(Reading time: 14 - 28 minutes)

04. உன்னால் மகுடம் சூடினேன்...!!! - அக்தர்

கிழ்ச்சி நிதானத்தின் நெருங்கிய நண்பன் போல, சந்தோஷம் மனதை நிறைத்தவுடன் எதையும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கையாளும் பழைய பக்குவம் தானாக வந்துவிட்ட நிலையில் எல்லா வித பிரச்சனைகளையும் எப்படி தட்டினால் எங்கு விழும் என்ற வித்தைகளை வெகு நேர்த்தியோடு திட்டம் தீட்டி செயல்முறைப் படுத்தவும் ஆரம்பித்திருந்தான் ஆர்யன்.

என்னதான் மனதில் துளிர் விட்ட  விருப்பத்தை 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை' என்று மறைக்க முயன்றாலும் பல சமயங்களில் இந்திராவின் நக்கல் வழிந்த ஏட்டிக்கும் போட்டியான திமிர் பேச்சில் 'தொபுக்கடீர்' என ஆர்யனின் மனம் மண்ணை கவ்வி விடும்.

அந்த ஒரு நாள் இரவும் அப்படி தான். என்ன காரணம் என்று குழம்பி கொண்டிருந்தவள் ஆர்யன் அறையினுள் நுழைந்தது கூட அறியாமல் யோசனையுடன் அமர்ந்திருந்தாள். சும்மா இருப்பவளை வம்பிழுக்காமல் போனால் அது ஆர்யனின் வழக்கத்திர்கே மாறான செயலல்லவோ.. ? இவனே பேச்சை தொடங்கினான்.

Unnal magudam sudinen

"என்ன ரெளடி ரங்கம்மா... இன்னைக்கு ஏதும் குடிச்சிட்டு உன் கன்னத்தில எனக்கு ஜோசியம் பாக்கிற ப்ளான் இருக்கா....." என 'அடி வேணுமா' என்பதை மறைமுகமாக கேட்டான்....

அவனின் கேலி செய்யும் குரலில் உலகிர்கு வந்தவள் "ஒழுங்கா உண்மைய சொல்லுங்க... எப்படி எனக்கு நெத்தியில அடிப்பட்டுச்சு...?" என்றாள் தீவிரமாக

"யார் கிட்ட வம்பு பேசி அடிய வான்ட்டேடா வாங்கிட்டு வந்தியோ... என்கிட்ட கேட்டா..."

"அப்புறம் எனக்கு சாப்பாடெல்லாம் மேல எடுத்துட்டு வந்து கொடுத்திங்களாமே... அது எதுக்கு...?"

"ம்ம்... வேண்டுதல்..."

'இவன்கிட்ட பதில் எதிர்ப்பார்க்கறதும் தண்டவாளத்தில தலைய கொடுக்கறதும் ஒன்னு..' என எண்ணிக் கொண்டவள் அமைதியாக எழுந்து பால்கனியில் சென்று நின்று கொண்டாள். பதிலுக்கு ஏதும் வம்பு செய்யாமல் போகும் இந்திராவின் திடீர் மௌனம் ஆர்யனிர்கு என்னவோ போலிருக்க கொஞ்ச நேரம் அறையினுள்ளே உலாவியவன் ஒரு முடிவோடு அவளின் அருகில் சென்று இடுப்பளவுள்ள சுவரில் கைகளை ஊன்றி நின்றப்படி

"இப்போ உனக்கு என்ன தான் தெரியனும்...?" என்றான் தீர்க்கமான குரலில்...

எந்த சலனமுமில்லாமல் அவனை முறைத்து பார்த்தவளின் பார்வையே 'இவ்ளோ நேரம் நான் என்ன ஜப்பான் மொழியிலயாடா பேசிட்டிருந்தேன்...' என்பது போலிருக்க சிறு புன்னகையுடன் அவளின் நெற்றி காயத்தின் காரணத்தை தவிர்த்து நேற்று நடந்தது எல்லாவற்றையும் கூறினான் ஆர்யன்.அவன் பேசி முடித்ததும் அங்கொரு மயான அமைதி நிலவியது. இந்திரா தான் அந்த மௌனத்தை கலைத்தாள்.

"ம்ம்...சோ குடிச்சிட்டு ஓவரா பேசிருக்கேன்.. நான் அவ்ளோ பேசினப்போ நீங்க மொட்டை மாடில நின்னு தவம் பன்னிட்டா இருந்திருப்பீங்க .. காயத்தை பார்த்தா எங்கயோ போய் மோதி ப்ளட் க்ளாட் ஆன மாதிரி இருக்கு.. அப்போ கிடைச்சது தான் சேன்சுனு கோபத்தில என்னை புடிச்சு தள்ளி விட்டுருக்கீங்க...கரெக்ட்டா..?" என்றாள் தன் காயத்தை சுட்டி காட்டி.

'கண்டுபிடிச்சிருச்சே பிசாசு' என்று மனதினுள் எண்ணியவன் வெளியே

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

"ஏன்.. கத்திய எடுத்து சொருவனேனு சொல்லேன்... !!! உன் வக்கீல் டேக்டிக்ஸ் எல்லாம் எங்கிட்ட காட்டாதே... இந்த போட்டு வாங்குற டெக்னிக்ல எல்லாம் நாங்க டாக்ட்டரேட் வாங்கினவுங்க..." என்றான் பெருமையாக...

"எனக்கு நியாபகம் இல்லாம போனதுக்கு யு ஜஸ்ட் கோ அன்ட் தேன்க் காட்.."

"நியாபகம் இருந்திருந்தா மட்டும்...?"

"வெரி சிம்பிள்... நீங்க சொன்னதே தான்... கத்திய எடுத்து சொருவீருப்பேன்...."

அவள் பதிலை கேட்டு திகைத்தவன் முதல் முறையாக தன் மனைவி கூறியதை பின்பற்றி மனதினுள் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நாள் போக்கில் ஆர்யனின் பேச்சிலும் செயல்களிலும் சின்ன சின்ன மாற்றத்தை கண்டு கொண்டாலும் எதையும் கவனிக்காதது போன்ற பாவனையுடன் இந்திரா உலா வர, சில சமயம் ஆர்யன் வெறுமென வாயை கொடுத்து பேச வந்த தலைப்பு திசை மாறி சமாளிக்க முடியாமல் சொதுப்புவனை கண்டு 'பாருடா...ரோபோட் ரோல் ஆவுது..' என மனதினுள் சிரித்துக் கொள்வாள். ஷீத்தலுடன் சேர்ந்து ஹிந்தி கூட சரளமாக பேச ஆரம்பித்திருந்தாள். இதற்கிடையில் மித்ரா, இம்ரான் என்ற இரு புது நண்பர்களும் கிடைத்தருந்தனர்.

என்ன தான் தனக்குள் வளர்ந்து நிற்கும் காதல் தலை விரித்து ஆடினாலும் தானாக முன் சென்று எதையும் உளறி விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தாள் இந்திரா. 'இது தான் ஈகோ...உறவுகளில் ஏற்படும் விரிசலிர்கான முதல் அடிப்படை காரணம்...' என அறிவு மண்டைக்குள் அபாய ஒலி எழுப்பினாலும் 'எல்லாம் எங்களுக்கு தெரியும்' என தன் கொஞ்ச நஞ்ச அறிவுக்கும் நறுக்கென ஒரு குட்டு வைத்து கொண்டது அவள் மனம்.

காலம் தன் கடமையை சரியாக செய்தது.

ரு நாள் காலை இந்திரா 'தேமே'வென வக்கீல் ரவீந்தர் ஆஃபீசுக்கு போக நிதானமாக கிளம்பி கீழே வந்தாள். சித்தாராவை காணாது வேறு ஏதோ நடுத்தர வயது பெண் சமையல் வேலைகளை செய்து கொண்டிருப்பதை கவனித்தவள் "சித்தாராம்மா எங்க போனாங்க...? யாரும்மா இவங்க புதுசா..?" என நிரஞ்சனாவிடம் கேட்டாள்.

"சித்தாராம்மாக்கு உடம்பு சரியில்லைடா... ட்ரைவர் தான் போய் விசாரிச்சிட்டு வந்தாரு.. ரொம்ப ஃபீவரா இருக்காம்...  கொஞ்ச நாள் வீட்டு வேலையை கவனிக்க இவங்கள சித்தாராம்மா தான் அனுப்பி வச்சிருக்காங்க..." என்றாள் நிரஞ்சனா பொறுமையாக.

"ஓ... சரிம்மா.." என்றதோடு ஏதோ யோசனையாகவே காலை உணவை உண்டு முடித்தாள். தன் பையை எடுத்து மாட்டிக் கொண்டு கார் ட்ரைவரிடம்  சென்றவள் "அண்ணா..உங்களுக்கு சித்தாராம்மா வீடு அட்ரஸ் தெரியுமா...? நான் அவங்கள பார்க்கனும.. அப்புறம் என்னை ஆஃபீஸ்ல ட்ராப் பன்னிடுங்க..."

என ஹிந்தியில் சரளமாக பேசினாள்.

அவளை பதட்டமாக பார்த்த ட்ரைவர் ராஜு "எதுக்குமா அங்க எல்லாம்..." என்றார் தயக்கம் ததும்பிய குரலில்..

"நீங்க கூட்டிட்டு போவீங்களா இல்லை நானே செல்ஃப் ட்ரைவ்  பன்னிட்டு போகவா...?" என்றாள் இந்திரா உறுதியான குரலில்.

அவளின் உறுதியை கண்டு தானாக தலையை அசைத்தவர் "இல்லம்மா... வாங்க போகலாம்... நானே கூட்டிட்டு போறேன்..." என்றார் மரியாதையுடன்.

விலை மதிப்புள்ள வாகனம் நகரத்தின் இன்னொரு கோர முகத்தை காண சீறிக் கொண்டு பாய்ந்தது. சில நிமிடங்களில் டோபி கட் என்ற பகுதியன் அருகிலுள்ள சேரியை அடைந்ததும் ராஜு வண்டியை ஓரமாக நிறுத்தினார். இந்திரா தன் கைப்பையை எடுத்துக் கொண்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடனே பின்னால் ஓடி வந்தவர்

"நீங்க கார்ல வேணா உட்காருங்கம்மா... நான் போய் சித்தாராம்மா மகள கூட்டி வரேன்..." என்றார் கடைசி முயற்சியாக.

அவரை சமாதானப் படுத்தவது போல் கையசைத்து சிரித்தவள் "ராஜுண்ணா... நீங்க ஏன் இவ்ளோ பதட்டப்படறீங்க...? நான் சித்தாராம்மாவ பாத்து பேசி அவங்களுக்கு உதவி எதாவது தேவையானு பார்த்துட்டு கிளம்பிடப் போறோம்... இதிலென்ன இருக்கு...?" என்றவள் விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.