(Reading time: 11 - 21 minutes)

19. என் உயிர்சக்தி! - நீலா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

En Uyirsakthi

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா

கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை

மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை

மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கண்களை மூடி நெஞ்சுறுகி பாடிக்கொண்டிருந்த பூங்குழலீயின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. பாடலோடு ஒன்றிபோய்விட்டாளா? இல்லை மனதிலிருக்கும் வலியின் வெளிப்பாடா? எதிரில் இருப்பவர்களுக்கு புரியாது.

எப்போது இந்த பாடலை பாடினாலும் இப்படி அழுதுவைக்காதடீ!' என்று அவள் தோழிகள் அவளை அதட்டியதுண்டு.

ஆனால் இன்று அவள் பாட மாலதியின் கண்களிளும் நீர் வந்துவிட்டது. பாடி முடித்தவுடன் எழுந்து வந்து அடிப்பட்ட கன்னம் தடவி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் அந்த அன்பு மாமியார்.

கீதாவோ..'சூப்பர் அண்ணி! நல்லா பாடற!' என்று அவள் அடிவாங்கிய அதே கன்னத்தில் முத்தம் வைத்தாள். இவர்கள் செய்வதை பார்த்துக்கொண்டிருந்த பிரபுவுக்கோ எரிச்சலாய் போனது.

இதையே நான் செய்தா... சீசீ...நு சொல்லிட்டுப்போவ! நான் தானடீ உன் புருஷன்.... எனக்கு இல்லாத உரிமை உன் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் எப்படிடீ வந்தது? இரு...இன்னைக்கு இதற்கு ஒரு வழி செய்யறேன் பாருடீ சக்தி!' என்று பொறுமிக்கொண்டிருந்தான்.

இப்படி ஒரு பாட்டை பாடி எங்களையேல்லாம் அழ வெச்சுட்டீங்களே குழலீ? இப்போ எனக்காக பேப்பியா ஒரு சாங்க்...' என்றான் ராஜ்குமார்.

என்ன பாட்டு அண்ணா வேணும்?

ஒரு இங்கிலிஷ் சாங்க்... ஏதாவது ஆல்பத்திலிருந்து பாடு!

ஐய்யோ! எனக்கு அவ்வளவா லிரிக்ஸ் தெரியாதே?

யாரை தெரியும்? எம் ஜே? பிரட்டனி ஸ்பியர்ஸ், டேயிலர் ஸ்விவ்ட்???

ம்ம்ம்....டேயிலர் ஸ்விவ்ட்!

பிளாங்க் ஸ்பேஸ்?

ஒகே டன்! எனக்கும் அந்த சாங்க் ரொம்ப பிடிக்கும்!

முதலில் இருந்து பாடுவாள் என்று எதிர்ப்பார்க்க... அவளோ பிரபுவை பார்த்தவாறு இந்த வரிகளை பாடினாள்.

Cherry Lips

Crystal skies

I could show you incredible things

Stolen kisses, pretty lies

you're the king baby I'm your queen

Find out what you want

Be that girl for a month

But the worst is yet to come

Oh no

Screaming, Crying, prefect stroms

I could make all the tables turn

Rose garden filled with thorns

Keep you second guessing like oh my god

Who is she? I get drunk on jealousy

but you'll come back each time you leave

cause darling I'm a nightmare dressed like a daydream...

பற்றிக்கொண்டு வந்தது பிரபுவிற்கு! என்ன பாட்டு எப்போ பாடறா பாரு! சட்டென எழுந்தவன் அவள் மடியில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு தங்கள்  அறையை நோக்கி நடந்தான். அதே நிமிடம் நின்றது அவள் பாட்டும்! 

ஒரு நோடி மலங்க நின்றவள் தன்னை சுதாரித்துக்கொண்டு அவன் பின்னே சென்றாள். 'பிரபு... நில்லுங்க...குட்டிக்கண்ணன் இன்னும் எதுவும் சாப்பிடல... நில்லுங்கநு சொல்லறேன்ல!' என்று வம்படியாக அவனை இழுத்து பிடித்து நிறுத்தினாள். அவள் பிடியையும் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தான். அவன் பார்வையை கவனித்தவள் சட்டென கையை விலக்கிக்கொண்டு குழந்தையை வாங்கினாள்.

முகத்தை திருப்பிக்கொண்டு மாடிப்படியேற ஆரம்பித்தான்.

குட்டிக்கண்ணன் மட்டுமில்ல நீங்களும்தான்... சாப்பிடவாங்க....' என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் குழலீ.

ரவில் அவர்கள் அறையில் குழலீயும் கிருஷ்ணாவும் விளையாடிக்கொண்டிருந்தனர். பதினைந்து மாதங்கள் ஆகும் குழந்தை தத்தி தத்தி நடக்க ஆரம்பித்திருந்தான். அவனை பேசவைக்கும் முயற்சியில்..

'கண்ணா.. இங்கே பாருடா....'

'எங்க அம்மா சொல்லு பார்க்கலாம்....' 

'அ...ம்...மா... சொல்லு...'

'டேய்... என்னை பாருடா கண்ணா!'

'எங்க அம்மாவுக்கு ஒரு டீ கொடு பார்க்கலாம்... டீடீடீ...'

'எங்க அம்மாவை பிடிப்பார்க்கலாம்...'

இவள் பின்னால் நகர ஒவ்வோரு அடியாக எடுத்துவைத்து அவளை நோக்கி வந்தான் குழந்தை...'என் தங்கமே!' என்று ஆனந்த கண்ணீருடன் வாரி அணைத்துக்கொண்டு திரும்பினால் அங்கே கைக்கட்டி கதவின் மீது சாய்ந்தவாறு நின்று பார்த்துக்கொண்டிருந்தான் பிரபு. கண்களில் சிரிப்புடன் 'வா..' என்றவாறு கையை நீட்டினான்.

குழந்தை வருவான் என்று எதிர்ப்பார்த்து நீட்டியவனின் கைகளில் வந்து தஞ்சம் அடைந்தது அவன் மனைவி.

ஏய்! குழலீ... என்ன செய்யற??'

தேங்க்ஸ் பிரபு!!!.. இல்ல சாரிங்க...'

இத்தேல்லாம் சரியில்லை..சொல்லிட்டேன் டீ!' என்று அவன் குரல் உயர்த்த குழந்தை அழத்தொடங்கிவிட்டான்.

குழலீ கண்ணனை சாமாதானப்படுத்தி...உறங்கவைத்து தொட்டிலில் கிடத்தும் வரை அமைதியாக இருந்தான் பிரபு.

அவள் கிடத்திவிட்டு நிமிரவும்... பிரபு பின்னால் இருந்து இடையோடு கட்டிக்கொள்ளவும் சரியாக இருந்தது. இரண்டு நொடி அப்படியே இருந்தவள் மெல்ல அவனிடம் இருந்து விலகிக்கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றுவிட்டாள். அங்கேயும் சென்று அவள் கையைப்பற்ற குழலீயோ 'ப்ச்ச்ச்..' என்று சலித்திட்டாள்.

இந்த வார்த்தையை கேட்டபிறகு சும்மாயிருந்தா அது பிரபு இல்லையே! சீறிவிட்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.