(Reading time: 12 - 24 minutes)

ன் மகளின் பேச்சில் முழுவதுமாக உண்மையில்லை, அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை ராஜ சேகரால் உணர முடிந்தது, இருந்தாளும் மேலும் இந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம் என்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு அனுவின் மீது நம்பிக்கை அதிகம், அவள் என்றும் தவறு செய்யமாட்டாள் என்பது அவருக்குத் தெரியும்.

“சந்தோஷம் டா அனு, சரி இப்போ டைம் ஆகுது, நீ சீக்கிரம் சாப்பிடு” கூறிவிட்டு தன் இடத்தை விட்டு எழுந்து உள்ளே சென்றார்.

சென்றவரையே சிறிது நேரம் பார்த்தவள் மனதில் மீண்டும் அதே கேள்வி “ஏன் அப்பா இன்று அப்படிக் கேட்டார்”. அதை யோசித்தவாறே நிமிர்ந்தவளின் கண்களில் கடிகாரம் பட்டதும், புலம்ப ஆரம்பித்தாள் “ஐயோ டைம் ஆயிடுச்சே, லேட்டா போன அந்த மாரியம்மா பேயாட்டம் ஆடுவாளே” என்று திவ்யாவை செல்லமாக திட்டிக் கொண்டே கட கடவென சாப்பிட்டு முடித்து தாயிடம் கூறிவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தாள்.

அனுவின் முகத்தைப் பார்த்த மாதிரத்திலே அவள் இரவெல்லாம் உறங்கவில்லை என்பதை திவ்யா கண்டறிந்துவிட்டாள்.

“ஏண்டீ லூசு, நைட் சரியா தூங்கலையா?” அக்கரையோடுக் கேட்டாள் திவ்யா.

“இல்லடீ திவி, எவ்வளவோ முயற்சி செய்தும் ரொம்ப நேரம் துக்கமே வரலை, அவன் ஞபகமாகவே இருந்தது” உண்மையை மறைக்காமல் கூறினாள் அனு.

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

“அப்போ நேற்று நான் அவ்வளவு நேரம் லெக்ட்சர் கொடுத்ததெல்லாம் வேஸ்டா?” பொய் கோவத்தோடுக் கேட்டாள் திவ்யா.

“ச ச, அப்படி இல்லடீ, நீ சொன்னது எல்லாம் எனக்கு புரியிது, நீ சொன்னதுதான் சரி. இருந்தாலும் புத்திக்கு புரிவது மனசுக்குப் புரியலை. மறுபடியும் அவன் கண்ணில் படாமல் இருந்த போதும், இந்தக் குழப்பம் எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்” மிகவும் நம்பிக்கையாகப் பதில் கூறினாள் அனு.

“கவள படாத அனு, அவன் இனி வரமாட்டான் என்றுதான் தோன்றுகிறது, அப்படி வந்தா அவனை ரெண்டுல ஒண்ணு நான் பார்க்கிறேன்” திவ்யா கூறி முடிப்பதற்குள் விஷ்ணு அனுவின் முன்னால் வந்து நின்றான். விஷ்ணுவைப் பார்த்து சற்று அதிர்ந்து போனால் அனு.

“அனு, நான் உங்களிடம் கொஞ்சம் பேசனும்” தன் ஒட்டு மெத்தத் தைரியத்தையும் கூட்டி உலறாமல் அந்த வார்த்தையைக் கூறினான் விஷ்ணு.

தன் பெயர் இவனுக்கு எப்படித் தெரியும் என்ற குழப்பத்தோடு தன் தோழியை பார்த்தாள் அனு. தன் தோழிக்கு தன் உதவி தேவை என்பதை அவள் கூறாமலே புரிந்து கொண்ட திவ்யா அனுவின் உதவிக்கு வந்தாள்.

“ஹலோ மிஸ்டர், ஒரு தடவை சொன்னால் உங்களுக்குப் புரியாதா? நேற்றே இவள் தெளிவா சொல்லிட்டாள் இல்ல டிஸ்டர்பு பண்ண வேண்டாம் என்று, அப்படி இருக்க மறுபடியும் ஏன் தொந்தரவு பண்றிங்க” மூச்சு விடாமல் தீபாவளி பட்டாசாய் வெடித்துத் தள்ளினாள் திவ்யா.

திவ்யா கூறியதை கேட்டும் கேட்காமலும் அனுவின் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்ணு. இதுவே வேறொரு சமயம் என்றால் திவ்யா பாதி பேசும் போதே அங்கிருந்து ஓடி இருப்பான். ஆனால் இன்று நிலைமை வேறு. இன்று என்னவனாலும் அவன் தன் காதலைச் சொல்லியே ஆக வேண்டும்.

“பீளிஸ் அனு, நான் முக்கியமா ஒரு விஷயம் உங்களிடம் சொல்லனும். ரொம்பா சீரியஸ். ஒரு 5 மினிட்ஸ்” என்று விஷ்ணு கூறி முடிப்பதற்குள் மீண்டும் சீற ஆரம்பித்தாள் திவ்யா.

“ஏய் மிஸ்டர், நல்ல விதமாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாத. இப்போ இந்த இடத்தைவிட்டு போறிங்களா? இல்ல போலீசை கூப்பிடனுமா” கோவத்தில் வெடித்தாள் திவ்யா.

திவ்யாவின் அந்தப் பேச்சில் விஷ்ணுவின் முகம் மாறியது. அவன் இதை எதிர் பார்க்கவில்லை. விஷ்ணுவைப் பார்ப்பதற்கு அனுவிற்குப் பாவமாக இருந்தது. திவ்யாவின் கோவத்தை பற்றி அவளுக்குத் தெரியும் அவள் வேறும் வாய் வார்த்தையாக மட்டும் கூறுபவள் இல்லை என்று. நிலைமையைச் சமாளிக்க தான் பேசியே ஆகவேண்டும் என்று புரிந்து கொண்ட அனு, திவ்யாவின் கைகயை பிடித்து நிறுத்தித் தான் பேசத் துவங்கினாள்.

“பீளிஸ் மிஸ்டர், நீங்க யார் என்று கூட எனக்குத் தெரியாது. ஒரு தடவை சொன்ன புரிஞ்சிக்கோங்க. இப்படி மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்யாதீங்க. நீங்க என் பின்னல் இந்த மாதிரி பாலோ பண்ணுவதை  யாரவது பார்த்தால் எனக்குத் தான் பிரச்சனை” அனு சற்று தாழக் கூறலில் கெஞ்சுவது போல் கூறினாள்.

“அனு பிளிஸ் என்னைத் தப்பா நினைக்காதிங்க, நான் உங்களுக்குப் பிரச்சனையை தர வரவில்லை, உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் அவ்வளவுதான். ஒரு 5 மினிட்ஸ் தனியா பேசினால் போதும். பிளிஸ் அனு” எப்படியாவது இன்று அனுவிடம் காதலைச் சொல்லியே ஆகவேண்டும் என்னும் முடிவில் இருந்தான் விஷ்ணு.

அனு பேச தொடங்குவதற்கு முன்னரே, திவ்யா பேசத் தொடங்கினாள். “இங்க பாருங்க சார், நீங்க நல்லவர்தான், ஆனால் இந்த மாதிரி பொது இடத்தில் முன் பின் தெரியாத பெண்ணிடம், அதுவும் மூன்று மாசத்தில் திருமணம் ஆக போற பெண்ணிடம், இப்படி நடந்துகிறது சரியில்லை”.

திவ்யா கூறிய அந்த வார்த்தை விஷ்ணுவின் தலையில் இடியாய் வந்து இரங்கியது. அவனால் அதை நம்ப முடியவில்லை. அனுவை பார்த்து “உங்களுக்குத் திருமணமா? எப்போது, எப்படி, யார்” அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

அனு பதில் எதுவும் கூறாமல் தன் மோதிர விரலை உயர்த்திக் காட்டினாள். அதில் திபக் அவளுக்கு அணிவித்த தங்க மோதிரம் தக தக வென்று மின்னியது.

தொடரும் . . .

Episode # 07

Episode # 09

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.