(Reading time: 34 - 67 minutes)

20. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ந்த இரண்டு நாட்களும் ஷக்தியை  குட்டி போட்ட பூனையை போலவே சுற்றி வந்தாள்  சங்கமித்ரா .. என்னதான் அவனை புன்னகையுடன் துபாய்க்கு வழி அனுப்பிவிட வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்து இருந்தாலும் கூட , புதிதாய் திருமணமாகிய கணவனை பிரியவும் அவளுக்கு மனமில்லை . அவனுடனேயே இரண்டு நாட்கள் ஒன்றி கொள்ளவில்லை என்றாலும் கூட , அவன் கண் பார்வையிலேயே தான் நடமாடிக்கொண்டிருந்தாள்  மித்ரா ..

சமையல் செய்வது , முகில்மதியுடன்  உரையாடுவது, கதிர் - காவியாவின் கலாட்டாவில் பங்கு கொள்வது , அத்தை மாமாவுக்கு உதவுவது என்று பம்பரம் போல அவள் சுழன்று கொண்டே இருந்தாலும் , அவளது பார்வையும் இதயமும் ஷக்தியை  தான் சுற்றி வந்தது .. இதை அனைத்தையும் அறிந்தும் அறியாதவன் போல இருந்தான் ஷக்தி .

எந்த விதத்திலும் தன் மீது அவள் கொண்டிருக்கும் அன்பே அவளது பலவீனமாகிவிட கூடாது என்பதில் அவன் தெளிவாய் இருந்தான்.

Ithanai naalai engirunthai

" என்ன டீ  ?" என்றபடி அவளது விழி நோக்கி அவன் கனிவாய் கேட்டுவிட்டால் அடுத்த நொடி அவன் அவனது  மார்பில் தஞ்சம் அடைந்துவிடுவாள் . குழந்தை போல விம்முவாள்.பிரிவின் துயரை நொடி பொழுதில்  உணர்த்தி விடுவாள் . ஆனால் அவள் அழுவதை அவனால் பார்த்து விட முடியுமா ?

 பொதுவாகவே பெண்கள் கண்ணீருக்காக பிறந்தவர் அல்ல என்பதில்  தீர்க்கமாய் இருப்பான் அவன் .. அவன் தாயில்  தொடங்கி  மித்ரா வரை , யாரின் கண்ணீருக்கும் அவன் காரணமாய் இருக்க  விரும்பியவன் அல்ல. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவர்களின் கண்ணீருக்கு அவன் காரணமாகிய வேளைகளிலும் , அவர்களை விட அவன்தான் அதிகம் துயர் அடைந்தான் .. இருப்பினும் எதையும் வாய்விட்டு சொல்லாமல் மனதில் பொத்தி வைத்துகொள்ளும் கலையில் தான் அவன் கை தேர்ந்தவன் அல்லவா ? " அழாதே  " என்று கூறாமலே மற்றவரின் துயர் துடைக்கும் கலையில் அவன் வல்லவன் ..  இப்போதும் அதேபோல தான் அடிக்கடி அவளுடன்  செல்ல சண்டைகள் போட்டு , அவளை சிரிக்க வைத்து கொண்டிருந்தான்.. உன்னோடு நானடி என்பதை சொல்லில் உணர்த்தாமல் செயலில் உணர்த்தினான் .. அவளது வேலையை பொறுத்தமட்டிலும் அடுத்த கட்டமாய் அவள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை  அவ்வப்போது அவளுடன்  ஆலோசித்தான் .

இரண்டு நாட்கள் கடந்துவிட்டதே அவளால் நம்பமுடியவில்லை .. அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள்  சங்கமித்ரா .. கடிகாரத்தை பார்த்தாள் .. இன்னும் சில மணி நேரங்களில் அவன் சென்றுவிடுவானே ... ஆயாசமாய் இருந்தது அவளுக்கு .. எந்த சலனமும் இல்லாமல் அருகில் உறங்கி கொண்டு இருந்தவனை உற்று பார்த்தாள் ..

" மக்கு புருஷன் .. எப்படி தூங்கறான் பாரு .. இங்க ஒருத்தி விடிய விடிய  தூக்கம் இல்லாமல் இருக்கேன் .. ஆனா இவன் கொஞ்சம் கூட  கவலையே இல்லாமல் தூங்குறான் .. போடா போ .. அங்க போயிட்டு ஒவ்வொரு நிமிஷமும் இந்த மிது நியாபகத்துல தான் தவிக்க போற நீ .. நான் மாமா  மாமான்னு ஆசையா கூப்பிடுற மாதிரி உனக்கு அசரீரி வரும் பார் " என்று பொரிந்தாள் அவள் ! அவளைப்போலவே உறங்காமல் இருந்தவனோ , அவள் பேச்சை கேட்டு பொங்கிய சிரிப்பை மறைத்து வைக்க பெரும்பாடு பட்டான் ... மனதில் இருப்பதை கொட்டிவிட்ட திருப்தியில்  அவனையே பொறுமையாய் பார்த்தாள்  மித்ரா ..

" ச்ச .. நான் ஒரு லூசு மாமா ... உன்னை எப்படி திட்டிட்டேன் பாரு .. நாளையில் இருந்து நீ வேலை வேலைன்னு சரியாகவே தூங்க  மாட்ட .. இன்னைக்கு தானே நீ இப்படி ரெஸ்ட் எடுக்க முடியும் ? சரி உனக்கு கொடுத்த பனிஷ்மண்ட்  எல்லாத்தையும் நான் வாபஸ் வாங்கிக்கிறேன் .. நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும்டா ..அதான்  எனக்கு வேணும் .. காதல் மட்டும் ஏன்டா நமக்கு பேராசையை கற்று கொடுக்குது ? முதலில்  என் காதல் உனக்கு புரிஞ்சா போதும்னு ஆசைபட்டேன் .. புரிஞ்சதும் என் காதலை ஏற்றுகொள்ளனும்னு  ஆசைபட்டேன் .. நீயும் என்னை விரும்பறன்னு  தெரிஞ்சதும்  நமக்கு எப்படியாச்சும் கல்யாணம் நடந்திடனும்னு ஆசைபட்டேன் .. இப்போ நான் மிசர்ஸ் ஷக்தி ஆனதும் எப்பவும் உன் பக்கத்துலையே இருக்கணும் போல இருக்கு டா .... " என்று வாய்விட்டு சொன்னவள் அவனது அடர்ந்த கேசத்தில் விரல்களை தொலைத்தாள் ... அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் என்றெண்ணி கொண்டு அவன் நெற்றியில் லேசாய் இதழ் பதித்து 

" குட் மோர்னிங் ஷக்தி மாமா .. ஐ லவ் யூ டா " என்றுரைத்தாள் .. அவளிடம் தன்னை காட்டி கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டு கொண்டிருந்தான் ஷக்தி .. அவள் அங்கிருந்து நகரவும் தூக்கத்தில் நகர்வதுபோல கண்களை மூடிக்கொண்டே  அவள் மடிமீது தலைவைத்து கொண்டான் அவன் .. உண்மையிலேயே அந்த ஒரு நொடியில் சொர்கத்தை தொட்டு விட்டு தான் வந்தான் அவன் .. கிட்டதட்ட ஒரு மாதங்களாக குடும்பத்துடன் இருந்தவனுக்கு திரும்பி செல்ல மனமில்லைதான் .. எதையும் மனதிற்குள் வைத்து கொண்டு வெளியில் புன்னகைத்தே பழகியவனுக்கு இளைப்பாற  அவள் மடி சொர்கமானது .. எப்போதோ ஒரு நாள் அன்னையின் மடியில் உறங்கியவன் , இன்று அதே

நிம்மதியை அவளது மடியில் கண்டுபிடித்தான் .. மித்ராவோ  தன்னையும் அறியாமல் தாய்மை பெருக்கோடு அவனை பார்த்தாள்  .. இவன் என்னவன் .. எனக்கானவன் , நான் எப்போதும் இவனோடு தான் இருப்பேன் .. உடலளவில் பிரிந்தாலும் , உயிராலும் உள்ளத்தினாலும் அவனோடு சங்கிமித்து விடுவதுதான் என்  வாழ்வின் பயணம் என்று தனக்குள்ளேயே கூறி கொண்டாள்  .. அந்த அழகான நிமிடங்களை மனதிற்குள் சேமித்து வைத்து கொண்டே அமர்ந்திருந்தாள்  சங்கமித்ரா ..

" குட் மோர்னிங் அம்மா .. அப்படியே உங்க கையால் காபி கொடுத்தா என் பிறவி பலனை அடைஞ்சிருவேன் " என்றபடி சமையல் அறை மேடை மீது அமர்ந்தாள்  தேன்நிலா  ..

" ஹே வாலு.. காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டியா ? முதலில் குளிச்சிட்டு வாடி .. "

" அட நம்ம வீட்டு குளியலறை என்ன ஓடியா போக போகுது ? அப்பறம்மா குளிக்கிறேனே  "

" முருகா .... நீ எல்லாம் எப்படி தாண்டி டாக்டர் ஆகின ?"

" அந்த டவுட்டு எனக்கும் ரொம்ப நாளாகவே இருக்கு அத்தை " என்றபடி அங்கு வந்தான் மதியழகன் ..

" அடடே வாங்க மாப்பிளை , வாங்க ... " என்ற பாக்கியம் மதியழகனின் எதிர்பாராத வருகையில் கொஞ்சம் பதட்டம் ஆனார் .. தேன்நிலாவோ அவனை பார்த்து கண்சிமிட்டி விட்டு சட்டமாய்  அமர்ந்து கொண்டாள்  .. நிம்மதியாய்  உறங்கியிருந்தால் போலும் , அவள் முகம் அத்தனை பிரகாசமாய் இருந்தது .. எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் இயல்பாய் இருந்தாள்  தேன்நிலா ..

" நிலவும் நீயும் ஒன்றுதான் பெண்ணே

ஒப்பனை இல்லாமலே என்னை சொப்பனம் காண வைப்பதில் "  சட்டென கவி வடித்தது அவனது காதல் மனம் .. (இதெல்லாம் கவிதையான்னு கேட்க கூடாது .. நிலா பாடினால் பாட்டு எப்படி பாட்டு மாதிரி இருக்குமோ ,அதே மாதிரி மதி கவிதை சொன்னா , அது கவிதை மாதிரி இருக்கும் )

" அடியே மாப்பிளை வந்திருக்கார் ..வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்க ? சீக்கிரமா ஓடி போயி குளிச்சிட்டு வா " என்று மகளை அவசரப்படுத்தி அனுப்பிவிட பார்த்தார் பாக்கியம் .. ஆனால் இதற்கெல்லாம் அடங்கி விடுபவளா  அவள் ?

"  மை டியர் அம்மா .. என் மனம் எனும் வீட்டில் உங்க மாப்பிளையை வாங்கன்னு சொன்னபிறகு தான் அவரே உங்களுக்கு மாப்பிளை ஆகினார் .. அதை மறந்திடாதிங்க " என்று இருவரையும் பார்த்து கெத்தாய்  கூறினாள்  நிலா ..

" ஓஹோ அப்படியா ? அத்தை, உங்க சிஸ்டர் யாருக்கோ பொண்ணு இருக்கிறதா சொன்னிங்களே , அவ பேரு கூட என்ன .... ஹான் ..நியாபகம் வந்துருச்சு .. மீனாட்சி ... அந்த மீனு பெண்ணை நாம மீட் பண்ணலாமா ? " என்று கேட்டு வைத்தான் மதியழகன்.. அவனை முறைப்பதற்கு தயாரான விழிகளை தாழ்த்தியபடி " நான் குளிச்சிட்டு வரேன்  அம்மா " என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள்  நிலா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.