(Reading time: 14 - 27 minutes)

பிருத்வி கேட்ட கேள்வியில் கையில் எடுத்த உணவை அப்படியே போட்டுவிட்டாள் யுக்தா, பிருத்வி அப்படித்தான் அவனுக்கு பிடிக்காதவங்கக்கிட்ட அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் பேசுவது பிடிக்காது.. அவன் யார் மீதும் வெறுப்பை காட்டியது இல்லை.. அதனால் இப்படிப்பட்ட தர்ம சங்கடம் இவர்களுக்கு நேர்ந்ததில்லை... ஒரு சிலரிடம் தான் பிடிக்காதது போல் நடந்து கொள்வான், அவர்கள் இவர்களுக்கு முக்கியமானவர்களாக இல்லாததால் அது பெரிதாக தெரிந்ததில்லை.. ஆனால் இது அப்படி அல்ல.. யுக்தா அவனுடைய மனைவி..

பிருத்வியை சமாதானம் செய்ய மதி தான் உடனே..

"பிருத்வி, என்ன பேசற..?? அவ உன்னோட பொண்டாட்டி... இந்த வீட்டு மருமக... இந்த வீட்டில் எல்லா உரிமையும் அவளுக்கு இருக்குடா.."

"இல்ல... அவ இந்த வீட்டு மருமகனு சொல்லுங்க... ஆனா எனக்கு மனைவினு எந்த உரிமையும் அவளுக்கு கிடையாது.."

"என்ன பேசறடா..??? உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.. நீ அவ கழுத்துல தாலி கட்டியிருக்க.."

You might also like - Oru kootu kiligal... A family drama...

"அம்மா உங்க கட்டாயத்துக்காக தான் அவளை நான் கல்யாணம் செஞ்சுகிட்டேன்... ஆனா அவ முகத்தை பார்க்கவே பிடிக்கல... அவளை அவ வீட்டுக்கே அனுப்புங்க..."

யுக்தா அமைதியாக நின்றிருந்தாள்.

"பிருத்வி இது ஒன்னும் பொம்மை கல்யாணமும் இல்ல.... நீ ஒன்னும் சின்ன பையனும் இல்ல... கல்யாணம் முடிஞ்சதால யுக்தா இனி இங்க தான் இருப்பா... சும்மா சத்தம் போடாதே.." - செந்தில்

"அவ இங்க தான் இருப்பான்னா என்னால அடிக்கடி அவ முகத்தை பார்த்துக்கிட்டு இருக்க முடியாது...இவக்கூட உட்கார்ந்து எனக்கு சாப்பிட பிடிக்கல...  எனக்கு சாப்பாடு வேணாம்.."

"பிருத்வி" மதி அதட்டும் போதே யுக்தா குறுக்கிட்டு..

"அத்தை நான் ரூம்ல போய் சாப்பிடறேன், என்னால இங்க பிரச்சினை வேண்டாம்" சொல்லிவிட்டு அவள் சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு வேகமாக அவள் அறைக்கு போய்விட்டாள்.

அவள் போனதும் அமைதியாக உட்கார்ந்து அவன் சாப்பிட ஆரம்பித்தான், இதை பெரிது படுத்தாமல் யுக்தா அமைதியாகச் சென்றதே மதிக்கு நிம்மதியாக இருந்தது, ஆனால் யுக்தாவின் இந்த அமைதி மதிக்கு புதிதாக இருந்தது.

யுக்தா அதிகம் வாயாட மாட்டாள், அதற்காக யாருடனும் பேசாமல் அமைதியாகவும் இருக்க மாட்டாள், ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு அவள் மாறி போய்விட்டாள், இன்று தான் திருமணம் முடிந்தது இன்றே பிரச்சினை, இனி போக போக என்னாகுமோ..??? வளர்மதிக்கு இப்போதே கலக்கமாக இருக்கிறது.

றைக்குள் நுழைந்ததும் உணவு தட்டை டேபிள் மேல் வைத்து விட்டு கட்டிலில் உட்கார்ந்து விட்டாள் யுக்தா, யார் முன்னும் அழக் கூடாது என்று நினைத்து அடக்கி வைத்திருந்த கண்ணீர் இப்போது எட்டிப் பார்த்தது,

கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்து விட்டாள், ஏனோ தனிமையில் விடப்பட்டது போன்ற ஓர் உணர்வு அவளுக்கு....

கவியின் அருகில் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அவளுக்கு..  இல்லையென்றால்  கவியோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாலாவது நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் கவியோடு இவளால் பேச முடியாது... கவிக்கு இவள் மீது கோபம்...

 அருகிலுள்ள அவள் உடமைகள் உள்ள பெட்டியை எடுத்தாள் யுக்தா, அதில் உள்ள கரடி பொம்மையை வெளியே எடுத்தாள், அவளுக்கு தனிமையாக இருப்பது போல் தோன்றினால் இந்த பொம்மையோடு தான் பேசுவாள், ஆனால் இன்று அதனுடன் பேசும் நிலையில் கூட அவள் இல்லை, அதனை அணைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்,

தூக்கம் வர மறுத்தது, அவள் சிந்தனையில் மூழ்கினாள், இரண்டு மாதங்களுக்கு முன் அவள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள், இன்று ஏனோ வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போல் தோன்றியது.

இரண்டு மாதங்களுக்கு முன் அவள் என்னென்ன கனவுகளோடு இந்தியா வந்தாள், ஆனால் இப்போது அவள் வாழ்க்கை எப்படி மாறி விட்டது, இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையில் நடந்ததை அசைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.

என் தொடரை வெளியிட்ட சில்சிக்கும், தொடரை படித்தும் கமெண்ட்ஸ் போட்டும் ஊக்கப்படுத்திய  சில்சி ப்ரண்ட்ஸ்க்கும் என்னுடைய நன்றி, ஏதாவது மிஸ்டேக் இருந்தா அட்ஜஸ்ட் பண்ணி படிங்க, எனக்கும் சொல்லுங்க...

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.