பூங்குழலீ...
....
சக்தி...
சொல்லுங்க அத்தை.... நான் அழல... அவர்...கால் பண்ணாருனா எனக்கு கால்.... இல்ல...இல்ல... எப்படி இருக்காருனு கேட்டு சொல்ல முடியுமா அத்தை! முடிஞ்சா ஒரு போட்டோ எடுத்து உடனே அனுப்ப சொல்லுங்களேன்!!
சரிமா... நீ போய் தூங்கு... நான் காலையில பேசறேன்..
அழைப்பை துண்டித்துவிட்டு பிரபுவை பார்த்தார் மாலதி. புன்னகையுடன் அவர் அருகில் அமர்ந்திருந்தான்.
பேசுவது குழலீ என்று தெரிந்தவுடன் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அமைதியுடன் அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தான் பிரபு!
என்னடா சிரிப்பு உனக்கு?? என் மருமக எவ்வளவு துடிக்கறா பாரு உனக்காக... உன் மேல இருக்கற அன்பை பாரு... ஒரு தடவை கால் செய்து பேசினா தான் என்ன உனக்கு?? எனக்கு பேசும் போது அவளுக்கும் பேசினா என்ன??
இப்போது வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தான் பிரபு! இரண்டு அடியையும் வாங்கிக்கொண்டு அம்மாவை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தான்.
என் மாலு எப்பவுமே இப்படிதான்! தேங்கஸ் மாம்!' என்று மீண்டும் இதழ் பதித்தான்.
அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த கனகராஜ் 'எங்கடா வந்த?? எதுக்கு வந்த??...' என்று மகனை பார்த்து கத்தியவர்..
You might also like - Krishna Saki... A family oriented romantic story...
மாலதியை பார்த்து..'நீ மடியில தூக்கி வெச்சு கொஞ்சு... இன்னும் சின்ன குழந்தை பாரு! ஏன் நிலாவை காட்டி சாப்பாடு ஊட்டிவிடேன்... பேரப்பிள்ளையை தூக்கி கொஞ்சுற வயசுல பிள்ளையை கொஞ்சு... எல்லாம் நீ கொடுக்கற செல்லம் தான் மாலதி!' என்று மனைவியை திட்டினார்.
ஏதோ தடுத்து பேச வந்த பிரபுவிற்கு 'ப்ளார்' என்று ஒரு அரை கன்னத்தில் விழுந்தது.
அப்பா!! - பிரபுதான். மற்றவர்கள் அனைவரும் உறைந்துவிட்டனர்!
என்னடா அப்பா??? சும்மா... அப்பா.. அம்மா... தங்கை... மச்சான்... குடும்பம்னு ஒன்னு இருக்குனு கவலை படாம இத்தனை நாள் நல்லா ஊர்சுத் க்திட்டு வரான் ஆடி அசஞ்சு... எல்லாரும் என்ன ஆனாங்கனு கொஞ்சமாவது அக்கறை இருக்கா?
…………
எங்களைவிடு... தாலிக்கட்டி கல்யாணம் செய்து கூட்டி வந்தோமே ஒரு பொண்ணு... பூங்குழலீனு... அந்த பொண்ணு நிலமையை நினச்சு பார்த்தியா???
அதற்குள் அவர் கைகளை ஆதரவாய் பிரபு பிடித்துக்கொள்ள அவனை ஆரத்தழுவிக்கொண்டார் கனகராஜ்.
சாரி அப்பா!- பிரபு
சரி விடு! உன் பூங்குழலீ கிட்ட பேசனியா?
என் பூங்குழலீகிட்ட இன்னும் பேசல அப்பா!!! உங்ககிட்ட பேசிட்டு அப்புறமா அங்க விடிஞ்சதும் பேசலாம்னு தான்...
என்னடா நீ? முதல்ல அவகிட்ட பேசு..பாவம் அந்த பொண்ணு!
இல்ல பா... இப்போ தான் அம்மாகிட்ட பேசினா.. இப்போ தான் தூங்க போயிருப்பா... தூங்கட்டும்... நான் அப்புறமா பேசறேன்.
என்னமோ போ! ஆமாம் நீ ஏன் இப்படி வந்து நிக்கற? எங்க தான் போன?
அதற்குள் அங்கே வந்த மாலதி...'போதும் டா என் புருஷனை கொஞ்சனது... எழுந்து போ.. சாப்பாடு தயார்! குளிச்சிட்டு வா.. சாப்பிட்டு அப்புறமா பேசலாம்! ஹம்ம் எழுந்து போ!' என விரட்டினார்.
எழும் போதே அழைப்பு வர அதை ஏற்று ..'குட் மார்னிங்க் ஆர்யன்! எஸ் ஜஸ்ட் நவ் ரீச்சுடு... யா வில் கால் யூ இன் ஹன் ஹவர் டைம்!'
யாருடா??
ஆஃபீஸ்ல இருந்துதான் அப்பா!' என்றுவிட்டு மூன்றாவது மாடியை நோக்கி சென்றான்.
அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த கனகராஜ் 'ஏன் கீதா... இந்த ஆர்யன்...' என்று இழுக்க
குழலீயோட மாமா.. அக்கா கணவர்..டாட்!' என்றாள் கீதா. அதற்குள் அப்போது எடுத்த பிரபுவின் புகைப்படத்தை குழலீக்கு அனுப்பி வைத்தாள்.
அறைக்குள் நுழைந்தவனுக்குள் அப்படி ஒரு பரவசம்! தன் கூட்டிற்கு தேடி வந்துவிட்ட பறவையின் சுகமல்ல...தன் காதலை தேடி வந்த சுகம்!
தன் அறையை சுற்றி பார்வையை ஓடவிட்டான் பிரபு! கண்களை திறந்து பார்த்தாலும் எங்கும் குழலியின் உருவமே தெரிந்தது...
கீழே கேட்ட பாடல் நினைவு வந்தது...
"கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்..."
கண்மூடிப் பார்த்தான்.. தன் விஷேச ரகசிய சிரிப்போடு குழலீதான் வந்து நின்றாள்.
இவ்வளவு நாள் எது பெருங்குழப்பமாய் இருந்த்தோ இன்று அது தெளிந்துவிட்டது! உள்ளத்தில் ஒரு பரவசம்.. பரபரப்பு...குழலியிடம் இப்போதே பேச வேண்டும் என்று ஒரு ஆவல்...
ராட்சசி!!! முட்டகண்ணி!!' என்று முனுமுனுத்தவாறு கட்டிலில் சரிந்தான்.
அப்படியே இருத்தவன் தன்னிலை பெற்று... தன் கைபேசியை எடுத்து குழலீயின் எண்ணை அழைத்தான். பத்து நிமிடம் தொடர்ந்து அழைத்துக்கொண்டேயிருந்தான். மறுமுனை அழைப்பை ஏற்கவேயில்லை!!!
ராட்சசி...! உனக்கு அவ்வளவு இருக்குனா.. எனக்கு எவ்வளவு இருக்கும்! உன்னை கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கறேன் பாருடீ!' என்று பொருமினான்.
இது ஏதும் அறியாமல்... தூக்க மாத்திரையின் விளைவாக ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பூங்குழலீ பிரபு!!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.