(Reading time: 9 - 17 minutes)

யோஸி சி இ ஓ வர்ஷனின் தம்பி என்றால்…..? இந்தியாவின் டாப் லிஸ்டட் பணக்காரங்கள்ல இவங்க குடும்ப பெயர் உண்டு….இந்த பேக்ரவ்ண்ட்ல இருந்து வந்தவன்ட்ட வம்பு வளர்ப்பது கண்டிப்பா தேவையா இவளுக்கு? மனோஹரிக்கு பயம் கிடையாது….ஆனால் தேவையில்லாமல் வாழ்க்கையை கசப்பாக்கி கொள்வதிலும் உடன்பாடு கிடையாது.

வேலையை ரிசைன் செய்யவா வேண்டாமா என ஒரு தாட். அந்த அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என்றது அறிவு. அன்று வர்ஷன் ரூமிற்கு இந்த மித்ரன் இவளுக்காக வந்திருக்கவில்லை என்பது புரிகிறதுதானே. எது என்ன ஆனாலும் அந்த பொறுக்கி மித்ரனை தனியாக போய் அவன் ரூம்ல பார்க்கிறதா இவளுக்கு நோ ஐடியா.

ஈவ்னிங் இவள் வீட்டிற்கு கிளம்பினாள். 7 வது தளத்திலிருந்து இறங்க வேண்டும். லிஃப்டில் ஏறினாள். ஐந்தாம் தளத்தில் உள்ளே ஏறியது மித்ரன். இவளும் அவனுமாக மட்டும் லிஃப்டில். இவள் முகத்தை ஆராய்தலாய் நேர்ப் பார்வை பார்த்தபடி அவன்.

அவன் முகத்திலிருந்து தன் பார்வையை திருப்பிக் கொண்டவள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கோ படித்த ஐடியாவின் படி அனைத்து தளத்திற்கான பட்டன்களையும் வரிசையாக அழுத்தி வைத்தாள்.

“குட்” என்றான் அவன். இப்படித்தான் இருக்கனும்…..”பட் இந்த அலர்ட்னெஸ் ஹைஸ்க்ரீப்பர், டவர் ப்ளாக் மாதிரி பெரிய பில்டிங்க்ஸுக்குத்தான் தேவை….இங்க இன்னும் 4 ஃப்ளோர்ஸ் தான்… நம்ம லிஃப்ட் ஸ்பீடுக்கு ஃப்யூமினிட்ஸ்ல க்ரவ்ண்ட் ரீச்சாகிடுவோம்….அங்க லிஃப்ட் ஆபரேட்டர் கண்டிப்பா லிஃப்ட்டை ஓபன் செய்வார்”

அவன் சொல்லிக் கொண்டு போக பார்வையை கூட அவன் புறம் திருப்பாமல் இவள்.

“பைதவே என் மேல என்ன ஒரு நம்பிக்கை வச்சுருக்கிறன்னு தெரியுது....தேங்க்ஸ்”

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

 இப்பொழுது அவனை முறைப்பாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

“என்னை பார்க்க வரச் சொன்னேன்ல ஏன் வரலை….? “

“………………………”

ஹயர் அஃபீஷியல் கேள்வி கேட்டா இப்படித்தான் நடந்துப்பியா?”

“………………………..”

“நான் உன் ஜாப் ஆஃபரை டெர்மினேட் செய்ய முடியும்னு தெரியும்தானே….”

இதுவரை அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் நின்றவள் இதற்கு மட்டும் தன் பார்வையை பதிலாக கொடுத்தாள். ‘நான் ரிசைன் செய்றேன்னு சொன்னா இவன் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? ‘

“ஹேய் நீ ஜாபை ரிசைன் செய்ற ப்ளான்லயா இருக்க?....இதென்ன நீ இவ்ளவு கிட்டிஷா இருக்க? என்னை மோசம்னே வச்சுக்கோ…..என்னைப் பார்த்து பயந்து ஓடினனா அடுத்த ஆஃபீஸ்ல என்னைவிட மோசமான ஒருத்தன் இருந்தா என்ன செய்வ?”

‘ஓ எல்லோரும் தன்னை மாதிரியேதான் இருக்காங்கன்னு நினைப்பு போல இவனுக்கு…’

“நான் உங்க டீம்க்கு இனி வரலை….ஒழுங்கா ஆஃபீஸ் வர வழியப் பாரு…”  லிஃப்டைவிட்டு வெளிப் பட்டவன் திரும்பிப் பாராமல் சென்றுவிட்டான்.

சந்தோஷமாய் இருந்தது மனோஹரிக்கு.

டுத்து சில தினங்கள் ஈவென்ட்லெஸ். அந்த மித்ரன் உண்மையில் கண்ணில் படவே இல்லை. ட்ரெயினிங்கும் படு சீரியஸாக சென்று கொண்டிருந்தது. அன்று மாலை ஆஃபீஸில் வைத்து திரவியாவுக்கு ஹைஃபீவர். அவளை தனியாக அனுப்ப மனோஹரிக்கு மனம் வரவில்லை.

அதனால் ஒரு ஆட்டோவில் திரவியாவின் வீட்டில் சென்று அவளை விட்டுவிட்டு அவள் வீட்டிற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் மனோஹரி. எல்லாம் குட்டி குட்டி ஓட்டு வீடுதான். 

“நான் இப்படி வர்றேன்னோ, இல்ல பணம் தர்றேன்னோ வெளிய சொல்லாத….”

சொல்லிக் கொண்டிருந்தது ஒரு ஆண் குரல். அந்த சத்தம் காதில் விழுந்த நொடியே அது யார் குரல் என புரிய தூக்கி வாரிப் போட்டது மனோவிற்கு.

சர்வமும் நடுங்க அந்த குரலின் திசையை நோக்கிப் பார்த்தாள் இவள். ஒரு ஆள் உயர புதர் செடிக்கு அப்புறமாக தெரிகிறது இரு உருவம். புதரின் அடர்த்தியில் அப்புறம் நிற்பது ஒரு ஆணும் பெண்ணும் என்பது வரை புரிகிறது.

அந்த ஆண் தான் யாரென இவளுக்கு தெரியுமே….அந்த பெண்ணின் சிவப்பு நிற புடவையின் சில திட்டுகளைத் தவிர வேறு ஒன்றும் இங்கிருந்து பார்க்க தெரியவில்லை.

 இன்னுமாய் அருகில் சென்றாள். ஹோப்பிங் அகெய்ன்ஸ்ட் ஹோப்……அது அவனாக இருந்துவிட கூடாது…..மனம் முழுவதும் இதையே எதிர்பார்த்து துடிக்க,  நெஞ்சை அடைத்துக் கொண்டு வருகிறது அவனது பக்கவாட்டு தோற்றம் கண்ணில் படவும்.

அவன் தான். அகதன் தான்.

இப்படிப்பட்டவனா இவன்? ஒழிந்து ஒழிந்து ஒரு பொண்ணை பார்க்க வருவதற்க்கும் பணம் தருவதற்கும் என்ன அர்த்தம் இருந்துவிட முடியும்….?

“ஹவுஸிங் லோன் ஈ எம் ஐ பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க மஹி குட்டி….இனி நெக்‌ஸ்ட் ஹைக் வரை நான் கொஞ்சம்  சிக்கனமா இருந்தாகனும்….” நேத்து ஹோட்டலுக்கு போகாமலிருக்க இவளுக்கு அகத் சொன்ன காரணம் மனதில் சுழித்து ஓடுகிறது….. மனம் செத்து சுண்ணாம்பாகிறது சொல்லிக் கொள்ளாமலே…

ஒரு பக்கம் ஏமாற்றம் மற்றும் நம்பிக்கை துரோகம் உயிர் வரை பரவி கண்ணில் நீர் பெருகுகிறது என்றால் மறு புறம் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

அடுத்த நொடி அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள் மனோஹரி. நெக்‌ஸ்ட் செகண்ட்  அந்த அகதனின் கன்னம் பழுத்திருக்கும்…..

ஆனால் அதே நொடி அகதன் அருகில் நின்ற அந்த பெண் உருவம் இவள் கண்ணில் படுகிறது.

அவள்…

“Friends, இந்த  வாரம்travel மற்றும்celebration காரணமாகஎபிசோட்சின்னதாய்அமைந்துவிட்டது. அடுத்தவாரத்திலிருந்துபெரியஎபிசோடுகள்தருகிறேன். நன்றி

Episode # 01

Episode # 03

தொடரும்!

{kunena_discuss:928}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.