(Reading time: 7 - 13 minutes)

01. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

ந்த இரவில் சற்று வேகமாக நடந்து கொண்டிருந்தாள் மனோஹரி. அயானாவரத்தின் அந்த தெருக்களில் வழக்கமாக இந்நேரம் ஆள்நடமாட்டம் இருக்கும்தான். ஆனாலும் நச நசத்துக் கொண்டிருக்கும் மழைக்கும் பவர்கட்டுக்கும் இன்று காலியாக கிடக்கிறது தெருக்கள்.

நாளை அவளுக்கு  பயோஸியில் இன்டர்வியூ. பயோஸி அவளது கனவுகளம். அதிலிருந்து நாளைக்கு இன்டர்வியூவிற்கு வரும்படி இன்று அழைப்பு வந்திருக்கிறது. இன்டர்வியூவிற்கு ஏற்றபடி கண்ணுக்கு உறுத்தாத அதேநேரம் பளிச்சென்றும் இருக்கும்படியாய் ஒரு சல்வார் வேண்டும் என தோன்றிவிட்டது அவளுக்கு.

ஆக புரசைவாக்கத்தில் அலைந்து திரிந்து ஷாப்பிங் செய்து, அவள் மனதிற்கு திருப்தியாய் பட்ட அந்த மைல்ட் பீச் நிற சல்வாரை வாங்கி, அதை அவள் அளவிற்கு ஆல்டர் செய்து வீடு வர இத்தனை மணியாகிவிட்டது.

Manam koithai Manohariஇங்கு வந்து பார்த்தால் இந்த பவர்கட் வேறு. மழை வலுக்கவும் எட்டி நடைபோட்டாள். இப்பொழுது யாரோ சேறும் சகதியுமாய் இருக்கும் அந்த தெருவில் ஓடி வரும் சளப் சளப் சத்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் இன்வர்ட்டரின் உதவியால் அரை குறையாய் விழும் வெளிச்சத்தில் இவள் திரும்பிப் பார்க்கும் போதே  அது ஒருவரை இன்னொருவர் துரத்தும் சத்தம் என புரிந்துவிட்டது.

கறுப்பில் வெள்ளை புள்ளிகள் வைத்த சல்வாரில் ஒரு பெண் அத்தனை பயத்தோடும் கலவரத்தோடும் பதறி ஓடி வந்து கொண்டிருந்தாள். அவளை துரத்தியபடி அவன். அத்தனை இருட்டிலும் அவன் இறுகிய இரும்பு உடல்காரன் என காண்பிக்கிறது அவன் அணிந்திருந்த ஷர்ட். அவன்ட்ட மாட்டினா தக்காளி சாஸ்தான்.

இதற்குள் இவளைத் தாண்டி அந்தப் பெண் ஓட, அதே நேரம் அவளது துப்பட்டா அவன் கையில் பிடிபட, அதை அவன் இழுத்த வேகத்தில் அவன் கையிலேயே போய் விழுகிறாள் அந்த பெண்.

“ஏய் உனக்கு எவ்ளவு திமிர் இருந்தா இப்படி ஆட்டம் காமிப்ப? கூப்ட்டா உடனே ஒழுங்கா வந்தன்னா உடம்பு புண்ணாகாம தப்பிப்ப…இல்ல..” அந்த முரட்டு பொறுக்கி சொல்லியபடி இவள் கண் முன்னமே தப்பிக்க போராடிய அந்த பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு நடக்க

நடந்து கொண்டிருப்பதை முதலில் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் திகைத்து நின்ற மனோஹரி இப்பொழுது சுதாரித்து “டேய் அவள விடுடா பொறுக்கி நாயே….” கத்தியபடி இதற்குள் குனிந்து கையில் அள்ளியிருந்த சேறும் தண்ணியுமான அந்த மண்ணை அவன் முகத்தில் வீசினாள்.

குட் ஷாட்…அவன் கண் அவ்ட். எதிர்பாராத இந்த நிகழ்வில் அனிச்சையாய் அவன் கை அந்தப் பெண்ணைவிட்டு தன் கண்ணைப் பார்த்துப் போக இதற்குள் பிடிபட்டிருந்தவள் அவன் பிடியிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பி ஓடினாள்.

“ஏய் முட்டாள்….” அப்பொழுதுதான் இருட்டில் சாலை ஓரத்தில் விலகி நின்ற இவளை கவனித்த அவன் கர்ஜித்தபடி இவளைப் பார்த்து திரும்ப….இதற்குள் சற்று அருகிலிருந்த தன் வீடைப் பார்த்து ஓடத் தொடங்கி இருந்தாள் மனோஹரி.

You might also like - Enna thavam seithu vitten... A family drama

றுநாள் இன்டர்வியூ. ரிட்டன் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், பெர்சனல் ரவ்ண்ட் எல்லாம் முடிந்து

“ஆல் த பெஸ்ட் மனோஹரி வெல்கம் டூ பயோஸி ஃபேமிலி..…யூ ஆர் செலக்டட்……ஜஸ்ட் மிஸ்டர் .நெல்சன  மட்டும் பார்த்துட்டீங்கன்னா..அடுத்து  எச் ஆர பார்த்துட்டு இன்னைக்கே ஆஃபர் லெட்டர் கைல வாங்கிடலாம்” சொல்லியபடி

நேவி ப்ளூவும் அடர் சிவப்புமான  சேலையில் ஷன்மதி என்ற பேட்ஜ் தாங்கி நின்ற அந்தப் பெண் இவளுக்கு கை குலுக்க, மனம் கொள்ளா சந்தோஷத்தை ஒற்றைப் புன்னகையில் வெளிப்படுத்தியபடி அந்த ஷன்மதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் ஃபைலும் ஹேண்ட் பேக்குமாய் அவளை பின் தொடர ஆயத்தமானாள் மனோஹரி.

ஷன்மதியோ “5த் ஃப்ளோர்ல லெஃப்ட் சைட் காரிடார்ல 4த் ரூம்…”  என வழி சொல்லிவிட்டு தன் வேலைக்கு திரும்ப, அந்த ஷன்மதி சொன்னதை பின்பற்றி இவள் அந்த அறையை அடையும் போது அதன் வாசலருகில் சிறு  போர்ட்  சி இ ஓ என்றது.

ஃப்ரெஷரான இவள் பயோஸி சி இ ஓ வை மீட் பண்ணனுமா? யோசித்தபடியே அந்த அறைக் கதவை தட்டினாள்.

அடுத்து வந்த அந்த “கம் மின்” னைத் தொடர்ந்து கதவை தள்ளிக் கொண்டு இவள் உள்ளே நுழைந்தால் தன் சேருக்கு அருகில் நின்றபடி அருகிலிருந்த டெஸ்க்டாபை ஏதோ குடைந்து கொண்டிருந்தவன் இவளை திரும்பிப் பார்த்தான்.

அதிர்ந்து போனாள் மனோஹரி. அது அந்த முரட்டு பொறுக்கி. நேற்று ஒரு பெண்ணை பலவந்தம் செய்ய துரத்தினானே அந்த அவன். நேற்று இருட்டில் பார்த்ததைவிடவும் இன்றைய வெளிச்சத்தில் இன்னுமாய் தெரிகிறது அவனது ஃபிட்னெஸ். தேவைக்கு மீறி ஒரு இஞ்ச் கூட சதை அதிகமாக இல்லாமல் ஆறடிக்கும் மேலான உயரத்தில்….என்னதான் இவள் தைரியமானவளாய் இருந்தாலும் அவனது இரும்பு கை முன் இவள் பலம் எம்மாத்திரம்?

அவசரமாக தன் பின்னிருந்த கதவைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ இவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போல் இவள் தலை முதல் கால் வரை ஒரு அளவிடும் பார்வைப் பார்த்தபடி

“யெஸ் டெல் மி” என்று கை நீட்டினான். இவள் ஃபைலை கேட்கிறான்.

சோ இது இன்டர்வியூதான் என காண்பித்துக் கொள்கிறான்.

 ஆக தப்பு செய்த அவனுக்கே பயமில்லையாம்….இவள் மிரண்டு ஓட வேண்டுமா? நல்லா நாலு கேள்வியாவது  இவனைப் பார்த்து கேட்டுட்டுப் போகனும்….என கொதிக்கிறது உள்ளம். ஆனால் இது இவனது கோட்டை….இங்க வச்சு இவன்ட்ட சண்டை போடுறது புத்திசாலித்தனமா? என்கிறது அறிவு.

இதற்குள் இவள் கையிலிருந்த ஃபைலை இயல்பு போல் தன் கையில் எடுத்திருந்தான் அவன்.

“டேக் யுவர் சீட் மனோஹரி…”  ஃபைலை திறந்து பார்த்தபடி இவளுக்கு சேரை சுட்டியவன் ஃபைலுக்குள் பார்வையை நுழைத்துக் கொண்டே  

“இது இங்க மென்னோட ட்ரெஸ் கோட்…ஃப்ரெய்டே மட்டும் டார்க் ஷேட் ஷர்ட் போடலாம்…மத்த நாள் லைட் ஷேட் ஷர்ட் வித் டார்க் சேட் பேண்ட்ஸ்…சட்டர்டே மென் விமன் எல்லோருக்கும் கஷுவல் வேர்” தன் ப்ளாக் அண்ட் ப்ளாக் உடைக்கு விளக்கம் சொன்னான்.

இவள் அவனை உற்றுப் பார்ப்பதை கமெண்டடிக்கிறான்…..எவ்ளவு தைரியம்…? காதுவரை சிவந்து கொண்டு ஏறுகிறது கோபம் மனோஹரிக்கு.

அவன் கையிலிருந்த ஃபைலை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு அறை வாசலை நோக்கிப் பாய்ந்தாள். ‘இவன்ட்டல்லாம் வேலைப் பார்க்க என்னால முடியாது…’ அவனோ இவளையும் விட வேகமாக பாய்ந்து இவள் கையைப் பற்றினான்…

“ஏய் நில்லு”

“டேய் பொறுக்கி விடுறா என்ன…..ஹெல்ப் மீ…” இவள் கத்திய படி கையை உதற, உருவிக் கொண்டு வந்த கையை இழுத்துக் கொண்டு அறையைவிட்டு படு வேகமாக ஓட ஆரம்பித்தாள்.

அந்த காரிடாரில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தவள் யார் மீதோ மோத….அது அந்த ஷன்மதி…

” மிஸ். மனோஹரி இங்க என்ன செய்றீங்க….மிஸ்டர். நெல்சன் உங்களுக்காக வெய்ட் செய்துட்டு இருப்பார்..”

“இல்ல இப்ப இ..இங்க அ..அவரப் பார்த்துட்டுட்டு தான் வரேன்..””மூச்சிளைத்தது அவளுக்கு.

“பார்த்துட்டா இந்த ஃப்ளோர்லயா…? அவர் கேபின் நெக்‌ஸ்ட் ஃப்ளோர் ஆச்சே….” ஷன்மதி மறுக்க

“இல்ல இந்த பக்கம் ஃப்யூ ரூம்ஸ் தாண்டி….சி இ ஓ ன்னு போர்ட் கூட இருந்ததே….”

“யெஸ் இந்த ஃப்ளோர் முழுக்கவே அல்மோஸ்ட் சி ஓ க்குதான்….பட் நீங்க பார்க்க வேண்டியது மிஸ்டர்.நெல்சனையாச்சே…..சி இ ஓ சாரை இல்லையே… சாரி தேவையில்லாம அலஞ்சிட்டீங்க போல….வர்ஷன் சார் ஆஃபீஸ்ல இருந்தா அவரோட பி ஏ, பெர்சனல் செக்யூரிட்டி இப்படி யாரவது உங்களை இந்த ஃப்ளோர்ல என்டர் ஆகுறப்பவே சொல்லி திருப்பி அனுப்பி இருப்பாங்க….”

“இல்ல அவர் இங்க தான் இருக்கார்…” சற்று சலிப்பாய் சொன்னாள் மனோஹரி. ‘பொறுக்கி…. இவளை இன்டர்வியூ செய்றமாதிரி ஏமாத்தியிருக்கான்…..இன்னும் என்னலாம் செய்ய நினச்சானோ?’ மனதுக்குள் கொதித்து குமைந்தாள்.

“இல்லையே ட்யூ டூ ஹெல்த் ரீசன் அவர் ஆஃபீஸே வரது இல்லையே…” ஷன்மதி மறுக்க மனோஹரிக்குள் சட்டென ஒரு பயம்….

‘அப்ப இவன் யார்? இங்க எதுக்கு வந்தான்? இவளை ஃபாலோ பண்ணியா?’ திரும்பி கடகடவென சி இ ஓ அறை யை நோக்கி ஓடினாள். அங்கு அந்த அறையின் வெளிப் புறமாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு லாக்.

“இ..இங்கதான் பார்த்தேன்…” மனோஹரி திக்க

“இல்லைங்க எனக்கு நல்லா தெரியும் இந்த ரூமை திறந்து 2 மாசத்துக்கு மேல ஆகுது” ஷன்மதியின் குரலில் உண்மை இருந்தது.

திகைத்து நின்றாள் மனோஹரி. அவன் இவளை ஏன் ஃபாலோ பண்றான்? யார் அவன்?

Episode # 02

 

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.