(Reading time: 14 - 27 minutes)

02. காதலை உணர்ந்தது உன்னிடமே - 01 - சித்ரா. வெ

வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக தன் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டாள் வளர்மதி. கோவிலில் இருந்து கிளம்பிய மகன் இன்னும்  வராததும், சுஜாதாவிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பிய தன் மனைவியையும் நினைத்து தன்னையே நொந்து கொண்டார் செந்தில், தன் மகள் பிரணதியை அழைத்து ஆரத்தி தட்டை தயார் செய்து வைக்க சொல்லி விட்டு அவர்களுக்குக்காக காத்திருந்தார்.

வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், பிரணதியிடம் ஆரத்தி தட்டை எடுத்து வரச் சொன்னார் செந்தில்.

காரில் இருந்து இறங்கிய யுக்தாவிற்கு பிரணதி ஆரத்தி எடுக்க வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் யுக்தா.

Kadalai unarnthathu unnidame

பிருத்வியும் கூட நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சாவித்திரி நினைத்தாள் என்றால்.... ஆரத்தி எடுக்க கூட வளர்மதி வரவில்லையே என்று சுஜாதா நினைத்தாள்.

சாப்பிட குளிர்பானம் எடுத்து வந்து கொடுத்தாள் பிரணதி, அதை சாப்பிட்டு முடித்ததும் என்ன பேசுவது என்று தெரியவில்லை யாருக்கும், அங்கு மௌனமே நீடித்தது,

சிறிது நேரம் ஆனதும் செந்திலிடம் சுஜாதாவே பேச்சை ஆரம்பித்தாள், "அண்ணா அப்போ நாங்க கிளம்பறோம், இனி யுக்தா உங்க வீட்டு பொண்ணு, அவளை நல்லபடியாக பார்த்துக்கங்க" .

"என்ன சுஜாதா, இதை நீ எனக்கு சொல்லனுமா??? நாங்க நல்லபடியா பார்த்துக்கறோம்"

"அக்கா நம்ம போகலாமா?" என்ற சுஜாதாவிடம் "கொஞ்சம் இரு" என்று கூறிய சாவித்திரி, செந்திலைப் பார்த்து "நாங்க கொஞ்சம் யுக்தாவிடம் பேசிவிட்டு போகிறோம்" என்றாள். அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அவர் சென்றார்.

அவர் போனதும் சுஜாதா, சாவித்திரியிடம், "அக்கா இவக்கிட்ட இப்போ என்ன பேசப் போறீங்க?? இவளால் தான் நாம தலகுனிஞ்சு நிக்கறோம்....  நாம சொல்வதை இவ கேக்கவா போறா...??? இவக்கிட்ட பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லக்கா... வாங்க போகலாம்..."

"சுஜாதா நீ கொஞ்சம் வெளியே இரு... நான் யுக்தாகிட்ட பேசிட்டு வரேன்..."

 சொன்னதும் கோபமாக வெளியில் போய்விட்டாள் சுஜாதா, அவள் போனதும்.... சாவித்திரி யுக்தாவிடம்..

"யுக்தா உன் மேலே அம்மாவுக்கு கொஞ்சம் கோபம், அதான் இப்படி பேசறா, நீ அதுக்கெல்லாம் கோபப்படாதே என்ன.."

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

"எனக்கு புரியுது சாவிம்மா, அம்மா மேலே எனக்கு எந்த கோபமுமில்லை,

 சாவிம்மா... அம்மாவை சொல்றீங்க, உங்களுக்கு என் மேலே கோபமில்லையா??"

"கோபம் இருக்கு, ஆனால்... அதை காட்டுகிற நேரம் இது இல்லை, உனக்கு இன்னிக்கு ஒரு நல்லது நடந்திருக்கு.. இந்த சமயத்துல எல்லாரையும் மாதிரி உன்மேலே என்னால கோபப்பட முடியலம்மா.."

யுக்தா சாவித்திரியை அணைத்துக் கொண்டாள் "யுக்தா உனக்கு கல்யாணம் நடந்திடுச்சு... உன்மேலே பிருத்விக்கும், இந்த வீட்டில் இருக்கிறவர்களுக்கும் கோபம் இருக்கு.. இதெல்லாம் அனுசரிச்சு நீதான்மா பார்த்து நடந்துக்கனும், இதுக்கு மேலே உனக்கு எதுவும் சொல்ல தேவையில்லை.. உன்னை பார்த்துக்கம்மா.. நான் வரேன்"

"ம்....  சாவிம்மா, நான் பார்த்து நடந்துக்கறேன், அம்மா, அப்பாவை பத்திரமா பார்த்துக்கங்க.. போய்ட்டு வாங்க"

செந்தில் மற்றும் பிரணதியிடம் விடைப்பெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பினர், அதன்பிறகு உள்ளே வந்த பிரணதியும் செந்திலும், யுக்தாவிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டனர்.

ண்களை மூடி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் வளர்மதி. அறைக்குள் வந்த செந்தில் அவள் அருகில் போய் உட்கார்ந்தார், "மதி அவங்க ரெண்டுபேரும் யுக்தாவை விட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க, சுஜாதாவோட முகமே சரியில்ல.. நீ கீழே வருவனு அவ எதிர்பார்த்துகிட்டு இருந்தா.. சரி அதை விடு, அந்த பொண்ணு வந்ததிலிருந்து ஒரே இடத்தில் உட்கார்ந்துக்கிட்டு இருக்கு....  கல்யாணம் முடிஞ்சிடுச்சு... இதுக்கு மேலே என்ன பண்ணப் போறோம்??? யுக்தாவை பிருத்வி ரூம்ல தங்க வைக்கலாமா...??? எனக்கு ஒன்னும் புரியலை, நீ தான் இதெல்லாம் முடிவு எடுக்கனும்... காலையில் இருந்து யாரும் சாப்பிடல... நான் ஹோட்டலில் ஏதாவது வாங்கிக்கிட்டு வரேன்.."

"செந்தில் அறையை விட்டு போனதும் என்ன செய்வது என்று புரியாமல் உட்கார்ந்திருந்தாள் வளர்மதி. கோபமாக கிளம்பிய தன் மகனை நினைத்து கவலைப் படுவதா.... இல்லை மருமகள் என்ற உரிமையோடு வந்திருக்கும் யுக்தாவை பற்றி கவலைப் படுவதா.. சிறிது நேரம் குழப்பத்தில் இருந்தாள், அப்பொழுது செல் ஃபோன் அடித்தது, புதிய நம்பராக இருக்கவே எடுத்து ஹலோ என்றாள்.

"ஹலோ மதி.... நான் சுஜாதா பேசறேன்.. நீ என் நம்பரை பார்த்தால் எடுப்பியோ என்னவோ?? அதான் சாவி அக்கா ஃபோனில் கூப்பிட்டேன்" மதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

"மதி உன்னோட சங்கடம் எனக்கு புரியுது... பிருத்வி கோபமாக போனதால், என்கிட்ட எப்படி பேசுவதுனு நீ சங்கடப்படுற...  இங்கப் பாரு மதி நடந்த சம்பவங்களால் நம்ம ரெண்டு பேருக்கும் தர்ம சங்கடம், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க கஷ்டமா இருக்கு.... ஆனால் இப்போ நம்ம பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு, அவங்க வாழ்க்கையில் நல்லா இருக்கனும்.. அது தான் இப்போ நமக்கு வேணும்,

 என் பெண்ணை உன் வீட்டில் இன்று விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றால் அது உன் மேலே வச்ச நம்பிக்கை தான்... நான் இருக்க வரைக்கும் நீ கீழே வரவில்லை என்றாலும்.... நான் போனதுக்கு அப்புறம் நீ வருவ.... அவ மேலே இருக்க கோபத்தை விட்டுட்டு அவளை பார்த்துப்பேன்னு எனக்கு தெரியும்.. அதான் நான் உடனே கிளம்பிட்டேன், என் நம்பிக்கையை காப்பாத்தினா...அதுவே போதும், நீ என்கிட்ட பேசக் கூட வேண்டாம்" என்று சொல்லிவிட்டு மதியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்துவிட்டாள் சுஜாதா, கண்களில் நீர் பெருகியது, காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாவித்திரி அவளை சமாதானப்படுத்தினாள்,

"பொண்ணு மேலே இவ்வளவு பாசம் வச்சுகிட்டு எப்பப் பார்த்தாலும் அவக்கிட்ட கோபமாவே பேசற... இந்த பாசத்தை அவக்கிட்ட காட்டினால் என்னவாம்... சரி விடு.... நீ மதிக்கிட்ட பேசினது சரிதான், நீ அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்க.... பாவம் மதிக்கு நம்மோட முகத்தை பார்க்கவே சங்கடமா இருக்கு... நீ சொன்னது சரிதான் நம்ம வந்ததுக்கு அப்புறம் அவ யுக்தாவை நல்லா பார்த்துப்பா...

பிருத்வியும் நல்ல பையன் தான்.... என்ன.... யுக்தா மேலே கொஞ்சம் கோபம், அப்புறம் எல்லாம் சரியாயிடும், நம்ம யுக்தாவும் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிப்பா, ஆனால்... பிள்ளை முகமே சரியில்லை... நீ கொஞ்சம் அவக்கிட்ட பேசிட்டு வந்திருக்கலாம்...."

"எனக்கு புரியுது அக்கா, ஆனால்.... அவ பண்ணதும் தப்புத் தானே... அதுக்கு நாம இப்படி தான் நடந்துக்கனும்... இருந்தாலும் இவ இப்படி நடந்துக்கிட்டதுக்கு நானும் ஒரு காரணம்... அதுமட்டுமில்லை நான் ஒரு அம்மா, பசங்க என்ன தப்பு செஞ்சாலும் அவங்க நல்லா இருக்கனும்னு நினைப்பவ தான் அம்மா...  அவள் பத்தி எனக்கும் கவலை இருக்கு... அதான் நான் மதிக்கிட்ட இப்போ பேசினேன்."

"சரி நம்ம முருகனை கும்பிட்டு வந்திருக்கோம்... நல்லதே நடக்கும்... அவர் எல்லாம் பார்த்துப்பாரு" பேசியப்படியே இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.