(Reading time: 16 - 31 minutes)

03. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

கதன் காலரை இவள் கைகள் பிடித்த அதே நேரம்  இவள் கண்கள் அந்த அருகிலிருந்தவள் மேல் போகிறது. அந்தப் பெண்ணைக் கண்டதும் ஒரு கணம் தூக்கி வாரிப் போட அடுத்த கணம் புரியாமல் விழித்தாள் மனோஹரி. அருகில் நின்ற அந்த பெண்ணுக்கு வயது குறைந்தது 70 தை தாண்டி இருக்கும்.

விஷயம் என்னவென்று புரியவில்லை எனினும் இவள் நினைத்த விதமாய் எதுவும் இருக்காது என்பது புரிய இதற்குள் இவளது கை அதுவாக இறங்கி இருந்தது. முகத்தில் பரிதாப பல்ப் பாவம்.

“ஹேய் எஃப் எம் இங்க என்ன செய்ற? “ என வெகு காஷுவலாய் ஆரம்பித்த அகதன் “இது உன் ஷர்ட் இல்லமா என்னுது” என கலாய்த்தான்.

manam koithai manohari“போடா அண்ணா “ என்றாள் இவளும். அகதன் சூழலை இயல்பாய் காண்பித்துக் கொள்ள நினைக்கிறான் என்பது இவளுக்கும் புரிகிறது தானே.

“பாட்டிமா இது என் தங்கை…மகி இது பாட்டிமா “ அறிமுகம் செய்து வைத்தான்.

மரியாதையாய் கை கூப்பினாள் தங்கை.

“தம்பி தான்மா எங்களுக்கு உதவி செய்யுது…. குடி இருந்த வீட்ல வாடகை குடுக்க முடியலைனு என்னையும் என் பேத்தியையும் வெளிய தள்ளி கதவை பூட்டிடாங்கம்மா….பாத்ரம் பண்டத்தோட தெருவுல உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்த எங்க நிலமைய பார்த்துட்டு வாடகை பாக்கி குடுத்துட்டு போனார்….. இப்பவும் பேத்தி படிச்சு முடிக்ற வரை மாச மாசம் வாடகை தாரேன்னு சொல்லிருக்கார்….நாலு வீட்ல வேலை செஞ்சு சாப்டுறுவோம்மா….ஆனா வயசு பிள்ளைய கைல வச்சுகிட்டு தலைக்கு மேல கூரை இல்லாம நாங்க எங்க போவோம்?” தன் கதையை சொன்னார் பாட்டிமா.

ற்று நேரம் இயல்பாய் அங்கு பேச வேண்டியதை பேசிவிட்டு தன் அண்ணன் பைக்கில் வீட்டிற்கு கிளம்பினாள் மனோஹரி. வரும் வழியில் பைக்கின் பில்லியனில் இருந்த படி

“பாட்டி வீட்ல பொண்ணு இருக்குது …சோ நீ வந்து போறதோ ஹெல்ப் பண்றதோ இந்த ஏரியால கன்னா பின்னானு தப்பா தெரியும்….அதோட மாசம் மாசம் பணம் கொடுக்க ஆள் இருக்குன்னா பொதுவா வாடகைய வேற ஏத்துவாங்க...அதான் வீட்ல வச்சு பாக்காம இப்படி அந்த பாட்டிய வெளிய வச்சுப் பார்த்திருக்க இதெல்லம் புரியுது….ஆனா இங்க எதுக்கு முதல்ல தெருவுல வந்து சுத்திகிட்டு இருந்த அது தான் புரியலை”  மனோஹரி தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்க

இன்ஸ்டென்டாய் அவன் முகத்தில் வந்து மறைந்த அந்த வெட்கம் கலந்த சந்தோஷ மின்னல் வல பக்க மிரர் வழியாக இவள் பார்வைக்கு கிடைத்து….வாவ் இந்த அகத்தி கீரை கூட லவ் பண்ணுது என உணரவைத்தது மனோஹரியை.

“டேய் அண்ணா யார்டா அது என் அண்ணி ? வீட்ல மட்டும் சொல்லாம ஊர் உலகத்துக்கெல்லாம் அனவ்ன்ஸ்பண்ணிகிட்டு  இருக்கியா என்ன?” எப்பவுமே ஸ்ட்ரெய்ட் அட்டாக் தான் மனோஹரி ஸ்டைல்.

“ஏய் … ஏய் ….நீ வேற….நான் இன்னும் அவட்டயே சொல்லலை……” பதறினான் அண்ணன் அஸ் தோ அழுத்தி சொன்னா அவனோட அவளுக்கு காதுல விழுந்து கதை கந்தலாயிடும்ன்ற மாதிரி….

“சோ லவ் பண்றது நிஜம்…?”

“ஆமாம் மகி”

“அப்ப…?”

“ அது நான் பிஜி பண்றப்ப எங்க காலேஜ்ல அவ யுஜி ஜாய்ன் செய்தா….….என் டிபார்ட்மென்ட் கூட கிடையாது அவ…..ஒரே ஃபாரம்ல இருந்தோம்…அப்ப அறிமுகம் ஆச்சுது…அடிக்கடி பேசிப்போம்… அப்ப பெருசா எதுவும் தோணலை….அடுத்து நான் கோர்ஸ் முடிச்சு வந்த பிறகு … ஒரு மிஸ்ஸிங் ஃபீலிங்….எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு….”

“இருந்தாகனுமே….நீ லவ் பண்றன்னு நினச்சா எனக்கு மயக்கமே வர்ற மாதிரி இருக்குதே….சரி மேல சொல்லு….”

“ சரி நாள் போக போக சரியாயிடும்னு நினச்சு இப்ப வரை சமாளிச்சேன்….…இப்ப கரியர்ல செட்டிலாகிட்ட…பொண்னு பார்க்கலாம்னு அப்பா ஆரம்பிக்கிறப்பதான்  என்னால வேற யாரையும் நினைக்கவே முடியாதுன்னு தெரியுது…”

மனோஹரியின் மனதில் அண்ணனுக்காய் தவிப்பு வந்து உட்காருகிறது. கிடைக்காத பொருளுக்காய் ஏங்கின கதையா ஆகிடக் கூடாதே இவள் அண்ணனோட நிலை.

“என்னாச்சுண்ணா?” இவளது இந்த குரலில் அகதனுக்கு தங்கையின் தவிப்பு புரிகிறது.

“ஹேய் நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் இல்ல…. முன்னமே அவளோட அண்ணாவும் எனக்கு பழக்கம்….அவன்ட்ட பேசினால் அவங்க வீட்ல இப்ப அவளுக்கு கல்யாணம் செய்ற ஐடியா இருக்கா இல்லையான்னு தெரியுமில்லையா…..? அடுத்து நம்ம அப்பா வந்து பேசுறதுக்கு வசதியா இருக்கனும்தானே….அதான் லாஸ்ட் வீக் வந்தேன்…..அப்பதான் இந்த பாட்டி இன்சிடென்ட்…”

“சோ அம்மா அப்பாவோட அஃபீஷியலா வந்து பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னால இப்படி அனஃபீஷியலா ஒரு ரிகர்சலா?” அகதன் பதிலில் கூலாகி இருந்த மனோஹரியின் குரலில் கிண்டல் இப்போது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.