(Reading time: 12 - 24 minutes)

08. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

விஷ்ணு தன் படுக்கையில் படுத்தவாறே தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த ஃபேன்னை நோக்கியபடி ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அனுவை பற்றி.

மெல்லமாக தன் தலையை படுக்கையின் எதிரில் உள்ள சுவரின் மீது திருப்பினான். அதில் “+” குறியீட்டின் வடிவத்தில் 5-6 போட்டோகள் ஒட்டப்பட்டிருந்தது. அவை அனைத்தும் அனுவின் புகைப்படங்கள்தான். அனுவிற்கு தெரியாமல் இவன் எடுத்த புகைப்படங்கள். அதன் நடுவில் இவன் தன் கைகளால் வரைந்திருந்த, ஒரு ஓவியமும் இருந்தது. அது அவன் மனதில் ஆழமாய் பதிந்திருந்த, அனுவை அவன் முதல் முதலாய் பார்த்த காட்சி. தன் மனக்கண்ணின் உதவியுடன் விஷ்ணு வரைந்திருந்த அந்த வரை படம் அவ்வளவு தத்துருபமாக இருந்தது.

அதைப் பார்த்த மறு நொடியே விஷ்ணுவின் முகத்தில் புன்னகை அரும்பியது. விஷ்ணுவின் எண்ண ஓட்டம் வேகமாகப் பின் நோக்கி நகர்ந்தது. 20 வருடத்திற்கு முன்னர் நடந்த அந்த நிகழ்வு இவன் கண் முன் பசுமையாய் வந்தது. விஷ்ணு அனு என்னும் அந்தக் குட்டி தேவதையை முதல் முதலாகப் பார்த்த போது ஏற்பட்ட அந்த சிலிர்ப்பு, ஓர் உணர்வு இன்றளவும் அவனால் மறக்க முடியவில்லை.

unakkaga mannil vanthen

மெல்லமாக தன் பார்வையை அடுத்த புகைப்படத்தின் மீது திருப்பினான், சட்டென்று அவனது எண்ண ஓட்டம் காலம் கடந்து அந்தப் புகைப்படம் எடுத்த தருணத்தின் நொடிக்குச் சென்றது. அன்று அனு மஞ்சள் நிற சுடிதாரின் புதிதாய் மலர்ந்த மலர் போல இருந்தாள். இவன் துரத்தில் இருந்து பார்த்த வரையில் அன்று அவள் ஏதோ பதற்றமாக இருக்கிறாள் என்று மட்டும் இவனுக்குப் புரிந்தது. பதற்றத்தில் அவள் தன் கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய சங்கிலியின் டாலரை தன் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தாள். அந்தச் செய்கையில் இருந்த ஒரு குழந்தைத்தனமான அழகு விஷ்ணுவை ஏதோ செய்தது. அன்று அவள் முகத்தில் காட்டிய பாவனைகள் அவனுக்கு அவள் சின்னக் குழந்தையில் அவள் செய்வதைப் போல் இருந்தது. விஷ்ணு தனக்கே தெரியாமல் தன் கேமராவில் அந்த காட்சியைப் படமாக்கினான்.

இப்படி அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒவ்வொரு படத்திலும் அவனுக்கு ஆயிரம் நினைவுகள். ஒவ்வொரு நினைவாக தன் மனக்கண் முன் நிறுத்தி அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

சட்டென்று அவனுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று. எப்படி இந்த 90 நாட்களில் அனுவை காதலில் விழ வைப்பது. அவளுக்கு நான் யார் என்றே தெரியாது, போதாக் குறைக்கு அவள் வேறு தன்னை பின் தொடர வேண்டாம், அது தனக்கு பிடிக்காது என்றெல்லாம் கூறிவிட்டாள். மீண்டும் எப்படி அவளை அணுகுவது.

விஷ்ணு டக் என்று படுக்கையில் இருந்து எழுந்து சென்று கண்ணாடி முன் நின்றான். “டேய் விஷ்ணு, எப்படி டா அனுவ லவ் பண்ண வைக்க போற, அவள் சும்மா தேவலோகத்தில் இருந்து மண்ணில் இறங்கி வந்த தேவதை மாதிரி இருக்கா, ஆனா நீ ஒரு வேஸ்டு பீஸ், எப்படி உன்னால் முடியும். பெருசா அந்த எமன் கேட்டதுக்கு, முடியும், அவள லவ் பண்ண வைத்து விடுவேன் என்று சவால் விட்டுவிட்டு வந்து விட்டாய்.” தனக்குத் தானே கேள்வி கேட்டான்.

அவன் மனம் இரு மனங்களாக மாறிச் சண்டையிட ஆரம்பித்தது.

“உனக்கு என்ன டா விஷ்ணு, நீ அழகன் டா கண்டிப்பா அனு உனக்குத்தான், நாளைக்கே அவளிடம் போய் உன் லவ்வ சொல்ற, அனு ஓகே சொல்வாள். அந்த எமன் முகத்தில் கரியை புசுறோம்” தன் கேள்விக்கு தானே பதில் கூறினான்.

You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!

“தம்பி விஷ்ணு, உன் வாழ்க்கையைக் கொஞ்சம் பின் நோக்கிப் பார், நீ எதற்கும் உபயோகம் இல்லாதவன். ஒரு காரியமாவது உனக்குச் சுலபமா நடந்திருக்கா?, அப்படி இருக்கும் போது இது மட்டும் எப்படி ஈஸியா இருக்கும், அதை யோசித்துப் பார்த்தாயா?” மீண்டும் அவன் உள்ளம் அடுத்தக் கேள்வியைக் கேட்டது.

“கண்டிப்பா அனு எனக்குத்தான். இதுவரை என் வாழ்வில் நடந்த அனைத்துப் பிரச்சனைக்கும் அந்தக் கடவுள் தானே காரணம் அதனால் தான் எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. இப்போதுதான் உன் வாழ்க்கையில் எந்த குறுக்கிடும் செய்ய மாட்டேன் என்று எமன் சொல்லியிருக்கிறார் அல்லவா, அதனால் நாளை நான் அனுவிடம் என் காதலை கூறினால் அவள் கண்டிப்பாக ஒற்றுக் கொள்வாள்” அவன் கேள்விக்கு அவன் மனமே பதில் அளித்தது.

“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பி, கொஞ்சம் அடக்கி வாசி. உன் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க மாட்டேன் என்று எமன் சொன்னாராம், இவரும் நம்பிவிட்டாராம். நடக்கிற கதையாக பேசு, எமலோகத்தில் நடந்தது நினைவில் இருக்கிறதா?, இப்போது அங்குத் தண்டனைகள் எல்லாம் மாற்றம் பெற்றுவிட்டது என்று சித்ர குப்தர் கூறினாரே, உன்னைப் பூமிக்கு மீண்டும் அனுப்பியதுதான் உன் தண்டனைப் பேலும்” மீண்டும் கேள்வி எழுப்பியது அவன் மனம்.

“பூமிக்கு வந்தது எப்படி தண்டனையா இருக்க முடியும், லுசுதானமாக பேசாதே” தன்னை தானே திட்டியது விஷ்ணுவின் மனம்.

“என்ன செல்லம் உனக்கு உன்னுடைய லைப் ஹிஸ்டிரி மறந்துப் போச்சா? உனக்கு உன் லைப்பை விடப் பெரிய தண்டனைக் கிடையாது மறந்துவிட்டாயா? அப்படி இருக்கும் போது செத்துப்போன நீ மீண்டும் பிறந்து வந்தது வரமா? இல்லை இதுதான் எமலோகத்தில் கூறியது போல் மாற்றுத் தண்டனை. அதனால் ரொம்ப சந்தோஷம் பட்டுக்காதே” அவன் கேள்வி மனம் அவன் பயத்தை துண்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.