(Reading time: 18 - 36 minutes)

ன் காதல் பொய்யும் இல்லை  

உன்னை காணும் நேரம் வருமா ? 

இரு கண்கள் மோட்சம் பெருமா? 

விரலோடு விழியும் வாடும் 

விரைகின்ற காலம் நோகும் 

இருந்தாலும் வருகிறேன் 

உன் மடியில் நான் தூங்க  

எனை வந்து உரசும் காற்றே  

அவளோடு கனவில் நேற்றே  

கைகோர்த்து நெருங்கினேன்  

கண் அடித்து நீ ஏங்க  

ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி 

என் உயிரை உயிரை நீ ஏந்தி 

ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி 

நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

 

நான்... எப்போ... எப்படி... எதனால உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சதுனு லவ் பண்ண ஆரம்பிச்சேனும்..எதுவும் தெரியல.... பட்...நீ ஒருத்தி மட்டும் தான் என் வாழ்க்கையில் நு தெளிவா தெரிஞ்சிட்டுடீ! பிரபுவும் தங்கள் திருமணத்திலிருந்து இன்றுவரை நடந்ததை நினைத்துக்கொண்டிருந்தான்.

அன்று பிறந்தநாளுக்கு வாழ்த்தியதிலிருந்தே தினமும் ஒருவருக்கொருவர் அழைத்து பேசிக்கொண்டுதான் இருந்தனர் கணவனும் மனைவியும்! பரஸ்பர நட்பாய் தொடங்கியது தான் பேச்சு இருவருக்கும். பிரபு அழைத்து பேசும் போது குழலீயால் மறுக்க முடியவில்லை...அவன் குரலுக்காகவும் அன்புக்காகவும் ஏங்கி நின்றது பெண் மனம்.

இவள் நிலை இப்படியிருக்க பிரபுவோ கொஞ்சம் கொஞ்சமாய் அவள் வசம் தன்னை இழந்துக்கொண்டிருந்தான். அவளுக்காக அவனது ஒவ்வொரு செல்லும் துடிக்கும் அளவிற்கு!

ஹாய்.. ஹலோ என்று ஐந்து நிமிட பேச்சாக தொடங்கியது... நிமிடங்கள் கடந்து... பல மணி நேரங்களை தொட்டது!

பொதுப்படையாக தொடங்கிய வாய்மொழி.. தங்கள் விருப்பு.. வெறுப்பு... சோகம்... துக்கம்.. சந்தோஷம்.. மகிழ்ச்சி... ஆனந்தம்... இன்பம்... கனவு... லட்சியம்... குறிக்கோள்... ஆசை... என்று தங்களை பற்றியே பேச தொடங்கினர். ஆனால் இவை அனைத்தையும் முழுமையாக பேசவும் இல்லை!!! கேட்டால்.. நேரில் சந்தித்தால் பேச எதுவும் இருக்காதாம்!

இதில் இருவரும் சில விஷயங்களை சொல்லாமல் விட்டிருந்தனர். ஆர்யன் கொடுத்த ஆஃபரை அக்சப்ட் செய்ததும்... அதை குழலீயிடம் சொல்லக்கூடாது என்றும்...அதற்கான காரணங்களை ஆர்யனிடம் எடுத்து கூறியதையும்... அதற்கு அவள் மாமனின் சம்மதமும்..' இது பிரபுவின் பக்கம் என்றால்..

குழலீயோ... அவள் ஒரு எழுத்தாளர் என்பதிலிருந்து... ஆர்யன் ஆர்த்தி இன்னும் சில நண்பர்களுடன் இணைந்து புதிதாக ஒரு தொழிலை தொடங்க முனைந்திருப்பதும்... அதற்காக தான் பிரபுவை எடுத்திருப்பதும்... அதில் உள்ள சில இடர்பாடுகள் பற்றியும்..' என்பதாக இருந்தது.

இதனிடையே யாழினி அவ்வப்பொழுது இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக்கொண்டு இருந்தாள் மறைமுகமாய்! இருவருக்கும் நடக்கும் வாக்குவாதமும் அதை தொடர்ந்து ஒரு நாள் மௌன விரதமும்... பின்னர் சமாதானமும்...

பிரபு தன் பழைய வேலையை விட்டுவிட்டதும் புது வேலையில் சேர்ந்ததும்... அது குழலீக்கு தெரியாததும்... யாழினிக்கு தெரிந்துவிட அதை வைத்து தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள்.

குழலீ இதை பற்றி பிரபுவிடம் கேட்க அதற்கான பதிலை கூறாமல் அவன் மழுப்பிவிட்டான். அவன் மனைவி அதனை விடாமல் அவனை காய்ச்சி எடுத்துவிட்டாள்.

நீங்க என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? ஏன் வேலையை விட்டீங்க? எப்போ விட்டீங்க?

அப்படியா??? நான் எப்போ விட்டேன்?

என்ன விளையாடறீங்களா? எனக்கு கேட்ட கோவம் வந்திடும்.. சொல்லிட்டேன்! ஜிஜு கொடுத்த ஆஃபரை என்ன செய்தீங்க? அவரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறார்... என்ன ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடறீங்களா?

இல்லமா... உன்கிட்ட யாரோ தப்புத்தப்பா சொல்லியிருக்காங்க சக்தி!

யாரோ சொல்லல... நம்ம யாழ் தான் சொன்னா.. நம்பிக்கையான ஆள்கிட்ட இருந்து தகவலுங்கறதால தான் கேட்கறேன்! சொல்லுங்க..

...

அப்படியே வேலையை விட்டுடீங்கனா பரவாயில்லை... அந்த வேலைக்கு போக வேண்டாம்... ஒழுங்கா கமிட் செய்த படத்தை இயக்கி முடிங்க... 

ஏய்... என்ன மிரட்டுற???

ஆமா மிரட்டுவேன்... நீங்க எப்போ படம் இயக்கி... நான் எப்போ இந்த வேலையைவிட்டு இந்தியா வந்து... அதுக்குள்ள எனக்கு வயசாயிடும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.