(Reading time: 16 - 31 minutes)

ப்ச்…எங்க அவ…. கண்ணுலயே மாட்டல…” சலித்துக் கொண்டான் அகதன்.

“அவ அண்ணன் நல்லவன்….தங்கச்சிய சேஃப்காட் செய்ய தெரிஞ்சவன்….” வாரினாள் அவன் தங்கை இப்போது.

“ஜோக்‌ஸ் அபார்ட்…..உண்மையிலேயே அவன் நல்லவந்தான் மகி….ரொம்ப பாசமான பையன்…..எஸ்பிஐ ல ப்ரபஷனரி ஆஃபீஸரா இருக்கான்……. நம்ம வீட்டுக்கு ரொம்பவும் சூட்டாகிற ஃபேமிலி…..உனக்கு பார்க்கலாம்னு எனக்கு ஒரு தாட் இருக்கு….” இயல்பான குரல் போல் காமித்துக் கொள்ள முயன்றாலும் அகதனின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு மனோஹரிக்கு புரியாமலில்லை

“வண்டிய நிறுத்து….” வெடித்துக் கொண்டு வந்தன அந்த வார்த்தைகள் அவளிடமிருந்து.  குரலில் அத்தனை அழுத்தமும் கோபமும் இருந்தது.

“என்ன மனோ நீ…”

“இப்ப வண்டிய நிறுத்தலை நான் குதிச்சுறுவேன்…” சட்டென நிறுத்திவிட்டான் அகதன். அவன் தங்கையின் குரலை அவனுக்கு தெரியும். இந்த குரலில் பேசினால் அவள் சொன்னதை செய்வாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவளும் பைக்கிலிருந்து இறங்கிவிட்டாள் இமிடியட்டாக…. “நீ போ நான் பஸ் பிடிச்சு வந்துகிடுறேன்….”

“மனோ “ என்றான் அகதன் இப்போது. நீ பண்றது உனக்கே சரின்னு படுதாமா? என்ற கண்டண தொனி குரலில். அவளை கண்ணோடு கண்ணாக பார்த்தான்.

“நான் பேசுனது பிடிக்கலைனா என்ன பிடிக்கலை ஏன் பிடிக்கலைனு சொல்லு…அதைவிட்டுட்டு இதென்ன ரியாக்க்ஷன்….?.”

மெல்ல அவள் பார்வை தரை தொட்டன. “செம எரிச்சலா வருது இப்டில்லாம் பேசினா” மனதில் அந்நேரம் உணர்ந்த உணர்வை அப்படியே சொன்னாள். அதே நேரம் இதற்கு இவ்வளவு ரியாக்ட் செய்திறுக்க வேண்டாம் என்றும் உறைக்கிறது.

“நம்ம வீட்ல எதுலயாவது இதுவரைக்கும் உன்னை கம்பல் செய்துறுக்கமா மகி…..அதுவும் இதுல செய்வமா?....”

“…………”

“ நல்ல இடமா பட்டுது அதான் கேட்டேன்….பிடிக்கலைனா இனி இதைப் பத்தி பேச வேண்டாம்…”

அகதன் இதை சொல்லிய தொனியில் இன்னுமாய் குன்றல் சலனம் பெண் மனதில்.

“நீ இன்னைக்கு என்ன மூட்ல இருக்கன்னே தெரியலை….எதுக்கெடுத்தாலும் ரியாக்ட் செய்ற…….ஆஃபீஸ்ல எதுவும் ப்ரச்சனையா மகி குட்டி….?” அகதன் கேட்கும் போது திரும்பவுமாக அண்ணன் பைக்கில் ஏறிக் கொண்டிருந்தாள் அவள்.

 “விடுண்ணா….புது ஆஃபீஸ்…ஏதோ டென்ஷன்….பசிக்க வேற செய்யுது…”

 வழியில் ஹோட்டலுக்கு கூட்டி போய்விட்டே வீட்டிற்கு அழைத்துப் போனான் அண்ணன்.

இரவு தன் படுக்கையில் படுத்தவளுக்கு இன்றைய டாபிக் டு திங்க் இதுதான். ஏன் இப்படி சட்டு சட்டுன்னு ரியாக்ட் செய்தா அகதன்ட்ட….?

ன்று ஆஃபீஸில் ஒரு வித மந்த உணர்வு. இத்தனைக்கும் வந்த முதல் நாள் மட்டும் தான் கம்யூனிகேஷன் ட்ரெய்னிங்….மத்தபடி இப்பொழுதெல்லாம் ப்ராடக்ட் ட்ரெய்னிங்…ரொம்பவும் புது விஷயம்…கவனமாய் கற்றுக் கொள்ள, இவளது மொத்த மனதையும் தனக்குள் கட்டிப் போட்டுக் கொள்ள ஆயிரம் இருக்கிறது அதில். ஸ்டில் திரவியாவும் இல்லாமல்….. ஒருவிதமாய் கழிந்தது நாள்.

மாலை ட்ரெய்னிங் முடிந்து இவள் பேக்கை எடுத்துக் கொண்டிருந்த நேரம் இவளிடம் ஓடி வந்தாள் இவள் பேட்ச் மேட் அந்த பூனம். “ப்ளீஸ் மனோஹரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா….? நம்ம ட்ரெய்னர் கிருபாகரன் சார் என்னை யார்ட்டயும் சொல்லாம தனியா இங்க வெயிட் பண்ண சொல்றார்….என்னமோ ஒரு மாதிரி இருக்குது” இவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மிக அருகில் வந்து சிறு குரலில் படபடத்தாள் அவள்.

பூனம் ஒரு குஜராத்திப் பெண். வெண்ணை நிற முகமும், தோள் வரை வெட்டப்பட்ட முடியும், முட்டுக்கு மேலேறிய ஸ்கர்ட்டுமாய் ஆஃபீஸ் வருபவள். கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்பதை உலகம் நம்பவே முடியாது அப்படி ஒரு அப்பியரன்ஸ் அவளது. பேட்ச்சிலிருக்கும் அத்தனை ஆண்களின் தோளிலும் கை போட்டு பேசும் நட்பு மங்கை. பட் பெண்களிடம் பேசுவது ரேர். இவளைப் பார்த்து இத்தனை நாட்களில் ஒரு முறை ஸ்மைல் செய்திருக்கிறாளோ? யோசிக்கத்தான் வேண்டி இருக்கிறது.

ஆனால் அவள் சொல்லும் தகவலும் கேட்கும் உதவியும்  அதற்கு மேல் பூனத்தைப் பத்தி எதையும் மனோஹரியை யோசிக்க விடுவதாய் இல்லை. மனம் அந்த கிருபாகரனை அனலைஸ் செய்கிறது. அப்படமாய் பொறுக்கி என காண்பித்துக் கொள்ளும் வகையில் இதுவரைக்கும் எதையும் செய்ததில்லைதான் அந்த ஆள்…

“நான் எல்லோர்ட்டயும் சோஸியலா பழகுறேன்னதும்…..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லுவேன்னு நினைக்கிறான் போல….அந்த ஆள் கிளம்புற வரை  கேஷுவலா இங்க நின்னு என்ட்ட பேசிட்டு இருக்ற மாதிரி வெயிட் பண்ண முடியுமா…ப்ளீஸ் மனோஹரி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.