான்..

கிட்டதட்ட தன் வயது ஒத்தவன் தன்னைபோலவே துடிப்புடன் இருப்பதை கண்டு புலங்காகிதம் அடைந்தான் சந்தோஷ்.. அதுவரை அமைதியாய் இருந்த உயரதிகாரி திரு சந்திரன் இப்போது பேசதொடங்கினார்…சந்தோஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.. சந்திரனை பொருத்தவரை அவர் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது தவறாய் போனது இல்லை..அவரது அனுபவமும் நேர்மையுமே அதற்கு காரணம்… பொதுப்படையான பேச்சு முடிந்ததும் சைதன்யன் சந்தோஷ் இருவருக்கும் பரஸ்பர  அறிமுகப்படுத்தி வைத்தார் சந்திரன்…

“ இதுதான் சார், முதல் தடவையா ,உங்க ஸ்டூடண்ட்ன்னு  சொல்லி ஒருத்தரை இந்த மாதிரி சூழ்னிலையில் அறிமுகபடுத்தி வைக்கிறிங்க “ என்றான் தயா,, ஒருவகையில்,  ஹரி எந்தவொரு அனுபவமும்  இல்லாமல் தங்களுடன் இணைந்து கொள்வதின் காரணம் என்ன?  என்ற கேள்வியை தான் மறைமுகமாய் கேட்டான் அவன்… அவனது நாசூக்கான அனுகுமுறையை இருவருமே பாராட்டினர்..

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

“ யூ ஆர் ரைட் தயா..  அனுபவமும் பதவியும் இல்லாமல் எனக்கு ஒரு ஜூனியர்ன்னு முறையில் தான் நான் ஹரியை கூட்டிட்டு வந்தேன்… ஹரி ஒரு யங் மேன்.. அவனுடைய தீவிரமும், ஆர்வமும் னமக்கு உதவியாகும், அதே மாதிரி இந்த மாதிரியான மிஷன் பார்த்துகிட்டேஅவன் பயிர்சிபெரும்போது அவனுக்கு ஒரு ஆர்வம் இருக்கும்… இது எல்லாருக்குமெ சாத்தியாமான வாய்ப்பு இல்லைதான்.. அந்த வாய்ப்பை நான் அவனுக்கு தந்துருக்கேன்னா,உனக்கே  அதன் காரணம் போக போக தெரியும்” ..

என்னதான் கறார் பேர்வழி பொல தன்னைக்காட்டி கொண்டாலும், சந்தோஷுடன் நட்பு பாராட்டாமல் தயாவால் இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.. சந்திரனின் உதவியில்,போதைப்பொருள் ஒழிப்பு கலகத்தில்  தனது அறிவையும்,பல முக்கியமான நபர்களை சந்தித்து தனது அனுபவத்தையும் பெருக்கி கொண்டான் சந்தோஷ்..இப்படியாகவே ஒன்றரை ஆண்டுகள்  கடந்திருந்தன.. நண்பன் தயாவுடன் போனில்  பேசிக்கொண்டே ஹாஸ்பிட்டலில் நுழைந்தான் சந்தோஷ்…

“ எப்போடா ஹரி நீ கல்யாணம் பண்ணிக்க போற?”

“கொஞ்சம்  மெதுவா கேளு மச்சான், உன் பக்கத்துல இருக்குற யாராச்சும் உன்னையும் என்னையும் சேர்த்து வெச்சு தப்பா பேசிட போறாங்க "

" டேய் ஏன்டா நீ வேற மானத்தை வாங்குற ? நேத்து உன்கிட்ட நைட் பேசிட்டு இருந்தேன்ல அதை பார்த்துட்டு எங்கம்மா என்ன சொல்லுறாங்க தெரியுமா ?"

" கண்டிப்பா நல்ல விதத்தில் சொல்லி இருக்க மாட்டாங்களே .. சொல்லு என்ன சொன்னாங்க ?"

" ஏன்டா , அர்த்த ராத்திரியில நீ  ஏதாவது  பொண்ணுகிட்ட பேசினா , உனக்கும் அந்த பொண்ணுக்கும்  கல்யாணம் ஆச்சும் பண்ணி வைக்கலாம் .. நீ என்னடான்னா, இந்த ஹரி பையன் கூடவே ராத்திரியும் பகலுமா பேசிட்டு இருக்கியே ? வெளங்கிடும்ன்னு சொல்லுறாங்க "

" ஹா ஹா .. உன் அம்மாவாச்சும் பரவாயில்லை .. எங்கம்மா என் போனை ரிங் பண்ணாலே , யாருப்பா உன் காதலனான்னு கேக்குறாங்க டா .. என் அண்ணன் சுபாஷ் வேற உன்மேல கொலைவெறியில இருக்கான் "

" அய்யயோ , அது ஏன்டா ?"

" பின்ன , நான் ஒரு பொண்ணை  சைட் அடிப்பேன்னு பார்த்த , உன்னை தானே சைட் அடிக்கிறேன் "

" அட ச்ச ... போனை வை டா ஹரி "

" நீ சொல்லலன்னாலும் வைப்பேன் டா .. ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன் ..பாய் "

" ஹை அங்கிள் " என்றபடி புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ் ..

"அடடே வா சந்தோஷ் " என்று புன்னகையுடன் அவனை  வரவேற்றார்  திரு கிருஷ்ணன் ..

" என்ன அங்கிள், டாக்டர் வேலை ரொம்ப பிசிதான் ..அதுக்காக வீட்டுக்கு வர மாட்டேன்னு முடிவு பண்ணிட்டிங்களா ? அம்மாவும் அப்பாவும் உங்க மேல செம்ம கோபத்துல இருக்காங்க "

" ஹா ஹா உங்க அப்பன் சின்ன வயசுல இருந்தே என்கிட்டே முறுக்கி கிட்டு இருப்பான் .. இப்போ மட்டும் என்ன புதுசாவா சொல்ல போறான் ... ஆமா நீ என்ன இந்த பக்கம் ?"

" சரியா போச்சு போங்க ..நான் வருவேன்னு அப்பா சொல்லவே இல்லையா ?"

" ஓ  அதுவா "என்று அவர் ஆரம்பிக்குமுன்னே, சாஹித்யாவின் கையை பிடித்து இழுத்தபடி அறைக்குள் நுழைந்தான் அருள்மொழிவர்மன் .. அவன் பின்னே ஓடி வந்தார் நர்ஸ்..

" சாரி டாக்டர் , சொல்ல சொல்ல கேட்காம இந்த தம்பி உள்ள வந்துருச்சு "

" அடடே , வா அருள் .. வாம்மா சத்யா " என்றவர் சந்தோஷை பார்க்க அவன் பார்வையாலே " பரவாயில்லை " என்று சமிக்ஞை காட்டினான் ...

" உட்காருங்க ரெண்டு பேரும்  " என்று அவர் கூறவும், ஒரு பெரு  மூச்சுடன் அங்கிருந்து சென்றார் நர்ஸ்...

அருள், சாஹித்யா இருவரையும் பார்த்த சந்தோஷ் பெரிதாய் ஆர்வம் ஒன்றும் காட்டாமல் போனில் கேம் விளையாட தொடங்கினான் .. அவன் அனுமதி தந்துவிட்டதினால் அவர்களை பார்க்க தொடங்கினார்  கிருஷ்ணன்..

" என்ன ஆச்சு அருள் நம்ம பேபிக்கு ? இந்த தடவை மேடம் என்ன பண்ணாங்க ?" பதினேழு பதினெட்டு வயதை நெருங்கி கொண்டிருந்த பெண்ணை பேபி என்று உரிமையாய்   கிருஷ்ணன் அழைக்கவும் சாஹித்ய முகத்தில் சோர்வாய் புன்னகை உருவானது.. கூடவே அருளை பார்த்து லேசாய் முறைத்தாள் .. அருளும் பதிலுக்கு அவளை பார்த்து முறைத்தான் ..

"அட ரெண்டு பேரும்  இப்படி அமைதியா இருந்த என்ன அர்த்தம் ?"

" நான் சொல்லுறேன் கிருஷ்ணாப்பா "

"இல்ல சத்யா நீ பொய் சொல்லுவா .. நானே சொல்லுறேன் "

"டேய், யாருடா பொய் சொல்லுவா ?" என்று சத்யா ரோஷமாய் கேட்கவும் போனில் இருந்த கவனம் சிதற அவளை நிமிர்ந்து பார்த்தான்  சந்தோஷ் .. கலைந்த கேசம், பூசினார் போல் உடல்வாகு , சோர்வாக முகம் ..கண்டவுடன் காதல் என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை அவளது தோற்றம்... இருந்தாலும் அவள் முகத்தில் இருந்த குழந்தைத்தனமும்  பிடிவாதமும் அவனை ஈர்த்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.