(Reading time: 12 - 24 minutes)

ந்த எண்ணம் தோன்றிய உடன் சற்று நடுங்கித்தான் போனான் விஷ்ணு. ஒரு வேளை எமனின் திட்டமும் அதுவாகத்தான் இருக்குமே.

அதற்குள் அவன் அடுத்த மனம் கூறியது “அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது. எமன் நல்லவர், தர்ம பிரபு. அவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார். அதனால் நாளை உன் காதலை அனுவிடம் சொல். அவளும் ஒற்றுக் கொள்வாள். பயப்படாதே விஷ்ணு”.

இதற்கு மேல் இப்படி யோசித்தால் பைத்தியம்தான் பிடிக்கும், நடப்பது நடக்கட்டும், நாளை அனுவிடம் லவ் சொல்வோம், கண்டிப்பாக அனு ஒற்றுக் கொள்வாள். தனக்குத் தானே கூறிக் கொண்டு போய் மீண்டும் கட்டிலில் படுத்தான் விஷ்ணு. எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுக்குத் துக்கம் வரவில்லை. நாளை எப்படி அனுவிடம் காதலை சொல்வது, அவள் என்ன சொல்வாள் என எக்கச்சக்க கேள்விகள் அவனை உறங்கவிடவில்லை.

அங்கு அனுவிற்கும் அதே நிலமைதான். திவ்யா கூறியது, தன்னை இத்தனை நாள் பின் தொடர்ந்தவன் யார், யார் என்று குட தெரியாதவன் எவ்வாறு தன்னை இப்படி டிஸ்டரப் செய்யமுடியும் என்று அயிரம் கேள்விகள் அவளையும் உறங்கவிடவில்லை.

இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து உறங்காமல் அல்லாடினர். கடைசியாக எப்போது உறங்கினார்கள் என்று தெரியவில்லை.

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

காலையில் வழக்கம்போல் அலாரம் அடிக்கக் கண்களை திறக்க முடியாமல் திறந்தாள் அனு. அவளின் முகமே அவள் இரவு முழுதும் உறங்கவில்லை என்று காண்பித்துக் கொடுத்தது. அறை உறக்கத்துடனே சென்று குளித்தாள் அனு.

உடைகளை மாற்றிக் கொண்டு கீழே இறங்கியவளை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜ சேகர். நிச்சயதார்த்தத்தின் போதே தன் மகளின் தயக்கத்தை பார்த்தவர், இப்போது அவள் முகம் வாடியிருப்பதைக் கண்டு சற்று வருத்தமானார்.

படியில் இருந்து இறங்கிய அனு தன் குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் தந்தைக்கு குட் மார்னிங் கூறிவிட்டு தன் தாய் இருக்கும் சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.

தன் மகளின் பிரச்சனை என்னவென்று புரியாமல் சிந்தனையில் சற்று ஆழ்ந்தார் ராஜ சேகர். அவர் காதில் சமையல் அறையில் தன் மனைவிக்கும், மகளுக்கும்  இடையே நடக்கும் உரையாடல் சிறிதாக வந்து விழுந்தது.

சற்று நேரத்தில் கையில் சுடச் சுட ஆவி பரக்கும் இட்லி தட்டுடன் வெளியே வந்தாள் அனு. தன் தந்தையில் அருகில் அமர்ந்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்தாள்.

“அந்த டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடக் கூடாதாமா?” தன் மகள் சூடான இட்லி நடத்தும் போராட்டம் பொறுக்காமல் கூறினார் ராஜ சேகர்.

“பரவா இல்லை அப்பா, டைம் ஆச்சி” பதில் கூறிவிட்டு மீண்டும் தன் போராட்டத்தைத் தொடர்ந்தாள் அனு.

தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை தன் மகளிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று சற்று யோசனை செய்துவிட்டு சரி கேட்டுவிடலாம் என்று முடிவிற்கு வந்தார்.

“அனுமா நான் உன்கிட்ட ஒன்றுக் கேட்டாள் கோவிச்சிக்க மாட்டியே” மெல்ல தன் மகளுக்கு மட்டும் கேட்கும் படி பேசினார்.

அனு ஒரு நிமிடம் உண்பதை நிறுத்திவிட்டு, தன் தந்தையை திரும்பிப் பார்த்தாள். அவர் எதோ குழப்பத்துடன் இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

“என்னபா இது நான் உங்க பொண்ணு, என்னிடம் கேட்பதற்கு எதற்கு பர்மிஸன் கேட்குரிங்க, என்னபா என்ன விஷயம்” என்று கூறிவிட்டு, அவர் எதைப் பற்றி கேட்கப் போகிறார் என்ற ஆவலுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அது ஒன்றும் இல்லடா அனு, உனக்கு, உனக்கு” என்று தன் மகளிடம் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தயங்கினார்.

“என்னபா இது, என்னிடம் என்ன தயக்கம், கேட்க வந்ததை கேளுங்கபா” தந்தையின் தயக்கத்தை போக்கும் வகையில் கூறினாள்.

“உனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் தானேமா” தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டுவிட்டு தன் மகளின் பதிலுக்காக காத்திருந்தார் ராஜ சேகர்.

அவரின் கேள்வி அனுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாள் இல்லாமல் இவர் ஏன் இப்போது இந்தக் கேள்வியை கேட்கிறார். நான் குழப்பமாக இருப்பது இவருக்கு எப்படித் தெரியும். ஒரு வேளை திபக் சொல்லிருப்பாரோ இல்லை அந்த வாயடி திவி எதுவும் போட்டுக் கொடுத்திருப்பாளோ, ச ச இருக்காது.

“ஏன் பா இப்படி ஒரு கேள்வியை கேட்குரிங்க?” தன் குழப்பம் தன் தந்தைக்கு எப்படித் தெரிந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அனுவிற்கு தோன்றியது.

“ஒன்றும் இல்லமா சும்மாதான் கேட்டேன், உனக்கு திபக்கை பிடிச்சிருக்கு தானே? இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பம்தானே” மீண்டும் அழுத்தமாய் கேட்டார் ராஜ சேகர்.

அனுவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை, திவ்யா கூறியது போல் இந்தக் குழப்பம் தற்காலிகமானது என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அதுவும் இல்லாமல் அனுவின் சம்மதத்துடன்தான் இன்று நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது, இப்போது போய் குழப்பமாக இருக்கிறது என்று கூறினால் தந்தையின் மனம் வாடிவிடும் என்று அனுவிற்கு தெரியும். அது மட்டும் இல்லாமல் குழப்பத்திற்கு என்ன காரணம், யார் காரணம் என்று எப்படிக் கூறுவது, அவன் பெயர் கூட இவளுக்குத் தெரியாது. இதை அனைத்தையும் யோசித்தவளாய், தன் குழப்பமான முகத்தை மறைத்தவாறு,

“எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்தான் பா,” என்று சிரித்தவாறே பதில் கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.