(Reading time: 18 - 36 minutes)

ய்ய்ய்ய்!

என்ன? இந்த ஏய்.. ஊய்ய்ய் எல்லாம் என்கிட்ட வேண்டாம்... நான் ரொம்ப பொல்லாதவள்! தெரியும்ல??' என்றாள் கண்களில் சிரிப்புடன்.

அதை கண்டவன் பிள்ளைகளிடம், 'டேய் குட்டிகளா... போய் அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க...' என்று அவர்களை அனுப்பி வைத்தான்.

நீ மட்டும் காரணம்னு நான் சொன்னேனா?? நானும் தாண்டீ காரணம்.... ஆனா உன் உடல்னிலை தான் இன்னோரு குழந்தையை தங்குற அளவு இல்லைனு டாக்டர் தான் நம்ம மகாராணி பிறக்கும் போதே சொல்லிட்டாங்களே... நானும் அதை உன்கிட்ட சொல்லிட்டேனே! அப்புறம் ஏண்டீ இந்த பிடிவாதம்???

நீங்க தானே சொன்னீங்க...உங்களுக்கு குறைஞ்சது அஞ்சு பிள்ளையாவது வேணும்னு! அதனால தான்....' என்று அவனை பார்த்து கண் சிமிட்ட அவனது கோபம் கண்களில் தெரிந்தது.

மேடமுக்கு என் மேல இருக்க கோவம் எல்லாம் போயிடுச்சா??? அப்போ முதல்ல இதை குடிச்சி முடி!!!

இப்போ பாருங்க எனக்கு கஷ்ட்டமேயில்ல... ஏற்கனவே ரெண்டு... இப்போ ரெண்டு... சோ...இன்னும் ஒரு ரவுண்ட் இருக்கு நமக்கு!' என்று அவன் தோள் சாய..

என்னடீ... விளையாடறியா? இன்னும் ஒரு ரவுண்ட் கேட்குதா உனக்கு?? அதுக்கு நீயும் இருக்கனும்... நானும் இருக்கனும்! 

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

 

அத்தான்!!

என்ன அத்தான்.. பொத்தான் எல்லாம்??? மரியாதையா இதை குடிச்சுமுடிடீ... அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி!

என்னைய உங்களுக்கு பிடிக்கவேயிலைல...' என்றாள் அந்த கஞ்சியை குடித்தவாறு!

ஆமாம்டீ... உன்னை பிடிக்கவேயில்ல...ரொம்பதான் பார்த்துட்டா.. அதனால தான் உன்கிட்ட உன் உயிருக்காக போராடிக்கிட்டு இருக்கேன் பாரு! ஏற்கனவே ரெண்டு பிள்ளையிருக்கு... இப்போ மூணாவது வயித்துல... அதுவும் டிவின்ஸ்! ஆனா உன்னை பிடிக்கவேயில்ல... எப்படிடீ??? உன்னால மட்டும் இப்படியேல்லாம் பேச முடியுது?? புதுசா யோசிக்கறன்னு பார்த்தா... இதுக்கூடவா? பிடிக்காமதான் இதோ என் தோள் மேல உன் தலையை சாய்ச்சிக்கிட்டு இப்படி உன்னை கட்டிபிடிச்சிக்கிட்டு...உனக்காவும் எனக்காகவும்... நம்ம பிள்ளைகளுக்காகவும்... உன்கூட போராடிக்கிட்டு இருக்கேன்? யாருக்கும் எந்த சேதமும் வராம... நீ...இல்லமா... இல்ல.. இல்ல சும்மா சும்மா முறைக்காதே! நீங்க மூணு பேரும் பத்திரமா திரும்பனும்னு எவ்வளவு போராடி நாடுவிட்டு நாடு கடத்தி வந்திருக்கேன்... நீ என்னடானா நான் சொல்றத கேட்கவே மாட்டேங்கற...

அத்தான்.....

உன் பொத்தானை நீயே வெச்சிக்கோ! இதுல இந்த அம்மா இல்லைனா இன்னோரு கல்யாணம் செய்துகிட்டு பிள்ளைங்கல நல்லபடியா வளர்க்கனுமா... போடி... நீயே இல்லனா... நான் இங்க இருந்து என்னடீ செய்ய போறேன்?? சொல்லு??

சிவாத்தான்!!

திரும்ப திரும்ப அத்தானு கூப்பிட்டு மனுசனை கிளப்பிவிடாதே!

அப்போ அஞ்சு பிள்ளைங்க வேணாமா?? ஏன் அத்தான் இப்படி பேசறீங்க?

இப்பவும் அஞ்சு பிள்ளைங்க வேணும் தாண்டீ... அதுக்கு நாமதான் பெத்துக்கனும்னு அவசியம் இல்லடா... அப்பவும் சரி... இப்பவும் சரி.. நான் சொல்ல வருவது... பிள்ளைங்கல தத்து எடுக்கலாம்னு தான்... நீ தான் கொஞ்சம் அவசர.... இல்லடா முறைக்காதே... நாமதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம். சுவர் இருந்தா தான் சித்திரம்னு சொல்லுவாங்க... நீ இருந்தா தான் எனக்கு எல்லாமே...இல்லைனா எதுவுமேயில்லை... நான் இப்போ இவ்வளவு உயரத்துல இருக்கேனா.... உன்னால தான்... ஏன்னா... நீ..என் காதல்...என் வாழ்க்கை... என்னுடைய உயிர்டீ சக்தி நீ.... என்னுடைய உயிர்சத்திடீ நீ!' என்று அவளை அணைத்துவாறு கண்ணீர் சிந்தினான்.

அவன் தோள்மீது சாய்ந்து இருந்தவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவளை பார்த்தான்... உடல் சில்லிட்டு இருந்தது. மயங்கி இருக்கிறாளா?? அவளை உலுக்கி பார்த்தான்... எந்தவித அசைவும் இல்லை. சக்தீ........ என்று கத்த'

க்தி...' என்ற அதே கதறலோடு கண்விழித்தான் பிரபு!

சில நிமிடங்கள் எங்கு இருக்கிறோம் என்று எதுவும் புரியவில்லை...கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது அவனுக்கு!

சுற்றி இருந்த அறையை பார்த்தான். அவனது திருமண புகைப்படம் இருந்தது. நேரம் காலை நான்கு என்று காட்டியது கடிகாரம். கையில் இருந்த திருமண புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கலங்கிய கண்களுடன்! பின்னர் எழுந்து ஜிமிற்கு சென்றுவந்து ஷேவ் செய்து குளித்து முடித்து இறங்கி வந்தான்.

ஏழு மணிக்கேல்லாம் வெளியே செல்ல தயாராய் வந்த மகனை பார்த்தும் மனைவிக்கு குரல் கொடுத்தார் அவனது தந்தை.

என்னடா சிவா காலையிலேயே எழுந்துட்ட போலயிருக்கு? என்றபடி அவனுக்கு குடிக்க சத்து மாவு கஞ்சி எடுத்து வந்தார் மாலதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.