(Reading time: 18 - 36 minutes)

22. என் உயிர்சக்தி! - நீலா

ரகாசமான சூரியனின் காலை இளம் வெயிலையும் தாண்டி சில்லிட்டது உடல் மிதமான பனியினால்!

தோட்டத்தில் உள்ள க்ரோட்டன்ஸ் செடிகளை சீர் செய்து வெட்டிக்கொண்டிருந்தாள் குழலீ! குளித்து வந்த ஈரத்தலைமுடி காற்றில் ஆடி காய்ந்துக்கொண்டுருந்தது.

பக்கத்தில் அரவம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். மூன்று வயது பெண் குழந்தை நின்றிருந்தாள்.

En Uyirsakthi

அருகில் வந்தவள் குழலியின் புடவை தலைப்பை பிடித்திருந்தது. 'அம்மா...' என்று அவளை அழைத்தது.

என்னடா...??' என்றாள்.

அம்மா... அண்ணா அந்த மேசன் கிட்டை கொடுக்க மாட்றான் என்கிட்ட..

டேய்... கிருஷ்ணா..ரெண்டு பேரும் சேர்ந்து தானே அந்த கார்டனிங்க் வேலையை பார்க்க சொன்னேன்... பாப்பாவையும் கூட சேர்த்துக்க... ஷேர் யுவர் வர்க் அண்ட் டூல்ஸ் வித் ஹர்!

சரி மாம்மா...' - கிருஷ்ணா. குழலீ வேலையை தொடர... அவளுக்கு பின்னால் குரல் கேட்டது.

கிருஷ்... மாம்மாநு கூப்பிடாதேனு எத்தனை முறை சொல்லியிருக்கேன் உனக்கு! அம்மானு தமிழ்ல கூப்பிடுடா..முதல்ல இங்க வாங்க ரெண்டு பேரும்... இந்த ஹேல்த் டிரிங்கை வாங்கி குடிங்க...' என்று பிரபு அவர்களை அழைத்தான்.

பிள்ளைகள் வந்து அதை குடிக்க வாங்கிக்கொள்ள மெல்ல பேச்சை தொடர்ந்தான் பிரபு. 'அப்புறம்.. இந்தாடா கிருஷ்... இந்த கஞ்சியை உங்க அம்மாகிட்ட கொடு... அந்த வேலையேல்லாத்தையும் வெச்சிட்டு முதல்ல இதை குடிக்க சொல்லு! உடம்பு இருக்கற நிலைமையில இந்த வேலையேல்லாம் உங்க அம்மாவுக்கு தேவையாடா??? நீயே கொஞ்சம் நியாயத்தை சொல்லு கிருஷ் கண்ணா...'

எட்டு வயது குழந்தையிடம் நியாயம் கேட்கும் கணவனை முறைத்து பார்த்தாள் குழலீ. 'டேய்.. எனக்கு அந்த சத்துமா கஞ்சி வேண்டாம்னு உன் அப்பாகிட்ட சொல்லுடா... எனக்கு இப்போ சூடா காப்பி தான் வேணும்..

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

தாயையும் தந்தையையும் மாற்றி பார்த்துவிட்டு...'உங்க சண்டையில எண்ணை இழுக்காதீங்க...அம்மா நீங்களே அப்பாகிட்ட சொல்லிக்கோங்க... அப்பா நீங்களும் தான்.... குட்டி நீ வாடா இந்த செடியை பிளாண்ட் பண்ணலாம்...வா' என்று தங்கையை அழைத்துக்கொண்டு நகர்ந்தும் விட்டான்.

குழலீ அந்த கரோட்டன்ஸுக்கு தண்ணீர் ஊற்றியவாறு முன்னர் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள். மிக அருகில் பிரபு வரும் அரவம் உணர்ந்தும் அப்படியே நின்றிருந்தாள்.

சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் படும்போதே தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டாள் குழலீ. பின்னால் இருந்து அவளை கட்டி அணைத்தவாறு தோள்களில் தாடையை வைத்திருந்தான். அவன் கைகள் அவளின் மேடிட்ட வயிறுடன் ஓடிவாறு அணைத்திருந்தது. கைகளில் ஒரு பெரிய மக் இருந்தது.

ப்ச்ச்..' என்று சலித்திட்டாள்.

அவள் மேடிட்ட வயிற்றை தடவியவாறு அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தான்'.

விடுங்க என்னை... ஒன்னும் கொஞ்ச வேண்டாம்... கையை எடுங்க பிரபு!'

'செல்லம்... நான் சொல்லுறத கொஞ்சம் கேளுடா...இந்தா இதை கொஞ்சம் குடிச்சிடுடா....

எனக்கு காப்பி தான் வேணும்... கஞ்சி வேண்டாம் பிரபு!' அவனிடமிருந்து விடுபட்டு திரும்பி அருகிலிருந்த மர பேஞ்சிற்கு வந்தாள். பின்னால் வந்த பிரபு அவளைவிடாது அதே நிலையில் திரும்பவும் கட்டிக்கொண்டான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளும் அவர்கள் நிலையை பார்த்துவிட்டு வேகமாய் ஓடிவந்து 'அம்மா.. நானு நானு....' என்று வயிற்றோடு முட்டி அவள் கால்களை கட்டிக்கொண்டனர் இருவரும்.

டேய்.. பார்த்துடா... அம்மாவுக்கு வலிக்கும்ல... உள்ளேயிருக்க குட்டிப்பாப்பாங்க ரெண்டு பேருக்கும் வலிக்கும்ல... மெதுவாடா... இப்படி செய்யக்கூடாதுனு எத்தனைமுறை சொல்லியிருக்கேன்..' என்று அதட்ட கிருஷ்ணா தந்தை சொன்னதை திருப்பி அவனுக்கே படித்தான்.

நீங்க மட்டும் இப்படி செய்யலாமா??? அப்போ பாப்பாஸுக்கு வலிக்காதா?? நாங்க ஒன்னும் இடிக்கல... பாப்பாஸ்க்கும் வலிக்காது.... ஏன்னா இது எங்க அம்மா!

டேய்...இது என் பொண்டாட்டி டா முதல்ல... அப்புறம் தான் உங்களுக்கு அம்மா... எனக்கே பாடம் சொல்றியாடா???

குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்துவிட்டு மனைவியிடம் திரும்பினான். 'குழல்.... என் செல்லம்ல இதை குடிச்சிடுடா என்று அந்த கோப்பையை அவள் வாயில் வைத்தான்... அதுவும் அணைத்தவாறே!

வேண்டாம் டா... சொன்னா கேட்கவே மாட்டியா???' அருகில் இருந்த மர பேஞ்சில் அமர்ந்தவாறு குழந்தைகளையும் அருகில் அமர்த்திக்கொண்டாள்!

ஏய் முட்டகண்ணி...யாரு கேட்கறது இல்ல? நீயா... இல்ல நானா.... உன் உடம்புல தேம்பு இல்லடீ இப்போ... எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்டீயா நீ??? இந்த பிரக்னன்ஸி வேண்டாம்னு எவ்வளவு சொன்னேன்... கேட்டீயா ?? அதுவும் இப்போ டிவின்ஸா போச்சு... இப்போ யாரு அவஸ்தை படுறது???

என்ன சிவா??? என்னவோ இந்த குழந்தைகளுக்கு நான் மட்டும் தான் காரணம் மாதிரி பேசறீங்க? 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.