(Reading time: 18 - 36 minutes)

த்தே...! அது வந்து... அவரை கொஞ்சம் கோபமா திட்டிடேன்...

மேடம்...திட்டினா திரும்பவும் பேசமாட்டீங்களோ?' - பிரபு.

சட்டேன கேட்ட அவனது குரலில் தன் வசம் இழந்திருந்தாள் குழலீ.

மேடமுக்கு இப்போக்கூட கோபம் போகலையா??

....

ஒரு போட்டோ அனுப்பியிருக்கேன் பாரு... அப்படியே அதை பார்த்துட்டு வந்து பேசு...

இப்போ அந்த போட்டோல கொஞ்சம் பரவாயில்லை நீங்க! பொழச்சு போங்க பேசறேன் உங்ககூட!

இப்போகூட பரவாயில்லை தானா... ஒரு வாரமா அம்மா அப்படி கவனிச்சாங்க தெரியுமா? நீ பேசுவமா பேசுவ!

இன்னும் பழைய பிரபு திரும்பி வரல... எல்லாம் என்னால தானே!

நீ என்ன செஞ்ச??

You might also like - Oru kootu kiligal... A family drama...

 

ஆமா ஒழுங்கா ஆர்யன் ஆஃபர் செய்த அந்த வேலைக்கு போகப்போறேனு சொல்லிட்டு இருந்தவரை கோவப்படுத்தி....கமிட் செய்த படத்தை முடிக்க சொல்லி உசுப்பேத்தி... அதுக்காக நீங்க அலைஞ்சு திறிஞ்சு இப்படி இளைச்சு போய்...ச்ச்ச்ச்... அத்தை மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் உங்களை அப்படி பார்க்கும் போது! நான் தானே காரணம்!

ஹலோ மேடம்... உருகுனது போதும்... நான் அந்த ஆஃபரை ரிஜக்ட் செய்தேனு யாரு சொன்னது உனக்கு? அப்புறம் படத்துக்கு தான் நான் அலைஞ்சு திறிஞ்சேன் உனக்கு எப்படி தெரியும்?? சோ உன்னால தான் நான் இப்படி கரைஞ்சுட்டேன் நு நினைச்சியா? நீ இவ்வளவு அமைதியா பேசினா நல்லாவேயில்ல... மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்யன் ஆஃபரை ஒத்துக்கபோறேனு சொன்ன போது... கீதா அனுப்பின போட்டோவை பார்த்த போது... இப்படி நிறைய விஷயங்கள்ல நான் செய்யற செயல்கள்ல என்னை கண்டிக்கற ஆக்டிவ் குழலீ தான் எனக்கு பிடிச்சிருக்கு. இப்போ பேசற இந்த சாது முகமூடி எனக்கு பிடிக்கல.

பிரபு...??? அப்போ எங்க தான் போனீங்க நீங்க?? அந்த புது வேலையை ஒத்துக்கிட்டீங்களா? அந்த வேலையை பத்தி உங்ககிட்ட சில விஷயங்கள் சொல்லனும்...

இந்த கேள்விக்கெல்லாம் பதில்... சொல்லறேன்... பட் இன்னும் கொஞ்ச நாள் வெயிட் செய்யனும் நீ! அப்புறம் என்கிட்ட பேசனும்னா நேரா எனக்கு கால் பண்ணு... இப்படி உன் ஆசை அத்தைக்கு கால் செய்யாத...இன்னைக்கு மாதிரி என்னால மிமிக்ரி எல்லாம் எப்பவும் செய்ய முடியாது மேடம்! 

என்னது???? மிமிக்ரியா??? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல ஹும்ம்????

நான் என்ன நினைச்சுட்டு இருக்கேங்கறத இப்போ சொல்ல முடியாது மேடம்... நேர்ல பார்க்கும் போது சொல்லறேன். இப்போ போனை வெக்கறேன்... சீ யூ சூன் பை... டேக் கேர்!' என்று அழைப்பை துண்டித்தான்.

பிரபு பேச பேச குழலீக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இவன் இப்படி பேசறான்? என்ன ஆச்சு இவனுக்கு?? முன்னாடி பேசும் போது நல்ல பிரேண்ட்லியா தானே பேசினான்... ஆனா அவன் இப்போ பேசுற தோணியே சரியில்லையே!! அந்த வேலை....??? ஜிஜூக்கிட்ட இதை பத்தி பேசனும் என்று நினைத்தவாறே ஆர்யனை அழைத்திட இணைப்பு கிடைக்கவில்லை. அவள் யூ எஸ் வந்ததிலிருந்து இன்றுவரை நடந்ததை அவள் மனம் அசை போட தொடங்கியது!

நியூயார்க் செல்வதற்கான ஆயத்தங்களை செய்தவாறு அவன் மனது கும்மாளம் இட்டது...மீட்டிங்க் முடிச்சிட்டு ஐ எம் கம்மிங் தேர் டேக் யு வித் மீ சக்தி...' என்றது மனது....வாய் தானாக இந்த பாடலை முணுமுணுத்தது.

நீ இன்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை 

வழி எங்கும் உந்தன் முகம் தான் 

வலி கூட இங்கே சுகம் தான்  

தொடுவானம் சிவந்து போகும் 

தொலை தூரம் குறைந்து போகும்

கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே  

இனி உன்னை பிரிய மாட்டேன் 

துளி தூரம் நகர மாட்டேன் 

முகம் பார்க்க தவிக்கிறேன்  

என் இனிய பூங்காற்றே  

ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி 

என் உயிரை உயிரை நீ ஏந்தி  

ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி ? 

நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி  

நீ இன்றி நானும் இல்லை  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.