(Reading time: 16 - 31 minutes)

டுத்து ஒவ்வொருவராய் கிளம்பிச் செல்ல இவளும் பூனமுமாய்….. வாய் பேசிக்கொண்டு இருந்தாலும்  மனம் சுற்றிலும் இருக்கும் சேஃப்டி பாய்ன்ட்ஸ், ரிஸ்க் நிலை என எல்லாவற்றையும் ஆராய்கிறது. இந்த ட்ரெய்னிங் ரூமை மட்டும் உள்ள பூட்டிட்டா போதும்… பெர்ஃபெக்ட் அக்கோஸ்டிக்‌ஸ்…சவ்ண்ட் ஃப்ரூஃப் ஃபீச்சர்ஸ்….என்ன கத்து கத்தினாலும் வெளிய கேட்காது….ஆனாலும் செஷன் முடியவும் ரூமை லாக் செய்ய செக்யூரிட்டி வர்றது வழக்கம்…..அது நல்ல விஷயம்….பட் அந்த செக்யூரிட்டிடயே யாரவது ஒரு பொண்னு தனியா மாட்டினா என்னாகும் கதை….சே எங்க பார்த்தாலும் ப்ரச்சனை…..

இதற்குள் அந்த கிருபாகரன் வருகிறார் இவர்களிடமாக “ எக்‌ஸ்க்யூஸ்மி பூனம் வன் மினிட்…” பூனம் அந்தாள் பின்னால் ஓட இவள் தன் பேக்கை மீண்டுமாய் பேக் செய்கிறாள். அறையின் ஓரத்தில் போய் அவர்கள் ஏதோ பேசிக் கொள்ள இப்பொழுது பூனம் இவளிடம் வருகிறாள். அவள் முகமெல்லாம் நிம்மதியும் சந்தோஷமும்.

“ஹேய் பெருசா ஒன்னுமில்லபா….அவர் பேண்ட்ஸ் கிழிஞ்சுட்டாம்…இன்னைக்கு பார்த்து அவர் பைக்ல வரலை போல…வெளிய போய் ஆட்டோ எடுக்க ஒரு மாதிரி ஃபீல் பண்றார்…..அவர் வீடும் கோட்டூர்புரம் போல…என் வீடும் அங்க தான….அதான் அங்க என்னை ட்ராப் பண்ணமுடியுமான்னு கேட்க்றார்….நான்தான் தேவை இல்லாம டென்ஷனாகி உன்னையும் சேர்த்து குழப்பிட்டேன்……ஸ்டில் தேங்ஸ லாட் மச்சி”

சின்னதாய் புன்னகைத்தாள் மனோஹரி. கிழிஞ்ச ட்ரெஸோட ஆட்டோ பிடிக்க ஷையா ஃபீல் பண்றேன்னு ஒரு பொண்னுகிட்ட வந்து சொல்லிகிட்டு இருக்க இந்த கிருபாகரனோட இன்டென்ஷன் என்ன? என்கிறது அஸ் யூஸ்வல் அறிவு.

“எதுக்கும் நீ என் கூட பார்க்கிங் வரைக்கும் வா மனோஹரி ப்ளீஸ்….அதுக்கு பிறகு ரோடு தானே, அவன் எதுவும் தப்பா நடக்கனும்னு நினச்சா கூட முடியாது.” அந்த பூனம் தான்.

அவள் சொல்வதும் வாஸ்தவமாக பட சம்மதமாக அவளுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள்.

அந்த கிருபாகரன் இவர்களுக்கு சற்று பின்னால். இவர்கள் பிளாக்கை தாண்டி அடுத்த பிளாக்கின் பேஸ்மென்ட் போக வேண்டும்.

மணி 7 தான். இவர்கள் பிளாக்கை கடக்கும் வரை மின்வெளிச்சம் தான். ஆனால் அதை தாண்டியதும் இருட்டு. ஒரு வழியாய் அடுத்த ப்ளாக்கை நெருங்கும் போது

“ஹேய் பூனம் உன் ஸ்கூட்டி கீ ய தா….நான் உள்ள போய் எடுத்துட்டு வரேன்….எதுக்கு தேவை இல்லாம உள்ள நீங்களும்….இங்கயே வெயிட் பண்ணுங்க….” அந்த கிருபாகரன் கேட்க மனோஹரி எதையும் யோசிக்கும் முன் கூட கீயை கொடுத்திருந்தாள் பூனம்.

அடுத்து பெரிதாய் யோசிக்க எதுவுமில்லை என்பதால் அமைதியாய் நின்றிருந்தாள் இவள். அந்த பூனமோ தன் மொபைலை குடைந்தாள். தொட்டு ஓடும் சில்லென்ற ஒரு காற்றும்… இரண்டு 10 ஸ்டோரி பில்டிங்குகளுக்கு  இடையில் தரையில் நின்று நிமிர்ந்து பார்க்கும் போது ஆழமாய் தெரியும் அந்த கறுப்பு வானமும்…இருட்டும்…. தூரத்தில் தெரியும் வெளிச்சமும்….

ப்ளாக் பேண்ட்ஸும், வைட் ஸ்ட்ரைப்ஸ் சாய்வாக ஓடிய ப்ளாக் ஷார்ட்டுமாய் அன்று அந்த மித்ரன் சி இ ஓ அறையில் நின்ற படி டெஸ்க் டாப்பை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளைப் பார்த்து திரும்பிய காட்சி மனதில் மீண்டுமாய் விரிய….அவன் இப்போதும் அவளைப் பார்ப்பது போல் ஒரு உணர்வு….இது ஒன்னு….அப்பப்ப சம்பந்தம் சம்பந்தம் இல்லாத நேரத்துலலாம் மனசுல வந்து என்னமோ எல்லா நேரமும் அவன் மானிடரிங்லயே இருக்ற மாதிரி ஒரு ஃபீல்…சே… வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென பார்வையை இறக்கிக் கொண்டாள்.

அதே நேரம் கிருபாகரன் பூனத்தின் ஸ்கூட்டியை ஓட்டியபடி வந்தான். “நீ ஏறு பூனம் ஐ’ல் ரைட்….பை மனோஹரி…பத்ரமா போங்க….” அந்த கிருபாகரன் சொல்லிக் கொண்டிருக்க இந்த பூனம் இதற்குள் பின் சீட்டில் ஏறி இருக்க, வண்டியை கிளப்பினான் அவன்.

“பை மனோ…சியூ…” அந்த பூனம் தான்.

துணைக்கு என கூட்டி வந்துவிட்டு இப்படி விட்டுவிட்டு போனால்…? சுரு சுரு என இவளுக்குள் எரிச்சல் ஏறிய அதே நொடி,  அவளுடைய பெர்சனல் ஸ்பேஸில் அவன் நிற்பதாய்  உணர்வு….அதான் அந்த மித்ரன். அல்மோஸ்ட் அவன் பெர்ஃப்யூம் ஸ்மல் வரை உணர்கிறது மனம். பெண்ணுக்குள் அலர்ட்நெஸும்…டிஃபென்ஸிவ் ஃபீலும் அதுவாக வருகிறது.

“இங்க என்ன செய்றீங்க?” என்ற அவனது ட்ரேட் மார்க் அமெரிக்கன் ஆக்சென்ட் இங்க்லீஷ் அவன் வந்திருப்பது  உணர்வல்ல நிஜம் என்றது..

உண்மையில் இவளது பெர்சனல் ஸ்பேஸில் தான் நின்றிருந்தான். அத்தனை அருகில். ஆனால் கேள்வி மட்டும் இவளைப் பார்க்காமல் கிளம்பிக் கொண்டிருந்த அந்த பூனம் அண்ட் கோவைப் பார்த்து.

சட்டென கீழிறங்கினாள் பூனம். ஸ்கூட்டியோடு ஒரு வித அட்டென்ஷனில் கிருபாகரன்.

“பூனம் வீடு பக்கம் தான் என் வீடும்…என் பைக்கை சர்வீஸுக்கு அனுப்பிருக்கேன்..சோ பூனம் என்னை ட்ராப் பண்றதா ப்ளான்.”

“ஓ…குட்…கிளம்புங்க….” அவர்களைப் பார்த்து சொன்னவன் “வா மனு “என்றான் இவளிடம்.

திடும் என்றது இதயம். ஏதொ ஒன்று உடைகிறது இவளுள். அலை அலையாய் அவள் மனதில் அமிலப் புகை. மனுவா?

அவன் கண்கள் இப்பொழுது இவள் கண்ணிற்குள். இப்போதைக்கு எகிறாதன்றானோ? அமைதியாய் நிற்பது சரி என்று படுகிறது. நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.