(Reading time: 18 - 36 minutes)

ம்மா... எனக்கு அந்த கஞ்சி வேண்டாம்மா...

ஏன்டா வேணாம்? ஏன் ஒரு மாதிரி இருக்க? கண்ணு எல்லாம் வீங்கியிருக்கு?

ஒன்னும் இல்லைமா...

என்னடா ஏதாவது பிரச்சனையா??? குழலீ பேசவேயில்லையா??? இந்த கீதாவை சொல்லனும்! போட்டோ அனுப்பாதனு அத்தனை முறை சொன்னேன்.. அவ கேட்கவேயில்ல... உன்னை நேரில பார்க்கற எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்தது... இப்போ நீ வந்து இந்த ஒரு வாரத்துல தான் கொஞ்சம் பரவாயில்லை பார்க்க.... குழலீ பாவம்டா.... அங்க தனியா உட்கார்ந்துகிட்டு இந்த போட்டோவை பார்த்து எவ்வளவு வருத்தப்படறாளோ! நீ வேற அவகிட்ட இத்தனை நாளா பேசல.... அவளோட நிலையில இருந்து பார்த்தா தான் தெரியும்...

ஆச்சர்யமாய் பார்த்தான் பிரபு தன் தாயை. 

என்னடா அப்படி பார்க்கற??

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

 

இல்லமா...நீங்க இந்த கதை... நாவல்கள்... இதுல வர நல்ல மாமியார் கேரக்டர் மாதிரில பேசறீங்க! இந்த சீரியல்... சினிமால வர வில்லி கிடையாதா நீங்க? உங்க மகனை உங்ககிட்ட இருந்து பிரிக்க ஒருத்தி வந்திருக்கா.. உரிமையை பங்கு பொட்டுக்க...உங்களுக்கு வருத்தமாவோ.. இல்ல பொறாமையாவோ இல்லையா??

இதுக்கு நான் ஏன் பொறாமை படனும்? இதுவே உங்க அப்பாவா இருந்தா நீ சொன்னது எல்லாம் நிச்சயமாய் வந்திருக்கும்! என்னதான் உனக்கு மனைவி.. மக்கள்... பேரன்...பேத்தி... எல்லாம் வந்தாலும் உன்னை பத்து மாசம் நான் சுமந்ததும்... நீ எங்க மகன்றது என்னைக்கும் மாறாது! என்கிட்ட கேட்ட கேள்வியெல்லாம் உன் மனைவி குழலீகிட்ட கேட்டுக்கோ... இப்போ நீ கவலைப்படற அளவுக்கு பிரச்சனை என்னனு சொல்லு!

அம்மா...' என்று தயங்கினான் பிரபு.

எதுவா இருந்தாலும் சொல்லு... எங்களால் ஏதாவது செய்ய முடியுமா பார்க்கறோம்.

விடியற்காலையில நாலு மணியிருக்கும்... ஒரு பயங்கரமான கனவுமா... குழ..லீ..க்கு பெரிய ஆபத்துமா... அவளை எழுப்பறேன்.. ஆனா அவ எழுந்துக்கவேயில்லமா.... எனக்கு ரொம்பவும் பயமாயிருக்குமா....' அவன் முகம் பயத்தை அப்பட்டமாய் வெளிகாட்டியது.

டேய்.. பிரபு... ஏண்டா... வருத்தப்படாதடா...' என்று அவன் தலையை கொதிவிட்டார்.

எனக்கு... தெரியலமா...நான் அப்படி உன் மடியில கொஞ்ச நேரம் தலை வெச்சி படுத்துக்கவா???' என்று கேட்கவும் அவனை மடிமீது சாய்த்துக்கொண்டு தட்டிக்கொடுத்தார். சிறிது நேரம் அங்கே கனத்த மௌனம் நிலவியது!

அந்த கனவு பலிக்காதுலமா??? குழலீக்கு எதுவும் ஆகாதுல???

கனவுல தீமை வந்தா... உண்மையில நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க... வை சீ வர்சாவும் உண்டு... ஆனா அதை எல்லாத்தையும் விட்டுத்தள்ளு...அவளுக்கு எந்த ஆபத்து வரும்னு பயப்படறியோ... அது அவளை நெருங்காமல் பார்த்துக்கோ! அவ்வளவு தான்... சிம்பிள்!

அம்மா...!' என்று அதிர்ந்தான் பிரபு.

அவளை நல்லபடியா பார்த்துக்கோ... அவ்வளவுதான் சொல்லிட்டேன்!

ஹம்ம்ம்... சரிமா...அப்புறம்...நாளைக்கு விடியற்காலைல நியூயார்க் புறப்படனும்... இன்னும் ரெண்டு நாளுல புது கம்பேனி ஹேட்ஸ் கூட மீட்டிங்க் இருக்கு!

என்னடா இப்போ வந்து சொல்லற? அடுத்த மாசம் தானே அங்க போகபோறேனு சொன்ன? குழலீக்கு வேற பிறந்தநாள் வருதே? அப்போ வேற திரும்பவும் போக போறியா? இல்ல குழலீயை வர சொல்லிடலாமா?

அம்மா எதுக்கு இவ்வளவு பதட்டம்? ரெண்டு நாள் தான் மீட்டிங்க்... அதை முடிச்சிட்டு வந்திருவேன்..குழலீயை பார்க்க திரும்பவும் போய்க்கலாம்.

டிக்கட்ஸ் புக் செய்துட்டீயா பிரபு? - கனகராஜ்

ஹும்.. ஆச்சுபா... அம்மா நீங்க கொஞ்சம் அவகிட்ட பேசறீங்களா...நான் கால் செய்தா எடுக்கவே மாட்டேங்கறா... ஆனா நான் நியூயார்க் போறத பத்தி அவகிட்ட சொல்லாதீங்க!

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பூங்குழலீயிடமிருந்து அழைப்பு வந்தது.

அதை பார்த்துவிட்டு நூறு ஆயிசுடா அவளுக்கு என்றவாறு அழைப்பை ஏற்றார் மாலதி.

குட் மார்னிங்க் அத்தை! என்றாள் குழலீ உற்சாகமுடன்.

குட் மார்னிங்க் சக்தி! என்னம்மா ஆபீஸ்ல இருந்து வந்தாச்சா? சாப்பிட்டியா?

இப்போ தான் வந்தேன். இனிதான் சமைச்சு சாப்பிடனும்..அங்கே எல்லாரும் எழுந்தாச்சா??? கீதா அண்ணி எழுந்துட்டாங்களா??

உன் புருஷன் எழுந்துட்டான்மா.. கீதா இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா. என்னமா இவ்வளவு உற்சாகமா பேசற??

ஒன்னும் இல்ல அத்தே.. நான் வரும் போது இங்கே எல்லாரும் எங்களுடைய கல்யாண ஆல்பம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க...அதான் உங்ககிட்ட உடனே பேசனும் போல தோணுச்சு...' என்று தன் மனதை மறைத்து கூறினாள்.

கல்யாண ஆல்பம் பார்த்தவுடனே எங்ககிட்ட பேசனும்னு தோணுச்சா?? இல்லை பிரபுகிட்ட பேசனும்னு தோணுச்சா?

அத்தே...

நீங்க அடிச்சிக்கோங்க... பேசாம இருங்க... என்ன வேண்ணா செய்யுங்க... ஆனா என் மண்டைய மட்டும் உருட்டாதீங்க...நீங்க ரெண்டு பேரும் பேசறத்துக்கு... நான் எதுக்கு நடுவில... எனக்கு இந்த தரகு வேலையேல்லாம் பிடிக்காதுமா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.