(Reading time: 16 - 31 minutes)

ஸ்கூட்டி கிளம்பி சற்று தொலைவு செல்லும் வரை இவள் அருகில் நின்ற இடத்திலிருந்து சற்றும் அசையாமல் செல்லும் வாகனத்தையே பார்த்திருந்தவன் இவர்கள் சத்தம் சென்று கொண்டிருக்கும் அவர்கள் காதில் விழாத தொலைவு அவர்கள் சென்ற உடன்…

“ இப்படித்தான் இங்க வந்து நிப்பியா…?” சிறு குரலில் கடித்து துப்பினான் வார்த்தைகளை. குரலில் அப்படி ஒரு சீறல்.

அவ்ளவுதான் அவனை அப்படியே பஸ்பமாக்கி இருப்பாள் மனோஹரி  அதற்குள்

“சரி வா….முதல்ல அவங்கள ஃபாலோ பண்ணனும்…” என்றபடி ஏரத்தாள ஓடத் தொடங்கினான் பார்க்கிங்கை நோக்கி.

“வாட்?” என்று எகிறலாக ஒரு மனமும் ‘எதுவும் ப்ரச்சனையோ’ என்று கன்சர்னாக இன்னொரு மனமும் குரல் கொடுத்தன மனோஹரிக்குள் ஒரே நேரத்தில்… இவன் என்ன செய்கிறான்?

“லுக் இங்க ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு ஏற்கனவே மிஸ்ஸிங் அதான்….ப்ளீஸ் வா உன்னை சேஃபா பக்கத்துல உள்ள பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றேன்…. அதுக்குள்ள இப்ப போறவங்களை பத்தி உனக்கு தெரிஞ்ச இன்ஃபோ சொல்லு…..”

என்றபடி ஓடிக் கொண்டிருந்தவன் தன் பின்னிருந்து பிஸ்டல் ஒன்றை உருவி, ஓடிய படியே அதிலிருந்த மகஸினை கையில் எடுத்து காண்பித்தான். “ லுக் மனு இது ஃபுல்லி லோடட்…. இதை ப்ரெஸ் செய்தா ஆன்….இப்ப இதை ப்ரஸ் பண்ணி யூ கேன் ஷூட்…. இத வச்சுக்கோ….என் கூட கார்ல வருவதானே இப்போ”

ப்ரமித்துப் போனாள் மனோஹரி. என்ன செய்கிறான் இவன்?

“ப்ளீஸ் டைம் ஆகுது மனு….வரலைனா சொல்லு உனக்கு வேற ஏதாவது அரேஞ்ச்மென்ட் செய்றேன்…அதுக்குள்ள அந்த பூனமா மோனமா…அந்த கதை எங்க போகும்னு தெரியலை….அதான் உன்னை என் கூட வர சொல்றேன்…”

வேக வேகமாக சென்று சற்று சூடாயிருந்த அந்த ப்ளாக் நிற பிஸ்டலை கையில் வாங்கிக் கொண்டு அவன் திறந்து காமித்த முன் கதவின் வழியாய் காரில் ஏறி அமர்ந்தாள் மனோஹரி. அடுத்த நொடி கார் சத்தமின்றி சீறிப் பாய்ந்தது.

“தேங்க்ஸ் மனு இப்ப சொல்லு அவன் என்ன சொல்லி கூட்டிட்டுப் போறான் அவளை…?”

“என் பேர இப்படி  ஷார்ட் பார்ம்லலாம் கூப்ட வேண்டாம்.” அவள் கண்களை சாலையில் வைத்த படி சொன்னாள். தொலைவில் பூனத்தின் பிஸ்தா க்ரீன் ட்ரெஸ் கண்ணில் தட்டியது. கிருபாகரும் அவளும் சென்று கொண்டிருப்பது தெரிகிறது.

“ரொம்ப லாங்கா இருக்கு உன் நேம்….ஸ்பீடா உன் முழு பேர சொல்ல கண்டிப்பா எனக்கு ட்ரெய்னிங் வேணும்….ப்ளீஸ் அதுவரைக்கும் …..” அவர்களை ப்ராப்பராக ஃபாலோ செய்தான் மித்ரன்

மித்ரனின் ப்ளீஸுக்கு சரி.. இல்லை… என்று அந்த  பதிலும் சொல்லாமல் கிருபாகர் என்ன சொல்லி பூனத்தை கூட்டிச் செல்கிறான் என புள்ளி கமாவோடு விளக்க தொடங்கினாள் இவள்.

“பேட்ச்ல நிறைய பாய்ஸ் உண்டு…பட் அவங்கட்டலாம் ஹெல்ப் கேட்காம பூனத்தை கூப்டவும்தான் சந்தேகமாகி துணைக்கு வந்தேன்…..பூனமும் நானும் ரெண்டு பேரா இருக்றதால ப்ராப்ளம் ஆகாது….” இப்படித்தான் இங்க வந்து நிப்பியா என்ற அவனது கேள்விக்கு இப்போது பதில் சொல்லி வைத்தாள்.

“ஏன் மனு அந்த பூனமும் கிருபாகரனும் சேர்ந்து உன்னை கிட்நாப் பண்ண  ப்ளான் செய்து கூட இப்படி கூட்டிட்டு வந்திருக்கலாமில்லையா?....நான் வரவும் சாதாரணம் போல கிளம்பி போய்ருக்கலாமில்லையா? எதையுமே ஏன் ஒன் சைட்டாவே யோசிக்ற?”

நிச்சயமா இதை இப்படி ஆங்கிள்ள அவள் யோசிக்கவில்லை தான். ஆனாலும் மற்ற நேரமாக இருந்திருந்தால் சிரித்திருப்பாள். கூட இருக்க பேட்ச்மேட் கேர்ளை இவ்ளவா சந்தேகப்பட முடியும்? ஆனாலும் இப்ப ஒரு கேர்ள் மிஸ்ஸிங் என்ற இன்ஃபோ அவளை அவன் சொல்லும் விதத்தையும் அக்ரி செய்ய வைக்கிறது.

 அந்த கிருபாகர் மற்றும் பூனத்தை ட்ராஃபிக்கில் தொலைப்பதும் மீண்டும் பிடிப்பதுமாக அதே கவனத்தில் சற்று நேரம் மௌனமாக செல்ல “உன் ஸ்டாப் எது மனு…?” என்றான் மித்ரன்.

“அதை அப்பவே தாண்டியாச்சு….இப்ப என்னை ட்ராப் பண்ண ட்ரை பண்ணா இவங்களை மிஸ் செய்துடுவோம்….பூனம் வீட்ல சேஃபா இறங்கின பிறகு என்னை ட்ராப் பண்ணுங்க…..” அந்த டயலாக்கில் புதைந்திருந்த நான் உன்னை நம்புறேன் என்ற இவளது ஹிட்டன் மெசேஜில் ஒரு கணம் அவன் பார்வை இவள் மீது படிந்து திரும்புகிறது என இவளுக்கு புரிகிறது.

“உங்க பிஸ்டல் என்ட்ட தான் இருக்குது” என்று அந்த பார்வைக்கு பதில் சொல்லி வைத்தாள் பெண். வாய்விட்டு சிரித்தான் அவன். என்ன முயன்றும் அவன் சிரிப்பதை திரும்பிப் பார்க்காமல் இருக்க இவளால் முடியவில்லை.

இப்பொழுது ஹெவி ட்ராஃபிக் ஏரியாவை தாண்டி ரெசிடென்ஷியல் பகுதிக்குள் நுழைந்திருந்தது கிருபாகர் பூனம் அண்ட் கோ. அடுத்து ஒரு வீட்டின் முன் நிற்கிறது அந்த ஸ்கூட்டி.

அடுத்து கிருபாகர் இறங்கிக் கொள்ள ஸ்கூட்டி பூனம் கைக்கு வர அவள்  தன் பயணத்தை தொடருகிறாள். அவளும் தன் வீட்டிற்குள் நுழையும் வரையும் ஃபாலோ செய்த மனோஹரியும் மித்ரனும் இபொழுது யூ டர்ன்.

அவள் சொன்ன பஸ்ட்டாப்பில் இறக்கி விட்டான். “சேஃபா போ…இது என் பெர்சனல் நம்பர் வீட்டுக்கு ரீச் ஆனதும் ஒரு மெசேஜ் பண்ணு….ஆன் த வே என்ன ஹெல்ப் வேணாலும் கால் பண்ணு….” சொல்லிவிட்டு அவன் விடை பெற்றான்.

ஆனாலும் இவள் பஸ் பிடித்து வீட்டை அடைந்து வீட்டின் காம்பவ்ண்டிற்குள் நுழையும் போது தெருவின் மறு முனையில் மித்ரனின் கார் திரும்புவதைப் பார்க்க முடிகிறது இவளால். இவள் சேஃப்டிக்காக இங்க வரை ஃபாலோ செய்து இருக்கான். சிரித்துக் கொண்டாள் தனக்குள். சின்சியர் சிகாமணி.

நைட் பெட்டில் போய் விழுந்த நேரத்திலிருந்து நடந்த விஷயங்களே மனதில் ஓடிக் கொண்டு இருக்கின்றன மனோஹரிக்கு. ட்ரெய்னிங் செஷன்ல. டேட்டிங் அது இது என அவன் பேசின விதம் தப்புனாலும் அவனை அப்படி பேச வச்சது இவ பிஹேவியர் தான். அவனைப் பத்தி எதுவும் தெரியாம இவபாட்டுக்கு அத்தனை பேர் முன்னால அவனை பொறுக்கி அது இதுன்னு சொன்னாள் தானே….

நாளைக்கு போய் அவன்ட்ட அதுக்கு சாரி கேட்கனும்….அதுக்கு பிறகு அவன் பேசினது தப்புன்னு தோணினா அவன் சாரி கேட்டுகிடட்டும்… பட் என் பக்கம் தப்புன்னு இருக்க கூடாது. சில நாட்களுக்குப் பின்பு இன்று மனதிற்கு ஒரு வகையில் நிம்மதியாய் இருக்கிறது. தூங்கிப் போனாள் மனோஹரி.

டுத்த நாள் எதை கொண்டு வருகிறதென்று யாருக்கு தெரியும்?

Episode # 02

Episode # 04

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.