(Reading time: 9 - 17 minutes)

02. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

னோஹரிக்கு இன்று முதல்நாள் ஆஃபீஸ். அதான் அந்த அவனுக்கும் பயோஸிக்கும் எந்த லிங்கும் இல்லைனு தெரிஞ்சுபோச்சே அதனால் வேலையில் சேர்ந்திருந்தாள். காலை டென் அ க்ளாக்கிலிருந்து அவளது ட்ரெய்னிங் ஆரம்பம்.

ட்ரெய்னிங் ஹாலில் சென்று ட்ரெய்னரின் வருகைக்காக காத்திருந்தாள். அறையில் இவளுடன் இவள் பேட்ச் மேட் என இன்னும் சிலர். அதில் இவள் அருகில் வந்து அமர்ந்திருந்த திரவியா நட்பாக பேசத் தொடங்க ஒரு அறிமுக உரையாடல் இருவரிடமும். அப்பொழுதுதான் புயல் போன்ற வேகம் ஆனால் ஆழ்ந்த ஒரு அமைதி அப்படி ஒரு நடையுடன் ஃபுல் ஸ்பிரிடட் Hey ya’ll என்றபடி உள்ளே வந்தான் அவன். அந்த அவனேதான்.

அடுத்து அவன் என்ன பேசினான் என சில நொடிகள் மனோஹரிக்கு புரியவே இல்லை. ஸ்டன்ட் அன்ட் ஸ்ட்ரக். அதிர்ச்சியிலிருந்து அவள் மீண்டு வரும் முன் அவன் தன் பெயரை தான் யார் என்பதை சுத்தமான அமெரிக்கன் ஆக்சன்ட்டில் சொல்லி முடித்திருந்தான்.

Manam koithai manohari“சரி முதல்ல உங்கள அறிமுக படுத்திக்றதுக்காக  இப்ப ஒரு குட்டி கேம். “ அவனது அமெரிக்கன் ஸ்லாங் ஆங்கிலம் மனோவிற்குள்  இருந்த அத்தனை கேள்விகளோடு இவன் ஏன் இப்படி சீன் போடுறான்? என்ற கேள்வியையும் சேர்த்து எழுப்பியது.

ஆனாலும் அவன் பேசுறதை கேட்க அழகாதான் இருக்குது என்றது உள்ளே இருந்து ஒன்று. ஆமா பாம்புக்கு படு பெர்ஃபெக்டா மேக் கப் போட்ட மாதிரி….

அவசரமாக அருகிலிருந்த திரவியாவிடம் சிறு குரலில் கேட்டாள். “இந்த  பொறுக்கி யாரு? …. இங்க எதுக்கு வந்துறுக்கான்?”

அதே நேரம் “ ஹாய் தேர்….நீங்க…யெஸ் நீங்கதான் “ என திரவியாவை குறிப்பிட்டான் அவன்.

“உங்க பக்கத்துல உள்ளவங்க இப்ப என்ன சொன்னாங்க அதை அப்படியே வேர்ட் மாறாம, ஆர்டர் மாறாம சொல்லுங்க பார்ப்போம்….இது தான் கேம்….அவங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டு அடுத்து உங்க பார்ட்டையும் நீங்க சேர்த்து சொல்லனும்….உங்களுக்கு அடுத்து இருக்றவங்க நீங்க ரெண்டு பேர் சொன்னதையும் மாத்தாம அப்படியே சொல்லி அடுத்து தன் பார்ட்டையும் சொல்லனும்…..ஒவ்வொருத்தரும் தன்னைப் பத்தி தான் தன் பார்ட்டா சொல்லனும்…இட் கோஸ் லைக் தஅட்…..இப்ப இது மாக் ரவ்ண்ட்…..சொல்லுங்க அவங்க என்ன சொன்னாங்கன்னு?”

மனோவிற்கு பயமாயிருந்தது என்றெல்லாம் இல்லை. ஆனால் நிச்சயமாக ஆக்வர்ட் சிச்சுவேஷன்.

எழுந்து நின்ற திரவியாவோ பே பே என விழித்தாள். பின் ஒருவாறு சமாளித்து “சார் யாரு? இங்க எதுக்காக வந்துறுக்காங்க?” …..என தொடங்கினாள்.

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

“இஸ் இட் இப்படித்தான் சொன்னாங்களா? லிப் மூவ்மென்ட்ல பொறு….ன்ற மாதிரிலாம் வேர்ட் வந்ததே. “

தன் நெற்றியைப் பிடித்துவிட்டாள் மனோ. “பாம்பே தான்டா நீ….உன் கண்ணும் காதும்…” முனங்கியவள் கண்களை உயர்த்தி பக்கவாட்டில் நிற்கும் திரவியாவைப் பார்த்தாள். அவள் முகத்தில் வியர்வை அரும்பி இருந்தது. பாவம் ரொம்ப பயாந்துட்டா போல….முத நாளே ஹயர் அஃபீஷியல எப்படி பகச்சுக்கிறதுன்ற டென்ஷன். இவளுக்காக திரவியா ஏன் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும்?

சட்டென எழுந்த மனோஹரி “இந்த  பொறுக்கி யாரு? …. இங்க எதுக்கு வந்துறுக்கான்?” அழுத்தம் திருத்தமாக அவன் முகத்தைப் பார்த்து சொன்னாள். “இதைத்தான் கேட்டேன்….” அவள் முகம் தைரியம் என் தாய்மொழி என்றது.

சட்டென அவன் கண்ணில் அதென்ன அப்படி ஒரு மின்னல்? ஆனால் அடுத்த நொடி படு இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டவன். “தென் நாளைக்கு நாம மீட் பண்ணலாம்…டேட்டிங்ல இதுக்கெல்லாம் ப்ராப்பரா பதில் சொல்வேன்….” அருகில் வந்து இவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக சொன்னான். அவன் கண்ணில் அப்படி ஒரு விஷமம்.

என்ன திமிர் இவனுக்கு? கொதித்துக் கொண்டு வந்தது இவளுக்கு.

இப்பொழுது இவளுக்கு மிகவும் அருகில் வந்து “…இதெல்லாம் என் கேர்ள்ட்ட, அதுவும் ப்ரைவசில தானே பேச முடியும்...” அதே விஷம சிரிப்புடன், இவள் கண் பார்க்காமல், சின்ன குரலில் சொன்னவன் “பைதவே எதுனாலும் ஸ்ட்ரெய்ட்டா கேளு …இப்படி பக்கத்துல உள்ளவங்கட்ட காசிப் பண்ணாத “  என்று அட்வைஸ் செய்துவிட்டுப் போனான்.

அந்த செஷன் முடியும் வரையும் அடுத்து என்ன நடந்தது என மனோவிற்கு தெரியாது. அத்தனை கொதித்துப் போய் இருந்தாள். ஒருவகையில் கடும் உணர்ச்சி தாக்கத்திற்குள்ளும் அவள்.

அவள் தன்னை அறிமுகபடுத்திக் கொள்ள வேண்டிய அவள் முறையின் போதும் பக்கத்திலிருப்பவளை கை காட்டிவிட்டு பேசாமல் இருந்து கொண்டாள். இதை ஒரு நொடி கூர்மையாய் பார்த்த அந்த அவனும் அதற்கு மறுப்போ அல்லது எதுவோ சொல்லாமல் போக ம்யூட் மோடில் குமுறலும் குழப்பமுமாய்  இவள்.

செஷன் முடிந்து வெளியேறும் போது “சீ மி இன் மை ஆஃபீஸ்” என்றுவிட்டுப் போனான்.

அவன் வெளியேறியதும் இவள் அருகில் வந்த திரவியா “என்னப்பா நீ…..மித்ரன் சார் சி இ ஓ வர்ஷன் சாரோட ப்ரதர்னு கேள்விப்பட்டேன்….அவர்ட்டப் போய் இப்படி பேசிட்ட…..?” என்றவள் “நீ அவரைப் பார்க்க போறப்ப கூட நானும் வரேன்….”என்றபடி இவளது கையைப் பற்றினாள்.

மனோவிற்கு அலுவலகத்தில் ஒரு எதிரி மட்டுமல்ல ஒரு ஃப்ரெண்டும் இருப்பதாக தோன்றுகிறது.

“இந்த ஜாப் ரொம்ப நல்ல ஸ்கோப் உள்ள ஒன்னுபா….அதுவும் பயோஸி பத்தி உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்….இந்த மித்ரன் நம்ம டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்லாம் கிடையாது…. ட்ரெய்னிங்க்கு பிறகு பார்க்கவே வேண்டி இருக்காதுன்னு நினைக்கிறேன்….அவர்ட்ட ஒரு சாரி மட்டும் சொல்லி வச்சுடுங்க…..” அந்த திரவியாவின் அட்வைசை காது கொடுத்து கேட்டுக் கொண்டாலும் அவனது ஆஃபீஸ் ரூமிற்கெல்லாம் போகவே இல்லை மனோஹரி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.